Search This Blog

3.6.08

திரு.கருணாநிதியை எவராலும் வென்று விட முடியாது!



தமிழ்நாட்டில் திரு. கருணாநிதி அவர்களே இந்தியாவின் சுறுசுறுப்பான அரசியல்வாதி; தமது மாநிலத்திற்கு மேலும் சுயாட்சி உரிமை வேண்டும் என்று கோருபவர்; அத்துடன், வலிவுமிக்க மய்ய அரசு அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார்!

இவர், ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு வேண்டியவராகவும் - திருமதி. இந்திரா அம்மையாரின் ஆதரவாளராகவும் விளங்கு கிறார்!

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், சரியான பாதையைக் கடைபிடிப்பதில் இவர், தனித்திறமை பெற்றிருக்கிறார்!

இதற்குமுன் காங்கிரசில் தலைவர்களாக இருந்த பார்ப்பனர்களே இவரது திறமையைக் கண்டு பொறாமைப்படக் கூடும்!

ஒவ்வொரு தந்திரத்திற்கும் இவரிடம் மாற்றுத் தந்திரம் உண்டு; எவரேனும் தன்னைத் தாக்குகிறார்கள் என்றால், இவர், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயலுவதில்லை!
அரசியல் அரங்கில் அண்மைக் காலத்தில் இடம் பெற்ற திரு.கருணாநிதி, இந்த அளவிற்குத் தனிச் சிறப்பை எப்படிப் பெற்றார் என்பது வியப்புக்குரியதாகும்!

திரைப்படங்களுக்கு வசனம் எழுதியன் பயனாக இந்தத் திறமை ஏற்பட்டிருக்க நியாயமில்லை!
அரசியல் சட்ட நுணுக்கங்களைத் தனக் குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, அய்வர் ஜென்னிங்ஸ் எழுத்துக்களைப் படித்துப் பயன்படுத்திக் கொண்டார் - என்றும் கருதுவதற்கில்லை!

செவிச் செல்வமே அவருக்குச் சிறந்த செல்வம்! இவருடன் ஒப்பிட்டால், அ.தி.மு.க. தலைவர்களை, வெறும் அரை வேக்காடுகள் என்றே கருத வேண்டும்!

அரசியலில் திரு.கருணாநிதி கடக்க வேண்டிய கட்டங்கள் மிகையாகும்; அரசியல் வாழ்க்கை ஒரு காடாகும்; விபத்துக்களிலி ருந்து தப்பி உயிர் வாழ முனைவதே விரும்பத்தக்கது; எதிரிகளின் அறைகூவல்களை யும் கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்களின் போக்கையும் காங்கிரசின் தாக்குதல்களை யும் சமாளித்து அவர் வெற்றி கண்டு விட்டார்!
இன்று நிலவும் அரசியல் நிலையைக் கூர்ந்து கவனித்தால் திரு.கருணாநிதியை எவராலும் வென்று விட முடியாது!

அவர் ஒரு ரப்பர் பந்துக்கு ஈடானவர்; உந்த உந்த மிக உயரமாக எழக் கூடியவர்!
ஒரு வகை அரசியல்வாதிகள் எந்தக் கட்சியில் இடம் பெற்றிருந்தாலும், அந்தக் கட்சியில் நீண்ட காலம் நிலைத்து இடம் பெறக் கூடியவர்களாக விளங்குகின்றனர்; திரு. கருணாநிதியும் அத்தகைய அரசியல் வாதி ஆவார்!


-------------- நன்றி: சங்கர்ஸ் வீக்லி, 6.7.1975

1 comments:

தென்றல்sankar said...

//செவிச் செல்வமே அவருக்குச் சிறந்த செல்வம்! இவருடன் ஒப்பிட்டால், அ.தி.மு.க. தலைவர்களை, வெறும் அரை வேக்காடுகள் என்றே கருத வேண்டும்//
மீண்டும் திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காக செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை.என்ன ஒன்று வயது ஒத்துழைக்குமா என்றுதான் தெரியவில்லை.
//"திரு.கருணாநிதியை எவராலும் வென்று விட முடியாது!"//
காமராஜர் கூட தோற்றிருக்கிறார் நியாபகம் இருக்கட்டும்.

இந்த வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடவும்.