Search This Blog

9.5.12

மக்களைப் பகுத்தறிவாளர்களாக்குவதே எமது குறி!


எவன் வரவுக்கு மேல் செலவு செய்கிறானோ அது விபசாரத்திற்கொப்பாகும். நம்முடைய வாழ்க்கையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடக் கொள்கைகளுக்கு இடமளிக் கக் கூடாது. கோவிலுக்குச் சென்று கும்பிட்டு அழுக்குத் தண்ணீரில் முழுகுவதையும், குழவிக் கல்லைச் சுற்றுவதையும் சினிமாவுக்குப் போகும் பழக்கத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். காட்சிக்காக சொல்ல வேண்டுமானால், பம்பாய், கல்கத்தா, மலேயா போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள இயற்கை வனப்பைப் பார்த்து பொது அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பிள்ளை பெறுவதைக் கூடுமான வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால், பள்ளியில் ஒன்று படிக்கிறது, கையில் ஒன்று இருக்கிறது, வயிற்றில் ஒன்று இருக்கிறதைப் பார்க்கிறோம். இப்படி இருப்பதால், பெற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆசையிருக்கலாம். இதனால் பொது உணர்ச்சி இருக்காது. இதன்மூலம் மனிதனுடைய ஒழுக்கமும், நேர்மைக் குணமும் நாளுக்கு நாள் குறையும். கடன் உண்டாகும். அதன்மூலம் கவலைகள் ஏற்படும். இவ்வளவுக் கும் காரணம் இந்தக் குழந்தைகள்தான். இதனால் தொல்லைபடுவதைவிட கர்ப்பத் தடை செய்து கொள்ளலாம். சர்க்கார் கர்ப்பத்தடை செய்துக் கொள்கிறவர்களுக்கு முப்பது ரூபாய் வீதம் தருகிறார்கள்.

அதை நல்ல முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு குழந்தைகள் இருந்தால் போதும். அதை நன்றாக வளர்த்து ஒழுக்கமுடையதாக ஆக்க வேண்டும்.

இது ஆனி மாதம். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்டு பங்குனி மாதம் முடிந்த பிறகு நான்கு மாதமாகியும் இன்னும் குழந்தைப் பிறக்கும் அறிகுறி தெரியவில்லையே என்று கவலைப்பட்டு ராமேஸ்வரம் அழைத்துப் போய் குழவிக் கல்லை சுற்ற வைப்பார்கள். குழந்தை பிறப்பதற்கும் ராமேஸ் வரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திப்பதே இல்லை. நம்முடைய சமுதாயத்தைத் திருத்துவதற்கென்று துணிந்து நிற்பவர்கள் நாங்கள். மனிதனுடைய அறிவைக் கெடுத்து அடிமைத் தனத்தை உண்டாக்குகின்ற சாஸ்திரம், வேதம், புராணங்களை ஒழிக்க வேண்டும். கடவுள் தன்மை களை அழித்து ஒழிக்க வேண்டும். ஜாதி, மதப் பூச்சாண்டியை நாட்டை விட்டே துரத்த வேண்டுமென்று முதன்முதல் சொன்னபோது இந்த நாட்டில் எங்களுக்குக் கிடைத்தது சாணி அடி, முட்டையில் மலத்தை ஊற்றி அடிப்பான். இதை எல்லாம் அனுபவித்தவர்கள் நாங்கள். எதற்காக இவ்வளவு தொல்லைக்கும் பாடுபட்டு வருகிறோம்? எனக்குப் புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. இருப்பதை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாம். அரசியல் கட்சிக்காரன் புரட்டுக்கும் பார்ப்பானுடைய வசைவுக்கும் மதவாதிகளுடைய எதிர்ப்பிற்கும் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு தொல்லை களுக்கும் சளைக்காமல் பாடுபடுவது யாருக்காக என்பதை நீங்கள் நன்கு உணர வேண்டும்.

நம்முடைய சமுதாய நிலைக்கு அதன் கேடுகளை உணர்ந்து காரியம் செய்யக் கூடியவர்கள் ஒருவரும் கிடைக்கவில்லை. இப்பொழுது அரசியலில் காமராசர் வந்ததும் ஓரளவு நன்மை செய்கிறார். அதைக் கண்டு இந்தப் பார்ப்பனர்கள் கச்சைக் கட்டிக் கொண்டு ஒழிக்கப் பார்க்கிறார்கள். அவரும், அவருக்கிருக்கும் எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு நமக்கு ஓரளவு நன்மை செய்கிறார். காரணம் என்ன? காமராசருக்கு குடும்பம் இல்லை. புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. தனி மரம். அதனால்தான் எதையுமே இலட்சியம் செய்யாமல் துணிந்து காரியம் செய்ய முடிகிறது.

ஒரு மனிதன் தனக்காக பிறக்கவில்லை. தன்னால் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல் புரிவதுதான் மனிதத் தன்மை ஆகும்.

நம்முடைய நாட்டில் பொது வாழ்க்கை என்பது பொறுக்கித் தின்பது என்று ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, மதம், அரசியல், கடவுள், வேதம் என்று இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றி கிடைத்தவரையில் சுரண்டி வாழ்வதற்காக ஆகும். இதை விளக்கி எவ்வளவுதான் சொன்னாலும் கவலை எடுத்து சிந்திப்பதில்லை. சிந்தித்துப் பார்த்து எந்த காரியத்தையும் செய்தால்தான் தெளிவு ஏற்படும். ஆகவே, என் அபிப்பிராயத்தை இந்த திருமணத்தின் மூலம் சொன்னேன். அவற்றை அப்படியே நம்பி விடாதீர்கள். நீங்கள் மனிதர்கள், உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது. அதிலே இதை ஆராயுங்கள். அதன் முடிவை பாருங்கள். தப்பு என்று பட்டால் விட்டு விடுங்கள். சரி என்று பட்டால் பகுத்தறிவுள்ள மனிதர்களாவதற்கு முன்வாருங்கள் என்று கூறினார்.

-------------------9.7.1962 அன்று சோழபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 21.7.1962

3 comments:

தமிழ் ஓவியா said...

பட்டால்தான்...!


இலங்கைத் தீவில் தம்பிள்ள நகரில் மசூதி ஒன்று இருக்கிறது. நகரின் மய்யப் பகுதியில் அது உள்ளது.

இது பவுத்த சாமியார் களின் கண்களை உறுத் தியது.

இந்தப் பகுதி புத்த பிட்சுகளின் புனிதத் தல மாக அறிவிக்கப்பட்டு இருப் பதால், அந்த இடத்தில் முசுலிம்களின் மசூதி இருக் கக்கூடாது என்று பவுத் தர்கள் மிகப்பெரிய அள வில் பேரணியையும், ஆர்ப் பாட்டத்தையும் நடத்தியுள் ளனர்.

முசுலிம்கள் மேற்கொள் ளும் எந்தவித நிர்ப்பந்தத் துக்கும் அரசு பணியக் கூடாது என்று பவுத்தர் களின் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அசோக மெனிக்கொட என்னும் புத்தத் துறவி கூறியுள்ளார்.

ஏற்கெனவே ஒரு மசூதி இடிக்கப்பட்டுள்ளது. அது குறித்துக் கடுமையான எதிர்ப்புகள் இந்தியா உள்பட பல நாடுகளிலும் வெடித்துக் கிளம்பின.

முசுலிம்களைப் பொறுத்தவரை இலங்கை யில் தனி ஈழத்துக்கு ஆத ரவு தெரிவிப்பவர்கள் அல்லர்; இன்னும் சொல்லப் போனால், எந்தப் போராளி கள் குழுக்களிலும் முக்கிய மாக அங்கம் வகித்தவர் களும் அல்லர்!

அப்படி இருந்தும் இலங்கை அரசும், பவுத்தர் களும் இஸ்லாமியர்களைச் சீண்டுகின்றனர். அவர் களின் மசூதிகளை இடிக் கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன? தமிழர்கள் எந்த மதத்தைச் சார்ந்த வர்களாக இருந்தாலும், சிங்கள மக்கள் அவர் களைத் தங்களின் எதிரி கள் என்றே கருதுகின்ற னர் என்பதை காலந் தாழ்ந்தாவது சிறுபான்மை மக்கள் புரிந்துகொண்டால் சரி!

இந்துக் கோவில் ஒன்று அங்கு இடிக்கப்பட்டதற்காக இந்து முன்னணியினர் தமிழ்நாட்டில் போராடு கின்றனர். நேற்று முதல் நாள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் வன்முறைகள் வெடித்துள்ளன. ஆட்டோ ஒன்றும் எரிக்கப்பட்டுள் ளது.

இந்த நேரத்தில் இந்து முன்னணிகளும் சரி, சிறு பான்மையினரும் சரி ஒன் றைக் கவனிக்கவேண்டும்.

பாஸ்டர் மார்ட்டின் என் னும் ஜெர்மானியர் எழுதிய கவிதைதான் நினைவிற்கு வருகிறது.

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந் தனர்; நான் பேசவில்லை; ஏனெனில், நான் யூதன் அல்ல; பின்னர் அவர்கள் பொதுவுடைமைவாதி களைப் பிடிக்க வந்தனர்; நான் பேசவில்லை; காரணம் நான் ஒரு கம் யூனிஸ்ட் அல்ல; பின்னர் அவர்கள் தொழிற்சங்க வாதிகளைப் பிடிக்க வந்தனர்; நான் பேச வில்லை; ஏனெனில், நான் தொழிற்சங்கவாதியும் அல்ல; பின்னர் என்னைப் பிடிக்க வந்தனர்; அப் பொழுது எனக்காக யாரும் பேசவில்லை என்ற கவிதைதான் இப் பொழுது நினைவிற்கு வருகிறது.

பொருத்திப் பாருங்கள், புரியும்!

- மயிலாடன் 9-5-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
தினை அறுத்தவன்!

செய்தி: இலங்கையில் திருக்கேஸ்வரம் கோவில் பகுதியில் 1500 கிலோ எடையுள்ள புத்தர் சிலை வைக்கப்படுகிறது.

சிந்தனை: இந்தியாவில் எத்தனைப் புத்தர் சிலைகளை மாற்றி இந்துக் கடவுள்களை நிர்மாணித் தார்கள் - தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதானே! 9-5-2012

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


குடுமிகள் கூத்தாடுவது ஏன்?

கேள்வி: இலங்கைத் தமிழர் பகுதி களில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என்று அந் நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் தமிழகக் காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளதுபற்றி...?

பதில்: இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். ஒரு ஆஸ்பத்திரிக்குப் போகிறீர்கள். அங்கு இருக்கிற நோயாளி குண மாகிக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வருகிறீர்கள். டாக் டரிடம் கொஞ்சம் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் ஸார்! என்று நீங்கள் சொல்வது சம்பிரதாயம். உடனே அதை வைத்துக்கொண்டு ஆஹா; டாக்டரிடம் வற்புறுத்திப் பேசிவிட்டு வந்திருக்கிறார். ரொம்ப நல்லவர் என்றெல்லாம் நினைத்துக் கொள் வதில் அர்த்தமில்லை.

துக்ளக், 9.5.2012

இதன் பொருள் என்ன? இலங்கை இராணுவம் தமிழர் பகுதியில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது என்கிறார் திருவாளர் சோ.
இதே பகுதியில் நான்கு பார்ப் பனர் குடும்பம் இருந்து அதன் அவுட்டுத் திரி கழன்று விழுந்தி ருந்தால், இப்படி எழுதுவாரா? காஷ்மீரில் பண்டிட்டுகள் (பார்ப் பனர்கள்) பிரச்சினையில் சோவின் பேனா இப்படி எழுதுமா?

பார்ப்பனர்களுக்கென்று ஒரு நாடு கிடையாது என்கிற அளவில் அவர்கள் பரதேசிகள்தானே! நாடு இருக்கிறவர்களைப் பார்த்தால் அவர்களுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டுதான் கிளம்பும்.

ஒரு தகவல் நினைவிருக் கிறதா? பி.வி. நரசிம்மராவ் வெளி யுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது (ஈழத்தில் கலவரங் கள் நடந்த தருணம் அது) அங்கு சென்ற அவர் ஒரு பார்ப்பனக் குடும்பத்தை விமானத்தில் கையோடு அழைத்து வந்தாரே - நினைவிருக்கிறதா?)

இன்னொரு கொசுறு; இலங்கை சென்ற அத்தனைக் கட்சி எம்.பி.,க்களும்தான், தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறினர். இதில் காங்கிரசை மட்டும் தனிமைப்படுத்துவது ஏன்? என்னே பார்ப்பன தந்திரம்!

தமிழர் விரோத பாட்டுக்கு குதித்தே ஆடும் குடுமி!

கேள்வி: யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகள் பிரமிக்க வைக்கின்றன என்று சுஷ்மா ஸ்வ ராஜ் பெருமிதம் கொள்கிறாரே?

பதில்: தமிழ்நாட்டில் கெட்ட பெயர் வாங்குவது என்று தீர்மானித்துவிட் டார் போலிருக்கிறது. யாழ்ப்பாணத் தில் சுடுகாடு, பாலைவனத்தைப் பார்க்க முடிந்தது என்று பேசினால் தானே, இங்கு ஏதாவது ஆதரவு கிடைக்கும்? அதை விட்டுவிட்டு இந்த மாதிரிப் பேசி இருக்கிறாரே?

துக்ளக், 9.5.2012

இதிலிருந்து ஒன்று தெளி வாகத் தெரிகிறது. ஈழத் தமிழர்கள் விடயத்தில் சிங்கள அரசு அநீதி யாக நடந்து கொள்கிறது என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான கருத்து என்பதை இதன்மூலம் ஒப்புக்கொண்டுள்ளார் திருவாளர் சோ அய்யர்வாள்!

தமிழ்நாட்டில் கெட்ட பெயர் வாங்குவது எந்தப் பிரச்சினை யில்? தமிழ்நாட்டு மக்களின் உணர்வு என்ன? என்று தெரிந்து கொண்டுதான் அதற்கு மாறாக இவர் எழுதி வருகிறார் என்பதும் இதன்மூலம் அம்பலமாகி விட்டது.

சுஷ்மா ஸ்வராஜாக இருந் தாலும் சரி, சோவாக இருந்தாலும் சரி, இந்து என். ராம்களாக இருந் தாலும் சரி, அது டி.கே. ரங்கராஜ னாக இருந்தாலும் சரி சுருதி பேதம் இல்லாமல் ஈழத் தமிழர் பிரச் சினையில் குழுப் பாடல் (கோரஸ்) தான் பாடுவார்கள்.

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் ஜெயவர்த் தனே விருந்தாளியாக இருந்து அன்புப் பரிசுகளைப் பெற்று வந்தவர்தானே இதே சோ!

சிறீலங்கா ரத்னா என்ற விருதைப் பெற்றுக் கொண்டவர் தானே திருவாளர் என் ராம்? இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா. மன்றம் தீர்மானம் போட்டுச் சுட்டிக் காட்டினாலும் பார்ப்பனர்களின் குடுமிகள் மட்டும் தமிழர் விரோத பாட்டுக்கு ஏற்பக் குதித்தே ஆடும்! 9-5-2012