கடவுள்
தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ள முடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல மதங்களைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக் கொள்வதற்கும் மேற்கொள்வதாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துக்கள் இருக்கின்றன.
அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு. பல கடவுள்கள் இல்லை என் றார். நீங்கள் கேட்க லாம், நபி அப்படி அதாவது ஒரு கட வுள் என்று சொன் னார்; இதைப் பற்றி உன் கருத்து என்ன? என்று என்னை பொறுத்தவரையில் நான் சொல்கிறேன்; கடவுள் என்று மக்கள், ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டி அழுகிறவர்களைவிட நபி அவர்கள் எவ்வளவோ மேலானவர் என்பேன்.
------------------தந்தை பெரியார், 20.12.1953
1 comments:
முகம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையும் அதுவே தன்னை மக்கள் ஒரு போதும் மகானாகவோ கடவுளாகவோ ஏற்றுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வாழ்ந்து காட்டியவர் சாதாரண மனிதர் இறைவனின் தூதர் இறை ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் முழுமையாக்கிவிட்டு மரணித்த உத்தமர் அவரை கடவுளின் தரத்துக்கு உயர்த்திப்பார்த்தல் தவறு இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கிறது நன்றி தங்களின் பதிவுக்கு
Post a Comment