Search This Blog

29.5.10

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு
மக்களவையில் பிரதமர் அளித்த வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும்;
இல்லையேல் இந்தியாவே கொந்தளித்து எழும்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்வதில் தடங்கல் வருமானால், இந்தியா முழுமையிலும் உள்ள பெரும்பான்மை மக்கள் கொந்தளித்து எழுவார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:


2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் - ஜாதி வாரிக் கணக்கெடுப்பு குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தேவை என்ற கருத்தை, அநேகமாக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.


பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?


இந்தச் சூழலில் இம்மாதம் 7 ஆம் தேதி மக்களவையில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இதுகுறித்து உறுதி அளித்திருக்கிறார்.


மத்திய அமைச்சரவை நேற்று (26.5.2010) கூடி இதுபற்றி ஆலோசித்த நிலையில் இரண்டே இரண்டு அமைச்சர்கள் இதில் கருத்து வேறுபாடு காட்டினர் என்பதற்காக, மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மக்களவையில் பிரதமர் அளித்த உறுதிமொழிக்கு மாறானது இந்த முடிவு.
இரண்டு பேர் மாறுபடுகிறார்கள் என்பதற்காக கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வுரிமையைச் சேர்ந்த ஒன்றைக் கிடப்பில் போடுவது எந்த வகையில் நியாயம்?


திட்டக்குழுவின் திட்டவட்டமான கருத்து


11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்திற்கான கருத்துருவில் திட்டக்குழு (Planning Commission) மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்புத் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரும் ஒப்புக் கொண்டுள்ளாரே!


திட்டக்குழுவின் தலைவர் வேறு யாருமல்லர்- பிரதமர்தான். 11 ஆவது திட்டக்குழுவின் அறிக்கைக்கு முன்னுரை வழங்கிய பிரதமர் பின்வருமாறு கூறியிருக்கிறார்:


We need to ensure that growth is widely spread so that its benefits, in terms of income and employment, are adequately shared by poor and weaker sections of the society especially the Scheduled castes and the Scheduled Tribes, (STS) Other Backward Classes and Minorities.


வருவாய், வேலை வாய்ப்பு போன்ற வளர்ச்சியின் பயன்கள், சமூகத்தில் உள்ள அனைத்து ஏழைகள் மற்றும் பலவீனமான பிரிவு மக்களையும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களையும், பரவலாகச் சென்றடைகிறதா என்பதைப்பற்றி நாம் உறுதி செய்து கொள்ளவேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.


மேலும்,திட்டக்குழுவின் அறிக்கையில் திட்டவட்டமாகத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்.


இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மக்கள்தொகை விவரங்கள்


6.111. The Second Backward Classes Commission headed by B.P.Mandal (1980), basing its calculation on the Census of 1931, estimated that OBCs constituted 52% of the population. Recently, the NSSO 61st Round (July 2004 to June 2005) report on ‘Employment and Unemployment Situation among Social Groups in India’ gave an estimate of OBCs constituting 41% of the population. State-wise, OBC-wise data on population as well as vital and demograhic variables are not available, which is the main hurdle in the formulation of policies and programmes for the development of Other Backward Classes.


6. 111 பி.பி. மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் (1980), 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மக்கள் தொகையில் 52 விழுக்காடு அளவுக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் இருப்பதாக மதிப்பிட்டிருந்தது. இந்தியாவில் உள்ள சமூகக் குழுக்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் அற்ற தன்மை என்ற 61 ஆவது சுற்றுக்கான (2004 ஜூலை முதல் 2005 ஜூன்வரை) அண்மையில் வெளியிட்ட தனது அறிக்கையில் என்.எஸ்.எஸ்.ஓ. அமைப்பு இப்பொழுது நாட்டில் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் 41 விழுக்காடு இருப்பதாக மதிப்பிட்டுக் கூறியுள்ளது. மாநில வாரியான, பிற்படுத்தப்பட்ட பிரிவு வாரியான மக்கள் தொகை பற்றிய புள்ளி விவரங்களும், அதே போன்று முக்கியமான அறிவியல்ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களும் இல்லாத நிலைதான், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதிலும், திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் பெருந்தடையாக இருக்கிறது.


திட்டக்குழு இன்னொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.


சமூக முன்னேற்றம்


6.128. Like SCs, STs, Minorities, and Persons with Disabilities, there is an imperative need to carry out a census of OBCs now or in the next census in 2011. In the absence of exact assessment of their population size; literacy rate; employment stauts in government, private and unorganised sectors; basic civic amenities; health status; poverty status; and human development and HPIs; it is very difficult to formulate realistic policies and programmes for the development of OBCs.


6. 128 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் மாற்றுத் திறனாளிகளின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது போன்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் தொகையின் கணக்கெடுப்பையும் இப்போதோ அல்லது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதோ மேற்கொள்வது மிகவும் தவிர்க்கமுடியாத அவசரமான தேவையாகும். அவர்களின் சரியான மக்கள் தொகை அளவையும், அவர்கள் பெற்றுள்ள கல்வியறிவு விகிதம் பற்றியும், அரசு, தனியார் துறை மற்றும் முறை சாராத் துறைகளில் அவர்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், அவர்கள் பெற்றுள்ள அடிப்படை சுகாதார மற்றும் இதர சமூக வசதிகள், அவர்களின் வறுமை நிலை, அவர்களின் மனித ஆற்றல் வளர்ச்சி, அவர்கள் பெற்றுள்ள மனித ஆற்றல் அளவு ஆகிய விவரங்கள் இல்லாத நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் முன்னேற்றத் திற்கான ஆக்கரீதியான கொள்கைகளை_ உருவாக்குவது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, பொருளாதார முன்னேற்றம், தேவையான நிதி ஒதுக்கீடு போன்றவற்றிற்கு ஜாதி வாரிய புள்ளி விவரங்கள் மிக மிக அவசியம் என்றும் திட்டக்குழுவின் அறிக்கை கூறியுள்ளது. அந்த அறிக்கையின் முன்னுரையிலும் அதனை வழிமொழிந்த பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


பெரும்பான்மைக் கருத்து


நீதிமன்றத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான புள்ளி விவரம் கேட்கப்படுகிறது.


இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலும் (பா.ஜ.க. உட்பட) இதற்கு உடன்பாடு தெரி-வித்துள்ள நிலையில் இதற்கு முட்டுக்கட்டை என்றால் இதன் பின்னணி இரகசியம் என்ன?


புதிய ஜனநாயகமா?


பெரும்பான்மையான மக்களின் உரிமையை நிராகரிப்பதுதான் புதிய ஜனநாயகமா?
இந்தப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வாங்கித்தான் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.


முதலமைச்சருக்கு வேண்டுகோள்


முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் சமூக நீதிக்கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்தவர் என்ற முறையில் மத்திய அரசுக்கு இந்த மிக முக்கிய பிரச்சினையில் தேவையான அனைத்து அழுத்தத்தையும் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


இந்தியாவே கொந்தளிக்கும் - எச்சரிக்கை!


எல்லாவற்றையும் புறந்தள்ளி மத்திய அரசு நடந்து கொள்ளுமானால் இந்தியா முழுமையிலும் பெரும் கொந்தளிப்பும், போராட்டமும் நடைபெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும். காரணம், இது பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினையாகும்.

சென்னை

27.5.2010

தலைவர்,

திராவிடர் கழகம்

--------------------"விடுதலை” 27-5-2010

8 comments:

smart said...

சாதி ஒழிக்கத் தானே பெரியார் பாடுபட்டதாக நான் பள்ளியில் தப்பாக படித்துவிட்டேனா?
அனைவரும் சமம் என்றால் ஏன் இந்த பாகுபாடு. மக்களின் வருவாய் அடிப்படையில் நடந்தால் உண்மையான வறுமை ஒழிக்கப்படும்.
மதமற்றவர்கள், இறைமறுப்பாளர்கள், நாத்திகர்கள்[என்னைப் போன்றோர்] இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பில் எந்த சாதி என்று சொல்ல?
[விளக்கம் கொடுக்கவும்]

smart said...

இன்றே விளக்கம் கொடுக்கவும். முன்று நாள்கழித்து விளக்கம் கொடுக்காமல் வெறும் மறுமொழியை மட்டும் வெளியிடாதீர்கள். கொஞ்சம் "பகுத்" "தறிந்து" விட்டு பதில் அளியுங்கள்.

smart said...

கேள்வி கேட்டு முன்று மணி நேரமாகிறது இன்னும் விவாதிக்க வராமலிருந்தால் என்ன அர்த்தம். ஒவ்வொரு திரட்டியில் சென்று ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் இந்த நேரத்தில் எனது கேள்விக்கு பதில் கிடைத்தால் நன்றாகயிருக்கும்.

தமிழ் ஓவியா said...

//ஜாதி வாரி கணக்கெடுப்பில் எந்த சாதி என்று சொல்ல?//

இது தொடர்பாக பல பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து தேடிப் படிக்கவும்.

எனது ஓய்வு நேரத்தில் இந்தப் பணியை செய்து வருகிறேன்.

உடன் பதில் கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன். ஆனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும்.

ஓட்டுப் பிச்சைக்காக எப்போதும் அலைந்ததில்லை.

நாகரிகத்துடன், பண்புடனும் எனது செயல் இருக்கும். உங்கள் செயல் எப்படி என்பதை "பகுத்" "தறிந்து" கொள்ளவும்,

எப்படியிருப்பினும் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

//ஜாதி வாரி கணக்கெடுப்பில் எந்த சாதி என்று சொல்ல?//

இது தொடர்பாக பல பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து தேடிப் படிக்கவும்.

எனது ஓய்வு நேரத்தில் இந்தப் பணியை செய்து வருகிறேன்.

உடன் பதில் கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன். ஆனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும்.

ஓட்டுப் பிச்சைக்காக எப்போதும் அலைந்ததில்லை.

நாகரிகத்துடன், பண்புடனும் எனது செயல் இருக்கும். உங்கள் செயல் எப்படி என்பதை "பகுத்" "தறிந்து" கொள்ளவும்,

எப்படியிருப்பினும் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

smart said...

****அனைவரும் சமம் என்றால் ஏன் இந்த பாகுபாடு. மக்களின் வருவாய் அடிப்படையில் நடந்தால் உண்மையான வறுமை ஒழிக்கப்படும்.****
and
****மதமற்றவர்கள், இறைமறுப்பாளர்கள், நாத்திகர்கள்[என்னைப் போன்றோர்] இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பில் எந்த சாதி என்று சொல்ல?***


இந்த இரண்டு கேள்விக்கான பதில் பதிவை தேடிப் படிக்கும் அளவிற்கு உங்கள் தளம் இல்லை தயவு கூர்ந்து சுட்டிகளைத் தரவும்.

தமிழ் ஓவியா said...

//****அனைவரும் சமம் என்றால் ஏன் இந்த பாகுபாடு. மக்களின் வருவாய் அடிப்படையில் நடந்தால் உண்மையான வறுமை ஒழிக்கப்படும்.****//

பொது உரிமை இல்லாத இடத்தில் பொது உடமை ஏற்படாது . வறுமை இந்தியாவைப் பொறுத்தவரை ஜாதி என்னும் சங்கிலியால் பிணைப்பட்டிருக்கிறது. அதனால் தான் சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

//***மதமற்றவர்கள், இறைமறுப்பாளர்கள், நாத்திகர்கள்[என்னைப் போன்றோர்] இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பில் எந்த சாதி என்று சொல்ல?***//

நீங்கள் எந்த ஜாதியில் பிறந்து தொலைத்தீர்களோ அந்த ஜாதியைச் சொல்லுங்கள்.

நமக்கு என்ன நோய் உள்ளது என்பதை மருத்துவர்களிடம் சொல்வதில் என்ன கூச்சம்?

அப்போதுதான் உரிய மருத்துவ்ம் கிடைக்கும்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல் தான் இந்தப் பிரச்சினை.

தேடலில்தன் பல் உண்மைகள் கிடைக்கும். உங்களைப் போன்றவர்கள் இன்னும் தேடி தேடி படிக்க வேண்டுகிறேன்.

நம்பி said...

//smart said...

சாதி ஒழிக்கத் தானே பெரியார் பாடுபட்டதாக நான் பள்ளியில் தப்பாக படித்துவிட்டேனா?
அனைவரும் சமம் என்றால் ஏன் இந்த பாகுபாடு. மக்களின் வருவாய் அடிப்படையில் நடந்தால் உண்மையான வறுமை ஒழிக்கப்படும்.
மதமற்றவர்கள், இறைமறுப்பாளர்கள், நாத்திகர்கள்[என்னைப் போன்றோர்] இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பில் எந்த சாதி என்று சொல்ல?
[விளக்கம் கொடுக்கவும்]
May 29, 2010 8:22 AM //

ஆமாம் ஜாதி ஒழிக்கத்தான் ஒழிந்ததா...? நீங்கள் பார்க்காமல் இருக்கலாம்...உங்கள் சொந்தங்கள பந்தங்கள் என அனைவரையும் ஜாதி பார்க்காமல் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதுண்டா...?


நண்பர்களை கட்டாயப்படுத்தியதுண்டா...? பார்ப்பனர்கள் அனைவரும் பூணூல் அணியாமல் இருந்ததுண்டா...? குறைந்தபட்சம் இந்த அடையாளத்தில் இருந்தாவது, இவ்வளவு காலப் போராட்டத்திற்கு பிறகாவது வெளியே வந்ததுண்டா...?


பூணூல் அணியும் நீ என்னுடன் பேசாதே நீ ஜாதி பார்க்கிறாய் என்று கூறியதுண்டா...? அந்த ஜாதியில் பிறந்தவர் எல்லாம் இப்படி போட்டிருப்பவரை முற்றிலும் ஒதுக்கியதுண்டா...?


ஆதி திராவிட மக்கள்...இன்னும் இதர திராவிட மக்கள் என அனைவரையும் ஜாதி பார்க்காமல் இருக்கவேண்டும் அப்போது தான் நான் உன்னுடன் பேசுவேன் என்று முறுக்கி கொண்டதுண்டா...? உறவினர்கள் அப்படி முறுக்கி கொண்டு அப்படி பார்க்கும் நபர்களின் இல்லங்களுக்கு, இல்லத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு செல்லாமல் இருந்ததுண்டா..? ஏன் முடியவில்லை...?


இவன் அவனை குற்றம் சாட்டுகிறான் அவன் இவனை குற்றம் சாட்டுகிறான்..நீ பார்க்காமல் இரு...


இல்லையென்றால் இப்படி வரும்.....அவனை கழ்ட்ட சொல் நானும் கைவிடுகிறேன்...அவன் தான் ஜாதிய அடையாளத்தோடு இருக்கிறான் என்று நாயகன் டயலாக் வரும்....


நமக்கு அரசியல் தலைவர்கள் தான் கண்ணுக்குத் தெரியும்...அவர்களை குற்றம் சாட்டுகிறோம்...நாம் தான் எப்போதுமே தனிமனித ஒழுக்கத்தை எல்லா இடங்களிலும் தவறிவிட்டு ஊழலை பற்றி வாய்கிழிய பேசுவோமே..நாமே ஒரு ஊழல்வாதி என்பதை மறந்துவிட்டு பேசுவோமே....


மாமியார் தலையில் மருமகள் சாம்பாரை கொட்டுவதையும், மருமகள் தலையில் மாமியார் கொதிக்கும் சாம்பாரை கொட்டுவதையும் வேடிக்கை பார்த்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்வோமே...


அம்மாவுக்காக கட்டிய மனைவியை அடிப்போமே...அடித்துவிட்டு பெண்ணியம் பற்றி வாய்கிழிய கருத்து வைப்போமே..பெற்றத் தாயையே போற்றாமல் புராணத்தை கொண்டே அந்த தாயை அசிங்கப்படுத்துவோமே.....

அசிங்கப்படுத்தி விட்டு அன்னையும் பிதாவும் முன்ன்றி தெய்வம் என்றும் கூறுவோமே....பிறகு மதத்தில் மண்ணாங்கட்டி மகத்துவம் இருக்கிறது என்ற தத்துவத்தையும் கூடவைப்போமே

(வேலை மனக்கெட்டு ஒருத்தன் எல்லா இடங்களிலும் தொடர்ந்து வைத்திருக்கிறான் அதுவும் ஒரே மாதிரி...இங்கிலிபீஸ்ல...இவ்வளவு படித்தும் கொஞ்சம் கூட அசையல அவன்...அவனை என்ன செய்வது...? இதல்லாம் கண்டம் கேஸ்...)

தாயின் கற்பை போற்றாமல் புராண புருடாவில் பொம்பளையை பற்றி போற்றிக்கொண்டிருப்போம்...இப்படித்தானே எல்லாமே...

அய்யோ புண் படுகிறதே...எங்கே புண்படுகிறது...நீயே எல்லாவற்றையும் பாழ்படுத்துகிறாய்...பிறகு புண்படுகிறது என்கிறாய்.

நமக்கு நம்மிடம் இருக்கும் எந்த அழுக்கும் கண்ணுக்கு தெரியாது. அடுத்தவன் அழுக்கு மட்டும் தான் தெளிவாக தெரியும். எதற்கெடுத்தாலும் அரசியலை குற்றம் சொல்லி கொண்டு திண்ணையில் நாளிதழை புரட்டி கொண்டிருக்க மட்டுமே தெரியும்...நம்மிடம் இருக்கும் குப்பையை அகற்ற தெரியாது...


அரசியல் வாதி என்ன வானத்தில் இருந்தா குதித்தார்?...எல்லாம் இந்த நாற்றமெடுக்கும் மனித சமுதாயத்தில் இருந்து தானே வந்தார். நம்மில் ஒருவர் தானே...அவரை மட்டுமே குற்றம் சொல்வதை விட்டு விட்டு நீயும் கொஞ்சம் சாக்கடையை அள்ள முயற்சி செய் என்றால் முறைக்கிறாய். முறை..இது உன் முறை....என்பதை மறந்து முறை.

ஜாதி பார்க்காதவன் மிக மிக சொர்ப்பம்...அது கூட அவன் மட்டுமே பார்க்காமல் இருப்பான்.....அவன் நெருங்கிய சொந்தங்களையே வலியுறுத்த முடியா நிலையில் இருப்பான். வெளியுலகத்தை கொஞ்சம் எட்டி பார்த்தால் போதும் வண்டி வண்டியாக தெரியும்...? இந்த உலகமே பெரிய பாடம்...இதில் தினந்தோறும் நிறைய கற்கலாம்....கற்றுகொண்டே இருக்கலாம்...