திருநீறு! - 2
நெற்றியைக் குறுக்காக, நீளவாட்டத்தில் பிரம்மா படைத்தது எதற்குத் தெரியுமா? இதுபற்றியெல்லாம் இந்த விஞ்ஞான ஆராய்ச்சி ஆசாமிகளுக்கு என்ன தெரியும்?
...தேவர்கள் முதலிய யாவரும் விபூதியைத் தரித்து மோட்சம் அடைய வேண்டும் என்ற கருத்தில் தான் அப்படி படைத்திருக்கிறான்.
சொல்லுவது சுப்பனோ, குப்பனோ அல்ல, அல்லவே அல்ல!
கூர்மபுராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது? ஸ்ருஷ்டா ஸ்ருஸ்டி சாஹர்தி புண்ட ரஸ்யாஸ் த தாம, ஸஸர்ஜ சரிலாடம் ஹித்ரியத் கோர்த்துவம் நவர்த்துவம், ததாபி ரவை மூர்க்கா நகுர் வர்தித்ரி புண்டரகம்
அதாவது பிர்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூற, அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வ ஜனங்களின் நெற்றி களையும் குறுக்கே ஆகர்தி யாகப் படைத்தனர் - நெடுமையாக வேனும், வட்டமாகவேனும் படைத் திலர். அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல், தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குவதால் அறியலாம்.
ஆக, நெற்றி இப்படி படைக்கப்பட்டுள்ளதே திருநீறு அணிவதற்காம்.
சரி, இவர்கள் கூறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களில் இன்னொரு பிரிவினர் திருநீறு பூசிக் கொள்ளாமல், நாமம் தீட்டிக் கொள் கிறார்களே - அவர்கள் எல்லாம் பிரம்மாவின் கட்டளையை நிராகரிக்கக் கூடியவர்கள்தானா? சிலர் சந்தனம் மட்டும் இட்டுக் கொள்கிறார்களே - அவர் களும் கூர்மப் புராண சங்கதியைக் குப்பைக் கூடை யில் தூக்கி எறியக் கூடியவர்கள்தானா?
கிறித்தவர்களும், முசுலிம்களும், பகுத்தறிவாளர்களும் கோலம், ஓவியம் போட்டுக் கொள்ளாமல், நெற்றியைச் சுத்தமாக வைத்துக்கொண்டு இருக் கிறார்களே - அவர்கள் எல்லாம் பிரம்மாவையே சீட்டுக் கிழிப்பவர்கள்தானா?
இதற்கெல்லாம் எங்கே பதில் சொல்லப் போகிறார் கள்? இப்படி எல்லாம் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்து தான், அறிவார்ந்த முறை யில் பதில் சொல்ல வக்கில் லாமல், அச்சுறுத்தும் ஒரு வேலையில் இறங்கியிருக்கின்றனர்.
திருநீறு அணியாத திருடர்களே என்று விளிக்கப்படுகிறது. விலக்ஷ்ணானந்த சுவாமிகள் என்பார் இதற்காகவே செய்யுட்தொகை ஒன்றையும் எழுதியுள்ளார்.
வாயால், மனத்தால் அறியாத வாணாளாகும் திருநீற்றைப், பேயே என மனம் பதைத்துப் பிதற்று கின்ற பேதையரே! நாயாக, நரியாக, நண்டாக, வீயா திருக்கும் திருநீற்றை விதமாய் அணிய வேண்டுவனே!
இப்படியெல்லாம் சாபம் விடுகிறார்கள் இந்தச் சாம்பல் அணியும் பேர்வழிகள்!
----------------- மயிலாடன் அவர்கள் 16-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment