Search This Blog

17.10.12

நடுநிலையாளர்களே! எம்.ஜி.ஆர். சீடர்களே, சிந்தியுங்கள்!ஒட்டுமொத்த தமிழர்களே கிளர்ந்தெழுவீர்!


தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்க்கும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை வேண்டாம் என்று கூறும் தமிழக முதலமைச்சர் வீண் அவப் பெயரைச் சுமக்கிறார்; கட்சிக் கண்ணோட்டமின்றி கிளர்ந்தெழுக தமிழர்களே என்று வேண்டுகோள் விடுத்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

கடந்த 150 ஆண்டுகாலமாய், தமிழ்நாடும், தமிழக மக்களும் நிறைவேற வேண்டும் இந்த சேது கால்வாய்த் திட்டம் என்று விழைந்த ஒரு திட்டம்; பிரிட்டிஷ் நிபுணர்கள் முதல் நீதிக்கட்சியின் நல் முத்தான சர்.ஏ. இராமசாமி (முதலியார்) குழுவரை ஆய்வு அறிக்கைகள் தந்து நடைமுறைக்கு வரவேண்டும் என்று ஏங்கிய ஒரு திட்டம், தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங்களை 2004 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளால் உருவாக்கப்பட்ட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு காங்கிரஸ் - தி.மு.க. கூட்டு அமைச்சரவையில்தான் நனவாகியது; நடைமுறையில் எடுத்துக்கொண்டு மதுரையில் கூட்டணிக் கட்சிகள் - இடதுசாரி கட்சிகள், பிரதமர் (UPA) அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி உள்பட பலரும் கலந்துகொண்டு 2.7.2005 இல் தொடக்க விழா நடைபெற்றது.


சேது சமுத்திரத் திட்டம் எப்படி பயன் அளிக்கும்? என்பதை 2001 மே 10 இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு. கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

....2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கிய அத்திட்டம் முழுமையாக முடிந்தால் தமிழ்நாட்டின் வளம் மட்டுமல்ல; இந்தியா மட்டுமல்ல, தென்கிழக்காசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் வாழும் நாடுகள் அனைத்தும் பயன் அடையும்; வாணிபமும், தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயண தூரம் வெகுவாகக் குறைவதால் எரிபொருளும், பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும்; குறிப்பாக, இராமநாதபுரம் போன்ற மிக மிகப் பிற்படுத்தப்பட்ட தமிழக தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்புப் பெருகும்; தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும்; சுற்றுலா வளர்ச்சி அடையும்.
இன்ன பிற நன்மைகளை தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை கழக அரசு (அ.தி.முக. அரசு) வெகுவாக உணர்ந்திருக்கிறது. நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, வேண்டிய நிதியைத் தேடி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்.

இதில் எது இப்போது மாறிவிடும்? மாறிவிட்டது?

இப்பொழுது இத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தலைகீழாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்குக் கூறும் முக்கிய காரணம் என்ன?
இராமன் பாலம் உடைபடுகிறது என்று கூறி வழக்குத் தொடர்வது அறிவியல் கண்ணோட்டத்திலும் பெரியார், அண்ணா கருத்தியல் அடிப்படையிலும் சரியானதுதானா?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் 2009-லேயே மூன்றாண்டுகளுக்கு முன்பே முடிந்து, கப்பல்கள் ஓடியிருக்கவேண்டிய கால்வாயின் வேலைத் திட்டப் பணிகள் முடங்கின. சுமார் ரூ.2000 கோடிக்குமேல் - மக்கள் வரிப் பணம் செலவாகியுள்ளது. முடிக்க இன்னும் 12 கிலோ மீட்டர் தூரம்தான் பாக்கியுள்ளது.


இதற்கிடையில், எந்தவித அறிவியல், புவியியல் ஆதாரமும் இல்லாது, வெற்று மத நம்பிக்கையை மட்டுமே கொண்ட மணல் திட்டுக்கள் இராமன் கட்டிய பாலம் எனப் பொருந்தாத காரணம் காட்டுவதும், கூடாது என்பதும் சரியா?  (உண்மை அரசியல் காரணம் இந்தப் பெருமை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, குறிப்பாக தி.மு.க.வுக்கு வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர வேறில்லை) பச்சோரி தலைமையில் நிபுணர் குழு மூன்றாண்டுகள் எடுத்து அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் தந்துவிட்டதே! இனியும் என்ன பிரச்சினை?

அந்த அறிக்கையில், தற்போது பணிகள் நடைபெற்று முடிவடையும் ஆறாம் வழித்தடத்தைத் தவிர வேறு வழித்தடம் சாத்தியமில்லை; மீன் பிடிப்பு பாதிக்கப்படாமல், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாமல் செய்ய இந்த ஆறாம் வழித்தடம்தான் உகந்தது என்று கூறிவிட்டது.

உடனடியாக மத்திய அமைச்சரவை கூடி, இதனை ஏற்று பணி தொடரவேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும்!
இந்நிலையில் இராமன் பாலம் என்று திடீரென்று முன்பு சொல்லாத நிலைப்பாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திடீரென்று எடுப்பதும், அதையே தமிழக அரசு நிலைப்பாடுபோல் செய்திகள் வருவதும் முற்றிலும் மக்கள் விரோதம்; சட்ட விரோதம்; நியாய விரோதமாகும்!


மேற்காட்டிய அதே 2001 அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதென்ன?

இதோ (பக்கம் 84)

...இத்திட்டத்தின்படி இராமேஸ்வரத்திற்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்த கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று கூறியுள்ளார்களே?


மக்கள் பணம் இவ்வளவு 2000 கோடி ரூபாய்களைச் செலவழித்த திட்டத்தை - இன்னும் குறைவான தூரமே எஞ்சியிருக்கும் முடிக்கப்பட வேண்டிய திட்டத்தை, வெறும் கற்பனை இராமன் பாலம் காரணங்களைக் காட்டி, நிறுத்திட வேண்டுமென்றால், அதைவிட மிகப்பெரிய மக்கள் விரோதப் போக்கு, வேறு உண்டா?

இதுதான் எம்.ஜி.ஆர். அரசா?

தமிழர்களே, சிந்தியுங்கள்! கட்சி, ஜாதி, மதம் பார்க்காமல் - வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு எண்ணிப் பாருங்கள்!

அதுமட்டுமா?! அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆர். அரசு என்று கூறிடும் இக்கட்சியின் அதே தேர்தல் அறிக்கையின் 84 ஆம் பக்கத்தில், இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981 இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது.
இருப்பினும் திட்டத்தை நிறைவேற்றவேண்டிய மத்திய அரசு, இத்திட்டத்திற்கான உரிய கவனத்தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியது.

அதே கனவு - விழைவு- விருப்பம் நனவாகி, நிறைவேறும்போது இராமனைக் காட்டி ரத்து செய்யவேண்டும் என்று கூறுவது எம்.ஜி.ஆருக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா?


நடுநிலையாளர்களே! எம்.ஜி.ஆர். சீடர்களே, சிந்தியுங்கள்!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒருவரே, சேது சமுத்திரத் திட்டம் முடியுந் தறுவாயில் இப்படி முட்டுக்கட்டை போட்டு நிறுத்தினார் என்ற அவப்பெயரை காலமெல்லாம் அம்மையார் சுமக்கப் போகிறாரா?

பா.ஜ.க.கூட, வழித்தடம் மாற்றம்தான் கேட்டதே தவிர, திட்டமே கூடாது என்று கூறவில்லை; அவர்களால் கூறவும் முடியாது. காரணம், அந்த வழித்தடத்தைத் தெரிவு செய்த ஆட்சியே அவர்கள் ஆட்சி. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியோ, தி.மு.க.வோ அல்ல!

ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கலைஞர் விரிவாக நேற்று அறிக்கை விடுத்துள்ளார். இன்று மார்க்சிஸ்ட் கட்சியும், பா.ம.க. தலைவரும் இதனைக் கண்டித்து குரல் எழுப்பியுள்ளதை வரவேற்கிறோம்.

எனவே, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரண்டு குரல் கொடுத்து, தமிழன் கால்வாய் என்ற சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்க ஓர் அணியில் நிற்க வாருங்கள்! கிளர்ந்தெழுங்கள்!!

இதில் அரசியல் கண்ணோட்டம் வேண்டாம்!

தமிழக வளர்ச்சி - முன்னேற்றப் பார்வையே நம்மை வழி நடத்திச் செல்லவேண்டும்.

21 comments:

தமிழ் ஓவியா said...


விரைவில் வேண்டும் தீர்ப்பு!


சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட - தமிழர்களின் நெடுங் காலத்திய கனவுத் திட்டமாகும் - குறிப்பாக திராவிடர் இயக்கம் சார்ந்த அமைப்புகள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்த திட்டம். இதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது.

எத்தனை எத்தனை மாநாட்டுத் தீர்மானங்கள், செயற்குழு, பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள், பேரணி முழக்கங்கள் - இவற்றைப் பட்டியலிட்டால் நீண்டு போய்க் கொண்டே இருக்கும்.

2004-2009 ஆம் காலத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் அதற்கு விடிவு காலம் பிறந்தது; தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்தத் திட்டம் முட்டுக்கட்டையின்றித் தொடரப்பட்டு இருந்தால் இந்நேரம் கப்பல்கள் இந்தப் பாட்டை வழியே பயணித்துக் கொண்டு இருந்திருக்கும். பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை வாய்ப்புக் கிட்டியிருக்கும். தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாய்ச்சலை செய்திருக்கும். சிறிய சிறிய துறைமுகங்கள் வளர்ச்சி பெற்று இருக்கும்.

இப்பொழுது இது தடைபட்டு நிற்கிறது. இதற்கு யார் காரணமாக இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களால் மன்னிக்கப்படவே மாட்டார்கள் என்பது மட்டும் கல்லின்மேல் எழுத்தாகும்.

ஒரு காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை வரவேற்றும், விரைந்து திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்றும் தேர்தல் அறிக்கைகளிலேயே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்த அ.இ.அ.தி.மு.க. இன்று இத்திட்டமே தேவையில்லை என்று கருதும் அளவுக்குச் சென்றிருப்பதன் பின்னணி என்ன?

இத்திட்டம் செயல்பட்டால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நல்ல பெயர் ஏற்பட்டுவிடும்; அதிலும் குறிப்பாக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அந்தத் துறை சார்ந்த அமைச்சராக இருந்ததால், தி.மு.க. அரசியல் இலாபத்தை அபகரித்துவிடும் என்ற அரசியல் குறுகிய நோக்கமும் இதில் இருக்கிறது என்பதை எவராலும் மறுக்கவே முடியாது. இப்படித்தான் அரசியல்வாதிகள் கெட்டபெயர் சம்பாதிக்கின்றனர்!

இரண்டாவதாக இராமன் பாலம் என்ற ஒரு குறுக்குசால் கொண்டு வந்து திணிக்கப்பட்டுள்ளது.

ராமனை தங்கள் கதாநாயகனாகக் கொண்ட இந்துத்துவா அமைப்புகள் இதனை முன்னிலைப் படுத்துவதையும், சு.சாமி போன்ற வக்கிரப் பார்ப்பனர்கள் பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புவதும் புரிந்து கொள்ளக் கூடியவையாகும்.

அண்ணா பெயரையும், திராவிட இனப் பெயரையும் தம் கட்சியில் முன்னொட்டாக வைத்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளர், ராமன் பாலம், அது தகர்க்கப்படக் கூடாது; தேசிய நினைவுச் சின்னமாகக் காப்பாற்றப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கூறி இருப்பது அ.இ.அ.தி.மு.க.வின் உண்மை முகத்தை வெளிக்குக் கொண்டு வந்துவிட்டது. கட்சியின் 41 ஆம் ஆண்டு விழா நடத்தும் நிலையில், இந்தக் கறை!

திராவிட இயக்கத்தில் நடைபெற்ற அந்நிய ஊடுருவலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ராமன் என்ற கற்பனைப் பாத்திரம்பற்றி திராவிட இயக்கத் துக்கும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோருக்கும் திட்டவட்டமான, தெளிவான கருத்து அம்சம் உண்டு.

ஒரு பக்கத்தில் திராவிட பெயரையும், பெரியார், அண்ணா பெயர்களையும் உச்சரித்துக்கொண்டு, கொடியில் அண்ணா உருவத்தையும் பொறித்துக் கொண்டு இவர்களின் கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக சிந்திப்பதும், செயல்படுவதும் எந்த வகையில் சரியானது? அடிப்படைக்கே வேட்டு வைக்கும் மிக மோசமான செயல்பாடு அல்லவா இது!

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கு இருக்கக் கூடிய தனிப்பட்ட மூட நம்பிக்கைகள் அக்கட்சியின் கொள்கைகளாக, கோட்பாடுகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதுதானே உண்மை. இதுபற்றி அக்கட்சியில் வினா தொடுக்கக் கூடிய ஒரே ஒரு கொள்கைவாதிகூட இல்லாதுபோனது கெட்ட வாய்ப்பும், பரிதாபமுமே!

கடல் பகுதிகளிலும், உலகில் பல பகுதிகளிலும் இருக்கக் கூடியது மணல் திட்டாகும். அங்கெல்லாம் யாரும் கடவுள் பெயர்களைச் சூட்டி சண்டித்தனம் செய்யவில்லை.

அறிவியலுக்கு முரணான ஒன்றை முன்னிறுத்துவது அசல் பிற்போக்குத்தனமாகும். 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் என்பவன் பாலம் கட்டினான் என்று நம்புபவர்கள் கற்காலச் சிந்தனைக்கு உரியவர்கள் என்றே அறிவியல் உலகம் எடை போடும். புராண, இதிகாசக் கற்பனைகளை, மக்கள் வளர்ச்சித் திட்டங்களை முடக்கப் பயன்படுத்துவதை ஒரு நீதிமன்றம் எப்படி கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.

ஆறாவது வழித்தடம் என்பது அறிவியல்பூர்வ மானது. நிபுணர் குழுவும் இதனை வலியுறுத்துகிறது. இதற்குமேல் யார் என்ன சொன்னால் என்ன? அறிவியல் பூர்வமாகத் தீர்ப்பு வழங்கப்படவேண்டியதுதானே! 17-10-2012

தமிழ் ஓவியா said...


கே.பி.எஸ்.


கே.பி.எஸ். என்று சொன் னாலே போதும் - அது அசல் தமிழச்சி கொடுமுடி கோகி லமான கே.பி.சுந்தராம் பாளைத்தான் குறிக்கும். அவருக்கு இப்பொழுது பல இடங்களிலும் பிறந்த நாள் விழா (114) எடுக்கப்பட்டு வருகிறது மகிழ்ச்சி!

கிட்டப்பாதான் மிகச் சிறந்த பாடகர் என்று தம் பட்டம் அடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில், தம் வெண்கல நாதக் குரலால் தமிழ் மண்ணை கிடுகிடுக்க வைத்தவர் நமது சுந்தராம் பாள் அவர்கள்.

இலங்கைத் தீவில் கொழும்பில் கே.பி.எஸ். அவர்கள் நாடகத்தை நடத் திக்கொண்டு இருந்தார். அந்த நாடகத்தில் இணைந்து நடிக்கச் சென்றார் எஸ்.ஜி. கிட்டப்பா - பிறகு வாழ்விலும் இருவரும் இணைந்தனர்.

கிட்டப்பா அவர்கள் பாடும் பொழுது அவரது தம்பி எஸ்.ஜி. காசி ஆர்மோனியம் வாசிப்பார்; கே.பி.எஸ். பாடும் பொழுதோ அதே காசி, வய லின் வாசிப்பாராம். வயலின் வாசிப்பவர்கள் மேல்நாட்டில் நின்று கொண்டுதான் வாசிப் பார்கள். இந்தியாவில் அவர் களை உட்கார்ந்து வாசிக்கு மாறு செய்தவர் கே.பி.எஸ். அவர்களே!

ஒரு கூடுதலான செய்தி - கே.பி.எஸ். அவர்கள் பாடிக் கொண்டிருந்தார் என்றாலும் தொண்டை கட்டி பாட முடி யாத நிலை எப்பொழுதுமே ஏற்பட்டது கிடையாதாம்.

பல்லவி முடித்த பிறகு தொகையறா பாடும்பொழுது அவரின் பாட்டைக் கேட்டு சொக்கிப் போய், உணர்ச்சி வயப்பட்டு, அழுதவர்கள் எல் லாம் உண்டு என்று சொல் கிறார் இசை விமர்சனத் துக்குப் பெயர் போன சுப்புடு.

இவ்வளவு பிரபலமான கே.பி.எஸ். அவர்கள் வானொ லியில் பாடியதே கிடையாது என்ற குறைபாடு இருந்தது.

என்ன காரணம்? அவரை வானொலி நிலையத்தார் அழைக்கவில்லையா? அங்கு செல்ல நேரம் இல்லையா?

அதெல்லாம் ஒரு மண் ணாங்கட்டியும் கிடையாது - பிறகு வேறு என்ன காரணம்?

கே.பி.எஸ். - அவர்கள் சென்னை வானொலி நிலை யத்துக்கு அழைக்கப்பட்டு பாடச் சென்றபோது, அதன் இயக்குநரான பார்ப்பனர் ஒருவர் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார். தன்னை கே.பி.எஸ். அறி முகப்படுத்திக் கொண்ட போதும் அந்தப் பார்ப்பன இயக்குநர் சட்டை செய்ய வில்லை.

அப்பொழுது வெடுக் கென்று கே.பி.சுந்தரம்பாள், டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி இங்கு வந்தால் இப்படி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பீர் களா? சுயமரியாதை உணர் வோடு கேட்டார் - வெளி யேறினார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கே.பி.எஸ்., வானொலி நிலையத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை.

மீண்டும் அவரை வானொலி நிலையத்திற்கு அழைத்துப் பாட வைத்தவர் நாதசுவரச் சக்கரவர்த்தி நாமகிரிப்பேட்டை கிருஷ் ணன் அவர்களின் மருமகன் வானொலி நடராசன் அவர் களேயாவார்.

- மயிலாடன்

குறிப்பு: 22.1.2002 அன்று தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் கே.பி.எஸ். உருவப்படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார் வானொலி முன்னாள் இயக் குநர் நடராசன்.17-10-2012

தமிழ் ஓவியா said...


நடத்தை கெட்டவர் நித்தியானந்தா! நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு


மதுரை, செப். 17- பல் வேறு வழக்குகளில் சிக்கி யுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல் லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக் கப்பட்டது சட்ட விரோ தமானது, அதற்கு அவ ருக்குத் தகுதி இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மதுரை உயர்நீதிமன் றத்தில் நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நிய மிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் பானுமதி, சுப் பையா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு நித்தியானந்தா விவகா ரத்தில் பெருத்த அமைதி காத்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித் தனர். இத்தனை கால மாக அமைதி காக்காமல் அரசு உரிய நடவடிக்கை களை எடுத்திருந்தால், இத்தனை வழக்குகள் நீதி மன்றத்திற்கு வந்திருக் காது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.

மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நித் தியானந்தாவை நியமிக் கும் முடிவை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள் ளைகள் அமைப்பு சார் பில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த போதுதான் இவ்வாறு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தாக் கல் செய்த பதில் மனு வில், மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித் திக்கு தகுதி இல்லை. ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடி யும். ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர். ஏரா ளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியா னந்தா நடத்தை சரி இல் லாதவர். எந்த அமைப் புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை. மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தியானந்தா துளியும் தகுதி இல்லாத வர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.பெரியார்- (விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


சென்னையில் பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவுடன் தமிழர் தலைவர் சந்திப்பு - ஒரு பார்வை


- நீட்சே

சமுதாய மேம்பாட்டுப் பணி என்பது பல வகைப்படும். சமூக சேவை, சமூக சீர்திருத்தப் பணி, சமூகப் புரட்சி என நோக்கத்தில், செயல்படுத்த மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கையில், முழு மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் என பல தரப்பட்டவைகளாக அடங்கும். சமூக

சேவை - சீர்திருத்தம்

சமூக சேவை என்பது ஒப்பீட்டளவில் எளிதானது. சேவை செய்பவருக்கும் அதிக அளவில் இன்னல் இராது. சேவையினைப் பெறுபவரும் மகிழ்வுடன் பெற்றுக் கொள்ளும் நிலை இருக்கும். சமூக சீர்திருத்தம் என்பது சமூக சேவை போன்று அல்லாமல் சற்றுக் கடினமான பணி ஆகும். சீர்திருத்தம் பற்றிப் பேசுபவருக்கு சமுதாயத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பும்; சீர்திருத்தம் நடைமுறைப்பட மக்கள் மனதில் மாற்றங்கள்

ஏற்பட வேண்டும். சமூகப் புரட்சி

சமூகப் புரட்சி என்பது அடுத்த கட்டம். சமுதாய ஆளுமைகளைப் புரட்டிப்போட்டு புத்தாக்கம் காண முயலும் முனைப்பாகும். பெரும்பாலான சமூகப் புரட்சிகள் ஆயுதம் தாங்கித்தான் நடைபெற்றுள்ளன. புரட்சிக்கு முந்தைய நிலையில் அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்ட மக்கள் உணர்ச்சி வயப்பட்டு, எழுச்சி கொண்ட நிலையில் உருவாகும் தலைமை புரட்சியை எடுத்துச் செல்லும். புரட்சி முடிந்த காலக்கட்டத்தில் மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைகள் தொடரும். புரட்சியின் ஆரம்ப நிலை யில், கருத்தாக்க அடிப்படையில் மக்களைக் கொண்டு செல்லாத எந்தவொரு புரட்சித் தலைமையும், புரட்சி முடிந்தபின்பு வெற்றிகரமான செயல் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாத நிலைமைகளை நேர்கொள்ள வேண்டி வரும். செயல் நடவடிக்கைகள் தாமதப்பட்டு, திசைமாறும் பொழுது புரட்சியின் நோக்கமே பழுதுபட்டுவிடும். இத்தகைய போக்குகள் மானுட வரலாற்றில் பல்வேறு நாடுகளில் நிலவி வந்த நிலவரங்களாகும். சில இடங்களில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளாகும்.

உலகில் எங்கும் இல்லாத சமூக அடக்குமுறை

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் மனிதனின் அடிப்படை உணர்வுகள், உரிமைகள் மறுக்கப்பட்டு, கல்வி கற்கும் நிலை திரையிடப்பட்டு பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் மனித இனம் அடக்குமுறைக்கு ஆளாகியே வந்துள்ளது. வெறும் சமூக சேவையின் மூலம் மாற்றம் பெறும் சூழல்கள் அல்ல இவை.

தமிழ் ஓவியா said...

சீர்திருத்தம் பேசி முழுப் பயனையும் அடைந்து விட முடியாது. புரட்சிக்கான சூழல் முழுமையாக இருந் தாலும், புரட்சியை நடத்திவிடவும் முடியாது. காரணம் அடக்குமுறை என்பது கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் தொடருகிறது. அடக்கு முறை, சமூக அடிமைத்தனம், கடவுளின் விருப்பம் என மூளை விலங்கால் சிறையிடப்பட்ட நிலைமைகள் - உலகின் வேறெந்தப் பகுதியில் இல்லாத தனித்துவ அடிமைத் தன்மைகள் இந்த மண்ணில் நிலவி வந்தன. இதனைக் களைய அவ்வப்போது சீர்திருத்தவாதிகள் தோன்றி சிறு சிறு வெற்றிகளைக் கண்டார்கள். சமூகத்தில் மாற்றங்கள் சிறிதளவு ஏற்பட்டன.

தந்தை பெரியாரின் அரும்பணி

ஆனால் சமூகத்தின் உண்மையான நிலைமையினை உணர்ந்து, அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு பயன் கருதாது, வெற்றிக் காலம் விரைந்து நோக்காது, சமுதாய மேம்பாட்டுற்கு பாடுபட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார். இந்த மண்ணின் சூழலுக்கு, ஆயுதப் புரட்சி சரிப்பட்டு வராது. அறிவுப் புரட்சியே நீடித்த நிலைத்த விளைவுகளை அளிக்கவல்லது என்று கருதி கருமமே கண்ணாக எந்தவித பிரதிபலன், எதிர்பார்ப்பு மின்றி சமூகப் பணி ஆற்றியவர் தந்தை பெரியார்.

சமூகச் சீர்திருத்தம், சமூகப் புரட்சி எனும் சமூக மேம்பாட்டு உள்ளீடுகளைக் கைக்கொண்டு மக்களைத் தட்டி எழுப்பி, அரசியல் ஆளும் நிலையில் யார் இருந் தாலும் அவர்களை சமூக மாற்றம் பற்றிய அக்கறையுடன் கூடிய செயல்பாட்டினை மேற்கொள்ள வைத்தார். ஆள்பவர்கள் அன்னியராக இருக்கட்டும், உள்நாட்டு அடக்கு முறையாளராக இருக்கட்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் பொறுப்பில் உள்ள தலைவர் களாகட்டும் அத்தனை பேரையும் தனது தனித்துவ சிந்தனையின் பால் நாட்டம் கொள்ள வைத்து, ஆயுதம் இல்லாத சமூகப் புரட்சிக்கு வித்திட்டு வழி காட்டியுள்ளார் தந்தை பெரியார்.

தமிழர் தலைவரின் தொடர் பணி

அமைப்பு ரீதியாக செயல்பட சமூக சீர்திருத்தம், சமூகப் புரட்சிக்கான அணுகுமுறைகளை வடித்துக் கொடுத்த தந்தை பெரியாரின் கொள்கை, அணுகுமுறை வார்ப்பாக தொடர்ந்து சமூக மேம்பாட்டு பணிகளை காலச் சூழலுக்கு ஏற்றவாறு ஆற்றி வருகிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். சமூக புரட்சியின் ஒரு செயல்பாட்டுத் தளம் சமூக நீதித்தளம் ஆகும்; கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆண்டாண்டு காலமாக உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட மக்களுக்கு - நீதி வழங்கும் வழிமுறையாகும். சமூக நீதித்தளத்தின் தன்மை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலம், அடுத்து, அரசியல் விடுதலை பெற்று இந்நாட்டவர் ஆளும் காலம் என சூழலுக்கு ஏற்றவாறு சமூக நீதித் தளச் செயல்பாடும் மாற்றம் பெற்று வீறு கொள்ளவேண்டியது அவசியம்.

இந்த அவசியத்தின் தன்மையை தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்திட்டமாகக் கொண்டு செயல் படுவது பெரியார் இயக்கத்தின் தனிச் சிறப்பாகும். பெரியார் இயக்கத்தின் இன்றைய தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது தெளிவான சிந்தனை, கூர்மதி, அறிவார்ந்த அணுகுமுறை, உடனடியாக மக்கள் ஆதரவு எனும் ஜனரஞ்சக எதிர்பார்ப்பின்றி பொறுமை காட்டி, காலம் கனிந்து வரும் வரை காத்திருந்து கடமை ஆற்றிடும் போக்கு ஆகிய தலைமைப் பண்புகளால் சமூக நீதிப் பயணம் அடக்குமுறையினர் சூழ்ச்சி களுக்கு பலியாகி விடாமல் நடைபோட முடிகிறது. இத்தகைய ஆழ்ந்த, சீரிய சமூக நீதிப் பயண வெற்றியின் உறுதிப்பாட்டை அண்மையில் சென்னையில் காண முடிந்தது. சமூக நீதிப் போரில் பயிற்சி பெற்ற வீரர்கள், அரசியல் கட்சித் தளைகளையும் தாண்டி கொள்கை பூர்வமாக செயல்பட்ட கண்கொள்ளா காட்சியினை - அப்படிப்பட்ட சூழல் உருவாகிட உழைத்த தமிழர் தலைவரின் பார்வையில், பாராட்டுதலில் காணமுடிந்தது, சமூக நீதி வரலாற்றில் ஒரு வலுவான முத்திரை பதித்திடும் நிகழ்வாகும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முதல் முறை சென்னை வருகை

சமூக நீதித் தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பிரிவினராகிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம் பாட்டுக்கான பணிகளில் திராவிடர் கழகத்தின் பங்கு அளப்பரியது. பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காக இதர பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு அமைப்புகளுடன் திராவிடர் கழகமும் எடுத்துக் கொண்ட இடைவிடாத கோரிக்கை, சீரிய முயற்சிகளின் விளைவாக பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான நாடாளுமன்றக் குழு (Parlia mentary Committee on the Welfare of Other Backward Classes) அண்மையில் அரசால் அமைக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி அமைக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான நாடாளுமன்ற குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்அங்கம் வகிக்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுத்துறை நிறுவனங்கள், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு அமைப் பினர் மற்றும் பொது மக்களைச் சந்தித்து பிற் படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான அரசு உருவாக்கிய ஆணைகள், சட்ட விதிகள் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து முழுமையான மேம்பாட்டுக்கான ஆலோசனைகளைப் பெற்று அரசின் பார்வைக்கு கொண்டு சென்று ஆக்கம் கண்டு வருகின்றனர். அத்தகைய பணியின் ஒரு கட்டமாக முதல் முறையாக நாடாளுமன்றக் குழுவினர் சென்னைக்கு வருகை தந்தனர். சென்னையில் கிண்டி - லேமெரிடியன் விடுதியில் நாடாளுமன்ற குழுவினர் உரியவர்களைச் சந்தித்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குழுவினருடன் சந்திப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழர் தலைவர் கி.வீரமணி 29.9.2012 அன்று பிற்பகலில் சந்தித்து, அனைத்திந்திய அளவில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம், சமூக நீதித்தளத்தில் சம வாய்ப்பு பற்றிய திராவிடர் கழகத்தின் பரிந்துரைகளை குறிப்பாணையாக (Memorandum) வழங்கினார். குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளைப் பற்றிச் சுருக்கமாக உறுப்பினர்களுக்கு விளக்க உரையாற்றினார். தமிழர் தலைவர் கி.வீரமணி யின் விளக்க உரையினை மிகுந்த கவனத்துடன் குழுவில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.

குழுவினரைச் சந்திக்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை கூட்டம் நடைபெற்ற மன்றத்திற்கு வெளியே வந்து குழுவின் உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் நேர்கொண்டு வரவேற்று அழைத்துச் சென்றார்.

சந்திப்பு அல்ல; சமூகநீதிப் போராளிகளின் சங்கமம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மன்றத் தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நுழைந்தவுடன் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ‘Welcome Veeramani ji’ என குழுவினை வழிநடத்திய அனுமந்தராவ் அன்புடன் வரவேற்றார். குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சி களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி முயற்சி எடுத்த சமூக நீதிப் போராட்டங்களில் பங்கேற்றவர்களாகத் தான் இருந்தனர். சமூக நீதிக் கொள்கை அடிப்படையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் அன்பும், மரியாதையும் கொண்டவர்களாக இருந்தனர். தமிழர் தலைவரை முக மலர்ச்சியுடன் வரவேற்று அவர் கூறிய கருத்துகளை கவனமுடன் கேட்ட விதம் நாடாளுமன்ற உறுப்பினர் களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக நீதித் தளத்தில் தமிழர் தலைவரின் பங்களிப்பு, பணி யாற்றும் வல்லமை உணர்ந்தவர்களாக இருந்தது, தங்களைத் தமிழர் தலைவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையிலேயே வெளிப்பட்டது.
தமிழர் தலைவரின் சுருக்கமான விளக்க உரை

சந்திப்பிற்கான ஒதுக்கப்பட்ட நேரத்தில், திராவிடர் கழகத்தின் சார்பாக அளிக்கப்பட்ட குறிப்பாணையின் சுருக்கத்தை, அதன் சாராம்சத்தை உறுப்பினர்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளில் பிற்படுத்தப் பட்டோர் மேம்பாட்டுக்கான விதிமுறைகளில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள், சேர்க்கப் பட வேண்டிய விதிமுறைகள், அரசு உருவாக்கிய பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு ஆணைகளின் முழுமையான நடைமுறைக் கான ஆக்க பூர்வமான ஆலோசனைகள் என அடுத் தடுத்து மடை திறந்த வெள்ளம் போல எடுத்துரைத்த விதம் மன்றத்தில் உள்ளோரின் கவனத்தை ஈர்த்தது. நிறைவாக குறிப்பாணையில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறை களை நாடாளுமன்றத்திற்குள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மன்றத்தில் திராவிடர் கழகமும் பிற ஒத்த அமைப்பினரும் இணைந்து நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என தமிழர் தலைவர் குறிப்பிட்ட பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் சார்பாக அளிக்கப்பட்ட குறிப்பாணையின் நகல்கள் குழுவில் அங்கம் வகித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் சமூக நீதி பற்றி தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளி யீடுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற குழுவினரைச் சந்தித்து தமிழர் தலைவர் விடை பெற்ற பொழுது, சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற சந்திப்பாக இல்லாமல் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து விட்டு வருவது போன்ற உணர்வு நிலவியது. காரணம் குழுவில் அங்கம் வகித்த பெரும்பாலான உறுப்பினர்கள் சென்னை பெரியார் திடல் மேடையிலும், வடபுலத்தில், பிற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் சமூக நீதிப் போராட்டத்தில் இணைந்து நின்றவர்கள்; களத்தில் நின்று போராடியவர்கள் ஆவார்கள்.

நாடாளுமன்ற குழுவின் உறுப்பினரும், மூத்த நாடாளுமன்றவாதியுமான அனுமந்த்ராவ் அவர்கள் தமிழர் தலைவரை மன்றத்தின் வாயில்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

நாடாளுமன்ற குழுவினருடனான சந்திப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் மற்றும் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் இருந்தனர்.

சந்திப்பு நடைபெற்ற மன்றத்திற்கு வெளியே காத்திருத்த பொதுத்துறை நிறுவனங்கள், வங்கித் துறை, பிற பொதுத்துறை சார்ந்த பல்வேறு பிற்படுத்தப் பட்டோர் சங்கத்தின் பொறுப்பாளர்கள், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவேற்று மகிழ்ச்சியுடன் உரையாடி ஆலோசனை பெற்றனர்.

ஒட்டுமொத்தத்தில், சமூகநீதிக் களப் போராளிகள், கருத்தாக்கத் தலைவருடனான சங்கமித்த இந்த நிகழ்வு சமூகநீதிக் குடும்ப நிகழ்வாகவே இருந்தது. உணர்வுப் பூர்வமாகவும், கொள்கைப்பூர்வமாகவும், சமூகநீதிப் பயணம் எழுச்சிகொண்டு செயல்படும் வல்லமையினை பறைசாற்றுவதாக இருந்தது பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவினருடனான தமிழர் தலைவரின் சந்திப்பு.17-10-2012

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை-முழக்கங்கள் (22-10-2012)


(1) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

(3) வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வாழ்கவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
வருணாசிரமம் ஒழிகவே!

(5) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதி ஒழிக ஒழிகவே!

(6) ஒழிக ஒழிக ஒழிகவே
தீண்டாமை ஒழிக ஒழிகவே!

(7) ஒழிக ஒழிக தீண்டாமை ஒழிக!
கோயில் கருவறையில்
கோயில் கருவறையில்
ஒழிக ஒழிக தீண்டாமை ஒழிக!

(8) அர்ச்சகராக்கு, அர்ச்சகராக்கு
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு, அர்ச்சகர் ஆக்கு!

(9) பேதம் வேண்டாம், பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால்
பக்தியின் பெயரால்
பேதம் வேண்டாம், பேதம் வேண்டாம்!

(10) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா, அர்ச்சகனா?
தமிழன் மட்டும், தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(11) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழனெல்லாம்
தமிழனெல்லாம்
வீதியிலா, வீதியிலா?
குருக்கள் பார்ப்பான் மட்டும்
குருக்கள் பார்ப்பான் மட்டும்
கருவறையிலா? கருவறையிலா?

(12) தாழ்த்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்
அய்.ஏ.எஸ். ஆகலாம், அய்.ஏ.எஸ். ஆகலாம்
அர்ச்சகர் ஆகக்கூடாதா?
அர்ச்சகர் ஆக முடியாதா?

(13) பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர்
நீதிபதியாகலாம், நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆகக்கூடாதா?
அர்ச்சகர் ஆக முடியாதா?

(14) ஆண்டவன் அனைவருக்கும் பொதுவா?
ஆண்டவன் அனைவருக்கும் பொதுவா?
அப்படியானால், அப்படியானால்
பிராமணன் என்றும், சூத்திரனென்றும்
பிராமணன் என்றும் சூத்திரனென்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(15) தமிழக அரசே, தமிழக அரசே
விரைவுபடுத்து, விரைவுபடுத்து
உச்சநீதிமன்றத்தில்
உச்சநீதிமன்றத்தில்
நிலுவையில் இருக்கும்
நிலுவையில் இருக்கும்
அர்ச்சகர் வழக்கை
அர்ச்சகர் வழக்கை
விரைவுபடுத்து, விரைவுபடுத்து!

(16) மத்திய அரசே, மத்திய அரசே
திருத்து திருத்து
சட்டத்தைத் திருத்து
சட்டத்தைத் திருத்து
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது
என்பதற்குப் பதில்
என்பதற்குப் பதில்
ஜாதியை ஒழிக்க
ஜாதியை ஒழிக்க
திருத்து திருத்து
திருத்து திருத்து
சட்டத்தைத் திருத்து
சட்டத்தைத் திருத்து!

(17) தமிழக அரசே, தமிழக அரசே
அர்ச்சகர் பயிற்சி பெற்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற
தோழர்களை, தோழர்களை
பணியில் அமர்த்து, பணியில் அமர்த்து!

(18) ஒழிக ஒழிக ஜாதி ஒழிக!
வளர்க வளர்க சமத்துவம் வளர்க!

(19) வெல்லட்டும் வெல்லட்டும்
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் வெல்லட்டும்!

(20) வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!

(21) போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!

-திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...

எங்களுக்குத் தண்ணீரை மறுத்ததால் உங்களுக்கு மின்சாரத்தை மறுக்கிறோம்
இந்த முற்றுகையின் நோக்கம் இதுதான்! - நெய்வேலியில் தமிழர் தலைவர் உரை

நெய்வேலி, அக்.17- தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு தமிழ்நாடு ஏன் மின் சாரம் தரவேண்டும் என்பதை கூறி விளக்கவே இந்த நெய்வேலி முற்றுகைப் போராட்டம் என்றார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று முதல்நாள் (15.10.2012) நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொள்ள அணிவகுத்து நின்ற கருஞ்சட்டைத் தோழர்கள் மத்தியில் ஆற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்த நிலையில் மத்திய தொகுப்பு மூலமாக மின்சாரம். 2956 அதாவது, 3000 மெகாவாட் இங்கே வந்தால், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக, 1180 மெகாவாட், வெளிப்புற உதவியாக 305 மெகாவாட், மற்ற இதர இனங்களின் மூலமாக 2014 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டின் மின்தேவையோ 12,000 மெகாவாட்டாக இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு மின்வெட்டு வராது

இதில் 4000 மெகாவாட் முதல், 5000 மெகாவாட் வரை எப்பபொழுதும் நமக்கு பற்றாக்குறை நிலவக்கூடிய சூழல். இந்த 4000 த்திலிருந்து 5000 மெகாவாட் தட்டுப்பாடு இருக்கிறதே. இதை சரிப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும் பட்சத்தில், மழை பொழிந்தாலும், பொழியாவிட்டாலும்,காற்றடித்தாலும், அடிக்காவிட்டாலும் மின்சாரப் பற்றாக்குறை அறவே இல்லை என்ற நிலையை எப்படி உருவாக்கு வது? அதற்குத்தான் வழி.

நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மின்சாரம் 2500 மெகாவாட் என்று சொன் னால், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் திட்டமிடப் பட்டுள்ள 2000 மெகாவாட், கல்பாக்கம் அணுமின் நிலையத்திலே உற்பத்தியாகக்கூடிய 340 மெகாவாட் இவை அனைத்தையும் சேர்த்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு போதும் மின்வெட்டு வராத நிலையை உருவாக்க முடியும்(கைதட்டல்).

ஆகவே, மின்பகிர்வு நமக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன காரணம்? கொள்கையில் இருக்கிற கோளாறு; பெரியார் சொல்வார். நாம பட்டுச் சேலையை இரவில் கொடுத்து விட்டு, பின்னாலேயே எங்கே அழுக்காயிடுமோ என்று மனைக்கட்டையை தூக்கிப்போன மாதிரின்னு சொல்வார். அது மாதிரி நம்ம பட்டுச்சேலை. அதே நாம் அவங்ககிட்ட கொடுத்திட்டோம். கொடுத்துட்டு, எங்களுக்குக் கொடுங்கள், எங்களுக்கு கொடுங்கள் என்றுநம்ம பொருளையே பிச்சை கேட்கும் அவலம் தமிழ் நாட்டுக்கு மட்டும்தான் உண்டு.

அங்கே கருநாடகத் திலே தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று அத்தனைப்பேரும் ஒரு குரலில் சொல்லும் போது, நமக்கு தேவையிருக்கிறது. நாம் அடாவடித்தனத் திற்காக கேட்கவில்லை. நாம் அழிச்சாட்டியத்திற்காக கேட்கவில்லை. நாம் இருட்டில் இருக்கிற சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று நினைக் கிறோம். ஆகவேதான் மிகவும் யோசித்து செய் கிறோம்.

இந்தப் போராட்டம் கருநாடக மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்தப் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. இன்னும் கேட்டால், நெய்வேலி நிலக்கரி, நிறுவன அதிகாரிகளுக்கு எதிரான போராட்டமும் அல்ல. இது மத்திய அரசினுடைய கொள்கை முடிவுகள். மத்திய அரசினுடைய தவறான போக்கு . இன்னமும் கருநாடகத்தை அனுமதித்துக்கொண்டு, நம்மை யெல்லாம் ஏமாளியாக, பட்டை நாமம், சாத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிற மத்திய அரசு கண்திறக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படு கின்ற மிகப்பெரிய அறப்போட்டம்தான் இந்தப் போராட்டம்.

கருநாடகத்தின் ஓட்டு அரசியல்

கருநாடகத்தில் இருக்கின்ற விவசாயிகளும், நம்முடைய விவசாயிகளும் அண்ணன் தம்பிகள் தான். அதில் நமக்கு மாறுபாடு இல்லை. அங்கே, நேற்று கூட பேசும்போது சொன்னேன். அங்கே தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலில் யாரு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் அதிகம் கொடுக்காதே என்று சத்தம் ஓங்கிப்போட்டார்களோ, அவர் களுக்கு ஓட்டுக் கிடைக்கும் என்ற நப்பாசையில் தான் முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் பண்ணிக் கொண்டிருக்கிற செப்படி வித்தை இது.

அதனால், காய்ந்து போயிருப்பது தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி. எனவேதான், நாம் நமது கோரிக்கையை வலியுறுத்துகிறோம். நெய்வேலி நிறுவனத்தை பொறுத்தவரையிலே ஏற்கெனவே ஒரு போராட் டம் நடத்தினோம். தனியாருக்கு 5 சதவிகிதம் விற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், விற்காதே, இலாபத்தில் நடக்கக்கூடிய இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.


தமிழ் ஓவியா said...

அதுமட்டுமல்ல. நம்மிடம் நிறைய கிடைக்கிறத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. சீர்காழியில் இன்னும் ஒப்பந்தம் போட்டோம் ஒப்பந்தம் போட்டோம் என்று சொல்கிறார்கள். ஜெயங்கொண்டத்தில் பல ஆண்டுகளாக நிலமே வாங்கியாச்சு. அந்த நிலத்துக்காக இழப்பீடு கொடுக் கணும் என்பதற்காக நாம் போராட்டம் நடத்தி யிருக்கிறோம்.

பெருமைக்குரிய நெய்வேலி

பல ஆண்டுகளுக்கு முன்னாலே அங்கே நெய் வேலி வரணும். அதே நேரத்தில் நட்டத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடியதற்கு இராஜஸ்தான் கொண்டு போயிட்டாங்க. இராஜஸ்தானில் போய் இங்கே வரவேண்டியதை அங்கே வைத்திருக் கிறார்கள். நாமெல்லாம் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம்.

இதுவே, வேறு பகுதியாக இருந்தால் நடந்து விடுமா? என்று நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவேதான், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது இருக்கின்றதே - ஒரு அற்புதமாக இருக்கக் கூடிய இலாபத்தில் இயங்கக்கூடிய தமிழ்நாட்டின் பெருமைக்குரிய ஒரு நிறுவனமாகும்.
எனவே, இந்த நிறுவனத்திலிருந்து தயாரிக்கப் படுகிற மின்சாரம் - இதனுடைய செயல்திறன் இன்னமும் அதிகமாக வேண்டும். விரைவில் ஜெயங் கொண்டத்தில் இருக்கிற அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். அதுவும் இந்தக் கோரிக்கையில் சேர்ந்ததுதான். சீர்காழியில் உடனடியாக அதனை நடத்த வேண்டும். அதுவும் இதில் சேர்ந்ததுதான். எந்தக் காரணத்தை முன்னிட்டும், நம்முடைய தமிழ்நாட்டினுடைய வளத்தை 90 விழுக்காடு, இந்தியாவினுடைய தேவைக்கான 90 விழுக்காடு லிக்னைட் என்று சொல்லக்கூடிய பழுப்பு நிலக்கரி தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.

வேறெந்த பகுதியிலும் இல்லை என்பது ஆய்வாளர்கள் சொல்லுகிற செய்தி. எனவேதான் இந்தப் போராட்டம் காலத்தால் முன்னெடுத்து செல்லக்கூடிய அவசியமான ஒரு அறப் போராட்டம். இது ஒரு அடையாளப் போராட்டம் தான். அதனால்தான், ஒரு நாளோடு நிறுத்துகிறோம். உடனடியாக அரசாங்கத்தின் காதுகளில் இது போய் சேரவேண்டும். உடனடியாக நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் எங்களுக்குத் தண்ணீர் தர மறுத்தால், நாங்கள் உங்களுக்கு மின்சாரத்தைத் தரமாட்டோம் என்று சொல்லக்கூடிய உணர்வை நாங்கள் பெறுவோம் (பலத்த கைதட்டல்.)

உங்கள் வாதப்படியே எங்களுக்கு இருந்தால் தானே உங்களுக்கு கொடுக்க முடியும் என்ற வாதத்தைதானே நீங்கள் சொல்லுகிறீர்கள். அதே வாதத்தைத் திருப்பி கேட்பதற்கு எங்களுக்கு உரிமையில்லையா? எங்களுக்கு இருட்டு இருக்கிறது. நாங்கள் வெளிச்சத்துக்கு வந்தால்தானே உபரியாக இருந்தால் கொடுக்கலாம் என்று நாங்கள் சொல்ல மாட்டோமா? இதை அவர்கள் உணர வேண்டும்.

உணர வைக்கத்தான் இந்த அறப்போராட்டத் தினுடைய நோக்கம். ஆகவே, அந்த அரசியல் வாதிகளுடைய கண்களும் திறக்கப்பட வேண்டும். அரசாங்கத்தி னுடைய தவறான கொள்கைகளும் திருத்தப்பட வேண்டும். நமது உரிமையையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதுதான் இந்தப் போராட்டத்தினுடைய மூன்று முக்கிய அடிப்படைகளாகும். எனவே, அந்த போராட்டத்தை அறிவித்து நேற்று விளக்கமாக பேசியிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து, இந்தப் போராட்டத் தில் ஈடுபடுவதற்காக வந்திருக்கின்ற உங்களுக் கெல்லாம் என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் தொண்டர்கள் எதைச் செய்தாலும் அதை ஒழுங்குறச் செய்வார்கள். பெரியார் தொண்டர்கள் எந்தப் போராட்டத்திற்கு வந்தாலும், அது ஆயுள் தண்டனையாக இருந்தாலும் அதை ஏற்பதற்குத் தயாராகத்தான் வருவார்கள் (பலத்த கைதட்டல்). என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

கழகத்தின் கட்டுப்பாடு

நாங்கள் ஒன்றும் காலையில் மாவை வைத்து விட்டு, மாலையில் வந்து இட்லி சுட்டுக்கலாம் என்று வருகிறவர்கள் இல்லை. தாய்மார்கள் உட்பட தயாராக வந்திருக்கிறார்கள். தயாராக வந்திருந் தாலும்கூட நமது தோழர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும். கறுப்புச்சட்டைக்காரன் என்றால், அவன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்பது மட்டுமல்ல.

தமிழ் ஓவியா said...

அவன் கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்றவன் என்ற அளவிலே நீங்கள் எல்லோரும்இதை ஆரம்பிப் பதற்கு முன்னால், மகளிரை முன்னாலே நிறுத்தி மூன்று மூன்று பேர்கள் வரிசையாக முற்றுகைப் போராட்டத்திற்குச் செல்வோம். முழக்கத்தோடு செல்வோம். காவல்துறை யினரிடம் அனுமதி கேட்கவில்லை. இந்த மாதிரி போராட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். தகவல்தான் கொடுத்திருக்கிறோம். அவர்கள் நம்மை கைது செய்யக்கூடும். அப்படி கைதானால், முறைப்படி நாம், அதற்கு லட்சியத் திற்கு கிடைக்கிற விலை என்ற மகிழ்ச்சியோடு நாம் கைதாக வேண்டும்.

கட்டுப்பாடாக கைதாக வேண்டும். ஒரு சிறு பிரச்சினைகூட காவல்துறைக்கு நாம் கொடுக்கக் கூடாது. இதுவரையில் திராவிடர் கழகம் நடத்திய எந்தப் போராட்டத்திலும், காவல்துறைக்கு சிறு பிரச்சினையையோ, வேலையையோ கொடுக்க மாட்டோம். நாமே ஒழுங்குபடுத்திக்கொள்வோம்.

அப்பேர்ப்பட்ட நிலையிலே, நாம் கைதானால், தோழர்கள் ஒவ்வொருவரும் அந்த எல்லை எந்தளவுக்கு அவர்கள் அனுமதிக்கிறார்களோ, அதுவரையிலே முழக்கத்தோடு சென்று, அதற்குப் பிறகு நாம் கைதாக வேண்டும். அப்படி கைதாக வேண்டிய நேரத்திலே - நான் கைதாகக் கூடியநேரத்திலே கூட நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் அனை வரையும் பேருந்திலே ஏற்றிவிட்டு, கடைசியாகதான் நான் வருவேன். ஏனென்றால், ஒரு சிறு பிரச் சினையும் வந்துவிடக்கூடாது.

ராயல்டி கிடைத்தது எப்படி?

காவல்துறைக்கும் பிரச்சினை வந்துவிடக்கூடாது. எப்போது ஈடுபட்டாலும், அதைத்தான் செய்வேன். ஆகவே, போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முதல் ஆளாக இருந்தாலும், வழியனுப்பி வைப்பதில் நான்தான் கடைசி ஆளாக இருந்து, உங்களை வழியனுப்பி வைத்துவிட்டு, பிறகு, உங்களோடு வருவேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டு - நாம் நம்முடைய போராட்டத்தை இப்போது தொடருகிறோம்.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். இதுவரையிலே நாம் நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி வேண்டுமென்று போராடி னோம். அதேபோல நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி வேண்டுமென்று போராடினோம். அந்தப் போராட்டம் கொஞ்சம் கால தாமதம்ஆனாலும் வெற்றிகரமாக வந்தது. அதுதான் மிக முக்கிய மானது. அதுபோலவே, பெரிய அளவுக்கு விற்க முயன்றதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.

நாம் எப்போதும் விழிப்பாக இருக்கிறோம். இப்போதும் விழிப்பாக இருக்கிறோம். எனவே, நமது போராட்டம் அறப்போராட்டம். மிகவும் அமைதியான வழியிலே நமது உரிமைகளை வற்புறுத்துகின்ற போராட்டம் என்பதைக் காட்ட வேண்டும். நீங்கள் எல்லோரும் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளவேண்டும்.

மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றேன். பெரியாரின் இராணுவம் ஒரு கட்டுப்பாடு மிகுந்த இராணுவம் என்பதைக் காட்டத் தவறாதீர்கள் என்று சொல்லி, வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு, ஓங்குக இனப்புரட்சி என்று கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.

-இவ்வாறு போராட்டக் களத்தில் உரையாற்றி னார் தமிழர் தலைவர் அவர்கள்.

தமிழ் ஓவியா said...

அவன் கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்றவன் என்ற அளவிலே நீங்கள் எல்லோரும்இதை ஆரம்பிப் பதற்கு முன்னால், மகளிரை முன்னாலே நிறுத்தி மூன்று மூன்று பேர்கள் வரிசையாக முற்றுகைப் போராட்டத்திற்குச் செல்வோம். முழக்கத்தோடு செல்வோம். காவல்துறை யினரிடம் அனுமதி கேட்கவில்லை. இந்த மாதிரி போராட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். தகவல்தான் கொடுத்திருக்கிறோம். அவர்கள் நம்மை கைது செய்யக்கூடும். அப்படி கைதானால், முறைப்படி நாம், அதற்கு லட்சியத் திற்கு கிடைக்கிற விலை என்ற மகிழ்ச்சியோடு நாம் கைதாக வேண்டும்.

கட்டுப்பாடாக கைதாக வேண்டும். ஒரு சிறு பிரச்சினைகூட காவல்துறைக்கு நாம் கொடுக்கக் கூடாது. இதுவரையில் திராவிடர் கழகம் நடத்திய எந்தப் போராட்டத்திலும், காவல்துறைக்கு சிறு பிரச்சினையையோ, வேலையையோ கொடுக்க மாட்டோம். நாமே ஒழுங்குபடுத்திக்கொள்வோம்.

அப்பேர்ப்பட்ட நிலையிலே, நாம் கைதானால், தோழர்கள் ஒவ்வொருவரும் அந்த எல்லை எந்தளவுக்கு அவர்கள் அனுமதிக்கிறார்களோ, அதுவரையிலே முழக்கத்தோடு சென்று, அதற்குப் பிறகு நாம் கைதாக வேண்டும். அப்படி கைதாக வேண்டிய நேரத்திலே - நான் கைதாகக் கூடியநேரத்திலே கூட நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் அனை வரையும் பேருந்திலே ஏற்றிவிட்டு, கடைசியாகதான் நான் வருவேன். ஏனென்றால், ஒரு சிறு பிரச் சினையும் வந்துவிடக்கூடாது.

ராயல்டி கிடைத்தது எப்படி?

காவல்துறைக்கும் பிரச்சினை வந்துவிடக்கூடாது. எப்போது ஈடுபட்டாலும், அதைத்தான் செய்வேன். ஆகவே, போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முதல் ஆளாக இருந்தாலும், வழியனுப்பி வைப்பதில் நான்தான் கடைசி ஆளாக இருந்து, உங்களை வழியனுப்பி வைத்துவிட்டு, பிறகு, உங்களோடு வருவேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டு - நாம் நம்முடைய போராட்டத்தை இப்போது தொடருகிறோம்.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். இதுவரையிலே நாம் நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி வேண்டுமென்று போராடி னோம். அதேபோல நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி வேண்டுமென்று போராடினோம். அந்தப் போராட்டம் கொஞ்சம் கால தாமதம்ஆனாலும் வெற்றிகரமாக வந்தது. அதுதான் மிக முக்கிய மானது. அதுபோலவே, பெரிய அளவுக்கு விற்க முயன்றதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.

நாம் எப்போதும் விழிப்பாக இருக்கிறோம். இப்போதும் விழிப்பாக இருக்கிறோம். எனவே, நமது போராட்டம் அறப்போராட்டம். மிகவும் அமைதியான வழியிலே நமது உரிமைகளை வற்புறுத்துகின்ற போராட்டம் என்பதைக் காட்ட வேண்டும். நீங்கள் எல்லோரும் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளவேண்டும்.

மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றேன். பெரியாரின் இராணுவம் ஒரு கட்டுப்பாடு மிகுந்த இராணுவம் என்பதைக் காட்டத் தவறாதீர்கள் என்று சொல்லி, வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு, ஓங்குக இனப்புரட்சி என்று கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.

-இவ்வாறு போராட்டக் களத்தில் உரையாற்றி னார் தமிழர் தலைவர் அவர்கள்.

தமிழ் ஓவியா said...


தோழர் வீரமணி அவர்களின் 50 ஆண்டு சாதனை நிறைந்த இதழியல் வாழ்க்கை


(25.8.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக் கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை)

மிகுந்த மதிப்பிற்குரிய முத்தமிழ் அறிஞர், செம்மொழிச் செம்மல், டாக்டர் கலைஞர் அவர்களே,

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சமூகப் போராளி, பகுத்தறிவுச் சிங்கம், கருப்புச் சட்டையும் வெள்ளைத் தாடியு மாகத் தென்னகத்தின் சமூக வாழ்வைப் புரட்டிப் போட்ட புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் உயிர்த் தொண்ட ராக, உற்ற தோழராகச் சமூக வாழ்வைத் தொடங்கி, இன்று வரை அணுப்பிசகாமல் பெரியார் வழியில் நடந்து, அந்தப் பாதையை மேலும் மேலும் விசாலப்படுத் திக் கொண்டு வரும் மதிப்பிற்குரிய தோழர், விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களே, இந்த அரங்கமே கொள்ள முடியாத அளவு திரண்டிருக்கும் பெரியாரின் தொண்டர்களே, தோழர் களே, நண்பர்களே, எல்லோர்க்கும் வணக்கம்!

இந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாத நாள்களில் ஒன்றாக மதிக் கிறேன். முத்தமிழ்ச் செம்மல் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில், விடுதலை ஆசிரியர் பற்றிப் பேசக் கிடைத்த அரிய வாய்ப்பு இது.

டாக்டர் கலைஞர் அவர்களை நேசிப் பவர்களில் நானும் ஒருவன். இந்தியப் பெருநாட்டில் நமக்கு அபூர்வமாகக் கிடைத்த அரசியல் தலைவர்களில் மிகமிக அபூர்வமாக வாய்த்த இலக்கிய அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே. அவர் ஒரு கவிஞர், வசனகர்த்தா, சமூக உணர்வோடு கதைகள் எழுதிய சிறுகதை யாளர், வரலாற்றாளர். . . பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் இருந்தன. ஆனால் காலம் அவரை நமக்கு அதிக நாள் தொண்டு செய்ய விட்டு வைக்கவில்லை. கலைஞர் அவர்கள் சாதனைகள் மேல் சாதனைகள் செய்து, வாழ்ந்து கொண்டி ருக்கிறார். இன்னும் நீண்ட காலம் வாழ்வார்; வாழவேண்டும்.

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவரை உலகம் அறியச் செய்தவர்களில் முதன்மையான ஒருவர் டாக்டர் கலைஞர் அவர்கள். குமரி முனைக்காரனான நான், அவருக்குச் சிறப்பாக நன்றி சொல்ல வேண்டும். ஆசியப் பெரும்பரப்பின் தென் முனையில், குமரிக் கடலில், திருவள்ளுவர் சிலையை அதிகாரத்துக்கு ஒரு அடி என்ற கணக்கில் கம்பீரமாக எழுப்பி, எங்கள் குமரி மண்ணையும் உலகுக்கெல்லாம் வெளிச்சப்படுத்தியவர் அவர்.

நண்பர்களே, உங்களைப் பெரியார் வழியில் சிந்தித்துப் பார்த்திட வேண்டு கிறேன். இந்தப் பெருங் கூட்டத்தில் அதற்கு மேல் விளக்கம் சொல்லத் தேவை யில்லை என நம்புகிறேன். அச்சிலை நம்மிடம் என்ன பேசுகிறது? பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பேசவில்லையா? வைதீக - வருணாசிரம எதிர்ப்பைப் பேசவில்லையா? இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள். அந்த முனைக்கு அந்த சிலைஏன் தேவை என்பது புரியும்.
அது மட்டுமா, உலகமே வியக்க, தமிழகத் தலைநகரில் நூலகம் அமைத்த புத்தகங்களின் காதலர் அவர்.

ஜீவாவின் உரை

இன்னொன்றும் இந்த மேடையில் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிடப் பேரியக்கம் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடிப்பதற்கு முந்திய காலம் 1962 எனக் கருதுகிறேன். ஒரு கல்லூரியில் உலக இலக்கியத்தில் வள்ளுவம் என்னும் தலைப்பில் சொற்பெருக்காற்றினார் புரட்சியாளர் பா.ஜீவானந்தம் அவர்கள். கட்டுக்கடங்காத கூட்டம். மூன்று மணி நேரத் திருக்குறள் பெருமழை. எல்லோ ருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசு நிர் வாகம் என்ன செய்தது? கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அந்தக் கல்லூரிப் பேராசிரியரைப் பணி நீக்கம் செய்தது. ஒரு கல்லூரியில் நடந்த இலக்கியக் கூட்டத்திற்கே அன்று நேர்ந்த கதி இது.

தமிழ் ஓவியா said...

அது கலைஞரின் கை!

காலம் கடந்தது. என் முதல் நாவல் கரிசல் வெளிவந்தபோது, அதிகாரிகள் என்னைச் சுற்றி வளைத்தார்கள். யாருடைய அனுமதி பெற்று நாவலை வெளியிட்டாய் என்று கேட்டார்கள். அனுமதி தேவை இல்லை என்றேன். அப்படியா சொல்கிறாய், நாங்கள் உன்னைப் பணி நீக்கம் செய்வோம் என்றார்கள். சட்டைப் பையில் இருந்து ஒரு அரசாணையை எடுத்து அவர்களி டம் நீட்டினேன். என்ன அரசாணை அது? ஆசிரியர்கள் நூல்கள் எழுதி வெளியிட மேலதிகாரிகள் அல்லது அரசின் முன் அனுமதி தேவையில்லை, அவை அரசுக்கு எதிராகப் பேசாமல் இருந்தால் சரி, அதன் வரவு செலவுக் கணக்கு உரிய முறையில் பேணப்பட வேண்டும் என்றிருந்தது. நான் விடுதலை பெற்றேன். நான் மட்டுமா? என்னைப் போல ஆயிரம் ஆயிரம் அரசுப் பணியாளர் களும், ஆசிரியர்களும் விடுதலை பெற்றார்கள். இவ்வாறு எங்களுக்கு எழுத்து விடுதலை தர ஆணையிட்ட கை எந்தக் கை? இதோ இருக்கும் கலைஞர் அவர்களின் கருணைக் கைதான். அந்தக் கையை இயங்க வைத்த கலைஞரின் இதயத்தை வணங்குகிறேன்.

மகாபெரியவர் என்ன செய்தார்?

நான் யாரையும் குத்திச் சொல்ல விரும்புவதில்லை. ஆனாலும் சில உண் மைகளைச் சொல்லித்தான் ஆகவேண் டும். 1936இல் என்று நினைக்கிறேன். இடைக்காலத்தில் தமிழகத்தில் அதி காரம் பெற்ற வைதீகம், நடைமுறைப்படுத்திய தாழ்த்தப்பட்டோர் பெருங்கோயில்களுக் குள் நுழைதல்ஆகாது என்ற தடை விதியை முறியடித்து, முதன் முறையாக அரசு அனுமதியோடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அடித்தள மக்கள் நுழைந்தபோது, மகா பெரியவர் என்று போற்றப்படும காஞ்சிப் பெரியவர் சங்கராச் சாரியார் என்ன செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மனம் வருந்து கிறது; அப்படி அவர் என்ன செய்தார் பெரியவர்? கோவிலுக்குத் தீட்டு நேர்ந்துவிட்டது என்று வெளிப் படையாக அறிவித்து, அதற்காக ஒரு முழுநாள் பட்டினி கிடந்து, தன் எதிர்ப்பைக் காட் டினார். பெரியவருக்கு ஆதரவாக, ஏராள மான உயர்ஜாதிப் பெண்கள் கோயிலைக் கழுவிச் சாணியிட்டு மெழுகித் தீட்டுக் கழித்தார்கள். இந்தச் செயல் எவ்வளவு மனித விரோதமானது!

(தொடரும்)

ஆனால் இன்னொரு பெரியவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்லுகிறார் கேளுங்கள். பஞ்சமர்கள் எங்களையும் நாங்கள் புழங்கும் இடங்களையும் விட்டு விலகி நிற்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார் களே, அது ஏன்? அவர்கள் பிறப்பாலேயே தீட்டானவர்கள். உலகிலுள்ள மிகச் சிறந்த ஆடை அணிகலன்களால் தங்களை ஒப் பனை செய்து கொண்டாலும், பிறப்போடு தொடர்கின்ற அவர்களின் அழுக்கை நீக்க முடியாது. இந்த அழுக்கு அவர் ஆன் மாவில் கலந்து நிற்பது. பிறப்போடு தொடர்ந்து வருவது, மாற்ற முடியாதது.17-10-2012

தமிழ் ஓவியா said...

நெய்வேலியில் மறியல் போராட்டம்! காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தமிழர் தலைவரும், தோழர்களும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது....



தமிழகத்துக்கு தண்ணீர்விட மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்கக்கூடாது என்று நெய்வேலியில் 15.10.2012 அன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தலைவர் மற்றும் கழகத் தோழர்கள் பல நூறு பேர்கள் காவல்துறை யினரால் நேரு சிலை அருகே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு காவல்துறை வண்டி களில் ஏற்றி வட்டம் 27 திருமண மண்ட பத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மண்ட பம் முழுவதும் நிரம்பி வழிந்த நிலையில் தோழர்கள் எண்ணிக்கை பார்ப்பதற்கு மாநாடோ அல்லது சிறப்பு பொதுக்குழுக் கூட்டமோ என்று சொல்லும் வண்ணம் காட்சியளித்தது.

தமிழர் தலைவரின் அரிய கருத்துரை....

பொழுதை பயனாக்கும் வகையில் இந்த நேரத்தையும் ஆக்கிட வேண்டும் என நினைத்த தமிழர்தலைவர் - நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்றார். காவல்துறை செல விலேயே நம்முடைய இயக்க நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளும் வண்ணம் பாடலரங்கம் முதலில் தொடங் கியது.

எழுச்சியூட்டிய பாடல்கள்...

புதுவை கே.குமார், பாலகிருஷ்ணா புரம் மகாராசன், புதுவை முத்துவேல், திருவாரூர் முனியாண்டி, சந்திரசேகரபுரம் துரை, திருத்துறைப்பூண்டி தி.குணசேகரன், உடுக்கடி அட்டலிங்கம், நீலாங்கரை வீரபத்திரன், இராம.அன்பழகன், பெரிய கோட்டை முருகன், பேராவூரணி நீல கண்டன், ரெஜினா பால்ராஜ், பாச்சூர் அசோகன், மயிலாடுதுறை அருள்ராசு, செஞ்சிகதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு, பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக் குமார், அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் லட்சிய விளக்கப் பாடல்களைப் பாடினர்.

கு.வெ.கி.ஆசானின்...

மனித உரிமைப் போரில் தந்தை பெரியார் பேணிய அடையாளங்கள் என்னும் பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசானின் நூலினை பற்றி அதன் உள்ளடக்கத்தைப் பற்றி கழகத் தலைவர் தமிழர்தலைவர் எடுத்துரைத் ததுடன், அதில் இந்தியக் குடிசை என்னும் தலைப்பில் உள்ள செய்தி களை தோழர்களுக்கு கேட்கும்படியாக படிக்கச் சொன்னார். பேச்சாளர் அதிரடி அன்பழகன் படித்தார். இடைஇடையே அந்நூலின் சிறப்பை, விளக்கத்தை தமிழர் தலைவர் விளக்கிப் பேசினார்.

நூல்கள் வாசிப்பும், மறுவாசிப்பும்...

தோழர்கள் ஒவ்வொருவரும் நூல் களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த் துக்கொள்ள வேண்டும். சில நூல்களை மறுவாசிப்பு செய்திட வேண்டும். அதாவது திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஆசிரியர். பேராசி ரியர் ந.இராம நாதனின் பெரியாரியல் பாடங்கள், கு.வெ.கி. ஆசானின் மனித உரிமைகள் பற்றி புத்தகமும் திரும்ப திரும்ப படிக்க வேண்டிய நூல்கள் என்றார்.

போராட்டங்களும், பிரச்சாரமும் நம் இயக்கத்தின் அடிப்படை. இன்றைக்கு இந்த போராட்டத்துக்காக (காவிரி நீர் உரிமை மீட்பு) கைது செய்யப்பட்டுள்ள நாம் அடுத்தவாரம் இன்னொரு போராட் டத்தில் ஈடுபட இருக்கிறோம். ஆம்! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பயிற்சி முடித்து இன்னமும் பணிக்குச் செல்ல முடியாத நிலை. அதனை முறிய டித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகராவதை செயல்படுத்தி யாக வேண்டும். அதற்கான போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று கழகத் தலைவர் கேட்டுக்கொண்டார். 22.10.2012 அன்று இப்போராட்டம் நடக்க உள்ளது.

உணவு இடைவேளைத்தவிர மாலை விடுவிக்கின்ற வரை தொடர்ந்து நிகழ்ச்சி கள் நடந்த வண்ணம் இருந்தன.

காவல்துறையினரின் பொதுமக்களின் பாராட்டுகள்...

இப்படி ஒரு கட்டுப்பாடான இயக்கத்தை பார்க்க முடியாது

தலைவரின் கட்டளைக்கு கட்டுப்படும் அற்புதமான தொண்டர்களை பெற்றுள்ள இயக்கம் திராவிடர் கழகம்

போராட்ட நோக்கம் எதுவோ அதை பற்றி மட்டுமே சிந்திக்கின்றவர்களாக, வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தாதவர் களாக தி.க.வினர் உள்ளனர்

தி.க. காரர்கள் அவர்களே அவர் களுக்கு பாதுகாப்பு காவல்துறையினரே தேவை இல்லை அந்த அளவுக்கு ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்கின்ற வர்களாக உள்ளனர்.

காவல்துறையினர் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிட்டார் தலைவர். தோழர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் வேறு உணவை ஏற்றுக்கொள்ள மறுத்தார். புளிசாதம், தயிர்சாதம் மட்டுமே, இப்படியும் தலைவர்கள் இந்த காலத்திலும் இருக் கிறார்களே என்று வியந்தனர்.

மாலை 5மணிக்கு விடுதலை என்று காவல்துறையினர் கூறியதும் தமிழர் தலைவரை பிரியா முடியாமல் வருத்தத் தோடு தோழர்கள் விடைபெற்றனர்.

-துரை.சந்திரசேகரன்

தமிழ் ஓவியா said...


வளர்ச்சிக்கு எதிரானது


சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் தமிழ் நாட்டு மக்களின் ஒன்றரை நூற்றாண்டு கனவுத்திட்டம். இந்தத் திட்டத்தால் கால விரயமும், பணவிரயமும் தவிர்க்கப்படும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டு தொழில்மேம்பாட்டுக்கு உதவிகரமாய்த் திகழும் என்பதால்தான் சேது கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி தொடங்கப்பட்டது. பாஜக வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் திட்ட வரையறைகள் பரிசீலிக்கப் பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு திட்டத்தைத் தொடங்கும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் 2005இல் சேதுசமுத்திர திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பக் கட்டப்பணிகள் துவங்கப்பட்டன. எதிர்க்கட்சி யான பாஜகவும் அதன் பரிவாரங்களும் திட்டம் தொடங்கியவுடன் எதிர்க்க காரணம் தேடின. அமெரிக்கா வின் நாசா வெளியிட்ட படம் என்று கூறி கடல் பகுதியில் இயற்கையாக அமைந்திருந்த மணல்திட்டைத் தகர்க்க காரணம் கண்டுபிடித்தனர். தமிழகத்தில் ஜெய லலிதாவும் சுப்பிரமணியசாமியும் அவர்களின் குரலை எதிரொலித் தனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவ தையும் நாட்டின் மேம்பாட்டுக்கு இடையூறு செய்வதையும் தங்களது அரசியல் பிழைப்புக்கு வழியாகக் கைக் கொண்டனர்.
ஏற்கனவே சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் திட்டத்துக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது.

மக்கள் மன்றத்தில் தங்கள் எண்ணம் செல்லுபடியா காது என்று கருதியதால், மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பவர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள்.

திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் அப்பகுதியை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமியைவிட்டு வழக்குத் தொடுத் தனர். இந்தச் சமயத்தில் அதிமுகவினர் சார்பில் ஜெயலலிதாவும் வழக்குத் தொடுத்தார். இதனால் உச்சநீதி மன்றம் மாற்று வழியில் திட்டத்தைச் செயல்படுத்தும் சாத்தியக்கூறு உள்ளதா என்று ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

மத்திய அரசு அமைத்த ஆர்.கே.பச்சோரி குழு கடந்த ஜுலை மாதம் அறிக்கை சமர்ப்பித்தது. மாற்றுவழித் திட்டத்தில் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை எனக் கூறியது. இந்நிலையில் தான், அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் புராதனச் சின்னம் ஆக்க வேண்டும் என்றும் மொத்தத்தில் இந்தத் திட்டம் தேவை யில்லை என்றும் தமிழக அதிமுக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

முன்பு மத்திய ஆட்சியிலிருந்து விலகியபோது சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முனையவில்லை என்பதை ஒரு காரணமாக ஜெயலலிதா கூறினார் என்பதை மனதில் கொண்டால் இது தமிழகத்தின் முன்னேற்றத்திற் காக இல்லை இவர்களின் அரசியலுக்கானதா என்பதை மக்கள் தெரிந்துகொள்வார்கள்.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் அறிவியல் ரீதியில் அல்லாமல், நம்பிக்கையைக் காரணம் காட்டி மாநில மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டத்தை கைவிடச் சொல்வது அறிவுடைமை யும் அல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. தேசத்தின் நம்பிக்கையை சிதைக்கக்கூடாது. வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது.


(நன்றி : தீக்கதிர் 17.10.2012 - தலையங்கம்)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரசில் தந்தை பெரியார், நாகம்மையார் புகழ் முழக்கம்!


தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரசு (Tamilnadu History Congress) தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று மாணவர்கள் உறுப் பினராக உள்ள அமைப்பு. இந்த அமைப்பு ஆண்டுதோறும் ஆண்டு மாநாட்டினைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் நடத்தி வருகிறது.

அதன் 19ஆவது ஆண்டு மாநாடு இந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத் துறையின் சார்பில் அக்டோபர் 13, 14, 15 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

இதன் தொடக்க விழா 13.10.2012 அன்று சாஸ்திரி கூடத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து உறுப்பினர்களும், பார்வையாளர்களும் பங் கேற்றனர். தொடக்க விழாவில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராமநாதன் தலைமையேற்றார். மாநாட்டினை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிறீதர் தொடக்க உரையாற்றினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மூத்த ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் கோவிந்தசாமிக்குப் பாராட்டு விருதும், சிறப்பாடையும் அணிவித்தனர்.

வரவேற்புரையினை பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவரும் தமிழ்நாடு வரலாற்று காங்கிரசின் செயலாளருமான முனைவர் நா.இராமச்சந் திரன் நிகழ்த்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் ஷீலா உதயசந்திரன் நன்றி கூறினார்.

13.10.2012 அன்று மாலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளரும் வரலாற்றுப் பேராசிரியருமான முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் கோவை அரசு கலைக்கல்லூரி அறக்கட்டளைச் சொற் பொழிவினை நிகழ்த்தினார்.

திராவிட இயக்க மகளிர் தோழர் ஈ.வெ.ரா. நாகம் மையார் எனும் தலைப்பில் ஒரு மணி நேரம் நாகம்மை யாரின் சிறப்புகளை, தேசிய இயக்கத்திற்கு ஆற்றிய பங்கு, தாலி மறுப்பு, சுயமரியாதைத் திருமணம் நடத்திய பெருமை, பத்திரிகைகள் குடிஅரசு, ரிவோல்ட் ஆகியவற்றின் வெளி யீட்டாளராக ஆற்றிய சிறப்பு ஆகியவற்றை எடுத்துக் கூறிய போது, பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாக மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

நாகம்மையாரின் புகழ், தந்தை பெரியாரின் புகழ் பல்கலைக்கழக மேடைகளிலும் ஒலிப்பது திராவிட இயக்கம் பெற்ற வெற்றியாகும். கருத்தரங்கச் சொற்பொழிவிற்குப் பேராசிரியர் முனைவர் சிவப்பிரகாசம் தலைமையேற்று நாகம்மையாரின் பெருமைகள் குறித்து அறிய பெருமிதம் கொள்வதாகக் கூறினார். செயலாளர் முனைவர் நா.இராமச்சந்திரன் நன்றி கூறினார்.

அன்னை நாகம்மையார் மறைந்தபோது அய்யா அவர்கள் குடிஅரசில் எழுதிய இரங்கலுரை அனைவரின் நெஞ்சைத் தொட்டு நெகிழ்வித்தது.17-12-2012

வால்பையன் said...

இங்க கமெண்ட் போட்டா உங்க பேயர்ல மட்டும் தான் வருதான்னு சும்மா செக் பண்ணேன்!