ஓர் சம்பாஷணை
எதார்த்த வாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது
எதார்த்தவாதி : ஐயா! தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது.
போதகர் : பழய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீஷர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.
எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள் தானே?
போதகர் : இல்லை சார்; எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படுகிறவர்கள்தான்.
எதா : நல்லது, அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே ?
போத : ஆம், வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராட்சியாளர் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்.
எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தே தான் உற்பத்தி ஆகியிருக்கலாம்.
போத : அப்படியானால் (ஆபிராம்) ஆப்பிரகாமைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தென்ன?
எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசி தானே?
போத : ஆம் வாஸ்தவந்தான். ஆதியாகமம் 2-ம் அதிகாரம் 7 ம் வசனத் தில் (கடவுளே) தேவனே... அவன் ஒரு தீர்க்கதரிசி... என்பதாய்ச் சொல்லியிருக்கிறார்.
எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ம் அதிகாரம் 11ம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்..... பொருள்படப் பேசியதைத் தாங்கள் வாசித்ததுண்டா?
போத : அ ஆ ஆம் வாசித்ததுண்டு. ஆனால், அவன் மனைவி ச.ஆ. சாராள் அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.
எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?
போத : சார் அது பழைய ஏர்ப்பாட்டில் உள்ளது. புதிய ஏர்ப்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எதா : சரி ஐயா, நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.
போத: தெய்வமில்லாத காலமிது என்பதாய் முனு முனுத்துக் கொண்டு நழுவி விடுகிறார் .
எதா : பைபிள் காலத்தில் தெய்வப்பயமில்லாத இடமிருந்தது. இப்பொழுது காலம் வந்துவிட்டது என்பது உங்கள் அநுபவம். ஆனால் எங்க ளுக்குத் தெய்வ கவலை யில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.
-------------------------"குடி அரசு" - 05.04.1931 இல் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட உரையாடல்
0 comments:
Post a Comment