Search This Blog

9.9.10

விநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து - 1



விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்தி களும் கொண்டது என்பதை, அறிஞர்கள் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வு களை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம்.

விநாயகர் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப் படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத்தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத் தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

ஞானசம்பந்தரும், பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று பாடுகிறார்.

(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஞான விநாயகர் என்னும் கட்டுரையில், பக்கம் 20)

பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல் லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார்.

உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்று வித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகிறான் என்ற கட்டுரையில் பக்கம் 17)

1 comments:

சுதாகர் said...

Why don't you post about Ramzan? If you say there is no god, you have criticize about all religions.