சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் நேற்று விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி மகிழ்ச்சிக்கு உரியதே!
இவரின் விடுதலைக்காக சத்தீஷ்கர் மாநில அரசு உட்பட இந்தியா வில் உள்ள கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்களும், தலைவர்களும், அமைப்புகளும், தனி நபர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
அகில இந்திய அளவில் கொடுக்கப்பட்ட இத்தகைய அழுத்தத் தினால்தான் மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப் பட்டார்.
உண்மைகள் இவ்வாறு இருக்க, ஊடகங்கள் பரப்பும் தகவல்கள் எந்தத் திசையில் இருக்கின்றன?
சர்வ மதப் பிரார்த்தனைகளாலும் கடவுளின் கருணையாலும் தான் அவர் விடுவிக்கப்பட்டார் என்று திட்டமிட்டுப் பரப்புகின்றனவே - இவை அறிவு நாணயம்தானா?
மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் விடுதலை செய்யப்பட்ட தற்குக் காரணம் கட வுளின் கருணை என்றால் மாவோயிஸ்டுகளால் அவர் கடத்தப்பட்டாரே - அதற்கு யார் காரணமாம்?
அதற்கும் கடவுள் தான் காரணம் என்று சொல்ல முன்வருவார்களா? அப்படி அவர்கள் சொல்ல வேண்டும் அல்லவா!
கடத்தப்பட்டதற்குக் காரணம் கடவுள் அல்ல - அது மேனனின் தலையெழுத்து என்று சொல்லித் தப்பிக்கப் போகி றார்களா?
பரிதாபம்! கடவுளைக் காப்பாற்ற இந்த மக்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் பார்த்தீர்களா? எல்லாம் வல்லவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் கடவுள் இருக்கிறார்; அவருக்குச் சக்தியிருக்கிறது என்பதை நிரூபிக்க, இதுபோன்ற சம்பந்தா சம்பந்தம் இல்லாத இடங்களில் எல்லாம் கட வுளைத் திணிக்க முயலும் பேதைமையை என்ன சொல்ல!
மனித முயற்சிகளால் தான் மேனன் விடுதலையானார் - அதனைக் கொச்சைப்படுத்த வேண் டாம்!
----------- மயிலாடன் அவர்கள் 4-5-2012 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை
6 comments:
திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தேர் கவிழ்ந்து பக்தர்கள் சாவு மனிதர்களை கொல்வதில் கடவுள்களுக்கிடையே போட்டியா?
சென்னை, மே 4- திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தேர்கள் கவிழ்ந்து மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் மாண்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்செய்திகளை நேற்று நடந்த பெரியார் நூலக வாசகர் வட்ட கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மனிதர்களை பக்தர்களை கொல்வதில் கடவுள் களுக்கிடையே போட்டியா? கடவுள் கருணையே வடிவானவன் என்று கூறும் பக்தர்களே! சிந்திப்பீர்களாக! என்று கேள்வி கேட்டு விளக்கமளித்து பேசினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1900ஆவது நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் 3.5.2012 அன்று இரவு அன்னை மணியம்மையார் அரங்கில் இன உணர்வு எழுச்சிப் பெருவிழாவாக நடைபெற்றது.
இதில் பங்கேற்ற திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது சிறப்புரையில் குறிப்பிட்டதாவது:
மாவட்ட தோழர்கள் வர வேண்டும்
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மாதம் 4 கூட்டங்கள் நடந்தால் மாதம் இரண்டு கூட்டத்திற்காவது தென் சென்னை, வட சென்னை, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி மாவட்டத் தோழர்கள் குறைந்த பட்சம் வர வேண்டும்.
எப்படி ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்புகளுக்கெல்லாம் அட்டண்டென்ஸ் என்று சொல்லி வருகைப் பதிவேடு வைக்கிறார்களோ அதற்கு ஒரு மதிப்பெண் போடுகிறார்களோ அதற்கொரு பரிசு வழங்குகிறார்களோ அது மாதிரி நமது இளைஞர்களுக்கு இந்த செய்தி போய்ச் சேர வேண்டும்.
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு புதிய ஒளியைக் காட்ட வேண்டும். ஒன்று திரைப்பட மோகம் அது இல்லை என்றால் தொலைக்காட்சி மோகம் இது எல்லாவற்றையும் விட ரொம்ப பெரிய கொடுமை என்னவென்றால் அய்.பி.எல்., அதாவது சட்டப்படி கொத்தடிமையை ஒழித்து விட்டோம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் கிரிக்கெட்டில் ஆளை விற்கிறான். இத்தனை கோடிக்கு என்று விற்கிறான்.
கிரிக்கெட் போதையில் ஆளையே விற்கிறான்
ஒன்றே ஒன்று முன்னாலே தேச பக்தி என்ற பெயராலே அடித்துக் கொண்டு நின்றிருந்தான். பாகிஸ்தான் ஜெயித்து விட்டது. இந்தியா தோற்று விட்டது. விடாதே அவனை என்று கல் எடுத்து அடிப்பான். இப்பொழுது அந்த மாதிரி இல்லை எல்லா நாட்டுக்காரனும் சேர்ந்து விளையாடுகிறான்.
அவனவன் ஆளை விற்கிறான். குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறான். இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களுடைய விளையாட்டு.
இதை ஒரு அந்தஸ்த்தின் சின்னம் மாதிரி ஆக்கி விட்டார்கள். கிரிக்கெட் எனக்குத் தெரியவில்லை என்றால் நான் ஒரு தற்குறி மாதிரி என்று நினைக்கிறார்கள். எனக்கு கிரிக்கெட் பற்றித் தெரியவில்லை என்றால் நான் பிழைத்தேன் என்று பொருள்
எது எது அறிவியலுக்காக கண்டுபிடிக்கப் பட்டதோ அதை எல்லாம் அறிவியலுக்கு மாறாக நமது நாட்டில் பயன்படுத்துகின்றார்கள்.
அரசியல் சட்டப்படி செயல்படுகின்ற ஒரே இயக்கம்
அரசியல் சட்டத்தில் அடிப்படை கடமைகள் என்று எழுதி வைத்திருக்கின்றோம். குரனேயஅநவேயட னுரவநைள என்று எழுதிவைத்திருக்கின்றோம். அரசியல் சட்டத்தில் கூறியுள்ளபடி ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
அதே மாதிரி ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மனிதநேயம், சீர்திருத்தம் இவை எல்லாம் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இவை அத்தனையையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற ஒரே ஒரு இயக்கம் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கமான திராவிடர் கழகம்தான். பகுத்தறிவு அமைப்புகள் தான். (கைதட்டல்).
இன்றைக்கு இணையதளம் மூலம் உலகத்தையே இணைத்தாகி விட்டது. கோடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. எல்லைக் கோடுகள் எல்லாம் இல்லை.
உலகத்தில் அய்ந்து நிமிடத்திற்கு குறைவாக எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் பதில் வருகிறது.
இதில் ஈரேழு பதினான்கு லோகத்தைத் தான் கண்டுபிடிக்க முடியாதே தவிர, மீதி எல்லாவற் றையும் கண்டுபிடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. (கைதட்டல்).
பெரியார் எளிமையாக ஒரு கேள்வி கேட்டார். இங்கே வெய்யில் 104 டிகிரி என்று சொல்லு கிறார்கள். 104 டிகிரியே நம்மாலே தாங்க முடிய வில்லையே.
குந்திதேவிக்கும் - சூரியனுக்கும் குழந்தை பிறக்குமா?
பெரிய பெரிய அறிவாளிகளால்கூட சிந்திக்க முடியாததை சிந்தித்து மக்கள் மத்தியில் கேள்வி கேட்கக் கூடிய உணர்வையும் புரட்டிப் போடுகின்ற சிந்தனையையும் அய்யா அவர்கள் உருவாக்கியி ருக்கின்றார்.
அய்யா சொல்லுவார் எத்தனையோ கோடிக் கணக்கான மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அப்படிப்பட்ட சூரியனிலிருந்து வெப்பம் வருகிறது.
இங்கே 104 டிகிரி வெப்பம் என்றால் நம்மால் தாங்க முடியவில்லை. வெய்யில் 110 டிகிரி என்றால் பொத்தென்று கீழே விழுந்து செத்துக் கொண்டி ருக்கின்றான். அப்படி இருக்கும் பொழுது குந்தி தேவியும், சூரியனும் சேர்ந்து பிள்ளை பெறுகி றார்கள் என்று எழுதி வைத்திருக்கின்றானே. இருவருக்கும் பிறந்த குழந்தை கர்ணன் என்று சொல்லி இன்னமும் நம்மாள் படம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றான். (கைதட்டல்).
அதாவது அறிவுக்கு ஒரு மயக்கத்தை ஒரு போதையை உண்டாக்குகிறார்கள். அவர் சொன்ன வார்த்தையை சொல்லுவதற்கு எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. அய்யா அவர்கள் பச்சையாக சொல்வார். இப்படி கதை எழுதி வைத்திருக்கிறீர்களே இதெல்லாம் எந்த காலம் என்று கேட்டார்.
பார்ப்பனர்கள் எல்லா இடங்களிலும் இருக்கி றார்கள் என்று கழக பொருளாளர் சொன்னார் பாருங்கள். நீதிமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு நீதிபதிகள் தீர்ப்பு எழுதுகிறார்கள். இந்தத் திருமணம் செல்லாது என்று.
பெரியார் திருமணத்தை நடத்தி வைத்திருக் கலாம். பத்தாயிரம் பேர் வந்தார்கள் என்று இருக் கிறது. சாட்சிகள் இருக்கிறது என்று சொல்லலாம். இதை எல்லாம் நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது.
அக்னியை நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியுமா?
முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சி இருந்ததா? அக்னி சாட்சியாக என்று திருமணத் தில் சொல்லுகிறார்கள். நீதிமன்றத்திற்கு எப்படி அக்னியை சாட்சியாகக் கூப்பிட்டுக்கொண்டு வரமுடியும்? அக்னி வந்தால் தீயணைப்பு வண்டியும் கூடவே சேர்ந்து வரவேண்டியதுதான். (சிரிப்பு கைதட்டல்). நமது நாட்டில் சிந்திக்க முடியாத அளவிற்கு ஆக்கிவிட்டார்கள்.
இதை ஒரு பாமரர் சொல்லவில்லை. எழுத்தறிவு இல்லாத குப்பன், சுப்பன் சொல்லவில்லை. காட்டுமிராண்டிக் காலத்தில் இருந்தவன் கண்டதை எல்லாம் பார்த்து பயந்தவன் சொன்னால் கூட நமக்குப் புரியும். உயர்நீதிமன்ற நீதிபதியாக உட்கார்ந்து கொண்டு தீர்ப்பு எழுதும் பொழுது சொல்லுவார்கள்.
நாரதர் சொன்னது, பராசரர் சொன்னது. மனு சொன்னது என்று தீர்ப்பில் எழுதுகிறார்கள். பெரியார் கேட்டார்.
சுயமரியாதை திருமணம் செல்லாது என்று சொல்லுகிறீர்கள். சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர்களுடைய பிள்ளைக்கே 20 வயது, 22 வயது ஆகிறது.
ராஜமன்னார் சொன்னதை என்றால் ராஜ மன்னார் தலைமை நீதிபதியாக இருந்தார். அவருடைய தீர்ப்பு ரொம்ப அற்புதமான தீர்ப்பு ஏற்றுக்கொள்ளலாம்.
பெரியார் கேட்டார். ரிஷிகள் சொன்னார்கள் என்று சொல்லுகிறீர்களே இந்த ரிஷிகள் யார்? நான் வரும்பொழுது நம்முடைய தோழர் ஜெயகுரு நாதன் எல்லோருக்கும் ஒரு நூலைக் கொடுத்தார். அய்யா எழுதிய புத்தகத்தைக் கொடுத்தார். சாதாரணமாகப் புரட்டிப் பார்த் தோம்.
ரிஷிகள் யார்?
நடந்த சுயமரியாதை திருமணத்தைச் செல்லாது என்று நீதிபதிகள் சொல்லுகிறார்கள். இன்றைய நடைமுறையை செல்லாது என்று சொல்லுவதற்கு ஆதாரத்தை எதைக்காட்டுகிறார்கள்?
சடங்குகள். இதைப் பற்றி ரிஷிகள் சொல்லியி ருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். நாரதர் சேய்ஸ், மனு சேய்ஸ், எங்ஞவல்யா சேய்ஸ் என்று சொல்லுகிறார்கள்.
பெரியார் அதற்கு பதில் சொன்னார். ரிஷிகளின் மூலம் எல்லாம் இயற்கைக்கு மாறானதும் ஆபாச மும், அசிங்கமும் நிறைந்தவையாகும். இவை அறிவுக்குப் பொருந்தாதவைகளாகவும் உள்ளன.
எடுத்துக்காட்டாக கலைக்கோட்டு ரிஷி மானுக்குப் பிறந்தார். கவுசிகர் குயத்திக்குப் பிறந்தார். ஜம்புகர் நரிக்குப் பிறந்தார். வால்மீகி வேடனுக்குப் பிறந்தார். அகஸ்தியர் குடத்திற்குப் பிறந்தார். வியாசர் செம்படத்திக்குப் பிறந்தார். வசிஷ்ட்டர் ஊர்வசிக்குப் பிறந்தார். நாரதர் வண்ணாத்திற்குப் பிறந்தார் என்று இப்படி எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்த ரிஷிகள் சொன்னதை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதாரமாகக் கூறுகிறார். அய்யா சொன்னார். ஒருவனாவது மனிதனுக்குப் பிறந்தானா? என்று கேட்டார் (கைதட்டல்). இதை 20 ஆம் நூற் றாண்டுக்குப் பயன்படுத்துகின்றார்கள். இதை எடுத்துச்சொல்வதற்கு ஆள் இல்லையே. இதை சொன்னால் கடவுளுக்கு விரோதி. மதத்திற்கு விரோதி என்று சொல்லுகிறார்கள்.
மனிதனை கொல்வதில் கடவுளுக்கிடையே போட்டியா?
கடவுள் கருணையே வடிவானவன் என்று சொல்லுகிறார்கள். தினமும் பத்திரிகையைப் பார்த்தால் தெரியும். ஆரணியில் தேர் கவிழ்ந்தது 5 பேர் இறந்து போனார்கள் என்ற செய்தி வருகிறது. பக்தர்கள் இறந்து போனதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. நம்முடைய அனுதாபம் உண்டு.
அவர்கள் பக்தர்களாக இருந்தாலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அப்படி நினைக்கிற வன்தான் மனிதநேயம் உள்ளவன். நாத்திகனுக்கு மனிதநேயம் உண்டு. ஆத்திகனுக்குத்தான் மனித நேயம் கிடையாது. (கைதட்டல்).
குடியாத்தத்தில் பலி
குடியாத்தத்தில் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் இறந்தார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. மருத்துவமனையில் ஒரு அம்மையார் சொல்லு கிறார். மின்சார அதிகாரி வந்து சரியாகப் பார்க்க வில்லை என்று சொல்லுகிறார்.
வேலூரை சுற்றி சுற்றி தேர் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆரணியில் தேர் கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள். இந்த பக்கம் குடியாத்தத்தில் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியானார்கள். அவனின்றி ஓரணவும் அசையாது என்று சொல்லு கிறார்கள். சர்வ சக்தி படைத்தவன் என்று சொல்லு கிறார்கள். யோசித்தால் ஒரு நிமிடத்தில் அது மூட நம்பிக்கை என்பது எல்லோருக்கும் புரிந்துவிடும். மனிதனை சாகடிப்பதற்கு கடவுள்களுக்கிடையே போட்டி (சிரிப்பு - கைதட்டல்.)
ஈராக் மீது எப்படி போர் தொடுத்தீர்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபரிடம் கேள்வி கேட்டால் என் கனவில் கடவுள்தான் வந்து சொன்னார் போர் நடத்து என்று. அப்படியானால் இவ்வளவு பேரைக் கொன்றவன் எப்படி கரு ணையே வடிவானவனாக இருப்பான்? பெரியார் எளிமையாகச் சொன்னார் பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று.
பார்ப்பனீயத்திற்கும், புத்த நெறிக்கும் ஏற்பட்ட போராட்டம்
அம்பேத்கர் சொல்லுகிறார். வரலாற்று ரீதியாக மூன்று இந்தியாக்கள் இருக்கின்றன.
1. Brahminic India - - பார்ப்பன இந்தியா
2. Buddist India - புத்த இந்தியா
3. Hindu india - இந்து இந்தியா
ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கலாச்சாரம். இஸ்லாமியர் படைஎடுப்பு வரலாற்றுக்கு முன் னாலே வரலாறு என்பது என்னவென்று சொன் னால் பார்ப்பனீயத்திற்கும், புத்த நெறிக்கும் ஏற் பட்ட போராட்டம்தான்.
இவை முற்றிலும் நேர்மாறானது. இதைப் புரிந்துகொள்ளாதவர்களால் உண்மையான இந்திய வரலாற்றை எழுத முடியாது என்று சொல் லுகிறார். அம்பேத்கர் பெயரை சொல்பவர்களை விட்டே திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இவ்வாறு பேசிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மேலும் விளக்கமாக பல கருத்துக்களை கூறினார்.
பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சி
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1900 ஆம் கூட்ட நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் 3.5.2012 அன்று மாலை 6.45 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மறைந்த புரட்சிதாசன் மறைவிற்கு ஓர் நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். வாசகர் வட்ட துணைச் செயலாளர் த.சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்று பேசினார். பெரியார் நூலக வாசகர் வட்ட அறிக்கையை பொருளாளர் கு.மனோகரன் வாசித்தார்.
பிரபல வான்வெளி தொலைநோக்கி நிபுணர் நாசா அமைப்பிடமிருந்து விருதுபெற்ற விஜய குமார் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கினார். அடுத்து விஜயகுமார் உரையாற்றினார். விவேகானந்தர் கல்லூரி மேனாள் பேராசிரியர் கருணானந்தன், திராவிடர் கழக பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் உரையாற்றியதை அடுத்து இறுதியாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நிறைவாக இயற்பியலாளர் அ.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
அந்தோ பரிதாபம்!
குடியாத்தத்தில் கோவில் தேரோட்டத்தின் போது
தேரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி 25 பேர் படுகாயம்
குடியாத்தம், மே.4- குடியாத்தம் கருப்புலீஸ் வரர் கோவில் தேரோட் டத்தின் போது மின் சாரம் தாக்கியதில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை சிவகாம சுந்தரி சமேத கருப் புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் காலை நடந்தது. தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது நல்ல மழை பெய்தது. இதில் தேர் முழுவது மாக நனைந்து இருந் தது. அத்துடன் தேரை இழுக்க இரும்பு கம்பி யால் ஆன வடம் இருந் தது. அதை பிடித்து பக்தர்கள் இழுத்துச் சென்று கொண்டி ருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் தேர் பேர ணாம்பட்டு கூட்டுரோடு பகுதியில் வந்தபோது, திடீரென மேலே சென்ற மின்சார கம்பி மீது தேர் உரசியதில் கம்பி அறுந்து விழுந்தது. இத னால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தேர் ஈரமாக இருந்ததால் வடம் பிடித்து இழுத்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந் தது. இதில் அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதனால் தேரை அப்படியே விட்டு விட்டு அனைவரும் அங்கி ருந்து நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தவர்கள் பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சுருண்டு கீழே விழுந்தவர்களை மீட்டு குடியாத்தம் மற்றும் வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். குடியாத்தம் மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த டாக்டர் 5 பேர் இறந்து போனதாக தெரிவித்தார்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. கார்த்திகேயன் (19), 2. ஈழத்து அரசன்(24), 3. புனிதா (32), 4. வில்வ நாதன்(55), 5. விக்னேஷ் (19). மேலும் மின்சாரம் தாக்கியவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவ லைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மருத் துவ பணிகள் இணை இயக்குநர் சந்திரநாதன், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் கென் னடி, மருத்துவ அலுவலர் அமுதாமணி ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவர் கள் நள்ளிரவு முதல் மருத்துவமனையில் முகா மிட்டு சிகிச்சை அளித் தனர்.
விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் விபத் தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்த வர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என 500-க் கும் மேற்பட்டோர் நள் ளிரவே மருத்துவம னைக்கு திரண்டனர். மேலும் நேற்று காலை யில் மருத்துவமனை மற்றும் சவக்கிடங்கு அமைந்துள்ள அண்ணா தெரு பகுதி யில் பொதுமக்கள் பெருமளவில் கூடினர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
விபத்து நடைபெற்ற பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேற்று காலை 5 மணி அளவில் தேர் நிலைக்கு கொண்டு வந்தனராம்.
ஆரணியில்
நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கயிலாயநாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்ததில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் இறந்த சம்பவம் திரு வண்ணாமலை-வேலூர் மாவட்டத்தில் பக்தர் களிடையே பெரும் பரபரப்பையும் துயரத் தையும் ஏற்படுத்தி உள் ளது.
பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!
ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண்ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது, அவர்களின் ஒருவனுக்குக்காலில் மிதியடியிருக்கிறதா இல்லையாவென்கிற சந்தேகமுண்டாகி மற்றொருவனை நோக்கி தம்பி, சுப்பு! என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,
- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்)
தகவல்: ஆ.கணேசன், சென்னை -21
Post a Comment