Search This Blog
2.6.09
இலங்கையில் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்குச் செய்ய வேண்டியது என்ன?
இலங்கைக்கு இந்தியாசெய்யும் எந்த உதவியாக இருந்தாலும்,
அது ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்
த சண்டே இந்தியன் தலையங்கத்தை
எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் அறிக்கை
இலங்கையில் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்குச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தமிழர்களைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள இராஜபக்சேவின் இன ஒடுக்கல் கொள்கைகளால் அங்கு மீண்டும் பழையபடி நிம்மதியான வாழ்வு, கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் போக, எஞ்சியவர்களுக்காவது கிடைக்குமா? ஈழத் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்திட இராஜபக்சேவின் சிங்களப் பேரினவாதம் அனுமதிக்குமா? என்ற வினாக்கள் நடுநிலையாளர்கள் மத்தியிலே மிகப் பெரும் கேள்விக்குறியாக எழுந்து நிற்கிறது.
ஆங்கில நாளேட்டின் அகலப் பார்வை
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழர் தம் உரிமைக் குரலை ஏதோ தமிழ் மொழி வெறியின் வெளிப்பாடு (Tamil Chauvinism) என்றும் கூறிவந்த _ கூறி வரும், ஆங்கில நாளேடு கூட சற்று அகலமாகத் தம் கண்களை விரித்துப் பார்த்து விளக்கங்களை எழுத முன் வந்துள்ளது.
இல்லாவிட்டால் தமிழ்நாட்டு வாசகர்களிடையே, உலக மனித நேய விரும்பிகளிடையே நம்பகத்தன்மையை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவ்வேட்டின் தலையங்க எழுத்தாளர்களைப் பிடித்து உலுக்குகிறது.
இல்லை, இல்லை; எம் மனச்சாட்சிப் படிதான் எழுதுகிறோம் என்றால் அதை நாம் வரவேற்கிறோம். எதிர்வாதம் எழுப்பப்போவதில்லை.
சண்டே இந்தியன் ஏட்டின் தலையங்கம்
14 இந்திய மொழிகளில் வெளியிடும் பிரபல மாதமிரு முறை ஏடான த சண்டே இந்தியன்(ஜூன் 1-14 நாளிட்டது) அதன் தலையங்கத்தில் உள்ள சில முக்கிய வரிகள்: (அதன் பிரதம ஆசிரியர் அரிந்தம் சவுத்ரி எழுதுகிறார்.)
...இலங்கையுடன் உறவும் இது போலவே மோசமாக நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. (வெளியுறவுக் கொள்கை). தமிழ் நாட்டுக்கு மிகவும் நெருக்கத்தில் இருக்கும் நாடு அது. ஏராளமான தமிழர்கள் இலங்கைக்குள் வாழ்கிறார்கள். இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே சிங்களர்கள் தமிழர்களுக்கு பல அடிப்படை மனித உரிமைகளை மறுத்து, மோசமான நிலைகளில் வாழச் செய்திருக்கிறார்கள். வேண்டப்படாத மக்களாகவே அவர்கள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். 1956-இல் சிங்கள ஆட்சி மொழிச் சட்டம், 1958, 1977 தமிழர்-களுக்கு எதிரான கலவரங்-கள், 1981 இல் புகழ் பெற்ற யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டது போன்ற-வை நடந்தன. 1983 இல் இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான இரத்தம் தோய்ந்த கலவரம் நடந்தது. அந்தக் கறுப்பு ஜூலையின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். லட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். மனித உரிமைகள் கண்காணிப்பகம், உலகில் மர்மமான முறையில் அதிக ஆட்கள் காணாமல் போகும் நாடு இலங்கை என்று தெரிவித்துள்ளது. காணாமல் போகிறவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அய்.நா. சபையின் பணிக்குழு ஆட்கள் காணாமல் போகும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கையை வைத்துள்ளது. கற்பழிப்பு, சித்திரவதை, காவல் நிலைய மரணங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது. பலரால் தீவிரவாத அமைப்பு என்று கருதப்படும் புலிகள் அமைப்பு தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் அநீதியின் விளைவாகத் தோன்றியதுதான்.
புலிகள் விரும்பியதெல்லாம் தமிழர்களுக்கு அங்கு மரியாதைக்குரிய ஓர் இருப்புதான். துரதிருஷ்டவசமாக அது நிகழவில்லை.
இலங்கைத் தமிழர்களுடைய நிலையை எடுத்துக் கொண்டால், உலகம் முழுக்க தன்னுடைய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா செயல்படும் என்பதைக் காட்ட வேண்டிய நேரம். அண்டை நாட்டில் நிச்சயம் இதை நிரூபிக்க வேண்டும். வெளிப்படையாக முழு உலகத்தின் கண்களுக்கு, முன்னால் அனைத்து மனித உரிமைகளும் தமி ழர்களுக்கு மீறப்படுவது இந்தியா வின் வலிமைக்கு ஒரு நேரடி சவால். அதன் இருப்பையே அவமானப் படுத்துவது போன்றது. இந்திய அரசு தனக்கு முதுகெலும்பு இருப்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது! புதிய அரசின் எல்லை தாண்டிய கொள்கைகளில் இது முதல் இடத்தில் இருக்க வேண்டும்! என்றும் அதே தலையங்கத்தில் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
_ சரியான நேரத்தில் தரப்பட்ட விருப்பு வெறுப்பற்ற அறிவுரை இது.
இந்திய இறையாண்மை, பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் சீனா என்ற அச்சத்திற்கு ஒரு அணையாகவும் அந்தத் தெளிவான கொள்கை பலன் தரக்கூடும்!
பேராசிரியர் சூரியநாராயணனின் யோசனைகள்
அதே ஏட்டில், தெற்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணர் பேராசிரியர் சூரிய நாராயணன் அவர்கள் இந்தியா இழந்த செல்வாக்கை மீண்டும் பெற என்ன செய்யவேண்டும் என்று சில அரிய யோசனைகளையும் முன்வைத்-துள்ளார்!
அதில் முக்கிய அடிநாதக் கருத்து, இலங்கைக்கு இந்தியா எந்த உதவி - நிதி உதவி உட்பட அது தமிழர்களுக்கு விடிவு ஏற்படுத்தும் அரசியல் தீர்வுடன் இணைந்ததாக அமைய வேண்டும்.
தமிழர்களின் அச்சம்
தற்போது தமிழர்களின் அச்சம் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டு தமிழினத்தின் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்ற நிலை வெகு வேகமாக நடைபெறுகின்றது!
இரண்டு ஆண்டுகள் தமிழர்கள் சொந்த நாட்டில் அகதிகளாக கூட்டில் அடைக்கப்பட்ட மிருகங்களைப்போல் வாழவேண்டும் என்பதை எந்த மனிதாபிமானம் உள்ளவரும் ஏற்க முடியுமா?
--------------------"விடுதலை" 2-6-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//"இலங்கையில் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்குச் செய்ய வேண்டியது என்ன?"//
ஈமச் சடங்கு !
:(
//"இலங்கையில் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்குச் செய்ய வேண்டியது என்ன?"//
நீங்களும் வீரமணியும் ஈழத்தமிழரென்று வாயைத் திறக்காமலிருப்பது.
உங்களுக்கும் நீங்கள் திட்டும் பார்ப்பனர்கள் சோ, ராம், சுப்பிரமணியசுவாமி இவர்களுக்கும் எவ்விதமான வேறுபாடுமில்லை.
வீரமனியும் கருனாவும் பால் காவடி,பன்னீர் காவடி எடுத்து,சொனிஆ சன்னிதானத்தில் அன்கபிரதட்சனம் செய்யலாம்!
திரு தமிழ் ஓவியா ஐயா,
பெரிய இழப்புகளை சந்தித்துவிட்டு, துயரத்தில் இருக்கும் மக்களை பற்றி கவலைப் படுகிறவர்களா இவர்கள்?, துரோகங்கள் போதும்.
அவர்களுக்கு பிள்ளையார் பிடித்து வைக்கிறேன் என்று குரங்கை பிடித்து வைத்தது போதும்.
துரோகம் செய்பவர்களை ஆதரிப்பது மிகப்பெரிய துரோகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் இது போன்ற ஏட்டுச் சுரைக்காய்கள் இப்போதைய நிலையில் ஈழத் தமிழருக்கோ அல்லது தாங்கள் மதிக்கும் திரு.கி.வீரமணி ஐயாவுக்கோ பலனளிக்காது .
மதச் சார்பற்ற கூட்டு என்று திமுக உடன் இருந்தார்கள். வீ.சேகரின் மூத்திரம் மட்டும் சிலர் வீட்டுக்கு கோமியமாய்ப் போகுமாக்கும்.
Post a Comment