Search This Blog

15.5.12

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் சோ ராமசாமி அய்யர்கள்!


கேள்வி: ஜனாதிபதி பதவியி லிருந்து ஓய்வு பெற்ற பின், தாம் வசிப்பதற்காக அரசு ஒதுக்கிய வீட்டை வேண்டாம் என்று கூறிவிட்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் தியாகம் மெச்சத் தகுந்ததுதானே?


பதில்: என்ன இப்படி சர்வ சாதார ணமாகக் கேட்டு விட்டீர்கள்? பிரதிபா பாட்டீல் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்? இந்த மாதிரி தியாகத்தை நாடு கேள்விப்பட்டதுண்டா? அவரை இப்படி வெறுமனே - ஒரு கேள்வி பதிலில் பாராட்டி விட்டு விடலாமா? ரொம்பத் தப்பு; மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தி, அதில் மக்கள் பரிசாக, அவர் விரும்பி ஆசைப்பட்டதை அவருக்கு ஒதுக்கித் தர வேண்டும். அந்தத் தியாகி அதை பெற்றுக் கொள் வார். அப்போது அந்த தியாகம் முழுமையடையும்.

----------------------------- துக்ளக் 16.5.2012


குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டில் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அவர் பெண் என்பதால், துக்ளக் சோ, ராமசாமிக்கே உரித்தான மனு தர்மப் புத்தியோடு கேலியும், கிண்டலும் செய்தே வந்திருக் கிறார் என்பது வெளிப்படை.

இப்பொழுது அவருக்காக ஒதுக்கிய வீட்டை வேண்டாம் என்று சொன்னதை வைத்து அற்பத்தனமான முறையில் கேலி செய்து எழுதியுள்ளார்.

இதே இதழில் தலையங் கத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனை இந்திரன் சந்திரன் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஒரு செய்தி தெரியுமா? பிரதீபா பாட்டில் குடியேற விரும்பிய வீடு சம்பந்தமாகக் கேலி செய்கிறாரே - இவர் போற்றும் திருவாளர் ஆர். வெங்கட்ராமனின் யோக் கியதை என்ன தெரியுமா?

அவருக்கு சென்னை கோட்டூர்புரத்தில் காந்தி மண்டபம் சாலையில் (கதவு எண் 41,42) இரண்டு பங்களாக்களும், சென்னை முருகப்பா சாலையும் காந்தி மண்டபமும் சந்திக்கும் இடத்தில் (கதவு எண் 7) ஒரு பங்களா ஆக மூன்று பங்களாக்கள் இருந்தும், அவற்றையெல்லாம் கொழுத்த தொகையில் வாடகைக்கு விட்டு அரசாங்க பங்களாவில் தங்கிய பெரிய மனுஷன் தான் திருவாளர் சோ அய்யர் போற்றும் திருவா ளர் ஆர். வெங்கட் ராமய்யர்.

அரசுப் பங்களாவில் அவர் குடியிருப்பதற்காக ரூபாய் 75 லட்சம் செலவில் அவர் குடியேற விரும்பிய பங்களா புதுப்பிக்கவும் பட்டது என்றால் அவாளின் யோக்கியதாம்சத்தைத் தெரிந்து கொள்ளலாமே! குமுதம் 20.6.1996 பங் களாக்களின் படங்களைப் போட்டு அம்பலப்படுத்தியிருந்ததே. வெங்கட்ராமனை எதிர்த்து மறியல் செய்த திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டனர் என்பதையும் நினைவூட்டுகிறோம். அந்தக் காலகட்டத்தில் ஆர்.வெங் கட்ராமனின் இந்தமுறைகேடு பற்றி ஒரு வரி எழுதியதுண்டா சோ? மனுதர்மப் புத்தி எந்த அளவுக்குச் சோவுக்குப் புரை ஏறியிருக்கிறது பார்த்தீர்களா?

அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி குடியரசு தலைவராக இந்த ஆர். வெங்கட்ராமனின் மகள், குடியரசு தலைவர் மாளிகையைப் பயன்படுத்தி - நன்கொடை வசூல் செய்தது எல்லாம் மறந்து போயிற்றா? ஆர். வெங்கட்ராமன் பதவியிலிருந்து விடுபட்ட நிலையில் அற்பம் சால்வைகளை எல்லாம்கூட அள்ளிக் கொண்டு வந்தவர் அவரின் பாரியாள் என்பது மற்றொரு கொசுரு தகவல்! கண்ணாடி வீட்டிலி ருந்து கல்லெறிய வேண்டாம் சோ ராமசாமி அய்யர்கள்!

-------------------"விடுதலை” 15-5-2012

1 comments:

Seeni said...

nalla thakaval!