Search This Blog
1.6.09
திராவிட இனத்தின் கெசட் "விடுதலை" நாளிதழ்
திராவிட இனத்தின் கெசட் விடுதலை நாளிதழ்
விடுதலை பற்றி தமிழர் தலைவர் விளக்கம்
திராவிட இனத்தின் கெசட் விடுதலை என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க வுரையாற்றினார்.
தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.5.2009 அன்று தஞ்சையில் நடைபெற் றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
நான் ஆசிரியராக இருக்கும்பொழுது வழக்கு
நான் ஆசிரியராக இருக்கும் பொழுது கட்டடக்காரர் காலி பண்ணுங்கள் என்று வழக்கு போட்டு விட்டார். நாங்களும் வழக்கை வைத்து நடத்திக் கொண்டிருந்தோம். எங்களுக்கு வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், குஜராத் மாநில தலைமை நீதிபதியாகக் கூட அண்மையில் இருந்தவர்.
கீழ்க்கோர்ட்டிலிருந்து அப்பீலுக்கெல்லாம் போய் உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. கடைசியாக நீதிபதி சொன்னார். என்னங்க - இவ்வளவு பெரிய இடத்தை வைத்துக் கொண்டு 30 ரூபாய் வாடகை தருவதா? என்று நீதிபதி கேட்கிறார்.
இல்லிங்க, நாங்கள் நட்டத்தில் நடத்துகிற பத்திரிகை என்று வக்கீல் சமாதானம் சொல்லு கிறார். கோகுலகிருஷ்ணன் நீதிபதியிடம் சொன்னார்.
நீங்கள் செய்வது நியாயமில்லை. நாங்கள் பத்திரிகை நடத்த வேண்டாம் என்று சொல்ல வில்லை. அதற்கு ஒரு வழி இன்றைய நிலவரத்தில் எவ்வளவு வாடகைக்குப் போகும். நீங்கள் குறைவாகக் கொடுத்திருக்கின்றீர்களே, அது நியாயமில்லை. என்னதான் நீங்கள் ஸ்தாபனமாக நடத்தினாலும் உங்களுடைய வாடகையை 90 ரூபாயாக நிர்ணயம் பண்ணு கிறேன் என்று நீதிபதி சொல்லிவிட்டார்.
அய்யா எங்களை தீர்த்துவிட்டார்
இந்தச் செய்தியை அய்யா அவர்களிடம் வந்து சொன்ன பொழுது அய்யா அவர்கள் எங்களை தீட்டித் தீர்த்தது இருக்கிறது பாருங்கள் அது சாதாரணமான தல்ல.
என்ன பொறுப்பில்லாததனம் உங்களுக்கெல்லாம். 90 ரூபாய்க்கு ஒத்துக் கொண்டு வந்திருக் கின்றீர்களே - என்ன அக்கறை போங்கள். 30 ரூபாய் கொடுத்த இடத்தில் 90 ரூபாய் என்றால் ரூபாயின் மதிப்பு உங்களுக்குத் தெரியுதுங்களா? நீங்கள் எல்லாம் அந்த கஷ்டத்தைப் பற்றி உணராதவர்கள் என்று சொன்னார்.
வக்கீல் ஒத்துக் கொண்டு வந்து விட்டார். நீதிபதி தீர்ப்பு எழுதிவிட்டார்.
அது மட்டுமல்ல குறிப்பிட்ட வருடம் வரையில் நீங்கள் இருக்கலாம். அதற்குப் பிறகு நீங்கள் காலி பண்ணிவிட வேண்டும் என்று நீதிபதி சொல்லி விட்டார்.
அந்த தீர்ப்புதான் பெரியார் திடலில் விடுதலை கட்டடம் வருவதற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.
ஒரு கெடுதியிலும் ஒரு நன்மை
ஒரு கெடுதியிலும் ஒரு நன்மை இருக்கிறது என்பதற்கு அடையாளம் போல அமைந்துவிட் டது.
அய்யா எழுதுகிறார்: விடுதலை பத்திரிகை இன்று வாரம் இரு முறையாக வந்தாலும் என்று பழைய செய்திகளை எல்லாம் எழுதிவிட்டு, எப்படியோ ஒரு விதத்தில் தமிழ் மக்கள் எதிர் பார்த்தபடி தமிழ் பத்திரிகை ஒன்று வந்துவிட்டது. அதை ஆதரித்து தினசரியாக்கி நிலை நிறுத்த வேண்டியது தமிழ் மக்களுடைய கடமையே ஒழிய, இனி தலைவர்களை குற்றம் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை.
எனவே விடுதலையை ஆதரித்து நிலை நிறுத்த வேண்டும் அய்யா அவர்களுடைய வாக்கி யம்தான் நமக்கு மிக முக்கியம்.
நான் பெரியார் தந்த புத்தியினாலே பேசுகிறேனே தவிர என்னுடைய சொந்த புத்தியினால் அல்ல.
அய்யா பேசுகிறார். அய்யா வேண்டுகோள் விடுக்கிறார். அய்யா அவர்கள்இந்த பவள விழாவிற்கு இருந்திருந்தால் என்ன சொல்லுவார்? என்ன கருத்து? என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் அய்யா அவர்கள் சொல்லுகிறார்.
விடுதலையின் நோக்கம் அதன் தொண்டு ஆகியவைபற்றி சந்தேகப்பட வேண்டிய காரணமே யாருக்கும் கிடையாது. ஆகையால் அதைப் பற்றிக் கவலைப்படாமலும் அதற்கு யாரும் (விடுதலைக்கு) புத்தி புகட்டுகிற வேலையில் இறங்காமலும் (இது ரெம்ப மிக முக்கியம். இன்றைக்கே நம்முடைய தோழர்களில் சிலர் இது சரிதானா? அதுசரிதானா? என்று கேட்பதுண்டு).
திராவிட இனத்தின் கெசட் விடுதலை
விடுதலை திராவிட இனத்தின் கெசட் அதுதான் மிக முக்கியம். அதில் என்ன நிலைப்பாடு வருகிறதோ அது அத்தனையும் தமிழினத்திற்குப் பாதுகாப்பு அரண். அந்த மருந்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே யில்லை.
கண்ணை மூடிக் கொண்டு அந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் தான் அய்யா அவர்கள் சொல்லுகிறார். விடுதலைக்கு யாரும் புத்தி சொல்லாதீர்கள். விடுதலைக்கு என்று தனி புத்தி இருக்கிறது. அது மற்றவர்களுக்கு புத்தியைக் கொடுக்கக் கூடிய பத்திரிகை. அதனால்தான் அய்யா அவர்கள் ரொம்ப அழகாகச் சொல்லுகிறார்.
அந்த புத்தி புகட்டுகிற வேலையில் இறங்காமலும் (என்ன செய்ய வேண்டும்?) ஒவ்வொரு வரும் சந்தாதாரர் ஆக வேண்டும்.
இதுதான் அய்யா அவர்களுடைய வேண்டுகோள்; வீரமணி அல்ல. பெரியாருடைய தொண்டன் அல்ல; பெரியாரே பேசுகிறார். இந்த இயக்கத்தை அய்யா அவர்கள் கட்டிக் காத்தது மட்டுமல்ல. விடுதலை அய்யா அவர்களின் அருட்கொடை. அய்யா அவர்களுடைய அறக்கட்டளை. இல்லையானால் இவ்வளவு பெரிய நட்டத்தைத் தாங்கி ஒரு ஏடு வந்திருக்க முடியாது.
காங்கிரசுக்கு ஒரு நாளேடு கிடையாது
125 ஆண்டு கால வரலாறு கொண்ட மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற காங்கிரஸ் மாநிலத்திலே 50 ஆண்டுகளுக்கு முன்னாலே ஆண்ட காங்கிரஸ் ஒரு நாளேடு நடத்த முடிய வில்லை என்பதை மறந்து விடாதீர்கள் (கை தட்டல்).
ஆகவே ஒரு சாதாரண நிலையிலே இவ்வளவும் செய்யக் கூடிய அளவுக்கு நம்முடைய வாய்ப்பு வசதிகள் என்ன? அய்யாவின் சிக்கனம் - தமிழ் நாட்டின் பொக்கிஷம். தமிழ்நாட்டின் பொக்கிஷ அறைக்குள்ளே நுழைந்தால் அதிலே முதலில் தோன்றுவது விடுதலை.
இதற்காக அய்யா அவர்கள் எவ்வளவு கஷ்ட, நஷ்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று எழு தும் பொழுது, நமக்குப் படிக்கும் பொழுதே கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வருகிறது. இதிலே சிறப்பாக பல செய்திகள் இருக்கின்றன. விடுதலைக்காக ஏராளமான கருத்துகளை எழுதுகின்றார்கள்.
2-9-1937 பத்திரிகை ஆரம்பித்து இரண்டாண்டு காலம் மிக நெருக்கடியாக இருக்கிறது. இந்தப் பத்திரிகை யைத் தொடர முடியுமா? என்கிற சிக்கல் இருக்கிறது அப்பொழுது. அந்த கால கட்டத்தில் அய்யா அவர்கள் எழுதுகிறார்.
ஆர்.கே.சண்முகம் இந்தியாவினுடைய முதல் நிதியமைச்சராக வந்தவர். சுயமரியாதை இயக்கத்தினுடைய ஆரம்பகாலத் தலைவர்கள் கோவை ஆர்.கே. சண்முகம், இப்பொழுது நூற்றாண்டு விழாவிற்கு உரிய நாயகராக இருக்கிறார்.
மாதம் ரூ 500 நட்டம்
அவருக்கு எழுதிய கடிதத்தில் பெரியார் பேசுகிறார். விடுதலை தினசரி பத்திரிகை. தினம் 5 ஆயிரம் பிரதிகள் வெளியாகின்றது. பத்திரிகையை எவ்வளவு சிக்கனமாக நடத்தியும், மாதம் ரூ அய்நூறு நஷ்டம் ஆகியது. (இது அந்த காலத்தில் 1937 இல் ரூ 500 என்றால் இப்பொ ழுது எவ்வளவு என்று பெருக்கிக் கொள்ளுங்கள்). இனி நஷ்டம் அதிகமாகுமே தவிர குறை யாது.
இதிலே இன்னொன்று என்னவென்றால் அதிகமான பிரதிகள் விற்க, விற்க நட்டம் அதிக மாகும். காகிதத்தினுடைய விலை மிக முக்கியம். அச்சுக்கூலி இப்படி வரிசையாகப் பல பிரச் சினைகள் இருக்கின்றன. அய்யா சொல்லுகிறார். ஒவ்வொரு தோழரும் இதை நன்றாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அய்யா உழைப்பைப் பாருங்கள்
காலை ஏழரை மணிக்கு ஆபிசுக்கு வந்தால் இரவு பத்து மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். அய்யா சொல்கிறார். எப்படி உழைத்திருக்கிறார் பாருங்கள். அய்யா அவர்களுக்கு என்ன அவசியம்? அவர் ராஜ வாழ்க்கை வாழ வேண்டியவர். அவர் பெரிய வசதி படைத்தவர். அவர் பார்க்காத பதவி இல்லை. அவருக்குக் கிடைக்காத பெருமை இல்லை. அவ்வளவு இருந்தும் ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டதால் எவ்வளவு நெருக்கடிகள் என்பதை அய்யா அவர்கள் எழுதுகிறார்கள் பாருங்கள். மேலும் சொல்லுகிறார். இதன் மத்தியில் சுற்றுப் பிரயாணம். இந்த நிலைமையில் (தோழர்களே அடுத்த வாக்கியத்தை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்). ரோஷம் என்னை அடிமையாக்கிக் கொண்டு (இதை எப்படி நிறுத்து வது?) இந்த மாதிரி தொல்லையில் இறக்கி விட்டது.
(அய்யா அவர்களின் என்ன அழகான எழுத்து பாருங்கள். எவ்வளவு உண்மை பரிமளிக்கக் கூடிய எழுத்து என்பதைப் பாருங்கள்.)
காசு, பணம் எதிர் பார்த்து நான் எழுதவில்லை என்று அய்யா அவர்கள் எழுதுகிறார்.
---------------தொடரும் ...."விடுதலை" 1-6-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment