Search This Blog

18.5.10

இராமாயணம் வருணாசிரமத்தின் ஆவணம்


ராம் ராம்

குஜராத் மாநில நரேந்திரமோடி ஆட்சியைப்பற்றிக் கேட்க வேண்டுமானால் திருவாளர் சோ ராமசாமி அய்யரைத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்; ஏன் எனில், வருங்காலத்தில் பிரதமராகத் தகுதி உள்ள ஒரே மனிதர் மோடிதான் என்று மூக்கால் எழுதுபவர் அவர்.

ஆனால், குஜராத் மாநிலத்திலிருந்து வரும் தகவல்கள் வேறு மாதிரியாகத் தானிருக்கின்றன. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டி ஒன்றாகும். 1655 கிராமங்களில், 98 ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலே எடுக்கப்பட்ட தகவல் என்ன கூறுகிறது? 99 வகையான தீண்டாமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவாம்.

உயர் ஜாதிக்காரர்கள் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்டவருக்காக ஒரு டம்ளர் தனியே இருக்குமாம்.

அந்த டம்ளருக்குச் சூட்டப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ராம் என்பது தான்.

ஒரு வகையில் அதுவும் சரிதான். இராமனுடைய அவதாரத்துக்கு முக்கிய காரணம் வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவதுதானே!

அந்த அடிப்படையில் தானே சூத்திரனான சம்புகன் தவமிருந்தான் என்று கூறி, ராமனால் கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

தலைகீழாக நின்று கொண்டு தவமிருந்த சம்புகனைப் பார்த்து ராமன் கேட்கிறான்,

நீ எந்த ஜாதியில் பிறந்தவன்? நீ எவரை ஆச்ரயித்து இந்தத் தவசு செய்கிறாய்? நீ யார் பிராமணனா? சூத்திரனா? உண்மையைச் சொல் என்று கேட்கிறான்.

மகாராஜாவே நான் சூத்திர ஜாதியில் பிறந்தவன் என்றான் சம்புகன்.

அப்பொழுது ராமன் சொல்கிறான். சம்புகா! இந்த யுகத்தில் சூத்திரர்கள் தவமிருக்க அதிகாரம் பெற்றிலர்; ஆகவே உன்னை வதைப்பது என் கடமை! என்று ராமன் கூறி, கத்தியை வீசி சம்புகன் கழுத்தை வெட்டினான். அப்பொழுது தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்தார்கள். (ஆதாரம் வால்மீகி இராமாயணம் _ உத்தர காண்டம் _ 79ஆவது சருக்கம்).

இப்பொழுது சொல்லுங்கள் தீண்டத்தகாதவர் பயன்படுத்தும் டம்ளருக்கு ராம் என்று பெயர் வைத்தது சரிதானே!

இராமாயணம் வருணாசிரமத்தின் ஆவணம் அதில் ராமன் கதாநாயகன் என்ற பெயரில் உலவும் வில்லன்!

----------------- மயிலாடன் அவர்கள் 9-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

smart said...

தமிழ் ஓவியா ஐய்யா,

முதலில் ராமாயணத்தை முழுவதுமாக படிக்கவும் அரைகுறை அரைவேக்காட்டுத் தனமாக ஒரே பதிவையே மாதம் மாதம் மறுபதிவு செய்யாதீர்கள். புராணத்தை நம்பாத நீங்கள் இந்த விஷயத்தை நம்புவதால் இதையும் நம்புவீர்கள் எனக் கூறுகிறேன்.
1) உத்திர காண்டம் பகுதியில் நீங்கள் குறிப்பிடும் சுருக்கமே தப்பு.
2) சாம்புகனுக்கு ராமர் கொடுத்து தண்டனை என்று சொல்லவில்லை சாம்புகன் கொண்ட பாவத்திற்கான மோட்சம்
3) சாம்புகனின் முற்பிறப்பு வரலாற்றைக் கொஞ்சம் திருப்பினால் உண்மை கிடைக்கும்
4) உங்கள் கூற்றுப் படி தீண்டாமைக்கும் அந்த காலத்தில் இருந்த நான்கு பிரிவுக்கும் சம்மந்தமில்லை.
5) அதையும் மீறி சொல்ல வேண்டுமானால் இப்படி தமிழ் நாட்டில் சிலர் திரிப்பார்கள் என எண்ணித் தான் கம்பர் அன்றே உத்திர காண்டத்தை தமிழ் பெயர்க்கவில்லை.

நம்பி said...

Blogger smart said...//முதலில் ராமாயணத்தை முழுவதுமாக படிக்கவும் அரைகுறை அரைவேக்காட்டுத் தனமாக ஒரே பதிவையே மாதம் மாதம் மறுபதிவு செய்யாதீர்கள். //

இராமாயணம் டிப்ளாமா கோர்ஸ் என்று ஆரம்பித்தால் படிக்கலாம்...அப்ப கூட இந்த கூத்தை எவனும் படிக்க மாட்டான். பித்தலாட்டம் பன்றதுக்கு மட்டும் இதை படிச்சா போதும்.

இது மட்டும் எத்தனை வருஷத்து பதிவு...ஒரே கதையை எத்தனை தடவை திருப்பி திருப்பி மாற்றி மாற்றி ஆயிர வருஷக்கணக்கா பதித்து கொண்டிருக்கிறீர்கள்...அதுவும் கதாசிரியர் அனுமதியில்லாமல் மாற்றி மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்...மூலக் கதாசிரியர் எவனோ...?

இது எந்த இரவல் எடுத்த கதாசிரியர் மாற்றியமைத்ததோ...? நாம என்ன கிட்ட இருந்தா பார்த்தோம்....

//4) உங்கள் கூற்றுப் படி தீண்டாமைக்கும் அந்த காலத்தில் இருந்த நான்கு பிரிவுக்கும் சம்மந்தமில்லை.//

எந்த ஆய்வு சொல்லுது அப்படி....இதுல வர்றதே தீண்டாமை தான்...தொழிலை வச்சு பிரிக்கிறதே தீண்டாமை தான்..அப்போது தீண்டாமை சட்டப்படியானதாக இருக்கும்...அதை உஷாரா தவிர்த்து எழுதியிருப்பான்....

அப்படியே எழுதிய காலமும் தெரியாமல் அங்கேயே இருந்த மாதிரி எப்படி சொல்ல முடியுது. அப்பறம் எதற்கு அதை கட்டிகிட்டு அழனும். வர்ணாசிரமத்தை எந்த பார்ப்பனரல்லாதவர்களாவது ஆதரித்தது உண்டா....? ஆதி திராவிட மக்கள் ஆதரித்தது உண்டா...? பார்ப்பான் மட்டுமே இதை தொடர்ந்து தீண்டாமை இல்லை தீண்டாமை இல்லை அந்த நான்கிலும் இல்லை...இல்லை என்று கூவிக்கினு இருப்பது எதனாலே...ஏன் மத்தவங்க இதற்கு கூவமாட்டேங்கறாங்க..(தன்னிலை மறந்து ஏமாந்த நிலையில் சிலர் ஆதரவு தெரிவித்திருப்பார்கள்)....நீ தாழ்த்தப்பட்ட வகுப்பிலே இருந்தா கூவியிருப்பியா...? போய் வாழ்ந்து அனுபவித்து சரி சரி என்று கூவேன்...

இப்பவே தீண்டாமை இருக்கற பொழுது, அதை கொண்டுவந்த வர்ணாசிரம் இருக்கும் பொழுது அதற்கு ஆதரவாக எழுதப்பட்டவைகளில் ஒன்றான இராமயணத்தில் இருக்காதா...? பார்ப்பன அவதாரமாக கூறப்பட்ட புராணத்தில் இருக்காதா.?..எல்லோரும் ஒரே ஜாதியாகவா காட்டப்பட்டிருக்கிறது...பூணூல் அணியாதவராகவா காட்டப்பட்டிருக்கிறது...ராமர் எந்த ஜாதி...தாழ்த்தப்பட்ட ஜாதியா...? இல்லை ஜாதியே இல்லாதவரா...?

உனக்கு கோபமே வராது ஏனென்றால் நீ பாத்திக்கப்படலை... எண்ணமே வராது...பாதிக்கப்படாமல் இருக்கும் பொழுதே வந்தா சூப்பர் மனிதநேயம்...? அந்த லெவல்ல எல்லாம் உன்னை வைச்சு பார்க்க முடியாது. இருந்தா ஏன் இந்த பிரச்சினை வருது.

இது எந்த வருடத்தில் நடந்ததாக உள்ளது....வரலாற்று ஆதாரம் இருக்கிறதா...?

உன் ஜாதிக்கரானுக்காக எழுதப்பட்ட கதையை ஏன் எல்லா ஜாதிக்காரனிடத்திலும் பரப்புற...

அயோத்தி தீர்ப்பிலேயே வாழ்ந்ததாக சொல்லப்படலியே....கூடவே வாழ்ந்த மாதிரியில்ல இப்ப கருத்து வைக்கிற....யப்பா யப்பா என்னா டகால்டி....

//3) சாம்புகனின் முற்பிறப்பு வரலாற்றைக் கொஞ்சம் திருப்பினால் உண்மை கிடைக்கும்//

ஏன் திருப்பனும்னேன்?.....கதையில வர்றவனுக்கு எதுக்கு முற்பிறப்பு..நிஜத்தில வாழ்கிறவனுக்கே முற்பிறப்பு கிடையாது...? எங்கே முற்பிறப்பை பற்றி அவரவர் சொல்லுமே பார்ப்போம்..?...அதற்குப் பெய்ர் வரலாறா...? என்ன இழவுய்யா இது...நடந்ததை எழுதினாத்தான் அதற்குப் பெயர் வரலாறு...ஆதாரம் இருந்தாத்தான் வரலாறு...

எங்கே வரலாறு பாடத்தில் வைத்திருக்கிறார்களா...? பள்ளி பாடத்தில் வைத்திருக்கிறார்களா...? அப்பறம் என்ன வரலாறு....?

//5) அதையும் மீறி சொல்ல வேண்டுமானால் இப்படி தமிழ் நாட்டில் சிலர் திரிப்பார்கள் என எண்ணித் தான் கம்பர் அன்றே உத்திர காண்டத்தை தமிழ் பெயர்க்கவில்லை.//

என்ன வேடிக்கை என்னவென்றால் கம்பர் காலத்தில் வாழ்ந்திருந்தவன் கூட இப்படி சொல்லியிருக்க மாட்டான்...? நம்ம வாழ்ந்தா மாதிரி கம்பனிடமே ஒன்னுக்கொன்னா கட்டிபுரண்டா மாதிரி சொல்லவது தான் வேடிக்கை....