Search This Blog

14.5.09

தமிழர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் சீனா, ருசியா நாடுகளை கம்யூனிஸ்ட்டுகள் கண்டிக்காதது ஏன்?


தமிழர்களின் படுகொலையை நியாயப்படுத்தும்

சீனா, ருசியா நாடுகளை கம்யூனிஸ்ட்டுகள் கண்டிக்காதது ஏன்?

பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் நிவாரணப்
பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க வலியுறுத்தி

19 ஆம் தேதி சென்னையில் போராட்டம்

தமிழர் தலைவர் அறிக்கை


பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க வலியுறுத்தும் வகையில் சென்னையில் வரும் 19.5.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெறும். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.

அமெரிக்காவுக்குச் சென்ற இங்கிலாந்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டனும் சேர்ந்து இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதையும், உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, கூட்டறிக்கை விட்டிருப்பது வரவேற்கத்தக்க மனிதாபிமானம் மேலோங்கியுள்ள செயலாகும்!

சீனா, ருசியா நிலைப்பாட்டை கண்டிக்காதது ஏன்?

அதே நேரத்தில், அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று முன்தினம் இலங்கை சிங்கள இராணுவத்தின் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் சீனா, ருசியா, ஜப்பான் நாட்டுப் பிரதிநிதிகள் பேசியுள்ளது மிகவும் கண்டிக் கத்தக்கது!

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் இதற்கு முன்பு எப்போதும் காட்டாத திடீர் அக்கறை யைக் காட்டும் இந்நாட்டு கம்யூனிஸ்ட்கட்சிகள் இதைக் கண்டும் காணாதவர்கள் போல் கண்ணை மூடிக்கொண்டு வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதை விட வெட்கப்பட வேண்டியதொன்றாகும்!

ராஜபக்சே என்ன சொன்னார்?

சென்ற ஏப்ரல் 27 ஆம் தேதி, இந்தியாவிற்குக் கொடுத்த வாக்குறுதிப்படி - போர் நிறுத்தம் பற்றியது - முழு கனரக இயந்திரங்கள், குண்டு மழை முதலிய வற்றை நிறுத்திவிட ஆணையிட்டுள்ளதாகச் சொல்லி, சி.என்.என். பேட்டியிலும், குண்டு வீச்சுகள் அப்பாவி மக்கள் மீது வீசமட்டோம் என்றால், போர் நிறுத்தம் என்பதல்லாமல் வேறு என்ன? என்று எரிச்சலுடன் எதிர்க்கேள்வி போட்டார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

ஆனால் தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை அழிக்கும் முயற்சி தொடரும் என்பதாகக் கூறிக்கொண்டு அவர்களை அழிக்கும் சாக்கில் , மக்கள் தங்கியிருந்து மருத்துவம் பெறும் மருத்துவ மனை, சிகிச்சை பெறுவோர் மீதும் குண்டு வீச்சு நடந்துள்ளது என்ற செய்திகள் எவரையும் கலங்கடிக்கும் செய்திகளாகும்!

போரை நிறுத்தவேண்டியது இலங்கை இராணுவமே!

முழு நிம்மதி வரவேண்டும். அங்குள்ள எம் தமிழர்களுக்கு; விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று கூறியிருந்த நிலையில், சிங்கள இராணுவம்தானே தமிழர்களை அழிக்க மேற்கொண்டிருக்கும் அதீதமான இராணுவ நடவடிக் கைகளை உடனே நிறுத்த வேண்டும்.

வவுனியா மற்றும் பல பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள தமிழர்கள் உண்ண உணவின்றி பட்டினிச் சாவினால் சாகும் நிலை தொடரலாமா?

இந்திய அரசு அனுப்பிய உணவுப் பொருள்கள், மருந்துகள் யாருக்குக் கிடைக்க அனுப்பப்பட்டதோ அவர்க ளுக்கே கிடைக்கும் வண் ணம், நமது தூதுவர், மற்றும் நடுநிலைப் பார்வையோடு உள்ள சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு மூலம் (International Red Cross Society), மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் முன்னி லையில் பரிகார - புனரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குக் கிடைக்கச் செய்ய வலியுறுத்த வேண்டும்.

19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

இது குறித்து எனது தலைமையில் வருகிற 19.5.2009 அன்று காலை 11 மணிக்கு சென்னையில் (மட்டும்) ஓர் அறவழிப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமையை அரசியல் மூல தனமாக்கிடாது உண்மை யான ஈடுபாடும், உறுதிப் பாடும் உள்ள அனைவரும் கலந்து கொள்ளவேண்டு மென கேட்டுக்கொள்கி றோம்.


-------------- "விடுதலை" 14.5.2009

4 comments:

தமிழ்மணி said...

அருமையான கேள்வி.

அமெரிக்காகாரனையும் இஸ்ரேல்காரனையும் எதிர்த்து மாசத்துக்கு மூன்றுமுறை ஊர்வலம் போவார்கள்.
ஆனால், இங்கே பகிரங்க குற்றவாளியான ரஷியா, சீனா பற்றிய யாரையும் கம்யூனிஸ்டுகள் கண்டுகொள்வதில்லை. திட்டுவதில்லை. பூசி மொழுகுகிறார்கள்.

இவர்கள் கண்ணை மூடிக்கொண்டால் உலகத்தில் யாரும் இதனை பார்க்கமாட்டார்கள் என்றும் நினைக்கிறார்கள்.

பச்சை தேசத்துரோகிகள் இந்த கம்யூனிஸ்டுகள்.

இந்த பதிவுக்கு நன்றி

செல்வன் said...

அதே கேள்விகளை உங்களிடம் முதலில் கேளுங்கள்.
புலிகள் செய்யும் படுகொலைகளை இது வரை கண்டிக்காதது ஏன்?
மக்களை புலிகள் மனித கேடயமாக பயன்படுத்துவதை ஏன் கண்டிக்கவில்ல?
புலிகள் மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வவதை ஏன் கண்டிக்கவில்லை?
உங்கள் ஒபாமாவே நேற்று இவற்றை கண்டித்துள்ளார்.ஆனால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நம்பி said...

//செல்வன் said...

அதே கேள்விகளை உங்களிடம் முதலில் கேளுங்கள்.
புலிகள் செய்யும் படுகொலைகளை இது வரை கண்டிக்காதது ஏன்?//

1986 களிலேயே சகோதர யுத்தப் படுகொலைகள் ஈவு ஈரக்கமின்றி நடைபெற்ற பொழுதே பக்கம் பக்கமாக கண்டிச்சாச்சு....

எல்லா பத்திரிகையிலும், தமிழக மக்களே கண்டிச்சாச்சு..

அன்றிலிருந்து இந்த போராட்டங்களை மாறுபட்ட கோணத்திலேயே தமிழக மக்கள் பார்க்க ஆரம்பித்தனர்..(1975 லிருந்து 1985 வரை, தமிழக மக்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆதரவே வேறு...) இந்த பார்வை இன்று வரை அப்படியே தான் உள்ளது....என்பது தான் நிதர்சனம்....

1986...அன்று எல்லாத்தலைவர்களும் கண்டிச்சாச்சு...அன்றைக்கு விடுதலைப் புலிகள் என்று பிரபலமாக எவரும் அறியப்படாத பொழுதே தீவிரமாக கண்டிசாச்சு....

அன்று வந்த தமிழக தினசரிகளையும் வரலாறுகளையும் புரட்டி பார்த்தால் தெரியும்.

அதற்கு பிறகும் இங்கு நடந்த (அரசியல் தலைவர் உட்பட) 15 பேர் படுகொலைகளுக்கும், இன்னும் பிற இயக்கங்கள் மேற்கொண்ட படுகொலைகளுக்கும், முற்றிலும் சம்பந்தமே இல்லாத பொது மக்கள் கொலைக்கும், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டு தான் வருகின்றன...


இதை ஒரு பிரிவினருக்கான ஆதரவாக தமிழக மக்கள் எப்போதும் வழங்குவதில்லை. அது இன்று வரை காணுகின்ற பொருவாரியான உண்மை.


விஷயம் தெரியாத இன்றைய தலைமுறையினர், கூக்குரலிட்டு கொண்டு இருப்பார்கள். அது வெற்றுக் கூச்சல்.