கீர்த்திவாசய்யர்!
எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்று நடந்த நிகழ்ச்சியையே மறந்துவிடக் கூடிய தமிழர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியா நினைவில் இருந்து தொலைக்கப்போகிறது?
தென்னக ரயில்வே பொது மேலாளராகயிருந்த பார்ப்பனர் கீர்த்திவாசன். (இப்பொழுது கொஞ்சம் நினைவுக்கு வந்தாலும் வரலாம்). வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 38 லட்ச ரூபாய்.
ஒரு நாள் வந்த செய்தி-யோடு கதை முடிந்து விட்டது. குற்றம் செய்த ஆசாமி பார்ப்பனர் ஆயிற்றே, ஊடங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் சு(சி)ண்டு விரல் நகத்தின் நுனியில் இருக்கும்போது, அதற்கு மேல் செய்தியை வெளியிட்டு விடுவார்களா?
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதுபற்றிய செய்தி ஒரே ஒரு தமிழன் ஏட்டில் மட்டும் வெளி வந்தது. சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டு இருந்ததாம். (யாருக்காவது தெரியுமா?) எந்த ஏடாவது ஒரு துளியளவு செய்தியையாவது கசிய விட்டதுண்டா?
கடந்த இரண்டுமுறை விசாரணை நடந்தபோது கீர்த்திவாச அய்யரோ, அவரின் சார்பில் வழக்குரைஞரோ நீதிமன்றம் வரவில்லையாம். நீதிபதி தட்சிணா மூர்த்தி என்ன செய்தார்? கீர்த்திவாசய்யருக்கும், அவரது மனைவி மீனாட்சி, மகன்கள் ஆனந்த், அரவிந்தன், ஆகியோருக்கும் பிணையில் (ஜாமீன்) வர முடியாத பிடிவாரண்டு ஒன்றைப் பிறப்பித்தார். மே 24 ஆம் தேதிக்குள் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு ஆணை பிறப்பித்தார் நீதிபதி.
24 ஆம் தேதியும் கழிந்து போய்விட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? நீதிமன்றத்துக்கு வந்தார்களா? என்ற செய்திகூட எந்த ஏட்டிலும் இந்நாள்வரை வரவில்லை. இதுவே ஒரு தமிழராக இருந்தால் இந்துவும், தினமணியும் முதுகில் தம்பட்டம் கட்டிக் கொண்டு அடித்துத் தூள் பரப்பியிருக்காதா?
துக்ளக் ஏட்டில் எப்படி எப்படியெல்லாம் கார்ட்டூன் போட்டிருப்பார்கள்?
மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் என்ற ஒரு பார்ப்பனர், கொலை வழக்கில் சிக்கினார். அவரைக் காப்பாற்றினாரே ஆச்சாரியார்.
ஆச்சாரியார் அமைச்சரவையில் மந்திரியாக இருந்த டி.எஸ்.எஸ்.ராஜன் கண்ட்ரோல் இருந்த காலத்தில் வெளிமாவட்டத்தில் 200 நெல் மூட்டைகளைக் கொண்டு போய் விற்றார். அதைப் பிடித்து வழக்கு தொடுத்தார் ஒரு காவல்துறை அதிகாரி. அந்த வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கியவர் இதே ராஜாஜிதான். ஊழல் வழக்கில் சிக்கிய எஸ்.ஏ.வெங்கட்ராமன் அய்.சி.எஸ். என்ற பார்ப்பனரைக் கொஞ்சம்கூடக் கூச்சநாச்சம் இல்லாமல் ரெவின்யூ போர்டு முதல் உறுப்பினராக நியமித்தவரும் சாட்சாத் அவரே!
பார்ப்பன சமாச்சாரம் என்றால் அப்படியே அமுக்கிவிடுவார்களே!. கீர்த்திவாசன் மட்டும் விதிவிலக்கா, என்ன!
------------------------------ மயிலாடன் அவர்கள் 29-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
5 comments:
இந்த விஷயத்துல கீர்த்திவாசனையே தூக்கி சாப்பிட்ட சம்பவம் ஒண்ணு;;;; ஞாபகமிருக்கா மே 9.5.2007. மூணு பேரு கொடூரம்மா கொல்லப்பட்ட வழக்கு. அந்த வழக்கு என்னய்யா ஆச்சு. அந்த படு பாதக செயலை, எல்லா ஊடகங்களுமே கிட்டத்தட்ட, நேரலை ஒளிபரப்பு பண்ணியும், எல்லா குற்றவாளிகளின் முகங்களையும் ஊடகங்கள் காட்டியும், கருப்பு துணிய கட்டிய நீதி தேவதைக்கு மட்டும் எதுவுமே தெரியாமல் போக, எல்லோரும் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி என்ன நடந்தது அந்த 9.5.2007 னு கேட்கறிங்களா. நீங்களே கண்டு பிடிங்க.
@ Karuppu
அனாவச்யமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குற்றம் சொல்லாதீர்கள்... இது பார்பன்ன திமிர்..
சும்மா இருங்கானும் கருப்பு. இந்த சமாசாரம் அவாள் சமாசாரம் இல்லை - அதனால் தமிழ் ஒவியாக்கு கண் குருடாகிவிடும். மேலும் இது கழக சமாசாரம் என்பதால் இவர்களுக்கு முதுகு எலும்பு, துணிச்சல், தைரியம் மற்றும் தன்மானம், பகுத்தறிவு எல்லாம் 'துண்டை காணோம் துணியை காணோம்' என்று ஓடிவிடும்.
சும்மா இருங்கானும் கருப்பு. இந்த சமாசாரம் அவாள் சமாசாரம் இல்லை - அதனால் தமிழ் ஒவியாக்கு கண் குருடாகிவிடும். மேலும் இது கழக சமாசாரம் என்பதால் இவர்களுக்கு முதுகு எலும்பு, துணிச்சல், தைரியம் மற்றும் தன்மானம், பகுத்தறிவு எல்லாம் 'துண்டை காணோம் துணியை காணோம்' என்று ஓடிவிடும்.
யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். ஆனால் அந்த தவறை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் பார்ப்பன ஊடகங்கள் இரட்டை நாக்குடன் செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. இது இன்று நேற்றல்ல பல் ஆண்டுகளாக பார்ப்பனர்கள் கடை பிடிக்கும் வழக்கம்.
பார்ப்பனரல்லாதார் செய்யும் தவற்றை நொடிக்கு நொடி காட்டும் பார்ப்பன ஊடகங்கள் சங்கராச்சாரியார் அணுராத ரமணனுக்கு கொடுத்த போலியல் தொந்திரவை எப்படி யெல்லாம் மூடி மறைத்தது என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் karrupu & Thiru
Post a Comment