Search This Blog

2.6.09

ஆட்சிகளை உருவாக்கக்கூடிய கருவி "விடுதலை" நாளிதழ்



ஆட்சிகளை உருவாக்கக்கூடிய கருவி விடுதலை
இது மக்கள் பத்திரிகை என்பதை விளக்கி ஆசிரியர் உரை

ஆட்சிகளை உருவாக்கக்கூடிய கருவி விடுதலைதான் என்றும், இது மக்கள் பத்திரிகை எனவும் விளக்கி திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.


தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.5.2009 அன்று தஞ்சையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நஷ்டத்திற்காக கொள்கையை விடமுடியுமா?

அடுத்து 1940லிருந்து விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவருகிறது. அதன் கஷ்ட நஷ்டம் இதை எல்லாம் சொல்லிவிட்டு, ஒரு பகுதியை சொல்லுகிறார்.

இவ்வளவு நஷ்டம் வருகிறது என்று சொல்லுகின்றார். அண்ணா அவர்கள் ஆசிரியராக இருந்த காலம். அய்யா சொல்கிறார்:

இதனால் இந்த நஷ்டத்திற்காக நம்முடைய கொள்கையை விட்டுக் கொடுத்து (நஷ்டம் வருகிறதே என்பதற்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்து அய்யாஅடிக்குறிப்பில் முக்கியமான வார்த்தையைப் போட்டிருக்கின்றார்.)

அடிமை விடுதலையாகி (விடுதலை பேப்பர் சுதந்திரமான பேப்பர். அடிமை விடுதலை அல்ல. இன்றைக்கு இருக்கின்ற பத்திரிகைகளைப் பார்த்தால் அடிமைப் பத்திரிகைகள்தான். அரசாங்க விளம்பரம் கிடைக்க வேண்டும்.)

விளம்பரத்திலும் செல்வவான்களிடம் நன்கொடை பெறுவதா? (அடிமை விடுதலைக்கு எதிரானது என்ன? சுதந்திர விடுதலை.அதுதான் என்னுடைய துண்டறிக்கையில் இருக்கிறது.)

விடுதலைக்கு சுதந்திரம் எப்பொழுது? நீங்கள் சந்தா சேர்த்துக் கொடுத்தாலே பல்லாயிரக்கணக் கான பிரதிகள் போகும் பொழுது நமக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும். அவர் தயவு வேண் டும், இவர் தயவு வேண்டும் என்று பார்க்க வேண்டாம். கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு நாம் பேசுவோம். எவர் வந்தாலும், வராவிட்டாலும் பரவாயில்லை என்று துணிந்துஇறங்கினார். மற்ற பத்திரிகைகள் மக்கள் பின்னாலே போகக் கூடியவைகள். விடுதலை ஒன்றுதான் - இலட்சிய ஏடுதான் மக்களைத் தன் பின்னாலே அழைத்து போகக் கூடிய ஏடு. ஆகவே எவ்வளவு கசப்பாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.)

அல்லது சுதந்திர விடுதலையாக நடத்தச் செய்கிறீர்களா?அல்லது அடிமை விடுதலையாக நடத்தச் செய்கிறீர்களா?

விடுதலைக்கு சுதந்திரம்

இனியும் நம் இயக்கம் வலுக்க, வலுக்க விடுதலைக்கு அதிக சுதந்திரம் வேண்டியிருக்கும். அப்பொழுதுதான் நிலையானதும், நேர்மையானதுமான பிரயோஜனத்தை திராவிடர்கள் அடைய முடியும்.

இது மாதிரி - கல்வெட்டு எழுத்துகள் மாதிரி அய்யா அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆகவே இந்த மாதிரி செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். விடுதலையை மேலும் சிறப்பாக வளப்படுத்துவதற்குத்தான் பவள விழா.

ஏற்கெனவே உரத்த நாடு 14முறைக்கு மேலே விடுதலை சந்தா கொடுத்திருக்கிறார்கள். மற்ற தஞ்சை மாவட்டம் நிறைய சந்தாக்களைக் கொடுத்திருக்கிறீர்கள். நாடு பூராவும் பவள விழாவை ஒட்டியும் கொடுத்திருக்கின்றீர்கள்.

எல்லோருக்கும் நன்றி செலுத்துகின்ற இதே நேரத்தில் ஒன்றை நான் வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். இரண்டு வகையாக செய்யலாம்.

விடுதலை பவள விழா வந்துவிட்டது

நம்முடைய தோழர்கள் பத்து பேர் வேன் அல்லது காரில் சென்று விடுதலை பவள விழா வந்து விட்டது என்று அய்யா அவர்கள் சொன்ன வாசகத்தை பேனர் மாதிரி கட்டி, கட்சி வேறுபாடு இல்லாமல் பலரைப் பார்க்க வேண்டும். அய்யா விடுதலைக்கு சந்தா தாருங்கள் என்று கேட்டால் கொடுப்பவர்கள். நான்கு பேர். கொடுக்காதவர்கள் பத்துபேர் என்றாலும் அதன்மூலம் விளம்பரம் நமக்கு அதிகமாக ஆகும். அது நமக்குப் பெரிய லாபம்.

அடுத்தபடியாக இன்னொரு வேண்டுகோள் என்னவென்றால் நாம் ரொம்பக் கஷ்டப்பட வேண்டியதில்லை. நமக்கு வேண்டிய நண்பர்கள் இரண்டு பேர் கூடவா இருக்க மாட்டார்கள்.

நமக்கு வேண்டிய உறவினர்கள் அய்ந்து பேர் கூடவா இருக்க மாட்டார்கள். எனவே நண்பர் கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்பவர்களுக்குப் பத்திரிகை அனுப்புங்கள். அதனால் நமக்கு சந்தாவும் கூடுகிறது. நமது கொள்கையும் புதிதாய் இருப்பவர்களுக்குப் போய் சேருகிறது. விடுதலை என்பது யாரும் தனிப்பட்ட முதலாளியினுடைய பத்திரிகை அல்ல. தனி ஓரு சமுதாயத்திற்குரிய பத்திரிகைஅல்ல. இது மக்கள் பத்திரிகை. எனவே அய்யா தந்தை பெரியார் அவர்கள் 1962லே என்னை அழைத்து, விடுதலையை ஒப்படைக்கிறேன். ஏக போகமாய் ஒப்படைக்கிறேன் என்ற வார்த்தையை அய்யா அவர்கள் பயன் படுத்தினார்கள்.

நான் ஆசிரியராக 47 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்தப் பவளவிழாவை ஒட்டி நான் சொல்லுவதெல்லாம் - உங்களுடைய தொண்டன், உங்கள் ஊழியன், உங்கள் தோழன் என்ற முறையிலே சொல்லுவதெல்லாம், இதை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; மக் களிடம் ஒப்படைக்கின்றேன் (பலத்த கைதட்டல்).

இந்த அளவிற்கு இனிமேல் அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்குண்டு.

முதியோர் இல்லத்திற்கு அனுப்பப் போகிறீர்களா? அல்லது முதிர்ச்சி உள்ள இடத்திற்கு மேலும் உயரமான இடத்திற்கு அனுப்பப் போகிறீர்களா? என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஆட்சிகளை உருவாக்கக்கூடிய கருவி

ஆட்சிகளை உருவாக்கக் கூடிய ஒரு கருவியாக. விடுதலை மூடநம்பிக்கைகளை தகர்க்கக் கூடிய மிகப் பெரிய வெடிகுண்டாக இருக்கிறது. மதவெறியைத் தூக்கி எறியக் கூடிய அளவிற்கு விடுதலை போர்வாளாக இருக்கும்.

ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். புனேவிலிருந்து இரண்டு பெண் பேராசிரியர்கள் வந்தார்கள். புனேவிலிருந்து வந்த ஓர்அமைப் பாளர், சாந்தி சிறீ பண்டிட் என்பது அவரு டைய பெயர். அவருடைய கணவர் மகாராஷ்டித்தைச் சேர்ந்த பார்ப்பனர், அவர் தெளிவாகச் சொன்னார். இன்னொரு அம்மையார் டாக்டர் ரிம்லி பாசு. சாந்திசிறீ என்ற அம்மையார் பெரி யார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கருத்தரங்கில் சொன்னார் - தமிழ் நாட்டிலே இது போன்று இருக்கின்ற எழுச்சி இந்தியாவிலே வேறு எங்கும் கிடையாது. அதற்குக் காரணம் பெரியாரும், பெரியாருக்குப் பின்னாலே இந்த இயக்கம் தொடருவதுதான் என்று தெளிவாகச் சொன்னார்கள்.

எனவே அடுத்து உங்களுக்குக் கடமையிருக்கிறது. நண்பர்களைத் தேடுங்கள், உறவினர் களைத் தேடுங்கள், விடுதலையைத் தாங்கிப் பிடியுங்கள்.

வெற்றி நமதே!

நன்றி, வணக்கம்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-----------------"விடுதலை"2-6-2009

0 comments: