
என்றுமில்லாத அளவில்
அறிவியலுக்கும், மதத்துக்குமிடையே நடக்கும் போராட்டம்
ஜக் சுரையா
அண்மைக் காலமாக கிறித்துவ தேவாலயத்தின்மீது சுமத்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைக் குற்றச்சாற்றுகளைப் பற்றி கூறும்போது, பிரபல கடவுள் மறுப்பாளர் ரிச்சர்ட் டாகின்ஸ் கூறுகிறார்: குழந்தைகளின் உடல்கள் மீது பாதிரியார்கள் பாலியல் தாக்குதல் நடத்தியதை விட, மதம் என்னும் நோய்க்கிருமியைப் புகுத்தி குழந்தைகளின் மனதுக்கு அவர்கள் இழைக்கும் தீங்கை நினைத்துத்தான் நான் அதிகமாகக் கவலைப்படுகிறேன். வேறு சொற்களில் கூறுவதானால், ஆன்மிகப் படையெடுப்பின் மூலம் குழந்தைகளின் மனதைக் கெடுப்பது அவர்களின் உடல்களைக் கெடுப்பது போலவே, இன்னும் அதைவிட மோசமான, தீயசெயலாகும் என்பதுதான். கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்சே அறிவித்து 150 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடவுளின் மீதான போர் இந்த 21 ஆம் நுற்றாண்டில் ஏன் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது?
வரலாற்றில் இதற்கு முன் எப்போதும், 15_17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கத்தோலிக்க மத எதிர்ப்பாளர்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளின் போதும், பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதற்காக கலீலியோ மீது மத நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டபோதும் கூட, அறிவியலும் மதமும் இத்தகைய ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதே இல்லை.
உயிரையே சோதனைச் சாலையில் உருவாக்க முடியும் என்ற அளவிற்கு அறிவியல் தனது ஆற்றல் பற்றி உரிமை கொண்டாடி படைப்புத் தொழிலைக் கடவுளிடம் இருந்து கைப்பற்றி வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து மதங்களிடமிருந்து வன்முறைத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது. அதன் விளைவாக எந்த விதமான மத நம்பிக்கையும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த முரண்பாட்டின் மய்யத்தில் இரண்டு அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? உயிர்கள் எவ்வாறு தோன்றின? என்பவைதான் இவை. பிரபஞ்சம் தோன்ற பெரு வெடிப்புதான் காரணம் என்றும், டார்வினின் இயற்கைத் தேர்வுதான் உயிரினத் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்குமான காரணம் என்றும் அறிவியல் கூறுகிறது. பிரபஞ்ச தோற்றத்துக்கும், உயிர்களின் படைப்புக்கும் உயர் ஆற்றல் கொண்ட, நுண்ணறிவுடன் வடிவமைக்கும் (Intelligent Design) படைப்பாளி எனும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் மதம் கூறுகிறது. உயர்ந்த படைப்பாளியான கடவுள் என்று ஒருவர் இருந்தால், அந்தக் கடவுளைப் படைத்தவர் யார் என்று கடவுள் மறுப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இவர்களில் மிகவும் முக்கியமானவர், வழுக்குப் பாதைக்கு எதிராக எச்சரிக்கை அளிக்கும், அமெரிக்க மனஇயலாளர் சாம் ஹாரிஸ் என்பவர் ஆகும். கடவுளை நீங்கள் ஒருவர் மறுத்தால் மட்டும் போதாது; மதம் என்னும் நோய்க்கு இரையாகக் கூடிய வாய்ப்பு உள்ள குழந்தைகள் உள்பட அனைவரின் சார்பாகவும் நீங்கள் கடவுளை மறுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மதப் போர்களின் மூலமாகவும், மதக் கருத்துக்கு எதிரானவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறை மூலமாகவும் கடந்த ஆயிரமாண்டில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத வன்முறை மற்றும் துன்பங்கள் மனித இனத்தின்மீது மதத்தின் பெயரால் இழைக்கப்பட்டதால் கடவுள் மறுப்பாளர்கள் மதத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றனர். இந்த மத வன்முறை கிறித்துவ மதத்துடன் நின்றுவிட வில்லை. தங்களின் பெண்களை இழிவாக நடத்தி, அவர்களின் கல்வி மற்றும் அறிவினை மழுங்கடிக்கும் முஸ்லிம் தாலிபான்களும் தங்கள் செயல்களுக்கு பதில் சொல்லவேண்டியவர்களே. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை புத்த மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததன் விளைவே பல ஆண்டு காலம் இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டுப் போராகும்; இப்போரினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய பல தலைமுறைகள் பிடிக்கும்.
முப்பத்து முக்கோடி தேவர்களைக் கொண்ட இந்து மத பாரம்பரியத்தில் கடவுள் மறுப்பு என்பது இந்தியர்களுக்கு அந்நியமான கருத்தேயாகும். இந்து மதத்தில் பெருமையாகக் கூறிக்கொள்ளப்படும் தத்துவமே, இந்த உலகம் எப்படி தோன்றியது? எப்படி முடியும்? கடவுள் மட்டுமே அறிவார்; ஒருவேளை கடவுளுக்கும் தெரியாமல் இருக்கலாம் என்பதுதான்.
தேவாலயம் போன்ற மத அமைப்புகளுக்கு எதிரானவர்கள்தான். கூட்டு வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டது தேவாலயம் என்ற அமைப்பு. இத்தகைய கூட்டு வழிபாட்டு முறை இந்து மதத்தில் இல்லை. இந்து மதத்தை அரசியலாக்கி இந்துத்வா கொள்கையை நிலைநிறுத்த சங் பரிவாரங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பலிக்கவில்லை.
- நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா -கிரஸ்ட் எடிஷன் 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
6 comments:
உயிர் கொடுத்து,சாவைத் தடுத்துவிட்டால் நாத்திகம் ஜெயிக்கும்! அதுவரை அறிவியலை விட மதம் தான்!
நாத்திகம் இந்து மதத்தின் ஒரு அங்கமே!
கூட்டு வழிபாடு கட்டாயம்!தனி வழிபாடு அவரவர் பிரியம்!
ஒழிக்கப்பட வேண்டியது சுயமரியாதையாளரின் தனி மனித வழிபாடு!
//நாத்திகம் இந்து மதத்தின் ஒரு அங்கமே!//
எல்லா மதத்திலும் நாத்திகம் உருவாகிறார்கள், மேலும் நாத்திகன் என்று சொல்லிவிட்டாலே அவனை மதத்தின் பெயரால் அடையாளபடுத்துவது தவறு!
//உயிர் கொடுத்து,சாவைத் தடுத்துவிட்டால் நாத்திகம் ஜெயிக்கும்! அதுவரை அறிவியலை விட மதம் தான்!// சரியாகச் சொன்னீர்கள்.
//நாத்திகம் இந்து மதத்தின் ஒரு அங்கமே!// மற்ற நாடுகளில் நாத்திகர்கள் இருக்கிறார்களே அவர்களும் இந்துக்களா?
/உயிர் கொடுத்து,சாவைத் தடுத்துவிட்டால் நாத்திகம் ஜெயிக்கும்! அதுவரை அறிவியலை விட மதம் தான்!// சரியாகச் சொன்னீர்கள்.//
உறுப்பு தானம் ஒருவகையில் உயிர் காக்கும் முறை தானே இதில் அறிவியலை விய மதம் எவ்வகையில் சிறந்ததாகும்!
//உயிர் கொடுத்து,சாவைத் தடுத்துவிட்டால் நாத்திகம் ஜெயிக்கும்! //
இது விவேகானந்தர் சொன்னதை உல்ட்டா பண்ணி சொல்லுவது...மரண பயமே நம்பிக்கைகள் வளரக் காரணம்...இந்த உலகில் மரணபயம் இருக்கின்ற வரையில் நம்பிக்கைகள் தோன்றிக்கொண்டேயிருக்கும். அது சார்ந்த புதிய புதியக் கடவுள்களும் தோன்றிக்கொண்டேயிருப்பார்கள் கண்டுபிடிப்புகளாக...மனிதன் சமூகமாக இருக்கும் பொழுது இது தோன்றித்தான் ஆகும்....
காட்டுவாசிகளுக்கும் நம்பிக்கைகள் உண்டு...மரம் செடி..விலங்குகள் என்று.எதையாவது நம்பி வணங்குவார்கள்...அவர்கள் சமூகத்தின் மரணபயத்திற்காக.....அதற்கும் ஒரு கதையும் கட்டி வழிபடுவார்கள்..அதை நாட்டில் வாழ்பவர்கள் நம்பமாட்டார்கள்...
சிறுவயதிலேயே தனித்து காட்டில் விடப்பட்ட மனிதன் எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் வாழ்வான்...இதைத்தான் விவேகானந்தர் சொன்னார்.
//நாத்திகம் இந்து மதத்தின் ஒரு அங்கமே!//
கடவுள் தண்டனை கொடுப்பான் என்று பிறருக்கு புகட்டிவிட்டு தவறுகளை செய்யும் பார்ப்பனனே ஒரு நாத்திகன் தான்..கடவுளிடம் அவனுக்கு பயமில்லையே..பயமிருந்தால் மனிதநேயம் தவறியிருக்கமாட்டானே.......அது தான் முழு இந்து மதம். purpose என்ன? அவன் பின்பற்றவேண்டிய அவசியமில்லை....
பிறரை அடிமைப்படுத்துவதற்கு...நம்ப வைப்பதற்கு....திராவிடர்களை அடிமைப்படுத்துவதற்கு பார்ப்பனரால் உருவாக்கப்பட்டது தானே...இந்து மதம்...
தான் செய்வது தவறு இல்லை நீ செய்வது மட்டும் தான் தவறு என்று சொல்வது நாத்திகம் தானே...
இதை புரிந்து கொள்பவன் பகுத்தறிவாளன்....அதனால் தான் பெரியார் நாத்திகன் என்று அழைப்பதை தடை செய்கிறார். பகுத்தறிவாளர் என்று அழைக்கவேண்டும் என்றும் கூறுகிறார். அப்பறம் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
Post a Comment