Search This Blog

12.5.12

நித்யானந்தாவை காஞ்சி ஜெயேந்திரர் நையாண்டி!



ஆன்மீகம், ஆன்மீகம் என்று பேசுகிறார்களே. எழுதுகிறார்களே! நல்லொழுக்கம் வளர ஆன்மீகம் வளர வேண்டும் என்று கூறுவதை ஒரு வழமையாகக் கொள்கிறார்களே - அந்த ஆன்மீகத்தின் யோக்கியதை - குழாயடிச் சண்டையைவிட மிக மோசமாகப் போய் விடவில்லையா?

ஜெகத்குரு என்று சொல்லப்படும் காஞ்சி சங்கராச் சாரியார்களின் ஒழுக்கக்கேடு கூவம் நாற்றத்தைவிட அதிகமாகக் குடலைப் பிடுங்கவில்லையா?

அனுராதா ரமணன் என்ற பார்ப்பன எழுத்தாளர் அம்மையார் சங்கரமடத்திற்கு வரச் சொல்லி என் கையைப் பிடித்து இழுத்தார் ஜெயேந்திர சரஸ்வதி என்று கூறினாரே என் எதிரிலேயே ஒரு பெண்ணிடம் பட்டப் பகலில் தவறான காரியத்தில் ஈடுபட்டார் என்று கூறினாரா இல்லையா?

காமக் - கோடியான அவர் சீரங்கத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் நாள்தோறும் கைப்பேசியில் மணிக் கணக்கில் பேசிய செய்தி எல்லாம் அம்பலத்துக்கு வந்திடவில்லையா?

அதே காஞ்சியில் தேவநாதன் என்ற பார்ப்பன அர்ச்சகர் மச்சேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் உடலுறவு கொண்டதும், அவற்றைக் கைப்பேசியில் படம் பிடித்ததும் எல்லாம் ஊரே சிரிக்கவில்லையா? இப்பொழுது நித்யானந்தா எனும் வாலிப சாமியாரின் வக்கிரங்கள் வண்டி வண்டியாக வெளிச்சத்திற்கு வரவில்லையா? நடிகை ஒருவரோடு நடத்திய விவகாரங்கள் எல்லாம் சாங்கோ பாங்கோமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட வில்லையா?

பக்தர்களே ஒன்று திரண்டு நித்யானந்தாவின் ஆசிரமங்களை அடித்து நொறுக்க வில்லையா?

இப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டின் உறைவிடத்திற்கு ஒரு மடத்தில் இளைய மடாதிபதியாகப் பட்டம் சூட்டப் படவில்லையா?

கொக்கு ஒட்டகத்தைப் பழித்தது போல நித்யானந்தாவை காஞ்சி ஜெயேந்திரர் நையாண்டி செய்யவில்லையா?

ஒவ்வொரு மடத்துக்குள்ளும் கேமிராவைப் பொருத்தினால் ஒவ்வொரு மடத்தின் வண்ட வாளங் களும் அம்பலத்திற்கு வரும் என்று நித்யானந்தா சொல்லுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?

இவையன்றி நாள்தோறும் பல்வேறு சாமியார்களின் சரச லீலைகள் கொத்துக் கொத்தாகக் குதித்தோடவில்லையா?

மகாபாரதத்தில் துரோபதை சொன்னதுபோல, ஆண் என்ற ஒருவன் இருக்கும் வரைக்கும், சந்து என்ற ஒன்று இருக்கும் வரைக்கும் எந்தப் பெண்ணும் கற்புள்ளவளாக இருக்க முடியாது என்று சொல்லவில்லையா?

ஒழுக்கத்தோடு வாழ்ந்து தான் தீர வேண்டும் என்று ஆன்மீகத்தில் எங்கே உறுதி செய்யப்பட்டுள்ளது? பஞ்சமா பாதகங்களுக்கும் கழுவாய்களைச் சுலபமாக வைத்துக் கொண்டு ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்று சொன்னால் ஒழுக்கமுடன் வாழ்பவன்தான் பைத்தியக்காரன் என்று நினைக்கக் கூடிய நிலைதானே ஏற்படும்? குறைந்த முதலீடு கொள்ளை லாபம் என்றால் அதனைத் தானே மக்கள் தேர்வு செய்வார்கள்?

குற்றம் செய்தால் அதற்குரிய தண்டனை நிச்சயம் உண்டு; நிவர்த்திக்க இடம் இல்லை என்று எந்த மதமாவது அறுதியிட்டுக் கூறியதுண்டா?

சிறீரங்க ஜீயரின் கதை என்ன? 90 வயதை எட்டும் அந்த ஜீயர் கடத்தப்பட்டார் என்ற சேதி ஏடுகளில் இடம் பெறவில்லையா? நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு போடப்படவில்லையா? அவரது மருமகனே அவரைக் கடத்தி, மடத்தைக் கைப்பற்ற ஏற்பாடு என்று குற்றங் கூறப்படவில்லையா? கொல்கத்தா சென்று அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லையா?

இப்பொழுது அவர் மரணம் அடைந்த நிலையில் கொல்கத்தாவிலிருந்து அவர் உடலைக் கொண்டு வந்த நிலையில் மடத்துக்குள் அவரை சமாதி வைக்கக் கூடாது என்று மறியல் நடக்கவில்லையா? உடல் ஆம்புலன்சில் எத்தனை மணி நேரம் வீதியில் காத்துக் கிடந்தது - ஊரே சிரிக்கவில்லையா?

ஆன்மீகத்தின் ஒழுக்கத்துக்கும், நன்னடத்தைக் கும் இவை எல்லாம் நற்சான்றுகள் தானா?

இவ்வளவும் நடந்த பிறகும் எந்த ஊடகம் இவற்றைப் பற்றி மூச்சுவிடுகின்றது? ஆன்மீகத்துக்கு ஆபத்து என்றால் அது அவாளுக்கு,அக்ரகாரத்துக்கு ஆதிக்கத்துக்கு ஏற்பட்ட பிளவை நோயாயிற்றே!

கடவுள் செத்தால் பார்ப்பான் செத்தான் என்ற தந்தை பெரியாரின் ஆப்த மொழியை நினைவிற் கொள்ளுங்கள்

-------------------- "விடுதலை” தலையங்கம் 15-5-2012

9 comments:

தமிழ் ஓவியா said...

காயத்ரி


தடகளப் போட்டிகளில் இந்தத் தமிழ் நாட்டுப் பெண் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்! இலங் கையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி, பாங்காக்கில் நடந்த ஆசிய தடகள சாம்பியன் போட்டி, புனேயில் நடந்த யூத் காமென்வெல்த் போட்டி, சீனாவில் நடைபெற்ற ஆசிய அத்லெட்டிக் கிராண்ட் ஃப்ரீ, டெல்லியில் நடைபெற்ற ஏசியன் ஆல் ஸ்டார் அதலெட்டிக் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை அள்ளி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். தடை தாண்டும் போட்டி மும்முறைத் தாண்டுதல் இவ்விரண்டி லும் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

நடுத்தரக் குடும்பம் தான். பாரம்பரியப் பெருமை என்று சொல்லிக் கொள் வதற்கு ஒன்றுமில்லை. சின்ன வயதிலிருந்து துறு துறுதான். தாயார் கொடுக் கும் உரிமையைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்.

பள்ளியில் படிக்கும் பொழுது வாயைப் பிளந்து கொண்டு மைதானத்தில் நடக்கும் போட்டிகளைக் கவனித்து வந்த அவரிடம் குடி கொண்டிருந்த திறமை பற்றி அவருக்குத் தெரிய வில்லை. ஒரு பயிற்சியாளர் அவரின் திறனை வெளி யில் கொண்டுவந்தார் -கடுமையாக உழைத்தார் - அதன் விளைவுகள்தான் இந்தப் பரிசு மழை!

அவரது அடுத்த இலட்சியம் ஒலிம்பிக்கில் தங்கத்தைப் பறிப்பதுதான்.

அதே நேரத்தில் அந்தப் பெண் தன் மனதைத் திறப்பதைக் கேளுங்கள்:

இன்றைக்குப் பல விளையாட்டுகளில் இந்தியர்கள் முதன்மை வகிக்கின்றனர். குறிப்பாக தமிழர்கள். ஆனால் ஊடகங்கள் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கிற முக்கியத் துவத்தை மற்ற விளை யாட்டுகளுக்குக் கொடுப் பதில்லை. அதனால் பல சாதனைகள் வெளியில் தெரியாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று தம் ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார்.

இந்தப் பாழாய்ப் போன பார்ப்பனீய கிரிக்கெட் வந்தாலும் வந்தது, இந்த மண்ணுக்குரிய விளை யாட்டுகள் மண்ணுக்குள் புதைந்து போயின.

பார்ப்பனீயம் ஒரு துறை யில், இரு துறைகளிலா? அது கால் வைத்த எல்லாத் துறைகளையும் கபளீகரம் செய்துவிடுகிறதே!
கடைசியாக ஒன்று - காயத்ரி போன்றவர்கள் பலர் உங்கள் வீடுகளில் இருக்கத்தான் செய் கிறார்கள். அவர்களை அடையாளம் காணுங்கள். சாதனைகள் சிறகுகளை விரிக்கும்!

- மயிலாடன் 12-5-2012

தமிழ் ஓவியா said...

பூணூல் பேனா


கே: ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், தாம் வசிப்பதற்காக அரசு ஒதுக்கிய வீட்டை வேண்டாம் என்று கூறிவிட்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் தியாகம் மெச்சத் தகுந்ததுதானே?

ப: என்ன இப்படி சர்வ சாதாரணமாகக் கேட்டு விட்டீர்கள்? பிரதிபா பாட்டீல் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்? இந்த மாதிரி தியாகத்தை நாடு கேள்விப்பட்டதுண்டா? அவரை இப்படி வெறுமனே - ஒரு கேள்வி பதிலில் பாராட்டி விட்டு விடலாமா? ரொம்பத் தப்பு; மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தி, அதில் மக்கள் பரிசாக, அவர் விரும்பி ஆசைப்பட்டதை அவருக்கு ஒதுக்கித் தர வேண்டும். அந்தத் தியாகி அதை பெற்றுக் கொள்வார். அப்போது அந்த தியாகம் முழுமையடையும்.

- துக்ளக் 16.5.2012



டாக்டர் ராதா கிருஷ்ணய்யரும், ஆர். வெங்கட்ராமய்யரும், சங்கர் தயாள் சர்மா என்ற பார்ப்பனரும் குடியரசு தலைவராக இருந்தபோதும் இதே நிலைதானே!

அப்பொழுது சோவின் பேனா பூணூல் ஸ்டிரைக் செய்தது ஏனோ? 12-5-2012

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகச் செடியில் பூத்தது விடுதலைச் சிறுத்தைகள் தவறு செய்தால் தாயன்போடு சுட்டிக்காட்டுபவர் தமிழர் தலைவர்


தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் பிரித்துப் பார்க்க வேண்டாம்
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முழக்கம்!

ஜெயங்கொண்டம், மே 12- தந்தை பெரியார் அவர்களையும் அண்ணல் அம்பேத்கரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

திருச்சி மண்டல திராவிடர் கழகச் செயலாளர் சி.காமராஜ் அவர்களின் இல்லம் மற்றும் வணிக நிலையம் ஆகியவற்றைத் திறந்து வைத்து (6.5.2012) செயங்கொண்டத்தில் பேசுகையில் அவர் குறிப் பிட்டதாவது:

விடுதலை சிறுத்தைகளின் மீது திராவிடர் கழகம் ஒரு நன்மதிப்பைக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியமாகத் தான் இங்கே தோழர்கள் பேசினார்கள்.
ஆக விடுதலை சிறுத்தைகள் பெரியாரியத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிக் கொண்டிருக் கிற ஓர் இயக்கம். அரசியலுக்காக அல்ல. சிந்தனைச் செல்வன் அவர்கள் இங்கே குறிப்பிட்டது போல தொடக்கத்தில் இருந்தே சில தலித் இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகளின் எழுச்சியை பிடிக்காதவர்கள், வளர்ச்சியை பிடிக்காத வர்கள், ஏதாவது ஒரு குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக விடுதலை சிறுத்தைகள் இயக்கம் ஏன் பெரியாரை தூக்கிப் பிடிக்கிறது என்று சொன்னார்கள்.

அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? பெற்ற பிள்ளைகள் தங்களுடைய தந்தை பெயரை தெருவிலே நின்று உரத்து முழங்குகிறபோது, இவர் ஏன் இவரின் அப்பன் பெயரை சொல்கிறான் என்று கேட்டால் அது எவ்வளவு கேவலமானதோ அப்படிப் பட்ட ஒரு கேவலமான கேள்வியை பெரியாரின் பெயரை இவன் ஏன் சொல்கிறான் என்றால், என் தந்தையின் பெயரை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வது என்கிற வகையில் தான் அவர்களுக்கு நான் பதில் சொல்லாமலேயே அடக்கமாக இருக்கிறேன். ஒருநாளும் அவர்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை.

எத்தனையோ பேர் ஏடுகளில் எழுதியிருக் கிறார்கள், மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆக ஒன்று மட்டும் இந்த மண்ணிலே தெரிகிறது. பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று ஒருசாராரும் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான தலைவர் என்று இன்னொரு சாராரும் இந்த மண்ணிலே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் வெளிப்படுகிறது. ஆனால், இந்த மண்ணிலே உண்மையாய் தன்மானத்தோடு வாழ விரும்புகிற யாரும், தலை நிமிர்ந்து வாழ விரும்புகிற யாரும், சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை, ஜனநாயகத்தை விரும்புகிற யாரும் தந்தை பெரியாரையும் அம்பேத்கரையும் பிரித்து பார்க்க முடியாது.

பிரித்து பார்க்க மாட்டார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களோடு தந்தை பெரியார் அந்த காலத்திலேயே நட்பு கொண்டார். இன்றைக்குதான் புரட்சியாளர் அம்பேத்கருக்கு பெயரும் புகழும் உலகமெல்லாம் பரவியிருக்கிறது. ஆனால், அந்த காலத்தில் 70, 80 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் உலகம் தழுவிய புகழ்பெற்ற தலைவர் அல்ல, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பெருந் தலைவர் அல்ல.

ஆனால், அன்றைக்கு இனம் இனத் தோடு சேரும் என்பது போல பெரியார் புரட்சியாளர் அம்பேத்கரை அடையாளம் கண்டார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டார்கள். தந்தை பெரியாரிடத்திலே புரட்சியாளர் அம்பேத் கர் அவர்கள் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்ல என்ற பார்வை இருந்திருந்தால் அம்பேத்கரோடு ஒரு நெருக்கமான நட்பை ஏற்படுத்தியிருக்க முடியாது.

தமிழ் ஓவியா said...

இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டிருக்க மாட்டார்கள். சென்னைக்கு அழைத்துவந்து அவரை மேடையிலே பேச வைத்திருக்க மாட்டார்.

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அறைகூவல் விடுத்து, தாழ்த்தப் பட்ட மக்களின் ஒரே தலைவர் அம்பேத்கர்தான், இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்க மாட்டார். பெரிய அளவில் புகழ்பெறாத நிலையிலும்கூட அப்படி அவர்களுக்கிடையில் அன்றைக்கு அந்த நட்பு இருந்தது என்று சொன்னால், அவரும் பகுத்தறிவு இனம், இவரும் பகுத்தறிவு இனம். எனவே இனம் இனத்தோடு சேர்ந்தது.

அப்படிப்பட்ட அந்த தலைவர்களின் வரிசையிலே, அந்த கொள்கைகளை உள்வாங்கி இயங்குகிற இயக்கம்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. நான் எப்போதும் நன்றி உணர்ச்சியோடு எல்லா சூழலிலும் அது பேச்சுகளாக இருந்தாலும் சரி பொதுக்கூட்ட மேடைகளாக இருந்தாலும் சரி தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறுகிற விவாதங்களாக இருந்தாலும் சரி அதை சொல்ல தவறுவதில்லை.

பெரியார் திடலில் அரசியல் கற்றேன்!

பெரியார் திடலில் தான் இந்த திருமாவளவன் அரசியலை கற்றுக் கொண்டான், பொது வாழ்வுக்கு வரவேண்டும் என்கிற உணர்வை பெற்றான் என்பதை எந்த சூழலிலும் மறுக்க வேண்டிய தேவை இல்லை. அதுதானே பெருமை. பெரியார் திடலில் வளர்ந்தவன் என்று சொல்வதுதானே பெருமை. ஆகவே, அப்படி நான் எல்லாச் சூழலிலும் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், திடீரென்று விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான ஒரு வேலை திட்டம் பெரியார் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிற சில இயக்கங்களால் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

திருமாவளவன் பெரியாருக்கு எதிரி என்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலே இருக்கிற எழுத்தாளர் தோழர் ரவிக்குமார் அவர்கள் ஒரு தொடர் எழுதினார். அவர் எழுதிய அந்த கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லலாம், எதிர் கருத்து சொல்லலாம் அல்லது எழுத்தாளரையே கூட நேரில் சந்தித்து விவாதித்து இருக்கலாம் அல்லது கண்டித்து மறுப்பு எழுதியிருக்கலாம்.

ஆனால், இந்த இயக்கத்தை மெல்ல மெல்ல நான் வளர்த்து வருகிற சூழலில் இயக்கத்தின் ஆணி வேரையே அறுக்கக்கூடிய வகையிலே எனக்கெதி ரான வேலையில் ஈடுபட்டார்கள். சிலர் தலித்து களையே தூண்டிவிட்டார்கள். தலித்துகளுக்கு இடையே இருக்கிற பல பிரிவுகளை தூண்டி விட்டார்கள்.

ஆனால், எப்போதும் தவறுகளை சுட்டிக்காட்டி, தாயன்போடு நம்மை அரவணைத் தவர்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். மனம் நெகிழ்ந்துதான் இந்த கருத்தை சொல்கிறேன். கலி.பூங்குன்றன் அவர்களாக இருந்தாலும் துரை.சந்திரசேகரன் அவர்களாக இருந்தாலும் நம்முடைய ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களாக இருந்தாலும் யாரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அழிக்க வேண்டும், வேரறுக்க வேண்டும் என்று எண்ணவில்லை.

தாயன்போடு அரவணைத்தார் தமிழர் தலைவர்

நம் பிள்ளை, நம்வீட்டு பிள்ளை, அவருக்கு எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லுவோம் என்கிற அளவில்தான் அவர்கள் அதை அணுகி னார்கள். ஒருநாள்கூட கடிந்து கொண்டதில்லை. நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் தாயன்போடு சுட்டிக்காட்டும் தன்மை கொண்டவர் தமிழர் தலைவர். எப்போதும் போல அந்த மலர்ந்த முகத்தோடு புன்னகை தவழும் முகத்தோடுதான் நம்மை தமிழர் தலைவர் வரவேற்றிருக்கிறார்.

பலமுறை பெரியார் திடலிலே அவரை சந்தித் திருக்கிறேன். ஆனால் சிலர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவே இருந்தார்கள். ஒரு எழுத்தாளர் எழுதுகிறார், திருமாவளவன் அதை எழுதவில்லை, திருமாவளவன் மேடையில் அப்படி பேசவில்லை. திருமாவளவன் அப்படிப்பட்ட அடிப்படை கருத் துள்ள ஆளா? அவருக்கு யாராவது நாம் அறிவுரை சொன்னோமா ஆலோசனை சொன்னோமா? என்று நினைத்தார்களா?

திராவிடர் கழகத் தலைவர்களின் கருத்துகளை கேட்டு, திராவிட முன்னேற்ற கழக கருத்துகளை கேட்டு இந்த உணர்வுகளை பெற்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்து ஒரு இயக்கத்தை உருவாக்கினோம். அன் றைக்கு விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அரசியலுக்கே வரவில்லை.

இன்றைக்கு பெரியார் படத்தை போடுவது ஓட்டுக்காக என்றுகூட சொல்லலாம் ஆனால் 1990லேயே பெரியார் படத்தைபோட்டு கருத்து களைப் பேசி இயக்கத்தை கட்டினேன் மதுரை மண்ணிலே. பகலிலே வேலைக்கு செல்வேன், இரவிலே கிராமங்க ளுக்குச் செல்வேன்.
சேரிப் பகுதிகளில் மக்களிடத் திலே போய் பேசினேன். பெரியார் இப்படி சொல் லியிருக்கிறார்.நாம் மூடப்பழக்கங்களுக்கு ஆட்பட கூடாது. நாம் நம்பிக்கையோடு, தன்னம்பிக்கையோடு நம்மைஆளாக்கிக் கொள்ளவேண்டும். எதை கண்டும் நீங்கள் பயப் படக்கூடாது என்று தெம் பூட்டும்சொற்களை சொல்வதற்குகூட யாரும் கிடையாது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகச் செடியில் பூத்த பூ விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலைச் சிறுத்தை கள் இயக்கம், திராவிடர் கழகம் என்னும் செடியில் பூத்த பூ, அதில் கிளைத்த கிளை!

நான் உள்வாங்கிக் கொண்ட பகுத்தறிவு, பெரியாரின் கருத்து, அம்பேத்கரின் கருத்து இவற்றை சொல்லித்தான் இளைஞர்களை திரட்டி னேன். அப்படி, அந்தக் காலத்திலேயே தேர்தல் அரசியலுக்கு வராத காலத்திலேயே பெரியா ரின் கருத்துகளை மக்க ளிடத்திலே எடுத்து சென்ற விடுதலைச் சிறுத் தைகள் கட்சியை ஏதோ பார்ப்பன இயக்கத்தை பார்ப்பது போல பார்த் தார்கள்.

பீடி, சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சொல் கிறோம். நாம் பெற்ற பிள்ளை பீடி, சிகரெட் பிடிக்கிறான். அதற்காக ஆளை காலிசெய்து விடு வோமா? மது பழக்கம் வேண்டாம் என்று சொல் கிறோம், ஆனால் அவ னுக்கு மதுப் பழக்கம் இருக்கிறது அதற்காக அவன்வேண்டவே வேண்டாம் என்று தீர்த்துவிடுவோமா?

அந்தக் குழந்தையைத் திருத்த மாட்டோமா? ஆக ஒரு கட்சி, பெரியா ரியத்தை பேசுகிற கட்சி, பெரியார் கருத்துகளை பரப்புகிற கட்சி அதிலே இப்படி மாறுபாடான கருத்து நிலவுகிறது என்று சொன்னால், அதை சுட் டிக்காட்டி திருத்துவது என்பதுதான் ஆக்கப்பூர் வமான நடவடிக்கை.

ஆனால், கடுமையான எதிர்ப்பு வேலையை வேரறுப்பு வேலையை அன்றைக்கு செய்தார்கள் சிலர். ஆனால், நான் எந்த இடத்திலும் பெரியார் இயக்கத் தோழர்களை எதிர்த்து பேசியது இல்லை.

திராவிடர் கழகத் தலைவர்

ஈழத்தமிழர் சிக்கல் வந்தபோது 2009 ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி, கிளிநொச்சியை சிங்கள இனவெறியர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்ற தகவல் வந்ததும் ஜனவரி 4ஆம் தேதி நான் திருச்சியிலேஒரு மாநாட்டிலே கலந்து கொண்டு உரையாற்றிய போது வெளிப்படையாக எல்லோருக்கும் ஒரு அறைகூவல் விடுத்து, தலைக்கு மேல் வெள்ளம் வரப்போகிறது. இப்போ தாவது நாம் ஒன்றி ணைந்துநிற்போம்.

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இந்த நேரத்திலே தேர்தல் அரசியலை ஓரம் வைத்து விட்டு, ஒன்று சேர்வோம். அதற்காக நான் எல்லாத் தலைவர்களுடைய இல்லத்திற்கும் நேரில் செல்லப் போகிறேன் என்று அறிவித்துவிட்டு அடுத்த நாள் பாமக நிறுவனரை சந்தித்து இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து அடுத்த நாள் சந்தித்த தலைவர் யாரென்றால் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களைதான்.

தமிழ் ஓவியா said...

அதன்பிறகு, ஈழத் தமிழர் நலனில் அக் கறைகாட்டும் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஒன்றுகூடி ஒருமுடி வெடுப்போம் என்று தீர்மானித்து, பெரியார் திடலில் ஒருகூட்டம் கூட் டுவது என்று முடிவெ டுத்தோம்.

அதற்கு பிறகு கலைஞர் அவர்களை சந்திக்கச் சென்றோம். அப்போது அவர் தொலைகாட்சி யிலேதிருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு களை திமுகவின் வெற்றிச் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். பலரும் அவருக்குவாழ்த்து சொல்லிக் கொண்டிருந் தார்கள். நாங்கள் சென்ற தும்,உடனடியாக தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, ஒரு மணி நேரம் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து ஆலோ சித்தார்.

ஆசிரியர் அவர்களே கையொப்பமிட்டு அனைத்துத் தலைவர்க ளுக்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் பெரியார் திட லில் கூட்டம் நடை பெற்றதால் அவர்கள் வரத் தயாராகவில்லை. ஆசிரியர் அவர்களுக்கு அதில் வருத்தம் என்றா லும் மிகப்பெருந்தன்

மையாகஅதனை எடுத்துக்கொண்டார். நெடுமாறன்அவர் களோ, வைகோ அவர் களோ, தா.பாண்டியன் அவர்களோ பெரியார் திடலுக்கு வராதவர் களா? என்ற ஒரு கேள்வியை மட்டும் என்னிடம் வைத்தார்.

மே 10ஆம் தேதிக்குப் பிறகு 12ஆம் தேதியன்று கூட்டத்தைவேறு இடத்தில்வைத்துக் கொள்ளலாம் என்றனர். தமிழர் தலைவர் அவர்கள் அப்பொழுது மிகுந்த பெருந்தன்மை யோடு அதற்கும் இசைந் தார்கள். திடீரென்று அந்தக் கூட்டத்தையும் ரத்து செய்துவிட்டார் கள். கலைஞர் அவர் களை நாங்கள் சந்தித்தது அவர்களுக்குப் பிடிக்க வில்லை. ஈழத் தமிழர்கள் பிரச்சினையை பொது வாகப் பார்க்காமல் வேறு விதமாக அணு கியது எனக்கு ஆச்சரி யத்தையும், அதிர்ச்சியை யும் அளித்தது.

விடுதலைப் புலி களை தொலைநோக் கோடு ஆதரித்த இயக்கம் திராவிடர் கழகம். நான் ஆசிரியர் அவர்களிடத் திலேயே சொன்னேன். அன்றைக்கே இந்த விடு தலைப் புலிகள் இயக்கத் தால் தான் ஒரு விடுதலை பாதையை நோக்கி மக் களை அழைத்து செல்ல முடியும் என்ற நம்பிக் கையோடு அன்றைக்கு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து மேதகு பிரபாகரன் அவர்களால்தான் விடுதலையை வென் றெடுக்க முடியும் என்கிற கருத்து பிரசாரத்தை முன்னெடுத்த இயக்கம் திராவிடர் கழகம்.

திராவிடர் கழகம் நடத்திய ரயில் மறியலில் பங்கேற்பு

திராவிடர் கழகம் ரயில் மறியல் போராட் டம் அறிவித்தது. அந்த காலத்தில் கல்லூரி மாண வனாக இருந்த நானும் அந்தஅறிவிப்பை பார்த்துவிட்டு நானும் ரயில் மறியலிலே கலந்து கொண்டுசைதாப் பேட்டையிலே கைதா னேன். சைதாப்பேட் டையிலே கைதான எங் களை எங்கோ பல்லா வரம் தாண்டி சென்று ஒரு காவல் நிலையத்திலே ஒருநாள் முழுக்க வைத்து 6 மணிக்கு மேல் விட்டு விட்டார்கள். அதன்பிற கும் நான் பெரியார் திடலுக்கு வந்து அய்யா அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டுதான் போனேன்.

இன்றும் என்றும் தமிழர் தலைவர் அவர் களும் திராவிடர் கழக மும் என் மரியாதைக்கு உரியவை என்று பேசி னார்.

தமிழ் ஓவியா said...

காந்தியாரைத் தத்தெடுத்த செல்வந்தர்


ஜம்னாலால் பஜாஜ் என்பவர் காந்தியாரை தமது தந்தையாகத் தத்து எடுத்து தனக்குச் சொந்தமான கிராமத்தை காந்தியாரின் பெயருக்கு எழுதி வைத்தார் அக்கிராமமே பிற்காலத்தில் சேவா கிராமம் என்று புகழ் பெற்றது.

தமிழ் ஓவியா said...

ருசியாவில் கோயிலுக்குப் பூட்டு


ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள கோயிலில் ராதை - கண்ணன், சிவ பார்வ்தி, சைதன்ய மகாபிரபு, பிள்ளையார், துர்க்கை ஆகியோர் விக்ரகங்கள் அழகு மிளிர காட்சி தருகின்றன.

கோயிலின் கலாச்சார மையத்தில் வேதம் ஓதுதல் - கற்பித்தல், யோகப் பயிற்சி, இந்துப் பண்பாட்டு ஆய்வு முதலியன நடைபெறுகின்றன.

எல்லா விதிகளையும் புறக்கணித்து விட்டு ரஷ்ய அரசு வாரியம், கோயிலின் பட்டாவை திடுமென ரத்து செய்துள்ளது. அதிபர் புடினுக்கும், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கும், மகஜர் அனுப்பியாயிற்று. இதுவரை பலன் இல்லை.12-5-2012

நம்பள்கி said...

இப்படி இந்தியாவில் இருந்து இது மாதிரி உண்மைகளை எழுதிகிரீர்களே, (அவைகள் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தாலும), உங்களுக்கு துளியும் பயமே இல்லையா?

ராமகோபாலன் மற்றும் அர்ஜுன் சம்பத் "ஐயாக்கள்," உங்க வீட்டுக்கு "ஆட்டோ" அனுப்பமாட்டார்கள? அதாவது, உங்க வீட்டுக்கு "ஆட்டோ" அனுப்பி உங்களை விவாதத்திற்கு கூப்பிட "ஆட்டோ" அனுப்ப மாட்டார்களா?

அப்படி "ஆட்டோ" அனுப்பி விவாதத்திற்கு கூப்பிட்டால், போவேர்களா? இல்லை போக இஷ்டம் இல்லையெனில் எப்படி சமாளிப்பீர்கள்?