Search This Blog

6.9.10

காலித்தனங்கள் எப்பொழுது அடங்கும்?



தமிழ்நாடு : பார்ப்பான், சைவன் - பார்ப்பனரல்லாதவர்கள் போராட்டம்

கேரளா : நாயர் - ஈழவர் போராட்டம்

ஆந்திரா : பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார், வெலமா _ கம்மா போராட்டம்

கன்னடம் : பார்ப்பான் _ லிங்காயத்து, ஒக்கிலிகர் _ குரும்பர் போராட்டம்

பம்பாய் : மராட்டி, குஜராத்தி, மார்வாரி, பார்சி முதலிய போராட்டம்

பஞ்சாப் : சீக்கியர் _ பஞ்சாபிகள் போராட்டம்

வங்காளம் : பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் போராட்டம்

அஸ்ஸாம் : அஸ்ஸாமி _ வங்காளி போராட்டம்

மத்தியப் பிரதேசம் : வங்காளி _ பீகாரி போராட்டம்

உத்தரப்பிரதேசம் : காஷ்மீரி பார்ப்பனர் _ உத்தரப் பிரதேசப் பார்ப்பனர் _ உள்நாட்டுப் பார்ப்பனரல்லாதார் போராட்டம் மற்றும் இதுபோல பல என்பதோடு முஸ்லிம் _ முஸ்லிம் அல்லாதார்; கிறிஸ்தவர் போராட்டம் மற்றும், பார்ப்பனரால் தூண்டிவிடப்படும் சில ஜாதிகள் தொல்லை இப்படியாக, கொள்கை காரணமில்லாமல், ஜாதி காரணமாகவே கலவரம், காலித்தனங்கள் உண்டாகின்றன.

இப்போது எல்லா ஜாதிக்கும் படிப்பு ஏற்படுத்தப்பட்டபடியால், இனி எல்லா ஜாதி, பெரு வகுப்புகள், எல்லா மதங்களுக்கும், பிரிவினை விகிதம் ஏற்படுத்திவிட்டால், காலித்தனங்கள் கண்டிப்பாய் அடங்கிவிடும்.

------------------தந்தை பெரியார் (விடுதலை 7.11.1966)

0 comments: