Search This Blog

12.5.10

ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம்


கலியாணமாம்!

இந்து மதம் ஒரு வித்தியாசமான மதம் என்று சொல்லுவார்கள். வெள்ளைக்காரன் இந்தப் பெயரைக் கொடுத்தானோ இல்லியோ, நாம் தப்பித்தோம் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளார்.

ஆக, இந்து மதம் என்ற பெயர்கூட கிறித்துவர்களான வெள்ளைக்காரர்கள்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கிறித்துவர்களையும், முசுலிம்களையும் உண்டு இல்லை என்று கொத்திக் குதறும் இராமகோபாலன்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவில்லை.

இந்த இந்து மதத்திற்கு வேறு பல விசேடங்களும் உண்டு; ஆண் கடவுளர்கள் கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். அரிஹர புத்திரன் (அய்யப்பன்) பிறந்தது இப்படித்தான். ஆண் கடவுள்களான நாரதனும், கிருஷ்ணனும் சேர்ந்து 60 பிள்ளைகள் பெற்றுக்கொண்டதாகக் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றிக் கதை எழுதி வைத்துள்ளனர்.

இந்த அசிங்கத்தை தமிழர்கள்மீது ஏற்றி, அந்த 60 குழந்தைகளும் தமிழ் ஆண்டுகள் என்று கேவலப்படுத்தியுள்ளனர்.

நல்ல வாய்ப்பாக இந்த அசிங்கத்தை எல்லாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்து தோலுரித்துக் காட்டி, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் அரும் பகுத்தறிவுப் பெரும்பணியைத் திராவிடர் கழகம் செய்துகொண்டு வருகிறது.

மேலும், ஒரு நல்வாய்ப்பாக தந்தை பெரியாரின் சீடர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால், இந்த அசிங்கமான தமிழ் வருடப் பிறப்புக்குக் கல்தா கொடுத்து, தைமுதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்து, தமிழர்களின் தன்மான உணர்வை அரியணையில் ஏற்றிக் கவரியும் வீசியுள்ளார்.

ஆனால், இதன் விட்ட குறை தொட்ட குறையாக கேவலமான சிந்தனைகள் தமிழர்களின் சிந்தனைகளில் கூடுகட்டிக் கொண்டு குடித்தனம் நடத்துகின்றன.

ஒரு தகவல் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் அங்கு மழையில்லையாம் அதற்காக என்ன செய்துள்ளனர்?

ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரு ஆண் மன்மதனாம்; இன்னொரு ஆண் ரதியாம். ரதிக்கு மன்மதன் தாலி கட்டினானாம்.

மழை பொழிவதற்கும், பொழியாமல் இருப்பதற்கும் காரணம் என்ன என்பதை இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒழுங்கான மாணவரைக் கேட்டால் விளக்கம் சொல்லிவிடுவானே!

வயதால் வளர்ந்த இந்த நெடுமரங்கள் அறிவில் குட்டையாக அல்லவா இருக்கின்றன! தேவை பகுத்தறிவு என்பதைத் தவிர இந்த நோய்க்கு வேறு மருந்து எது?

----------------- மயிலாடன் அவர்கள் 12-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

9 comments:

ரம்மி said...

யார் யார் கூடி பிள்ளை பெற்றால் உமக்கு என்ன கவலை?இது ஒரு பொழைப்பா? நாட்டில் விவாதிப்பதற்கு பிரச்சனைகளா இல்லை? தினசரி சாலைமரண ஸ்கோர், பள்ளி கட்டண அறிவிப்பு, டாஸ்மேக் விற்பனை நிலவரம், வாய் பேசாத மந்திரி, மகனை டிரஸ்ட் உறுப்பினராக்கும் பத்தறிவு(கு) தலைவர்... இதில் ஏதேனும்?

ஆனந்தன் said...

ஐயா,பெயர் என்று ஒன்று வந்ததன் காரணமே ஒருவரை ஒருவர் பிரித்தறிதல் வேண்டி.வேற்று மதத்தவர் எவரும் இல்லாத காலத்தில் நாம் கடைபிடித்த மார்கத்திற்க்கு பெயர் தெவைப்படவில்லை,ஆகவேதான் கிருத்தவம் மட்டுமே தெரிந்த வெள்ளையன் இங்கே வந்தபோது,புதிதான ஒரு மார்கத்தைக்கண்டு அதற்கு புயரிட முனைந்து,சிந்து நதிக்கரையில் விளைந்த நாகரிகமாகையில் இதற்கு இந்து அல்லது சிந்துமதம் என பெயரிட்டான்
(என்ன கொடுமை சார்,தஙளை பகுத்தறிவாளர்கள் என சொல்லிக்கொள்பவர்கள்,உலகம் அறிந்த உண்மைகளைக் கூட பார்ப்பன துவேஷத்தின் காரனமாக மாற்றிப் பேசுவது,அவர்களின் அரசியல் நோக்கத்தை காட்டுகிறதே தவிற,அறிவின் போக்கை காட்டவில்லை)

philosophy prabhakaran said...

ஒரு சின்ன எதிர்கருத்து அண்ணா... புராணங்களை சாடுவது என்னவோ நூறு சதவீதம் சரிதான்... ஆனால் ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வது கேவலமான செய்கை என்று நீங்கள் கூறுவது போல தெரிகிறது... அதில் எனக்கு உடன்பாடு இல்லை...

philosophy prabhakaran said...

ஒரு சின்ன எதிர்கருத்து அண்ணா... புராணங்களை சாடுவது என்னவோ நூறு சதவீதம் சரிதான்... ஆனால் ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வது கேவலமான செய்கை என்று நீங்கள் கூறுவது போல தெரிகிறது... அதில் எனக்கு உடன்பாடு இல்லை...

rkajendran2 said...

சபாஷ். சரியான கேள்விகள். இதற்கு பதிலை எதிர்பார்கிறேன்.

தமிழ் ஓவியா said...

//ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வது கேவலமான செய்கை என்று நீங்கள் கூறுவது போல தெரிகிறது... அதில் எனக்கு உடன்பாடு இல்லை.//

அப்படியா?

தமிழ் ஓவியா said...

//நாட்டில் விவாதிப்பதற்கு பிரச்சனைகளா இல்லை? //

இத மட்டும் விவாதிக்க வில்லை. விவாதித்தலில் இதுவும் ஒன்று.

நியோ said...

மாரியம்மன் புதூர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் ; மகா ஜோதிடர் அவர் .... கைலாயத்தில் கால் நூற்றாண்டு கழித்தவர் ... நிஜமா மழை பெய்யுமா இப்படி செஞ்சான்னு கேட்டேன் ... எவனடா சொன்னான் இல்லைன்னு ... காஞ்சி பெரியவா ஜெயேந்திர சாமியும் சந்திர சேகர சாமியும் பண்ணிண்டா இந்தியாவே பொத்துகிட்டு பெய்யுமடான்னு சொன்னார் ...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நியோ