Search This Blog

29.5.09

இந்திய அரசு அய்.நா. சபையில் இலங்கையை ஆதரித்த செயல் தமிழர் விரோத நிலைப்பாடு


மத்தியில் நடப்பது காங்கிரசு ஆட்சி அல்ல;
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு

கலைஞரின் யோசனைக்கு முன்னுரிமை தரவேண்டாமா?

இனி வருங்காலத்தில்
இதற்குரிய விலையைக் கொடுக்கவேண்டிவரும்

தமிழர் தலைவர் அறிக்கை


இலங்கைப் பிரச்சினையில், முதல்வர் கலைஞரின் வேண்டுகோளைப் புறக்கணித்து இந்திய அரசு அய்.நா. சபையில் இலங்கையை ஆதரித்த செயல் தமிழர் விரோத நிலைப்பாடு என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:

அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கையின் இனப்படுகொலையையும், பல்லாயிரக்கணக்கான மக்களை சித்திரவதை செய்து, அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்று கருதாது பல்வேறு கொடுமைகளை, மனித உரிமை மீறல்களையெல்லாம் செய்ததை நியாயப்படுத்தி, சில ஆசிய நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை அரசின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை சிங்கள ராஜபக்சேயின் அரசின் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இதில், இந்திய அரசு அவர்களுடன் சேர்ந்து - சீனா, போன்ற நாடுகளுடன் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்திருப்பது, பச்சை தமிழர் விரோத - மனித நேயத்திற்கு எதிரானதொரு நிலைப்படாகும்!

இரண்டு நாள்களுக்கு முன் தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிற்குக் கடிதம் எழுதி அவசர அவசரமாக தமிழர்கள் - உலகத் தமிழர்கள் அனைவரது உணர்வுகளையும் மதித்து நடந்து கொள்ள விடுத்த வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனதோடு, ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்ற அடாவடித்தனத்துடன், இன்னமும் இலங்கையின் இராஜபக்சே அரசுக்கு தீவிர ஆதரவாளராக, அவ்வரசின் மனித உரிமை மீறலுக்குத் துணை போகிற அரசாகத்தான் இருப்போம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தது போல் நடந்து கொண்டது, மிகவும் வெட்கமும் வேதனையும் அடைய வேண்டிய ஒன்றாகும்!


பிரதமர் பண்டித நேரு காலத்திலிருந்தே இலங்கைப் பிரச்சினை என்று வரும் போது தமிழ் நாடு முதல்வர் (காமராசர் போன்றவர்கள்)களைக் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தது முந்தைய வரலாறு.

அதுவும் மத்திய அரசால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மற்றொரு கேள்வி. மத்தியில் நடைபெறுவது வெறும் காங்கிரஸ் அரசு அல்ல. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி அதன் முக்கிய துவக்க முதல் உறுப்பான தி.மு.க. - அதன் தலைவர் கருத்து, யோசனைக்கு முன்னுரிமை தரவேண்டாமா?

காங்கிரசுக்காகத் தான் பழி சுமந்து, தமிழர்களின் ஆவேசத்திற்கும் ஆளாகிஉள்ள, தமிழர்களின் தனிப் பெரும் காவலர் கலைஞர் அவர்கள் கருத்தை இப்படி அலட்சியப்படுத்துவது தான் ஜனநாயகமா? உரிமைக்குக் குரல் கொடுத்தவர் அவர்; அந்த நியாயத்தை ஏற்று குறைந்த பட்சம் நடுநிலையிலாவது மத்தியஅரசு இந்த தமிழர் உணர்வுப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்க வேண்டாமா? நமது முதல்வரின் வேண்டுகோள் கிள்ளுக் கீரையா?

இதற்காக உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் அனைவரது வன்மையான கண்டனத்தை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துவது நமது கடமை. நமது முதல்வர் உணர்வு தமிழர்களின் உணர்வு. அதை அலட்சியப்படுத்தினால் கொடுக்க வேண்டிய விலை பற்றி பின்னால் வருந்தவேண்டியிருக்கும்.


-------------- "விடுதலை" 29.5.2009

6 comments:

மதிபாலா said...

நேர்மையான கருத்துரை.

கண்டும் காணான் said...

சீனா , பாகிஸ்தானை விட , தொப்புள் கொடியுறவு என் நம்பியிருந்த இந்தியாவின் செயல்பாடுகள்தான் எம்மை 100000 ஏவுகணைகளாக தாக்குகின்றன பிறர் முன் தலைகுனிய வைக்கின்றன

http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post_29.html

தமிழ் ஓவியா said...

தங்கலின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதிபாலா.

$

கண்டும் காணான்

AJAX said...

What did tamilnadu government do on this issue?
when he can wait for 4 days to get the ministried he wanted, cant he get the some action from central on this issue.
Its foolish people like us who expect government to do something. but in reality, they are busy becoming asia's no.1 richest man from their current position of no.4

Gokul said...

மிகவும் சாமர்த்தியமான அறிக்கை.

தங்களுக்கு வேண்டிய மந்திரி பதவி கிடைக்கவில்லை என்றபோது எடுத்த முடிவாகிய "வெளியில் இருந்து ஆதரவு" என்ற ஆயுதத்தை ஏன் இலங்கை தமிழர் விடயத்தில் எடுக்கவில்லை?

இந்த பிரச்சினையில் இருந்து கலைஞரை மிகவும் சாமர்த்தியமாக வெளிக்கொணர வீரமணி அவர்கள் முயல்கிறாரோ?

மந்திரி பதவிக்கு "வெளியில் இருந்து ஆதரவு" என்ற கடுமையான முடிவு. ஈழத்தமிழர் குறித்தான பிரச்சினைக்கு "வெறும் கடிதமா?"

இது மாதிரியே எல்லோரையும் பிரச்சினைகளில் இருந்து வெளியே கொண்டு வந்து விடலாம் , சோனியா காந்தியும் பிரதமரிடம் இதே போல ஒரு கடிதத்தை கொடுத்து விடலாம் அதன் மூலம் சோனியா தமிழர்க்கு நட்பாகி விடுவார். தமிழக காங்கிரசாரும் இதே போல் ஒரு கடிதத்தை சோனியாவிடம் கொடுத்து விடலாம் , அவர்களும் தப்பித்து விடுவர்.

unearth.com said...

Unmai nilai ariyaathu ethiyaavathu eluthuvathum pesuvathum entha palanaiyum tharapoavathillai enpathai veeramani poaonroar ariyathiruppathu varuntha thakkathe.
Ivarhal periyar pattarayil valarnthavarhala ena viyakka vaikirathu. ella elththukkalum sapai eruvathillai. nalla karuththukkale sapai eara ikkaalathil adippadai unmaihalatra kutrachaatukkalum,niyaayamatra karuththukkalum, anniya naattil thalaiyida urimai illatha Inthiya arasai valinthu thalaiyida vatpuruththuvathum, athatkaaha vanmuraihalaium, aarpaattankalaiyum nadaththuvathum arasiyal kaaranankatkaahavenral sariye. allathu athuthan unmaiyena vaathiduvathum athihaaramatrathai, seyya mudiyaatha vidayankalai varampumeeri seyya vendumena kooruvathum entha pahuththarivuk kolhaiyai saarnthathu. Kurudanai pidiththu iraaja muli muli ena kooruvathai okkum.Paavm periyar vahuththa valartha pahuththarivu kolhai. Nanri