Search This Blog

30.5.12

என்றும் போற்றுவோம் அஞ்சாநெஞ்சனை!

அஞ்சா நெஞ்சன்

தந்தை பெரியார் இயக்கத்தின் தளகர்த்தராய் - அரிமா குரலுக்குச் சொந் தக்காரராய் - 1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சியிலிருந்து புறப்பட்ட தமிழர் பெரும்படையை நடத்திய தளபதியாய், பெரும் பணக்காரர்கள், பெரும் பதவிக்காரர்கள் மத்தியில் கூட வளைந்து குனியாத வாகை நோக்குடையவராய், நிமிர்ந்த பார்வையுடையவராய், இராணுவத்தில் பணியாற்றிய அந்த மிடுக்குக் குறையாதவராய் 49 ஆண்டுகளே வாழ்ந்தாலும் (பிறப்பு 20.3.1900; மறைவு 28.3.1949) குறுகிய காலத்தில் கொள்கைக் குன்றாக வாழ்ந்து, திராவிடர் கழகத் தோழர்கள் மத்தியில் மட்டு மல்ல; தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் அழகிரி பேச்சா? அனல் புயல் ஆயிற்றே - சுழல் காற்றாயிற்றே! பொங்குமாங்கட லாயிற்றே! இளைஞர்களை ஈட்டி முனையாய் வார்த் தெடுக்கும் போர்ப் பட்டறை யாயிற்றே! - தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தைத் தனக்கே உரித் தான தன்மையில் தனிப் பாணியில் தருபவராயிற்றே- நுட்பமான புத்தியினாலே கூர்மையான கத்தியைக் கொண்டு முகத்திலே உள்ள உரோமங்களை உருவத்திற்கும் ஒன்றும் ஆகாமல், உரோமங்களும் முகத்தில் தங்காமல் மழிக்கிறானே - அந்தத் தொழிலாளி அம்பட்டனா? இழிவானவனா? அழகுபடுத்தும் நம் சினேகிதன் அன்றோ! என்ற வினாவின் மூலம் ஜாதிக் கட்டுத் திமிர் என்னும் யானையை அடக்கும் அங்குசமாய்- அழகிரி பேசிய பொதுக் கூட்டத்திற்குள் பார்ப்பனக் கைக்கூலிகள் கழுதையை விரட்டிவிட்ட நேரத்தில், அந்தக் கழுதையைப் பிடித்து வரச்சொல்லி, மேடையின் ஒருபக்கம் கட்டச் சொல்லி, அந்த உரை முழுவதும் பார்ப்பனியத்தின் நச்சுப் பல்லை உடைத்துக் காட்டி, ஒவ் வொரு கருத்தையும் சொல்லி முடிக்கும் பொழுது, கேளு கழுதையே கேள்! என்ற சொல் கட்டோடு பேசிய அந்த யுக்தியைப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தொண் டர்கள் கூறுவார்களே-

பெருங்கூட்டத்தில் ஒற்றை ஆளாக இருந் தாலும் நெஞ்சு நிமிர்த்தி, ஆனை மிடுக்காய், சிங்கக் கர்ச்சனையாய், எதிரிகள் குலை நடுங்கும் எரிமலை யாய் வாழ்ந்து காட்டிய அந்த அஞ்சாநெஞ்சன், கருஞ்சட்டைத் தோழர்களுக்கு உறுதியின் ஒளிவிளக்கு! என்றும் போற்றுவோம் அந்த அஞ்சாநெஞ்சனை!

---------------- மயிலாடன் அவர்கள் 28-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

தமிழ் ஓவியா said...

வேலூரின் வெற்றி!

வேலூர் மாநகரில் நேற்று காலை தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவுற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாடு - மிகப்பெரிய அளவில் வெற்றிப் புன்னகை புரிகிறது.

வேலூரில் பெண்கள் மாநாடு என்று கழகத் தலைவர் அறிவித்த நாள் தொடங்கி நேற்றுவரை - அது குறித்துப் பேசுபவர்கள், கருத்துத் தெரிவிப் பவர்கள் ஒன்றை மறக்காமல் சொன்னதுண்டு.

தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அதன்மூலம் அய்யாவின் அரும் பணி நம் மக்களுக்குக் கிடைப்பதற்குக் காரண மான அன்னை மணியம்மையார் பிறந்த ஊரிலே இம்மாநாடு என்று ஒருமுகமாகவே கூறி வந்தனர்.
1. தீயில் மெழுகாம் அந்தத் தாயின் தியாகப் பணிக்குச் செய்யப்பட்ட சரியான மரியாதை என்று கூட இந்த மாநாட்டை எடுத்துக் கொள்ளலாம்.

மாநாட்டின் உயிர்க் கரு அடிநாதம் என்பது அது வடிக்கும் தீர்மானங்களில் இருக்கும் என்பதற் கேற்ப 14 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் புத்துலகப் பெண்களுக்கான வீரிய விதைகளாகும்.

2. சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு, நம் இயக்கம் நடத்தி வந்திருக்கும் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் என்பவை பிற்காலத்தில் சட்டங்களாக - அரசுத் திட்டங் களாகப் பரிணாமம் பெற்று வந்திருப்பதை வரலாறு கூறிக் கொண்டுதானிருக்கிறது. அந்த வகையில் வரலாறெங்கும் வேலூர் பேசப்படும் அளவுக்கு நறுக்குத் தெறித்தாற்போன்ற முத்து முத்தான தீர்மானங்கள் பதினான்கு நிறைவேற்றப் பட்டுள்ளன.

3. எந்த ஒரு இயக்கத்தின் வெற்றியும் - அதன் தொடர்ச்சியான பயணத்தின் முழுமையைப் பொறுத்தது என்பர். இந்த மாநாட்டை நடத்திய அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பாசறையினரின் நேர்த்தியான செயல்பாடு இந்த நன்னம்பிக்கை யைக் கழகத்திற்கு அளித்தது என்று சொல்லலாம்.

மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டதுபோல, கழகத்தில் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் எந்தப் பணியும் மெச்சத் தகுந்த முறையில் வெற்றிகரமாகவே நடந்து வந்திருக்கிறது. வேலூர் மாநாடு மேலும் முத்திரையைப் பொறித்து மன நிறைவைத் தந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே அல்லும் பகலும் அயராது உழைத்து - எதையும் திட்டமிட்டுத் தீர்மானித்து செயலாற்றிய சகோதரிகளுக்கும், அவர்களின் பின்னணியில் பலமாக இருந்து தோள் கொடுத்த சகோதரர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்! பாராட்டுகள்!!

மாநாட்டில் உரையாற்றியோர் அனைவரும் பிசிறு இல்லாமல் கழகக் கொள்கை முரசு ஒலித்தனர்.

4. பல புதிய வரவுகள் நமது கழகத்துக்குக் கிடைத்திருக்கின்றன. உரை, கலை நிகழ்ச்சி களின் நேர்த்திகளைக் கணித்தபோது இந்த முடிவுக்கு வர முடிகிறது.

இது ஒரு பிரச்சார இயக்கம். பிரச்சாரகர்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றனர். அதிலும் குறிப்பாகப் பெண்கள் பிரச்சாரம் என்பது கூடுதல் பலனைக் கொடுக்கக் கூடியதாகும். வேலூர் மாநாடு பாசறை மகளிர் பலரை இந்த வகையில் அளித்திருப்பது கழகத்திற்குக் கிடைத்த லாப மாகும்.

மகளிர் பிரச்சாரகர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு இம்மாநாடு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது. கழகத் தலைவர் ஏற்கெனவே அறிவித்தபடி மகளிர் சொற்பொழி வாளர்களுக்கான முகாம் ஒன்று விரைவில் நடத்தப்படும்.

இதில் மாணவிகளுக்கான இடம் முக்கியமான தாகும். நமது கழகப் பொறுப்பாளர்கள் இருபாலரும் இந்தக் கண்ணோட்டத்தில் ஆங்காங்கே அடையாளம் கண்டு தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்கவேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக வேலூர் மாநாடு நாட்டுக்கும், நமது கழகத்திற்கும் நல்லதைச் செய்து கொடுத்திருக் கிறது. இந்த வெற்றியைத் தொடர் பணிகள் மூலமாகத்தான் நிரந்தரப்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் கழகப் பொறுப்பாளர்கள் மறக்கவேண்டாம்!30-5-2012

தமிழ் ஓவியா said...

வேலூர் மக்களை வியக்கவைத்த விழிப்புணர்வுப் பேரணி!



பேரணியின் ஒரு பகுதியில் காவடி எடுத்துவரும் கழகத் தோழர்கள் (29.5.2012 வேலூர்)

வேலூர் மாநகரில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட பேரணி வெறும் மூடநம்பிக்கை ஒழிப்பை மட்டும் மய்யப்படுத்தியதல்ல. மக்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஊட்டிய கொள்கைப் பயிற்சி வகுப்பாகும்.

பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூணிலிருந்து பேரணி புறப்பட்டது. பேரணிக்குத் திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஈசுவரி சடகோபன் தலைமை வகித்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் கமலம்மாள், நாகம்மாள், பங்கஜம்மாள், அரங்கநாயகி, என்.கமலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர் கலைமணி பழனியப்பன் அவர்கள் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

பெரியார் சமூகக் காப்பு அணியின் (மகளிர்) அணி வகுப்பு பேரணியில் முக்கிய இடம் பெற்றது. பொது மக்கள் பார்வையில் தமிழில் கட்டளைச் சொற்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அணிவகுப்பு பெரிதும் கவர்ந்தது.

பெரியார் சமூகக் காப்பு அணியின் (மகளிர்) மாநிலச் செயலாளர் வெ.அழகுமணி இந்த அணி வகுப்பைச் செம்மையாக வழிநடத்தினார்.

பேரணியில் இருவர் இருவராக அணி வகுத்து பட்டாளத்துச் சிப்பாய்கள் போல கழகக் கொடியைக் கையில் ஏந்தி முன்வரிசையில் மகளிர் அணிவகுத்தனர். இதில் பெரியார் பிஞ்சுகள் முதல் மூதாட்டிகள் வரை முழக்கமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் மாநாடு என்பதால் அதனையொட்டி நடத்தப்பட்ட பேரணியிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் ஏராளமாய் வந்து குவிந்தனர்.

ஆண்கள், பேரணியின் பின் வரிசையில் அணி வகுத்து வந்தனர். குடியாத்தம் கே.ராஜ்கமல் பேண்டு இசைக் குழுவினரின் பேண்டு வாத்தியம் பேரணிக்குக் கட்டியம் கூறியது.



பேரணியின் ஒரு பகுதியில் தீச்சட்டி இங்கே, மாரியாத்தா எங்கே என முழக்கமிடும் கழக மகளிரணியினர் (29.5.2012 வேலூர்)

மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில்

பெண்கள் தீச்சட்டி ஏந்தி வந்த காட்சி பொது மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதுவும் தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே? என்று அவர்கள் குரல் கொடுத்த போது பேரணியின் இரு பக்கங்களிலும் குழுமி நின்ற பெண்களை வாய்ப்பிளக்கச் செய்தது.
செங்கை ஆனந்தி, கும்பகோணம் கலைச்செல்வி, தஞ்சாவூர் அஞ்சலை, வடசென்னை சுமதி, கும்பகோணம் அறிவுவிழி, திண்டிவனம் விசயலட்சுமி, கும்பகோணம் இராணி குருசாமி, இராஜேசுவரி, கொருக்குப்பேட்டை பூங்குழலி ஆகியோர் தீச்சட்டியை ஏந்தி வந்த மகளிர் ஆவர்.

அலகுக் காவடி

அலகுக் காவடி எடுப்பது கடவுளின் சக்தி என்று நம்பி வந்த ஜம்பத்தை உடைத்துத் தூள் தூளாக்கும் வண்ணம். கழகப் பொதுக்குழு உறுப்பினர் செயங்கொண்டம் கலியமூர்த்தி (70 வயதைக் கடந்த இளைஞர் இவர், இலங்கை வரை சென்று இந்தச் சாதனையைச் செய்து காட்டியவர்). அரியலூர் மாவட்டம் தா.பழூர் இராமச்சந்திரன் ஆகியோர் அலகுக் காவடி எடுத்து ஆடிப்பாடி அசத்தினர். தஞ்சை சதீஷ், மருதூர் அருள் முருகன், தஞ்சை தேவி ஆகியோர் பூக்காவடி எடுத்து ஆடிப்பாடி வந்தனர். கோவில் திருவிழாவில் அரிவாள் மீது ஏறி நின்று காட்டி பூசாரிகள் பக்தர்களை மலைக்க வைப்பர். அதே செயலைக் கறுஞ்சட்டைத் தோழர்கள் செய்து காட்டி, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று கர்ச்சித்து கத்தி மேல் நின்று காட்டும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தினர். கறம்பக்குடி முத்து, உரத்தநாடு வழக்கறிஞர் அருணகிரி ஆகியோர் மக்கள் கூடி நிற்கும் இடங்களில் எல்லாம் செய்து காட்டியதுடன், எரியும் சூடத்தை நாக்கில் வைத்துக் காட்டி பக்தியின் முகத்தை வெளிறச் செய்தனர்.

தமிழர் வீரவிளையாட்டுகள்

தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டத்தை குடியாத்தம் செண்பகராமன் குழுவினர் நடத்திக் காட்டி வந்தனர்.

கறம்பக்குடி முத்து அவர்கள் வழிநெடுக சுருள் கத்தியைச் சுழற்றியே பொதுமக்களை மிரளச் செய்தார். சடையார்கோவில் (தஞ்சாவூர்) பெரியார் பிஞ்சுகளின் இசைப் பாடலுக்கேற்ற கோலாட்டம், களை கட்டியது.

தமிழ் ஓவியா said...

ஊர்வலப்பாதை

பேரணி - பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூணில் புறப்பட்டு காட்பாடி சாலை கடைவீதி, கிருபானந்தர் சாலை, மூங்கில் மண்டிச் சந்திப்பு, தெற்கு காவல் நிலைய சாலை வழியாக மாநாடு நடைபெற்ற கோட்டை வெளி மைதானத்தை வந்தடைந்தது.
இடையில் தனி மேடையில் மண்டித் தெருவில் நின்று பேரணியைக் கண்டு கழகக் குடும்பத்தவர்களின் அன்பு வணக்கத்தை ஏற்றுக் கொண்டார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மக்கள் திரள்! மக்கள் திரள்!!

விடுமுறை நாள் இல்லாததாலும், கடைகள் எங்கும் திறந்திருந்ததாலும் பேரணியை அதன் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று கண்டு களித்தனர்.

மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளும், கொள்கை முழக்கங்களும் பொதுமக்களை - குறிப்பாக பெண்களையும், இளைஞர்களையும் ஈர்த்தன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் திராவிடர் கழகம் நடத்திக் காட்டிய மாநாடும், பேரணியும் வேலூர் மக்களைப் பெரிய அளவில் பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும். பேரணிக்குத் தொடக்கத்தில் அனுமதியளிக்க மறுத்த காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி வழங்கியது. ஒரு சிறு அசம்பாவிதமுமின்றி நடைபெற்ற பேரணியைக் கண்டு காவல்துறையினரே பாராட்டினர்.

குறிப்பு: ஒலிபெருக்கி மூலம் மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு இருந்தது. இறைவி, கனகா, தருமபுரி தமிழ்ச்செல்வன், ஊற்றங்கரை பழபிரபு, பழ.வெங்கடாசலம் முதலியோர் ஒலி எழுப்பி வந்தனர்.


1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

4. வீர வணக்கம் வீர வணக்கம்!
சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு
சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு
வீர வணக்கம்! வீர வணக்கம்!!

5. எங்கள் அன்னை எங்கள் அன்னை
மணியம்மையை மணியம்மையை
ஈன்றெடுத்த ஈன்றெடுத்த
வேலூர் மண்ணே, வேலூர் மண்ணே
வீர வணக்கம்! வீர வணக்கம்!!

6. வருகிறோம், வருகிறோம்
வரிப் புலியாய் வருகிறோம்!
ஆண் ஆதிக்க சமூகத்தை
ஆண் ஆதிக்கச் சமூகத்தை
அழித்து முடிக்க வருகிறோம்!
அழித்து முடிக்க வருகிறோம்!!

7. வருகுது பார், வருகுது பார்!
பட்டாளம் பட்டாளம்
பெண்ணுரிமைப் பட்டாளம்
கறுஞ்சிறுத்தைப் பட்டாளம்
வருகுது பார்! வருகுது பார்!!

8. கொளுத்துவோம், கொளுத்துவோம்
மனுநீதியை மனு நீதியைக்
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!!
பேயென்று, பேயென்று
சாற்றுகின்ற சாற்றுகின்ற
சாத்திரங்களை சாத்திரங்களை
கொளுத்துவோம், கொளுத்துவோம்!
கொள்கைத் தீயால் கொளுத்துவோம்!!

தமிழ் ஓவியா said...

9. பெண்ணுரிமை பெண்ணுரிமை
பிறப்புரிமை, பிறப்புரிமை!
கெஞ்சமாட்டோம்! கெஞ்சமாட்டோம்!!
உரிமைகளை உரிமைகளை
மீட்காமல் மீட்காமல்
துஞ்சமாட்டோம்! துஞ்சமாட்டோம்!!

10. தாய்க்குலமே! தாய்க்குலமே!
வெளியேறு! வெளியேறு!!
மூட நம்பிக்கை மூட நம்பிக்கைச்
சேற்றிலிருந்து, சேற்றிலிருந்து
வெளியேறு! வெளியேறு!!

11. வேண்டும், வேண்டும்
இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு
பெண்களுக்கு, பெண்களுக்கு
50 விழுக்காடு 50 விழுக்காடு
வேண்டும்! வேண்டும்!!

12. வெல்லட்டும்! வெல்லட்டும்!!
புத்துலக புத்துலக
பெண்கள் மாநாடு, பெண்கள் மாநாடு
வெல்லட்டும்! வெல்லட்டும்!!

13. பெரியார் படைப்பது - பெரியார் படைப்பது
புதுமைப் பெண்ணல்ல, புதுமை பெண்ணல்ல!
பெரியார் படைப்பது, பெரியார் படைப்பது
புரட்சிப் பெண்கள்! புரட்சிப் பெண்கள்!!

14. கடவுளின் பேராலே, கடவுளின் பேராலே
மதத்தின் பேராலே, மதத்தின் பேராலே
சாத்திரத்தின் பேராலே, சாத்திரத்தின் பேராலே,
போட்டிடும் தடைகளை போட்டிடும் தடைகளை
பூட்டிடும் விலங்குகளை பூட்டிடும் விலங்குகளை
உடைப்போம், உடைப்போம்!
உறுதியாய் உடைப்போம்!
உறுதியாய் உடைப்போம்!

15. நடத்தாதே, நடத்தாதே
அழகுப் போட்டியை
அழகுப் போட்டியை
நடத்தாதே! நடத்தாதே!

16. வேலியா வேலியா
பெண்களுக்குத் தாலி
பெண்களுக்குத் தாலி
வேலியா? வேலியா?
ஆண்களுக்கு ஒழுக்கம்
ஆண்களுக்கு ஒழுக்கம்
காலியா? காலியா?

17. வெடிக்கட்டும், வெடிக்கட்டும்!
வெண்தாடிப் பெரியாரின்
வெண்தாடிப் பெரியாரின்
புரட்சி முழக்கம், புரட்சி முழக்கம்
வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!

18. விடியட்டும்! விடியட்டும்!!
வெண்தாடிப் பெரியாரின்
வெண்தாடிப் பெரியாரின்
புரட்சிப் புத்துலகு
புரட்சிப் புத்துலகு
விடியட்டும்! விடியட்டும்!!

19. அன்னை மணியம்மை
அன்னை மணியம்மை
பிறந்த மண்ணிலே
பிறந்த மண்ணிலே
சபதம், சபதம்!

20. வென்றெடுப்போம்! வென்றெடுப்போம்!!
வெண்தாடிப் பெரியாரின்
வெண்தாடிப் பெரியாரின்
புரட்சிக் கொள்கைகளை
புரட்சிக் கொள்கைகளை
வென்றெடுப்போம்! வென்றெடுப்போம்!!

21. கடவுளை மற, கடவுளை மற!
மனிதனை நினை! மனிதனை நினை!!

22. சுயமரியாதை வாழ்வே,
சுயமரியாதை வாழ்வே!
சுக வாழ்வு! சுக வாழ்வு!!

23. வேண்டாம் வேண்டாம்
கடவுள் வேண்டாம்!
வேண்டாம் வேண்டாம்
மதமும் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம்
ஜாதிகள் வேண்டாம்
வேண்டும் வேண்டும்
பகுத்தறிவு வேண்டும்
வேண்டும் வேண்டும்
மானம் வேண்டும்

24. மானமும், அறிவும்
மானமும் அறிவும்
மனிதனுக்கழகு
மனிதனுக்கழகு!

25. படைப்போம், படைப்போம்!
மதமற்ற உலகை மதமற்ற உலகை
படைப்போம்! படைப்போம்!!
வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

26. பணி முடிப்போம், பணி முடிப்போம்!
தமிழர் தலைவர் வீரமணி
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே தலைமையிலே
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!!

27. வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வீரமணி
தமிழர் தலைவர் வீரமணி
வாழ்க வாழ்க வாழ்கவே!

28. வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!
பஞ்சமர் புரட்சி வெடிக்கட்டும்!!
வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!
சூத்திரர் புரட்சி வெடிக்கட்டும்!
வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!
பெண்கள் புரட்சி வெடிக்கட்டும்!



அரிவாள் மீது ஏறி நின்று கடவுள் இல்லை என முழங்கும் கழகத் தோழர் (29.5.2012, வேலூர்)


திமுக தோழர்களின் அன்பும் பரிவும்

வேலூர் மாநாட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை தி.மு.க. தோழர்கள் சந்தித்து, சால்வை போர்த்தி அன்பையும் பரிவையும் புலப் படுத்திக்கொண்டனர்.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் முகம்மது சகி வேலூர் மேனாள் மேயர் ப.கார்த்தி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர், ஏ.கே.சுந்தர மூர்த்தி, வேலூர் தமிழ்ச்சங்க செயலாளர் சுவ சுகுமார் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள் ஆவார்கள். மாநாடு முடிந்து முகம்து சகி அவர்கள் தமது இல்லத்திற்கு தமிழர் தலைவர் அவர்களையும், முக்கிய கழகப் பொறுப்பாளர்களையும் அன்புடன் அழைத்து, விருந்தளித்து உபசரித்தார்.



திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் புத்துலக பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டின் காலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கழகக் குடும்பத்தவர்களும், பொதுமக்களும். (வேலூர், 29.5.2012)

- தொகுப்பு: மின்சாரம் 30-5-2012

தமிழ் ஓவியா said...

புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்


குழந்தைப் பெற்றுக்கொள்ளும் உரிமை பெண்களைச் சார்ந்ததே!

பெண்களைச் சிறுமைப்படுத்தும் ஊடகங்கள் சின்னத்திரைகள் - பெரிய திரைகளை எதிர்த்துப் போராட்டம்!

வேலூர் - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்

வேலூர், மே 30- பெண்களைச் சிறுமைப்படுத்தும் ஊடகங்கள், சினிமாக்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என்கிற தீர்மானம் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேலூரில் நேற்று நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:

தீர்மானம் எண். 1 (அ) : நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு சட்டத்தின் தேவை.

முன்மொழிதல் : செ.கனகா (தென்சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர்)



மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இதுவரை 10.7 விழுக் காட்டுக்கு மேல் (2009 இல்தான் இந்த அதிக பட்சம்) பிரதிநிதித்துவம் இல்லை.

நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் 33 சதவிகித இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் 1996 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த ஆண் ஆதிக்க நிலையை எதிர்த்து வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று இம்மாநாடு அனைத்து நிலைப் பெண்களுக்கும் அறை கூவல் விடுக்கிறது. இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதென்று திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை அறிவிக்கின்றது.

1 (ஆ) உள் ஒதுக்கீட்டுக்கு கண்டிப்பாக வகை செய்யப்பட வேண்டும்.

பெண்களுக்கான இந்தச் சட்டத்தை நிறை வேற்றும்போது, அதில் கண்டிப்பாக உள் ஒதுக் கீட்டுக்கு வகை செய்யப்பட வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். (2) : பெண்கள் எண்ணிக்கைக் குறைவும் அதன் பின்னணியும்:

முன்மொழிதல் : ஜெ.சுமதி (வடசேரி)



உலக அளவில் ஆண் -பெண் எண்ணிக்கை விகி தம் 100 : 105 என்று இருக் கும் நிலையில் இந்தியா வில் 100 : 90 என்ற விகி தத்தில் வீழ்ச்சி அடைந் துள்ளது. நாள் ஒன்றுக்கு 2000 பெண் சிசுக்கள் கருவில் அழிக்கப்படுகின் றன என்று அய்.நா. அறிக்கை எச்சரிக்கின்றது.

பெண்கள் என்றால் அடிமைகள் - குடும்பத்துக்குச் சுமை என்ற இந்து மத மனப்பான்மைதான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். பெண் சிசுக்கள் அழிக்கப் படுவது, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று தெரிவிப்பது என்பவை எல்லாம் சட்டப்படி குற்றம் என்பது ஏட்டளவில்தான் உள்ளன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது என்பதும் குறைவே. இந்த நிலையில் சட்டத்தைக் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளை வலியுறுத்துகிறது.

இது பற்றி அரசு அளவில் விளம்பர சாதனங்களைப் பயன்படுத்திப் போதிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.



தீர்மானம் எண். (3) : உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை.

முன்மொழிதல் : இறைவி, சென்னை (தலைவர், பெரியார் களம்)

நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. உயர் அதிகாரம் மிக்க உயர் நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் பெண் களுக்கான பிரதிநிதித்துவம் அதிகம் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அரசையும், உச்சநீதி மன்றத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். (4) : அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கிய துறைகள் தேவை

முன்மொழிதல்: க.வெண்ணிலா, சென்னை

மாநில அரசுகளாக இருந் தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி, அமைச்ச ரவையில் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததோடு, அப்படியே அளித்தாலும் நிதி, கல்வி, உள்துறை போன்ற முக்கிய துறைகள் கொடுக்கப்படாத நிலைதான் இன்றுவரை நீடிக் கிறது. சமூக நீதியோடு பாலியல் நீதியும் தேவை என்ற கண்ணோட்டத்தில், இது பற்றி நாடு தழுவிய அளவில் விவாதங்களை எழுப்பிட அனைத்து மகளிர் அமைப்பு களும் முன்வர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் எண். (5) : பெண்களைச் சிறுமைப் படுத்தும் ஊடகங்கள், சின்னத்திரை, பெரிய திரைகளுக்குக் கண்டனம்



முன்மொழிதல் : ச.சாந்தி (தருமபுரி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பது, நுகர்வுப் பொருளாக, விளம்பரப் பொருளாகப் பயன்படுத்துவது - பெண்கள் என்றால் மற்றவர்களால் அடி - உதைபட வேண்டியவர்கள், வில்லிகள் என்கிற முறையில் ஊடகங்கள் சின்னத்திரை, பெரிய திரைகளில் சித்தரிப் பதற்கு இம்மாநாடு, தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் போக்குகள் நாளும் வளர்ந்து வருவதால் இவற்றை எதிர்த்து நேரடியான போரட்டங்களில் ஈடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.



தீர்மானம் எண். (6) : குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை பெண்களைச் சேர்ந்ததே!

முன்மொழிதல் : சு.மணிமேகலை (சிவகங்கை மாவட்டம்)

கருவைச் சுமந்து பிரச வித்து குழந்தைகளை வளர்த் தெடுப்பது என்பது பெண் களைப் பொறுத்து இருப்ப தால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதா, வேண் டாமா என்று தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு மட் டுமே இருக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மா னிக்கிறது.

தீர்மானம் எண். (7) :பெண்ணுரிமைச் சட்டங்கள் பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரம்



முன்மொழிதல் : தமிழ்ச்செல்வி (சத்துவாச்சாரி)

பெண்கள் சொத்துரிமைச் சட்டம் (விவாகரத்து பெற்ற பெண்ணுக்கும் சொத்துரிமை) குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்,வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்குரிய சிறப்புரிமை கள், பணி இடங்களில் பாலி யல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் என்று பெண்கள் உரிமைக்கு உத்தரவாதம் செய்யும் சட்டங்கள் இருந்தாலும் - இவை பற்றிய போதிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இல்லாமையால், இவை குறித்து மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்களிடத்தில் பிரச்சாரம் செய்வது என்றும், அரசுகளும் இந்த வகையில் பெண்களுக்கு எடுத்துக் கூறத் தேவையான பிரச்சார யுக்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். (8) : மாணவிகளுக்குக் கட்டாய கராத்தே பயிற்சி தேவை



முன்மொழிதல் : இ.தென்றல் (சத்வாச்சாரி)

பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப் படுவது அதிகரித்து வருவது ஒரு நாகரிக சமுதாயத்துக்கு அழகானதல்ல. ஆண்களின் வன்கொடுமையை எதிர்த்து முறியடிக்கவும், உடல் வன் மையைப் பெருக்கிக் கொள்ள வும், கராத்தே போன்ற தற் காப்புப்பயிற்சிகளை அனைத்துப் பெண்களுக்கும் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். (9) : ஆணுக்கு ஒரு மரியாதை, பெண்ணுக்கு ஒரு மரியாதை என்னும் பேதம் நீக்கம்



முன்மொழிதல் : எலிசபத் ராணி (கும்பகோணம் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்)

ஆண் தன் மனை வியை நீ, போ என்று அழைப்பதும், பெண்கள் தம் கணவரை வாங்க, போங்க என்று அழைப்பதும் நெடுங்கால மாகவே இருந்து வருகின்ற முதலாளி - தொழிலாளி அடிமை முறை என்பதால் இரு தரப்பிலும் மரியாதை யோடு அழைப்பதே நாகரிகம் உள்ள மக்களுக்கு அடை யாளம் என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் எண். (10) : ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம்

முன்மொழிதல் : மோகனப்பிரியா (ஆவடி மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர்)



இட ஒதுக்கீட்டுக்காக ஜாதிச் சான்றிதழ் பெறும் போது தந்தையின் ஜாதிதான் கணக்கில்எடுத்துக் கொள்ளப்படும் என்ற நடை முறையானது - பெண்களை இரண்டாம் தரத்தில் நிறுத்தும் ஏற்பாடாகும். மேலும் ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என்பதால், தாய் அல்லது தந்தையின் ஜாதியில் எதை விரும்புகிறார்களோ அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். (1 1) : உச்சநீதி மன்றத்தின் விபரீதத் தீர்ப்பு

முன்மொழிதல் : வெண்ணிலா (திருப்பத்தூர்)



மாமியார் தனது மகன் விவாகரத்து செய்து விடுவான் என்று மிரட்டி னாலோ, மாமியார் மரு மகளை எட்டி உதைத் தாலோ - இந்தியக் குற்ற வியல் பிரிவு 498 இன் கீழ் தண்டனைக்குரிய குற்ற மாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றத் தால் 27-7-2008 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு பிற்போக்கானதும் ஆபத்தானதும் என்பதால், இதனைச் செல்லுபடியற்றதாக ஆக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றினை இயற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். (1 2) : உயர்கல்வி பெற ஒன்றியம் வாரியாகக் கல்லூரிகள் தேவை.

முன்மொழிதல் : செந்தமிழ்ச்செல்வி (திருவாரூர் மாவட்ட மகளிர் பாசறை)



தொடக்கப் பள்ளியில் சேரும் பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கும், பல் கலைக் கழகங்களுக்குச் செல்லு வதற்கு முன் இடைமுறிவுக்கு (Drop outs) ஆளாகும் அவல நிலை போக்கப்பட ஒவ் வொரு ஒன்றியத்திலும் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்று இம் மாநாடு மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். (1 3) : பாடத் திட்டங்களில் தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத் துக்கள்

முன்மொழிதல் : தேவிகா (தருமபுரி, காமலாபுரம்)



நாடுகள், மொழிகள், கலாச்சாரங்கள் கடந்து பெண்கள் விடுதலைக்கு தந்தை பெரியார் அவர் களின் பெண்ணுரிமை சிந் தனைகளும், தத்துவங் களும் தான் பயனளிக்க முடியும் என்று இம்மாநாடு உறுதியாகக் கருதுகிறது.

முதற் கட்டமாக தமிழ் நாடு அளவிலாவது பாடத் திட்டங்களில் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணு ரிமைக் கருத்துக்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.



தீர்மானம் எண். (1 4) : பெண்களின் இழிவுகள் ஒழிக்கப்பட

முன்மொழிதல் : அஞ்சு (தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

பெண்களை இழிவு படுத்தும், பெண்களின் உரிமைகளை மறுக்கும் மத நம்பிக்கைகள், சம்பிரதா யங்கள், பழக்க வழக்கங் கள், சாஸ்திரங்களை அறவே புறக்கணிப்பதன் மூலமே பெண்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு களிலி ருந்தும், உரிமை மறுப்புகளி லிருந்தும் விடுதலை பெற முடியும் என்று இம்மாநாடு உறுதியாக வெளிப்படுத்துகிற 30-5-2012