Search This Blog

11.6.08

இடுப்பிலே இருந்த துண்டை தோளில் போட வைத்தவர் பெரியார்!


தமிழன் இடுப்பில் கட்டிக் கொண்டிருந்த துண்டை எடுத்துத் தோளில் போடச் செய்தார் பெரியார்’’ என்று, கலைஞர் விஜய்யின் கவிதைகளை எடுத்துக் காட்டி மேலும் விளக்கம் அளித்து முதலமைச்சர் கலைஞர் சென்னை- கலைவாணர் அரங்கில் நடைபெற்ற வித்தகக் கவிஞர் விஜய்யின் பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போது குறிப்பிட்டதாவது:

பெரியாரைப் பற்றியும், என்னைப் பற்றியும் கவிஞர் விஜய் கூறும்போது அதை நான் பெரியார் என்றோ, நான் என்றோ கருதிக் கொள்ளாமல் முதல் பகுதியை பெரியார் என்றும் இரண்டாவது பகுதியை இன்றைய தமிழகம் என்றும் கருதிக் கொள்கிறேன்.

இடுப்பில் கட்டியிருந்த
தமிழனின் துண்டையெடுத்து
தோளில் போட்டுவிட்டார்
பெரியார் . . .

தோளில் போட்டிருந்த
தமிழனின் துண்டை உதறி தலையில்
தலைப்பாகையாக கட்டிவிட்டவர்
நீங்கள் . . .!”

இடுப்பிலே வேட்டி கட்டிக் கொண்டிருக்கிறான். மரியாதைக்காக மமதையாளர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, ஆதிக்கக்காரர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு அடங்கி நடக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இடுப்பிலே கட்டியிருந்த தமிழனின் துண்டை யெடுத்து அவன் தோளில் போட்டார் பெரியார். தோளில் போட்ட துண்டை உதறி, தலையில் தலைப்பாகையாக கட்டிவிட்டவர் நீங்கள் என்று சொல்கிறார் - நானல்ல - எல்லோரும் சேர்ந்துதான் இன்றைக்கு பெரியார் நம்முடைய தோளிலே போட்ட துண்டையெடுத்து தலையிலே தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டிருக்கிறோம் மானப் போர் நடத்த, இனப் போரில் வெற்றி பெற அந்தத் துண்டு நம்முடைய தோளை விட்டு, தலைக்கு முண்டாசாக வந்திருக்கிறது.

- இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

0 comments: