Search This Blog

10.5.09

இந்து ஏட்டுக்குப் பிட்டி தியாகராயர் சாட்டையடி!




1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக் கட்சியின் முதல் மாநாடு சென்னை மவுண்ட் ரோடு வெல்லிங்டன் தியேட்டரில் 1917 டிசம்பர் 28, 29 நாட்களில் நடைபெற்றது 27.12.1917 நண்பகல் 12 மணிக்கு பார்ப்பனரல்லாதார் மாநாட்டின் முதல் பகுதி நடைபெற் றது. 500 பிரதிநிதி களும் பெருவாரியான வருகையாளர்களும் அமர்ந்திருந்தனர். தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட வெங்கடகிரிராஜா தம் இருக்கைக்குப் பலர் சூழ அழைத்துச் செல்லப்பட்டார். பாண்டு வாத்தியம் முழங்கிற்று. அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல் நாள்

வரவேற்புக் குழுத் தலைவர் ராவ்பகதூர் வெள்ளுடை வேந்தர் பிட்டி. தியாகராய செட்டி யாருக்கு உடல் நலமில்லாததால் தம்மால் இயலாத நிலையினை உணர்த்தவே அவர் உரை அவருக்காகத் திரு. திருமலைப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டது. இவ்வரவேற்புரையின் தொடக்கப்பகுதி வருமாறு:

வரவேற்புரை

சகோதரப் பிரதிநிதிகளே, தாய்மார்களே, பெரியோர்களே! நாம் இங்கு கூடியிருப்பதற்கு வழி வகுத்த தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் இம்மாகாணத்தின் பார்ப்பனரல்லாதார் மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டு இப்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இம்மாநாட்டைக் கூட்டுவது எனக் கருதப்பட்டது. இதன் மூலம் முன்னியிலுள்ள பார்ப்பனரல்லாச் சமுதாய மக்கள் ஒரு நடுவரின் இடத்தில் சந்தித்து கருத்துகளைப் பரிமாறி ஒரு நிச்சயமான கருத்துகளை புதுப்பிக்கப்பட்டு உறுதிப் பாட்டுடன் புதிய ஆற்றலுடன் முன்னேறிச் செல்ல வழி வகுக்கும்.

தென்னிந்திய மக்கள் கழகம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் இவற்றின் தோற்றமும் முன்னேற்றமும்

இந்த மாநாட்டிற்கு உங்களை வரவேற்கும்போது அளிக்க இருக்கும் வரவேற்புரையை தென்னிந்திய மக்கள் கழகமும், அதன் தோழமை வாய்ந்த தென்னிந்திய நல உரிமைக் கழகமும் இவற்றின் தோற்றம் வளர்ச்சி குறித்து இங்கு குறிப்பிடுவது பொருத்தமற்றதாகாது. கடந்த பல ஆண்டுகளாக ஓர் உணர்ச்சி வளர்ந்து கொண்டு வருகிறது. பார்ப்பனரல்லாச் சமுதாயத்தின் நலன்கள் பத்திரிகைகளால் மட்டுமின்றி அரசாங்கத்தாலும் அதன் அதிகாரிகளாலும் கவனிக்கப்படாமல் உள்ளது என்பதே அது. ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு உயர்வு அளிக்கப்படும் போது இந்த உணர்வு பத்திரிகைகளால் மிகுதிப்படுத்தப்பட்டு அரசாங்கத்தைத் தாக்கத் தொடங்குகின்றன. சென்னையின் முதல் எக்சிகியூட்டிவ் கவுன்சிலராகப் பொப்பிலி மஹாராஜா நியமிக்கப்பட்ட போதும், அதற்குப் பிறகு சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சில் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்ட போதும் அவர் மீது இந்து பத்திரிகை இழிவாகத் தாக்கியதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு உண்மையான பார்ப்பனரல்லாதாரும் இவ்வாறான பொருளற்ற செயலுக்கு முடிவு கொண்டு வரவேண்டுமென்றும் ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்து ஆகவேண்டும் என்றும் பல திசைகளிலிருந்து கூக்குரல் எழுப்பினர். வளர்ந்து வரும் துன்மார்க்கத்தைக் கண்காணிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஆராயக் கடந்த நவம்பர் பார்ப்பனரல்லதார் சமுதாயத்தின் தலைவர்கள் அடங்கிய கூட்டம்கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் பார்ப்பனரல்லாத இந்துக்களின் சங்கம் என்று தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற பெயரால் ஆங்கில வட்டார மொழிப் பத்திரிகைகள் தொடங்கி பார்ப்பனல்லாதவர் களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குறைகளை எடுத்துப் பேசவும், அவர்தம் உரிமைகளை எடுத்துக் கூறவும் ஒரு லட்ச ரூபாய் மூலதனத்துடன் தொடங்க முடிவு செய்யப்பட்டது. For several years past the feeling was gaining ground that the interests of the non-Brahmin community were left uncared for, not only by the Press, but also by the Government and its officials. The feeling was intensified by the Indian Press beginning to attack the Government whenever any preferment was conferred upon a non-Brahmin. You all remember the vulgar attack of “The Hindu” on the Maharaja of Bobbili, when he was appointed the first Indian Executive Councillor of Madras, and subsequently, on the Raja of Bobbili, when he was nominated a member of the Madras Legislative Council. Every true non-Brahmin felt that this sort of nonsense should be put an end to, and there was a cry heard on all sides for action of some kind. A meeting of the leaders of the non-Brahmin community was convened in November last for considering what measures should be adopted to check the growing evil, and it was resolved that an association of non-Brahmin Hindus be formed, under the name of the South Indian People’s Association, with a capital of a lakh of rupees, for starting and conducting English and Vernacular journals, which will voice the grievances of the non-Brahmin community and advocate its claim.
(From The Justice Movement 1917 compiled by T.Varatharajulu Naidu.)

நான் குறிப்பிட்ட படி சரியான ஓராண்டுக்கு முன்னால் ஒரு கொள்கை அறிக்கை - பார்ப்பனரல்லாதாரின் நிலைகளை கணக்கெடுத்து அவர்கள் முன்னேறுவதற்கான திசைகள் குறித்தும் வெளியிடப்பட்டது. பங்குகள் சேர்க்கும் முயற்சி உடனே தொடங்கப்பட்டது. தென்னிந்திய மக்கள் சங்கம் 29-1-1917 இல் பதிவு செய்யப்பட்டது.

ஒரு அச்சகக் கூடம் வாங்கப்பட்டது. சங்கத்தின் பத்திரிகையாகிய ஜஸ்டிஸ் முதல் இதழ் 26-2-1917 அன்று வெளியிடப்பட்டது. சில மாதங்கள் கழித்து ஒரு தமிழ் நாளிதழ் திராவிடன் என்ற பெயரால் தொடங்கப்பட்டது. உடனே இதனைத் தொடர்ந்து எழுந்தது ஆந்திரப் பிரகாசிகா. இவ்வாறு பத்து மாத கால அளவில் மூன்று நாளிதழ்கள் அவற்றின் தொழில் கருதித் தொடங்கப்பட்டன.

இவ்விதழ்கள் மிகக் குறுகிய கால அளவில் என்ன பணிகளைச் செய்துள்ளன, தம் குறிக்கோளுக்கு எந்த அளவு செயல்பட்டுள்ளன. நீங்கள்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் கடந்த டிசம்பரில்தான் தொடங்கப்பட்டது எனினும் அது பறைசாற்றும் இந்த நான்கு மாதங்களில் பார்ப்பனர் அல்லலாதாரின் மாவட்ட மாநாடுகள் கோயம்புத்தூர், பிக்காவேல், புலிவெண்ட்லா ஆகிய இடங்களிலும், குழுக்களின் மாநாடுகள் பெஜவாடாவிலும் திருநெல்வேலியிலும் முறையே நடைபெற்றன. முன்னவை வடக்கு சர்க்கார் பகுதியில் அமைந்த ஆறு கடற்கரை சார்ந்த மாவட்டங்களும் பின்னவை மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் நடைபெற்றன. சேலத்தில் ஒரு மாநாடு அபூர்வமாக நடைபெற்று மூன்று வாரங்கள் கழிந்துவிட்டன. இம்மாநாடுகளெல்லாம் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் முன்னேற்றத்தின் பல்வேறு படிநிலைகளைக் குறிக்கும் மைல் கற்களாக விளங்குகின்றன.

தன் பயணத்தில் இந்த இயக்கம் எதிர்த்துப் போராட வேண்டிய தடைகள் கொஞ்சமல்ல.
ஆனால் தவறான அறிவிப்புகள், அவதூறுகள், பழிப்புச் சொற்கள் இவற்றிற்கெல்லாம் நமது இயக்கம் நம் பிராமண நண்பர்களாலும் அவர்தம் துணைவர்களாலும் உண்மையான பார்ப்பனர் அல்லாதாராலும் உட்படுத்தப்பட்டது. அவற்றைத் தாண்டும்போது இந்த இயக்கம் எதையும் இழக்கவில்லை. ஆதாயம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக எனது தகுதி மிக்க நண்பர் திவான்பகதூர் கேசவபிள்ளைக்கு என் நன்றி உரியது. தொடக்கத்தில் ஆர்வத்துடன் அனுதாபம் காட்டியவர் அவர். பின்னர் தம் எதிர்ப்பில் கடுமையான எதிர்ப்பைக் காட்டினார். நாளுக்கு நாள் இந்த இயக்கம் வலிமையும் செல்வாக்கும் அடைவதைப் பார்த்து அவர் எந்த ஆயுதத்தையும் நம் மீது பயன்படுத்தத் தவறவில்லை. தோன்றா சில காலங்களுக்குள்ளேயே தென்னிந்திய மக்கள் சங்கம் எல்லோருடைய உள்ளங்களிலும் ஒரு தகவல் கோரும் உந்துதலை எழுப்புவது என்பதையும் இது மிக நெடுங்காலமாக மந்தமாகிக்கிடந்த நிலையிலிருந்து பார்ப்பனரல்லாச் சமுதாயம் விழித்தெழுந்து இப்போதைய தன் நிலைகளை ஆய்வு செய்ய முனைந்திருக்கிறது. இந்த நிலைக்கு வந்ததற்கான காரணங்களை ஆய்ந்து நிரந்தரமான முன்னேற்றம் காணுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

-------------தகவல்: முனைவர் பு.ராசதுரை "விடுதலை" 10-5-2009

0 comments: