Search This Blog

30.5.10

இறைவா, இது என்ன சோதனை?



இது நாம் கொடுத்த தலைப்பு அல்ல! தினமலர் பார்ப்பன ஏடு கொடுத்த தலைப்பு!

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்தது அல்லவா! இடிந்து வீழ்ந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கிடக்கும் படங்களைப் போட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் இறைவா இது என்ன சோதனை?

ராஜ கோபுரம் இடிந்து வீழ்ந்தது. இறைவனுக்குத் தான் சோதனையே தவிர மற்றவர்களுக்கு அல்ல! நியாயமாக இந்தக் கேள்வி மாற்றித் தலை கீழாகக் கேட்கப்பட்டு இருக்க வேண்டும்.

இறைவா உனக்கு ஏன் இந்த சோதனை? என்று கேட்டு இருந்தால் தினமலர் கூட்டத்துக்குப் புத்தி கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்று கருத இடம் உண்டு.

பஞ்ச பூதத்தலங்களில் ஒன்று என்று பகவானை ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது. இறைஞ்சுவது. அந்தப் பகவானின் சக்திக்குச் சவால் வந்து விட்ட பிறகு பகவான் சோதிக்கிறான் என்பது பச்சையான பசப்புத்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

பக்தியின் பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் பாமரர்கள் விழித்த விடக் கூடாது. வீழ்ந்த பள்ளத்திலேயே மீண்டும் மீண்டும் உருண்டு புரள வேண்டும் என்ற சூழ்ச்சிதான் இதில் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்களை எழுதிக் குவித்து வைத்துள்ளார்களே. அதில் குடி கொண்ட பகவானின் பராக்கிரமங் களையெல்லாம் பத்தி பத்தியாக குவித்து வைத்துள்ளார்களே!

கோயில் திருக்குளத்துக்குப் பதிகங்கள் பாடி வைத்திருக்கிறார்களே! மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் குளித்தெழுந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் கூடப் போடும் என்று தங்களின் பார்ப்பனக் கோரப் புத்தியைப் பதிவு செய்து வைத்துள்ளார்களே.

முதலையுண்ட பாலகனை மீட்டது எது? எலும்பைப் பெண்ணுருவாக்கியது எது?

இந்தக் கடவுள் சக்திகள் எல்லாம் காணாமல் போனது ஏன்?

காளஹஸ்தியில் கோயில் அருகே ஓடும் நதியில் குளித்தால் ராகு கேது படித்த பாவங்கள் போகுமாம்.

ஜெகன்மோகினி என்ற திரைப்படத்தில் விட்டலாச்சாரியார் காட்டிய காட்சி அது! நாயும், ஆடும் தோஷம் நீங்கப் பெற்றனவாம். அந்தத் திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு அக்கோயிலுக்குப் பக்தர்கள் திரள ஆரம்பித்தார்களாம். நல்ல வசூலாம் இடிந்து கிடந்த கோயிலைச் செப்பனிட்டாரகளாம். பல ஆண்டுகளுக்குப்பின் அந்தப் பகுதிக்கு விட்டலாச்சாரியார் சென்றபோது கோயில் பார்ப்பனர்களும், பக்தர்களும் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்தார்களாம்.

காளஹஸ்தி கோவிலுக்குப் புனர்வாழ்வு வந்ததுகூட, ஜெகன்மோகினி திரைப்படத்தின் மூலம்தான் என்பது காளஹஸ்தி அப்பனுக்குப் புகழ் சேர்க்குமா? விட்டலாச்சாரியார் அல்லவா சாதனையைத் தட்டிக்கொண்டு போகிறார்!

அதுவும் கோபுரம் என்றால் சாதாரணமா? கோபுரம் இறைவனின் திருவடிகளைக் குறிக்கிறதாம். அதனால் கோபுரத்தரிசனம் விசேஷமானது என்கிறார்கள் ஆகமவாதிகள்.

அந்த இறைவனின் திருவடி உடைந்து சுக்கல் நூறாகிப் போய் விட்டதே! இதற்கு எந்தக் கட்டுப் போடப் போகிறார்கள்? புத்தூர் கட்டுதானா?

ஆமாம், வாஸ்து பார்த்துத்தானே கோயிலையும், கோபுரத்தையும் கட்டியிருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ராஜ கோபுரம் தலைகுப்புற வீழ்ந்தது ஏன்?

வாஸ்துவின் வண்ட வாளமும் தாண்டவாளத்தில் ஏறிவிட்டதே! இனி எதை வைத்துக் கோயிலையோ, கோபுரத்தையோ, கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள கடவுளையோ காப்பாற்றப் போகிறார்கள்?

பக்தி பெருகிவிட்டது; பக்தி பெருகிவிட்டது. பகுத்தறிவாளர்களே, நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று பம்மாத்துப் பேசும் பக்தர்கள், காளஹஸ்தி அப்பனின் கோபுரம் குப்புற வீழ்ந்து மீசையில் மண் ஒட்டிய பிறகு உங்கள் பக்தியை ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திப்பீர்களா? கடவுள் கல் என்று கறுப்புச் சட்டைக்காரர்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் உங்களுக்கு உண்டா?

பிழைப்புக் கெட்டுப் போய்விடுமே. பகவானுக்கு ஒரு ஹானி என்றால் அது பார்ப்பனர் வயிற்றுச் சோற்றுக்கு வந்த திண்டாட்டமாயிற்றே! உயர்ஜாதி மமதையின் மீது விழுந்த மண்வெட்டி அடியாயிற்றே!

விட்டுக் கொடுத்து விடுவார்களா? உடனே ஜோதிடக்கட்டை எடுத்துப் புறப்பட்டு விட்டார்கள்.

ஏதோ.. ஏதோ தெரியவில்லை; நாட்டுக்குச் சோதனை! உடனே பரிகாரம் காணப்பட வேண்டும்; அல்லா விட்டால் ஆபத்துக்கு அணை கட்ட முடியாது என்று தோல்வியையும் வெற்றிக்கான தோரணையாக மாற்றி விடுவார்கள்.

மக்களிடம்தான் பயபக்தி (பயமும் பக்தியும்) பயங்கரமாகக் இருக்கிறதே! இந்த முதலீடு ஒன்று போதாதா பிழைக்கத் தெரிந்த பிர்மாவின் முகத்தில் பிறந்த பிரிவினருக்கு?

பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்ததால் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக, ராகு, கேது ராசிக்காரர்களுக்குச் சோதனை ஏற்படுமாம். அரசியல் தலைவர்களுக்கும் ஆபத்து நேரிடுமாம்.

இந்த இரு கிரகங்களுக்கும் உரியவர்கள் உடனே பரிகாரப் பூஜைகளில் ஈடுபட வேண்டுமாம். பரிகாரப் பூஜை செய்தால்தானே பார்ப்பான் வீட்டுக் கல்லாப் பெட்டி நிரம்பி வழியும்?

அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்று சொன்னால்தானே கனமான வருமானம் கணக்கில் காட்டாத கறுப்புப் பணக் கத்தைகள் வந்து குவியும் (பரவாயில்லை ஜெயலலிதா முந்திக் கொண்டார்; கடந்த வாரம்தான் காளஹஸ்தி சென்று பூஜைகள் நடத்திக் கனமான வகையில் கவனித்து விட்டு வந்தார்).

ஜோதிடர் பூவை நாராயணன் கூறுகிறார் கேளுங்கள்:

பொதுவாக கோயில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்கக்கூடாத வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனைப் பாதிக்கும்.

இதற்கு வைரணாச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களைப் படித்து அற்புத சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

புரிகிறதா! ஹோமத்திலேயே அற்புத ஹோமமாம். தொகை அதிகம் என்று பொருள். கோபுரம் இருந்தாலும் கொள்ளை! கோபுரம் இடிந்து வீழ்ந்தாலும் கொள்ளை! இப்படி எது நடந்தாலும் சுரண்டல் கொள்ளைக்கு வசதி செய்து வைத்துள்ள பார்ப்பன சூழ்ச்சி உலகில் வேறு எங்கும் கேள்விப்பட்டிட முடியாத ஒன்று.

அண்டப் புளுகு ஆகாயப் புளுகு என்பதற்கு மேலாக இன்னொன்று இருக்கிறது!

அதுதான் இந்துமதப் புளுகு! பார்ப்பனீயப் புளுகு!

ராகு கேது கிரகதோஷம் என்கிறார்களே, அப்படி ஏதாவது கிரகங்கள் உண்டு என்று எந்த விஞ்ஞானத்தில் கூறப்பட்டுள்ளது? இல்லாத கிரகங்களுக்குத் தோஷமாம். யாகமாம். பூஜையாம். அட, அக்கிரமமே உன்பெயர்தான் அக்கிரகாரமா?

------------------மின்சாரம் அவர்கள் 29-5-2010 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை



2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு ஓவியாவிற்கு காலை வணக்கங்கள் !

திருநள்ளாருக்கு மாதா மாதம் போய்வரும் எனது உறவினர் ஒருவர் இனி நான் எந்த சூழலிலும் பரிகாரம் சொரிகாரம் என எந்த கோவிலுக்கும் போக மாட்டேன் என்று கூறினார் ; அவரை பொறுத்த வரையில் இடிந்தது விழுந்தது கோபுரம் அல்ல , நம்பிக்கை , மூட நம்பிக்கை ....

" கோபுரம் இருந்தாலும் கொள்ளை! கோபுரம் இடிந்து வீழ்ந்தாலும் கொள்ளை! இப்படி எது நடந்தாலும் சுரண்டல் கொள்ளைக்கு வசதி செய்து வைத்துள்ள பார்ப்பன சூழ்ச்சி உலகில் வேறு எங்கும் கேள்விப்பட்டிட முடியாத ஒன்று.அண்டப் புளுகு ஆகாயப் புளுகு என்பதற்கு மேலாக இன்னொன்று இருக்கிறது!அதுதான் இந்துமதப் புளுகு! பார்ப்பனீயப் புளுகு!..."

மிக தெளிவாக சொன்னீர்கள் ஓவியா அவர்களே !

இன்னமும் அறியாயாமையில் உழலும் ஜனங்களை என்ன சொல்ல ? இன்னமும் சுரண்டியே வயிறு வளர்ப்பேன் என்று செயல் படும் கூட்டத்தையும் என்ன செய்ய ?

தங்களை போன்ற பகுத்தறிவாளர்களால் தானே இன்னமும் மிஞ்சியிருக்கிறது சிறு நம்பிக்கை ...

எனது அன்பின் நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள் !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நியோ