மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்..., அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த உரிமை..., காவல்துறையினரின் வீண் தலையீடு தடுக்கப்படவேண்டும்...,
சீர்காழி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ எச் பிரிவின்படி மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யும் திராவிடர் கழகப் பணிக்குக் காவல்துறை இடையூறு செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் சீர்காழியில் நேற்று (27.9.2010) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண் 1:
திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போக்கும்
மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ - எச் பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், திராவிடர் கழகம் தமது கொள்கையின் அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்கையில், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்க் கும்பல் காவல்துறையிடம் புகார் கொடுப்பதும், அதனை ஆழ்ந்து நோக்காமல் நுனிப்புல் மேயும் தன்மையில் காவல்துறையினர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து விசாரிப்பதும், திட்டமிட்ட வகையில் ஏற்கெனவே முறைப்படி ஏற்பாடு செய்துள்ள கழகத்தின் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்து வருவதும், சட்டப்படியும், நியாயப்படியும் முறையானது அல்ல என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இம்மாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 2 (அ):
பாபர் மசூதி குற்றவாளிகள் மீதான வழக்கு; விசாரணையை விரைவுபடுத்துக!
அயோத்தியில் ராமன் ஜென்ம பூமி என்று சொல்லி ஏற்கெனவேயிருந்த 450 ஆண்டுகால வரலாறு படைத்த, சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கு 18 ஆண்டு காலமாக நிலுவையில் இருப்பதும், குற்றவாளிகள் பெரிய பதவிகளில் அலங்கரிப்பதும் நாட்டின் ஒட்டுமொத்தமான நிருவாகம், நீதி, மதச் சார்பின்மை இவற்றின் மீதான நம்பிக்கையை வெகு மக்கள் இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கினை விரைந்து முடித்து, உண்மையான குற்றவாளிகள் எந்தவகையிலும் தப்பிக்க முடியாத அளவுக்கு வழக்கினை செறிவாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்து கிறது.
தீர்மானம் எண் 2 (ஆ):
கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறிக்கொண்டு மத அமைப்புகள் உரிமை கோரி போராடுவதும், வழக்குத் தொடுப்பதும் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது என்பதையும், அதன்படி பார்த்தால், பெரும்பாலான இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் புத்த விகார்களாக இருந்து, பிற்காலத்தில் வன்முறையாலும், மன்னர்களின் அதிகாரத்தாலும் இந்துக் கோயில்களாக திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு அசைக்க முடியாத அனேக ஆதாரங்கள் உள்ளன என்பதையும் இம்மாநாடு வரலாற்றுக் கண்ணோட்டத் தோடு சுட்டிக் காட்டுகிறது. 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளை மய்யப் புள்ளியாக வைத்து, அதற்குமுன் இருந்த நிலை தொடரப்படவேண்டும் என்று அரசு ஏற்கெனவே முடிவு செய்த கருத்து நிலை நிறுத்தப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண் 3 (அ):
வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமையாக்குக!
வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும், தனியார்த் துறைகளிலும், பன்னாட்டு அமைப்புகள் நடத்தும் அனைத்து நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்திட உரிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் என்றும் இம் மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3 (ஆ):
ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குக!
அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் பல்லாண்டுகள் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்துவதை கொள்கை யாக வகுத்துக் கொண்டு, அதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 4:
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது
இலாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 5:
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக!
விலைவாசி உயர்வு பொது மக்களை அவதிக்கு உள்ளாக்குவதால், இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து, அதனை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு நடுவண் அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தக சூதாட்டப் பேரத்தைத் தடை செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 6:
ஈழத் தமிழர்களுக்கான வாழ்வுரிமை - மத்திய அரசின் கடமை
ஈழத்தில் போர் ஓய்ந்து ஓராண்டாகிவிட்டது என்று கூறப்பட்டாலும், போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமை என்பது வருந்தத்தக்க அவல நிலையில்தான் உள்ளது என்பதைப் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் தெளிவாகத் தெரிவிக்கும் நிலையில், இந்திய அரசின் அணுகுமுறை இப்பிரச்சினையில் ஏனோதானோ என்ற போக்கிலேயே இருந்து வருகிறது - உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்தமான தமிழர் களின் கடும் அதிருப்திக்கு இந்திய அரசு ஆளாகியிருப் பதையும் நினைவூட்டி, உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் ஈழத் தமிழர்கள் வாழ்வில் உறுதியான வளர்ச்சிகள், மாற்றங்கள் ஏற்பட இந்தியா உளப்பூர்வமான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 7:
காஷ்மீர் மற்றும் நக்சலைட் பிரச்சினைகள்
காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள், நக்சலைட்களின் பிரச்சினைகளை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை களாகக் கருதாமல், அவற்றின் பின்னணியில் உள்ள சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு - மண்ணில் மைந்தர்கள், மலைவாழ் மக்கள் உரிமை களையும் கணக்கெடுத்து, உண்மையான தீர்வினைக் காண முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
-------------------" விடுதலை” 28-9-2010
2 comments:
தி.க வின் மத எதிர்ப்பு பிரச்சாரத்தில் பிரச்சனையில்லை! அது கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு! ஆனால், அவர்கள் பிரச்சாரம் செய்ய தேர்ந்தெடுக்கும் இடங்களில் தான் பிரச்சனையே! மத எதிர்ப்பு என்பதை விட திராவிட ஆட்சி நடக்கிறது எனும் மமதையால், குழப்பம் ஏற்படுத்தி, வீண்வம்பு வளர்க்கவே, முனைப்புடன் இருக்கிறார்கள்! எனவே தான், காவல் துறை கடுமை காண்பிக்கிறது!
சான்றுக்கு ஸ்ரீரங்கத்தில், கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை! அதற்கு போலீஸ் பாதுகாப்பு! பதட்டமான சூழல்!
காலம் மாறிவிட்டது! இது பெரியார் காலமல்ல!முரட்டுத்தனமாக எது/எங்கு வேண்டுமானலும், செய்வதற்கு!
பிள்ளையார் சதுர்த்தி அன்று, பிள்ளையாரைக் கேவலப்படுத்தி, நோட்டிஸ் வினியோகித்தால், சட்டம்/ ஒழுங்கைக் காப்பாற்ற காவல் துறை நடவடிக்கை எடுக்காமல், உங்களுடன் சேர்ந்து செயல் பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவல்ல!
Blogger ரம்மி said...
// பிள்ளையார் சதுர்த்தி அன்று, பிள்ளையாரைக் கேவலப்படுத்தி, நோட்டிஸ் வினியோகித்தால், சட்டம்/ ஒழுங்கைக் காப்பாற்ற காவல் துறை நடவடிக்கை எடுக்காமல், உங்களுடன் சேர்ந்து செயல் பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவல்ல!
September 29, 2010 7:11 PM //
பிள்ளையாரை கேவலப்படுத்தினால் பிள்ளையார் தான் ச்ண்டைக்கு வரணும் கண்டவன்க சண்டைக்குவரக்கூடாது.
பிள்ளையாரை வைச்சு மனிதனை கேவலப்படுத்துவதை நாங்க தடுக்காம இருக்க முடியாது.
பிள்ளையாரை வைச்சு பிற சமயத்தவரை கேவலப்படுத்துவதை பிள்ளையார் பார்த்துகிட்டு இருப்பாரு என்று நீங்க நினைக்கும் பொழுது...அதே பிள்ளையாரு கனவில வந்து இதையெல்லாம் போய் தட்டிக்கேளுப்பா என்று எங்களிடம் சொல்லமாட்டாரு என்று எப்படி? அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க...? நிச்சயமா சொல்வாரு கனவில வந்து டெய்லி சொல்வாரு....என்னை வைச்சு எப்ப பாரு பித்தலாட்டம் பன்றானுங்க...போய் உதை என்று...
இதெல்லாம் ஆல் பிளடி பிள்ளையாரு சொன்னது தான்.
Blogger ரம்மி said...
//அவர்கள் பிரச்சாரம் செய்ய தேர்ந்தெடுக்கும் இடங்களில் தான் பிரச்சனையே! மத எதிர்ப்பு என்பதை விட திராவிட ஆட்சி நடக்கிறது எனும் மமதையால், குழப்பம் ஏற்படுத்தி, வீண்வம்பு வளர்க்கவே, முனைப்புடன் இருக்கிறார்கள்! எனவே தான், காவல் துறை கடுமை காண்பிக்கிறது!
September 29, 2010 7:11 PM //
எதுக்கு பிள்ளையாரு? மசூதி தெரு பக்கம் போறாரு? அந்த தெருப்பக்கம் போறதுக்கு மட்டும் தான் லைசன்ஸ் கொடுத்திருக்காரா?....அங்க போய் பிள்ளையார் பக்தியை காட்டுவதற்கா?..அங்க தான் அல்லா இருக்காரே...! அல்லா கிட்ட போய் எதுக்கு பிள்ளையாரை காட்டணும்...அவங்க இரண்டு பேரும் ஒரே கேட்டகிரி ஜாப் தானே பன்றாங்க..... அவருகிட்ட போய் எதுக்கு அசிங்கமான பிள்ளையாரை காட்டணும்...வேணுன்னா அவரே (அல்லாவே) கூப்பிட்டு பேசிக்கப் போறாரு.
என்ன கடவுளுக்கே பக்தி விளம்பரமா?...
இல்லையே கனவில வந்து சொன்னாரே!...இப்படி எல்லாம் இந்த பித்தலாட்டப் பசங்க மதச்சண்டையை வளர்க்கிறதுக்காக இசுலாமிய சமயத்தினரின் தெருப்பக்கம் வேண்டுமென்றே ஊர்வலம் போறானுங்க.. அந்த மசூதி முன்னாடி நின்னு என்னை வாழ்த்தறதா நினைச்சு ஒரே கூச்சல் போடறானுங்க....இதெல்லாம் நான் சொல்லவே இல்லை...இதனால அல்லா கோவிச்சுகிட்டு வந்து என்னிடம் கம்பிளெயின்ட் பன்னாறு...நைட்டு முழுக்க ஒரே சண்டை...என்று அல்லா சொல்லமாட்டாரு என்று எப்படி உறுதியா நினைக்கிறே?...(கனவு தானே..)
இப்ப யாரு பிரச்சினையை பண்ண இடத்தை தேர்ந்தெடுத்தா?
ஆமா இடமே எங்க இடம் தான் அதுல என்ன இந்த இடம் பிள்ளையாருக்கு? என்று எவன் பட்டா போட்டது...?
மனுஷன் குந்தறதுக்கே குடிசை இல்லை பிள்ளையாருக்கு வேற தனியா நாடு வேணுமா? மவனே செவட்டி அடி....சரியான போங்கா இருக்கே?
அது எங்க வேணாத்தான் இருக்கும். நான் நினைச்சா ஆயிரம் பிள்ளையாரு சிலை வடிப்பேன்...அதை காலால் கூட மிதிப்பேன் நான் தானே உருவாக்கினேன்...நேத்து வரை அந்த கல்லை நான் காலால் தானே மிதிச்சுகிட்டு இருந்தேன்...அது மேல நிறைய பேர் வேற கொல்லிக்கு போயிட்டு தான் இருந்தாங்க...கொல்லிக்கும், மூத்திரமும் போன இடத்திலேயிருந்து எடுத்த களிமண்ணை எடுத்து தண்ணிவிட்டு, நல்லா காலால் மிதி மிதி என்று மிதித்து பிசைஞ்சா பிள்ளையாரு...என் கால்பட்ட இடம் பிள்ளையாரு....எங்கிட்ட காசு கொடுத்து வாங்கி நீ கடலுல தானே தூக்கிப்போடற...காசுக்கேத்த பிள்ளையாரு....இந்த களிமண்ணை வைச்சு எதுக்கு எல்லார் கிட்டேயும் சண்டைக்குப் போறே....வீண் சண்டை தானே...உங்க சண்டையை நாங்க வேடிக்கை பார்க்கணுமா...?
Blogger ரம்மி said...
//சான்றுக்கு ஸ்ரீரங்கத்தில், கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை! அதற்கு போலீஸ் பாதுகாப்பு! பதட்டமான சூழல்!
காலம் மாறிவிட்டது! இது பெரியார் காலமல்ல!முரட்டுத்தனமாக எது/எங்கு வேண்டுமானலும், செய்வதற்கு!
September 29, 2010 7:11 PM //
யார் சொன்னது?...இது பெரியார் காலம் தான்...பல இலட்சகணக்கான பெரியார்களின் காலம்...திராவிடர்களின் காலம். இது இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு போய்க்கொண்டேயிருக்கும். சுயமரியாதைக்கொள்கைகளை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு தொண்டனும் பெரியார்...அப்புறம் என்ன பெரியார் காலம் தான் வாழ்ந்திட்டிருக்கோமில்லே...
இல்லயென்டால் எப்படி...?
இங்க சிலை வைக்க கூடாது அங்க சிலை வைக்க கூடாது...என்று எவனும் உத்தரவு போட முடியாது...மனிதனுக்கு எங்க வேண்டுமானாலும் சிலை வைக்கலாம். இது எங்க நாடு...பெரியாருக்கு சிலை வைக்க கூடாது என்று நீ என்ன சொல்றது...பிள்ளையார் சிலையையும் நாங்க தான் உருவாக்கினோம் பெரியார் சிலையையும் நாங்க தான் உருவாக்கினோம். உட்டா பெரியாரிஸ்டுக வீடு கூட இருக்கக்கூடாது என்ற நாட்டாமை வரும் போலிருக்குதே...அப்புறம் ஆப்பு தான் எல்லாத்துக்கும்.
Post a Comment