Search This Blog

2.9.10

தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டின் நிலை!


இனவெறி!

கேள்வி: கருணாநிதி என்று அவரது பெயரைச் சொல்லி அழைப்பதை, அவர் தவறாகக் கருதுகிறார். எனவே, இனிமேல் திருக்குவளை தீயசக்தி என்றே அவரைக் குறிப்பிடுவோம் என்று ஜெயலலிதா திருச்சி பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளாரே, இது சரியா?

பதில்: இந்தப் பட்டங்களுக்கு ஜெயலலிதா பொறுப்பல்ல தீயசக்தி என்பது எம்.ஜி.ஆர். கொடுத்த பட்டம். திருக்குவளை என்பது பிறந்த ஊர். இவற்றைக் கூறுகிற ஜெயலலிதாவை குற்றம் சொல்வதில் நியாயம் இருக்குமா?

(துக்ளக், 1.9.2010)

கேள்வி: கருணாநிதியை இனி தீய சக்தி என்றுதான் அழைக்கவேண்டும் என்று ஜெயலலிதா பேசியது, இன் னும்கூட அவர் திருந்தவில்லை என்றுதானே காட்டுகிறது?

பதில்: இனி தீய சக்தி என்று அழைப்பதென்ன...? வெகு காலமாகவே அப்படித்தான் கூறி வந்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவருக்குக் கலைஞர் பேரில் விரோதம் வளர்ந்து விட்டிருக்கிறது அதனால்தான் தனி நபர் தாக்குதலும் பழகிப் போனது.

(கல்கி, 5.9.2010)

பொதுவாழ்வில் ஒழுக்கத் தைப்பற்றியும், நேர்மை பற்றியும் எல்லாம் வாயை அகல விரித்தும், பேனாவின் முனை யைக் கூர்தீட்டியும் கருத்துகளை வெளியிடக்கூடிய இந்தப் பார்ப்பன ஏடுகள் ஒழுக்கமான முறையில் பதில் சொல்லாத தற்குக் காரணம் கடைந்தெடுத்த அக்மார்க் இனப்பற்றுதான் என்பது வெளிப்படை.

தீயசக்தி என்று ஜெயலலிதா சொல்லவில்லை; எம்.ஜி.ஆர். சொன்னதைத்தான் திருப்பிச் சொல்கிறார் என்று திருவாளர் சோ சப்பைக் கட்டு கட்டுகிறார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் பெரும்பாலும் கலைஞர் என்ற வார்த்தையைத்தான் பயன் படுத்தி இருக்கிறார் என்பதை தனது இன நலனுக்காக வசதியாக மறைத்து எழுதும் போக்கிரித்தனத்தைக் கவனிக் கத் தவறக்கூடாது. எம்.ஜி. ஆரைப்பற்றி குறைகூறி, ராஜீவ் காந்திக்கே கடிதம் எழுதியவர் ஜெயலலிதா இந்த நிலையில் எம்.ஜி.ஆரைத் துணைக்கழைத்து ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கிறது இந்தக் கைபர் கணவாய்!

பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று மனு தர்மத்துக்கு வக்காலத்து வாங்கி இன்றைக்குக்கூட எழுதும் சோ போன்ற இனவெறியர்கள் ஜெயலலிதாவுக்காக இனவெறியோடு எழுதுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

சோ பார்ப்பனர் ஒரு வகையில் ஜெயலலிதா அம்மையாரைக் காப்பாற்ற பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புகிறார் என்றால், கல்கியோ தனி நபர் தாக்குதல் என்பது ஜெயலலிதாவுக்குப் பழகிப்போன ஒன்று என்று சமாதானம் சொல்லுகிறது நியாயப்படுத்துகிறது.

இதன்மூலம் தனி நபர் தாக்குதலை கல்கி ஆதரிக்கிறது என்பது வெளிப்படை. இதுதான் கல்கி வாசகர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் கண்ணியமிக்க பாதை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்வி சிறப்புப் பரிசு பெறுகிறது என்பதையும் கண்டிப்பாக மறக்காமல் நினைவில் வையுங்கள். காகப்பட்டர் குணம் இன்னும் கல்கி கூட்டத்தை விட்டுப் போகவில்லை என்பதை மறக்கவேண்டாம்.

என் ஜென்மப் பகைவர் கருணாநிதி என்று செல்வி ஜெயலலிதா கடந்த தேர்தலின் போது கூறவில்லையா?

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் நாட்டில் நடப்பது அரசியல் அல்ல இனப் போராட்டமே என்பது எளிதில் விளங்காதா?

இது தந்தை பெரியார் சொல்லும்போது சிலருக்குக் கசப்பாகக் கூட இருக்கும். ஆச் சாரியாரே (ராஜாஜி) சொல்கிறாரே அது எப்படி இருக்கும்?

தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டின் நிலை! (திருவொற்றி யூரில் ஆச்சாரியார் பேசியது 18.9.1953).

--------------------மயிலாடன் அவர்கள் 2-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

பரதேசி said...

இன்றைய அரக்கர்கள் யார்?
ஊரை அடித்து உலையில் போதும் கூட்டம் தான்.அது யார் என்று உங்களால் சொல்லமுடிம ஓவியா அவர்களே?
வீண் பேச்சு.வெட்டிக் கதை இன்றும் பார்ப்பான் என்று சொல்லிகொண்டிருப்பது.தென் மாவட்டங்களில் அப்பாவி மக்களை குதரிப்போட ஒரு ஆதிக்க சாதி.
வடமாவட்டங்களில் ஒரு ஆதிக்க சாதி.அவர்களை பற்றி எழுதி தமிழ் நாட்டை உருப்பட செயுங்கள்

இப்படி எழுதுவதால் நான் பார்ப்பானும் அல்ல.தாழ்த்தபட்டவனும் அல்ல.நடைமுறைக்கு வந்து பாருங்கள்.என் பார்வையில் ஊர் மக்களின் உழைப்பை சுரண்டி கொளுப்பவன் தான் மலம தின்னும் பன்றிக்கும் கேவலமானவன்.