Search This Blog

2.6.08

வானவில்லில் மட்டும் இனிமேல் வர்ண பேதம் இருக்கட்டும்!

பெரியார் திரைப்படப் பாடல்

கண்ணீர் விழுந்தும் கரையவில்லையே....

பல்லவி

கடவுளா நீ கல்லா
கடவுளா நீ கல்லா
மேலோர் என்று
சிலரைப் படைத்து
கீழோர் என்றுபலரை படைத்தால்

குழு: கடவுளா நீ கல்லா

குழு: நாயும் பூனையும்
நடந்தால் புண்ணியம்
மனிதர் நடந்தால்
பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா

குழு: தண்ணீர் விழுந்தால்
பாறையும் கரையும்
கண்ணீர் விழுந்தும்
கரையவில்லையே
கடவுளா நீ கல்லா

சரணம் - 1
எங்கள் நிலங்களை அபகரித்தீர்!

குழு: அபகரித்தீர்... அபகரித்தீர்...
எங்கள் குளங்களை மறுதலித்தீர்!

குழு: மறுதலித்தீர்... மறுதலித்தீர்...
கால்நடை உலவிடும் வீதியில் எங்களின்
கால்களை அபகரித்தீர்!
வவ்வால் நுழைகிற கோயிலில் எங்களின்
வாசலை அடைத்து விட்டீர்! - அங்கு


சூத்திரன் நுழைந்திட சாத்திரம் இல்லை - என்று
சூத்திரம் எழுதி விட்டீர்!

குழு: சூத்திரம் எழுதி விட்டீர்!

நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும்
விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் என்ன நாங்கள் என்ன
எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?

குழு: எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?


(கடவுளா...

சரணம் - 2

இந்தக் கோயிலை அமைத்தது யார்?

குழு: அமைத்தது யார்... அமைத்தது யார்...
உச்சியில் கோபுரம் சமைத்தது யார்?

குழு: சமைத்தது யார்... சமைத்தது யார்...

எங்கள் கைகளும் கால்களும் தீண்டியிராவிடில்
கோயில்கள் ஏதுமில்லை
எங்கள் தோள்கள் தொடாவிடில் கடவுளர் யாருமே
கருவறை சேர்வதில்லை
புழுதியில் உழுதவன் வேர்வை இல்லாவிடில்
பூசைகள் ஏதுமில்லை

குழு: பூசைகள் ஏதுமில்லை

மனிதர் தர்மம் பொதுவாகட்டும்
மனு தர்மங்கள் உடையட்டும்!
வானவில்லில் மட்டும் இனிமேல்
வர்ண பேதம் இருக்கட்டும்!

0 comments: