பார்ப்பனர்களைத் தெரிந்துகொள்ள...
பார்ப்பனர்
பார்வை பொதுவாக இன்றுவரைகூட எப்படி இருக்கிறது என்பதற்கு திருவாளர் சோ
ராமசாமியின் துக்ளக்கைப் படித்தால் எளிதாகவே புரிந்துவிடும்.
ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த விஷ ஊற்று பீறிட்டுக் கிளம்புவதைக் காணலாம்.
கேள்வி: மனசாட்சிப்படி நடப்பதுதான் அரசியல்வாதிகளுக்கு அழகு - என்று கூறியுள்ளாரே சபாநாயகர் மீராகுமார்?
பதில்: பாராளுமன்ற
நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கும்போதெல்லாம் நம்மால் ஒரு
காட்சியை மறக்க முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார் தனக்குத் தானே
சிரித்துக் கொண்டிருப்பார். பெரிய சிரிப்பாக இல்லாவிட்டாலும் ஒரு
புன்முறுவல் அவர் முகத்தில் தவழ்ந்து கொண்டே இருக்கும். எதனால் இவருக்கு
இப்படி சிரிப்பு வந்து கொண்டே இருக்கிறது என்று இத்தனை நாள் புரியாமல்
இருந்தது. இப்போது புரிந்து விட்டது. மனசாட்சிப்படி அரசியல்வாதிகள்
நடப்பதுதான் அழகு என்று சொல்ல அவர் நினைத்திருக்கிறார். அதற்குச்
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறார். ஆகையால் அந்த நினைப்பு அவர்
மனதிலேயே இருந்திருக்கிறது. அதை நினைத்தே அவர் எப்போது பார்த்தாலும்
சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இதுதான் விஷயம். ஒரு ஜோக்கை
மனதிற்குள் நினைத்தால் சிரிப்பு வராமல் இருக்குமா? - துக்ளக் 17.10.2012
ஒருவர் எப்பொழுதும் புன்னகை தவழும் முகத்தோடு இருப்பது என்ன குற்றமா? மனசாட்சிப்படி நடப்பதுதான் அரசியல்வாதிகளுக்கு
அழகு என்று அவர் சொன்னதில் எந்த குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டார்?
மீராகுமார் என்கிறபோது அவருக்கு
நினைவிற்கு வருவது - அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
என்பதுதான்; அதுவும் அவ்வப்பொழுது பார்ப்பனர்களைத் தோலுரித்து
வந்திருக்கும் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்ற ஆத்திரம் - இந்த
நையாண்டியின் பின்புலத்தில் பார்ப்பனத் தனம் தான் பளிச்சிட்டு நிற்கிறது.
தனக்குத்தானே சிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றால் இதன் பொருள் யாருக்குத்தான் தெரியாது.
அதற்கு அடுத்த கேள்வி தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா - பெங்களூர் வழக்குப் பற்றியது.
அதற்கு என்ன பதில் தெரியுமா? வாய்தா
வாங்கிக் கொண்டே காலம் கடத்துவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது. அதனால்
குற்றமில்லை என்று சமாளிக்கிறார்.
முதல் கேலிக்கும், இரண்டாவது வக்காலத்துக்கும் இடையே ஓடும் வெள்ளைக் கோடு - புரிகிறதா?
இதே இதழில் இன்னொரு கேள்விக்கு அத்வானியைக் காப்பாற்றுவதற்காக மாயாஜாலம் காட்டுகிறார்.
வால்மார்ட்டுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு இருக்கிறது என்று அத்வானி சொன்னதுபற்றிய கேள்வி அது.
அமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள்தான்
எதிர்த்து இருக்கிறார்கள் - மக்கள் எதிர்க்கவில்லை; அத்வானி கூறுவது தவறு
என்று சொல்லிவிட்டு அடுத்து சோ எழுதுவதைக் கவனிக்க வேண்டும் அரசியலில் உள்ள
தலைவர்கள் எல்லாச் செய்தி களையும் படித்துவிட முடியாது. அவர்களுடைய
உதவியாளர்கள் சில செய்திகளை அவருக்குச் சுட்டிக் காட்டுவார்கள். அப்படி
சுட்டிக் காட்டியபோது ஏதாவது ஒரு நிலையில் ஒரு தவறு நிகழ்ந்திருக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்வானியின் புகாரில் இந்தத் தவறு
நிகழ்ந்திருக்கிறது என்று கருது கிறேன் என்று எழுதியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் என்று வருகிறபோது -
இந்த நிலை அத்வானிக்கு மட்டும் தான் பொருந் துமா? மற்ற தலைவர்களுக்கு இது
பொருந்தாதா? மற்ற தலைவர்களைப் பற்றி விமர்சிக்கும்பொழுது இந்தச்
சப்பைக்கட்டை சோ செய்ததுண்டா?
பாரதிய ஜனதா என்ற பார்ப்பன ஜனதாவின்
முக்கிய தலைவரைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்றால் எப்படி எல்லாம்
வளைந்து, குனிந்து, வக்கணையாக எழுதுகிறார்கள் இந்தப் பார்ப்பனர்கள்!
பார்ப்பனர்களின் சிந்தனைப் போக்கு, உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப்
பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவாளின் விஷ ஊற்றின் பிறப்பிடமும்,
பிரவாகமும் என்ன என்று புரியும்.
இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள்
மாறிவிட்டனர் என்று நுனிப்புல் மேயும் தமிழர்கள், இதற்குப் பிறகாவது
கொஞ்சம் புத்தியைச் செலுத்தித் தெரிந்துகொள்வது நல்லது.
--------------------------”விடுதலை” தலையங்கம் 19-10-2012
19 comments:
தமிழ்நாடு முதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு சிறீரங்கத்தில் திடீர் "பிராமணாள் ஓட்டல்!"
தமிழர் தலைவர் அறிக்கை
சிறீரங்கத்தில் உணவு விடுதி ஒன்றில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத் திருப்பது குறித்து முதல் அமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் வருமாறு:
தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத தாகும். ஜாதி ஒழிப்பை முக்கிய கொள்கையாகக் கொண்ட இயக்கமாகும்.
எத்தனையோ போராட்டங்கள்!
அதற்காக எத்தனை எத்தனையோ போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டத்தைக்கூட கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்து, 10 ஆயிரம் தொண்டர்கள் ஈடுபட்டனர். மூவாயிரம் கருஞ்சட்டையினர் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்; சிறைச்சாலையில் பலரும் மாண்டதுண்டு.
ஒரு காலகட்டத்தில் சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது என்று பார்ப்பனர்கள் நடத்திய உணவு விடுதியில் விளம்பரம் செய்யப்பட்ட துண்டு (குடிஅரசு 3.5.1936).
தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தாலும், திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியாலும் அது ஒழிக்கப்பட்டது.
ரயில்வே உணவு விடுதியில் பிராமணாள் - சூத்திராள் பேதம்
ரயில் நிலைய உணவு விடுதிகளில் பச்சையாக பிராமணாள் - இதராள் என்று போர்டு போட்டிருந்த நிலையும் உண்டு. மேட்டுப்பாளையம் ரயில்வே உணவு விடுதியில் ஒருபடி மேலே சென்று, சூத்திரர்களுக்கு என்று வெளிப்படையாக எழுதப்பட்டு இடமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விடுதலையில் (27.1.1941) இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார்களா? என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் தலையங்கம் தீட்டினார்.
வெள்ளைக்கார அரசு தந்தை பெரியார் அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்து, அந்தப் பேதத்தை ஒழித்து உத்தரவிட்டது (8.2.1941).
ரயில்வே நிலையங்களில் இருந்த எல்லா உணவு விடுதிகளிலும் 20.3.1941 முதல் பிராமணாள் - சூத்திராள் பேதம் ஒழிக்கப்பட்டது. அதற்காக ரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாக ஒரு நாளே கொண்டாடப்பட்டது. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அத்தகைய விழாவில் சேலத்தில் கலந்து கொண்டனர் (30.3.1941).
1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய போராட்டம்!
இன்னொரு கால கட்டத்தில் 1957இல் தந்தை பெரியார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உணவு விடுதி களில் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்று இருந்த பெயரை நீக்கக் கோரும் அறிவிப்பு அது (27.4.1957).
பலர் தாங்களாகவே நீக்கிக் கொண்டனர். சில இடங்களில் தார் கொண்டு அழிக்கப்பட்டது. சென்னை யில் திருவல்லிக்கேணி பகுதியில் முரளீஸ் கபே முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் நீக்க மறுத்தார்!
முரளீஸ் கஃபே
தந்தை பெரியார் வன்முறைக்கு இடம் அளிக்காமல் நாள்தோறும் தோழர்களைக் கொண்டு மறியல் போராட்டத்தை நடத்தச் செய்தார். தொடர்ந்து எட்டு மாத காலம் நடந்தது. 1010 திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையும் சென்றனர். பிறகு வேறு வழியின்றி அந்த உணவு விடுதி உரிமையாளர் தந்தை பெரியாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிராமணாள் பெயரையும் அகற்றிக் கொண்டார் (22.3.1958). அய்டியல் கபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!
1970-லும் பெரியார் அறிவிப்பு!
மீண்டும் சிற்சில இடங்களில் உணவு விடுதிகளில் பிராமணாள் பெயர் தலை தூக்கியபோது, 1970இல் மீண்டும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். போராட்டத்துக்கு வேலை யின்றியே அவரவர்களும் பெயர்களை நீக்கிவிட்டனர்.
1978இல் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எழுதிய கடிதம்
1978ஆம் ஆண்டிலும் போராட்டத்திற்கு வேலை ஏற்பட்டது. ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் திரு எம்.பி. புருஷோத்தமன் அவர்களுக்கு இதுகுறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் கடிதம் எழுதினேன் (20.9.1978).
இரண்டே நாட்களில் (22.9.1978) அவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்த தாவது:
பேரன்புடையீர்,
வணக்கம். தங்களுடைய 20.9.1978 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம். அதில் குறிப்பிட்டபடி உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை வியாபார ரீதியாக சுத்த சைவமான (Pure Vegetarian) உணவு விடுதி என்று பொது மக்களுக்குத் தெரிவதற்காக உபயோகிக்கப்பட்டு வந்து இருக்கிறது. உயர் ஜாதித் தன்மையைக் குறிக்கும் நோக்கத்துடன் போர்டுகள் எழுதப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்பு கிறோம்.
மேலும் தற்கால ஜாதி சமயமற்ற சமதாய நோக்கோடு பெரும்பாலான உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை தாங்களாகவே நீக்கி இருக்கிறார்கள்.
தற்போது பிராமணாள் என்ற வார்த்தை அடங்கிய பெயர்ப் பலகை கொண்ட உணவு விடுதிகளைக் காண்பது மிக மிக அரிது. தங்களின் கடிதத்தையொட்டி எங்கள் சங்கம் ஒரு சுற்றறிக்கையில் எந்த உணவு விடுதியிலாவது பிராமணாள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கு மானால், தற்கால நிலைமைக்கு ஏற்ப அந்தச் சொல்லை நீக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இவ்விஷயத்தில் எங்கள் சங்கத்தின் முழு ஒத்து ழைப்பை தரத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கத் தலைவர் திரு எம்.பி. புருசோத்தமன் அவர்கள் எழுதிய கடிதம் 24.9.1978 நாளிட்ட விடுதலையில் முதல் பக்கத்தில் வெளியிடவும் பட்டது.
ஒரு நீண்ட வரலாறுண்டு
இந்தப் பிராமணாள் எதிர்ப்பு - எழுத்து அழிப்பு என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இதனை இப் பொழுது விளக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது முக்கியமாகும்.
சிறீரங்கத்தில் திடீர் பிராமணாள்!
தாங்கள் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள சிறீரங்கத்தில் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் திரு. கிருஷ்ண அய்யர் என்பவர் நடத்தும் உணவு விடுதியில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத்திருக்கிறது.
திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்திற்குத் தெரிவித்ததன் பேரில், உரிமையாளரை நேரில் அணுகிக் கேட்டுக் கொள்ளுங்கள். எடுக்க மறுக்கும் பட்சத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்பற்றி அறிவிக்கலாம் என்று கூறியி ருந்தோம்.
காவி அமைப்புகளின் துணையோடு...
அதுபோன்றே திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் கேட்டுக் கொண்டதற்கு உணவு விடுதி உரிமை யாளர் பிடிவாதமாக பிராமணாள் பெயரை நீக்க மறுத்துவிட்டார். சில காவி அமைப்புகள் அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தப் பிரச்சினையில் முதல் அமைச்சராகிய தங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.
2012-லும் பிராமணாளா?
2012ஆம் ஆண்டிலும் பிராமணாள் - சூத்திராள் பேதத்தை நினைவூட்டி வலியுறுத்தும் போக்குகள் தேவைதானா?
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி யுள்ளோம். (13.10.2012).
தாங்கள் தலையிடுக!
முதல் அமைச்சர் என்பதைவிட, தங்களின் தொகுதி என்ற முன்னுரிமையில் தாங்கள் தலையிட்டு, இந்தப் பிரச்சினையில் சுமுக சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். முயற்சிப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். அதன் மூலம் எங்கள் போராட்டத் திற்கும் அவசியம் இல்லாத ஒரு நிலை ஏற்படக் கூடும்.
சில வாரங்களுக்கு முன்பு திருச்சி உறையூரில் இதுபோல பிராமணாள் ஓட்டல் என்று இருந்ததை, எங்கள் கழகத் தோழர்கள் கேட்டுகொண்டதன் பேரில், பிராமணாள் பெயரை நீக்கிவிட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல; தந்தை பெரியார் முன்பு கையாண்ட வழிமுறைப்படி அறப்போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாதது என்பதைத் தங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம்.
வரும் 28ஆம் தேதி சிறீரங்கத்தில் திராவிடர் கழகத் தின் சார்பில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நான் கலந்துகொள்ள இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கள்,
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.10.2012
கடவுள் பாதுகாப்புச் செலவுக்கு 24 கோடி ரூபாய்!
கடவுள் நம்மைக் காக்கிறவரா? நாம் அவரைக் காக்கிறோமா?
- ஊசி மிளகாய் -
இன்று நாளேடு ஒன்றில் ஒரு செய்தி:
பத்மநாப சுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.24 கோடி! திருவனந்தபுரம்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை, பாதாள அறைகளில் கொண் டுள்ள, திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலின் பாதுகாப்புக்காக, 24 கோடி ரூபாயை, கேரள அரசு ஒதுக்கியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், பிரசித்த பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பாதாள அறைகளில், பல நூற்றாண்டு பழமை வாய்ந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க, வைர, ரத்தினப் பொக்கிஷங்கள் இருப்பது, சமீபத் தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை, உச்சநீதிமன் றத்தால் நியமிக்கப்பட்ட, வேலாயுதன் நாயர் தலைமையிலான குழு, மதிப்பீடு செய்து வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த, மாநில அமைச்சரவை கூட்டத்தில், பத்மநாப சுவாமி கோவில் பாதுகாப்பிற்கென, 24 கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும், முதல் கட்டமாக, 10 கோடி ரூபாய் வழங்குவது என்றும் முடிவு எடுக்கப் பட்டது. இதையடுத்து, கோவிலில் விரைவில் அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்பு வளையத் திற்குள், கொண்டு வரப்படும். - தினமலர் 19.10.2012, 13ஆம் பக்கம்
கேட்டீர்களா பக்த கோடிகளே, அதி நவீன மின்னணு வியல் தொழில் நுட்பக் கருவிகள்தான் கடவுளைப் பாதுகாக்கின்றன. எனவே வீணே அவர் பாதுகாப்பார் என்று கருதி வீண் செலவு செய்து நீங்கள் ஏமாறாதீர்!
தன்னைக் காத்துக் கொள்ளாதவர் உன்னை எப்படியப்பா காப்பார் என்று கேட்ட பெரியாரின் கேள்விக்கு எவரும் இன்று வரை பதில் சொன்னது கிடையாதே!
அதற்கு முன்பேகூட மதில்சுவர், இரும்புப் பூட்டு - இத்தியாதியும் உண்டே!
கடவுளும் கைதியும் ஒன்றே என்று முன்பு ஒரு முறை காலஞ்சென்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அருமையான ஒப்புவமை மூலம் வர்ணித்தார். எண்ணிப் பாருங்கள்; இரண்டு பேரும் ஒரே நிலை! ஆனால் ஒரு சிறு வித்தியாசம். ஆயுள் கைதிக்குக்கூட விடுதலை உண்டு; ஆனால் கடவுளர்களுக்கு நிரந்தர சிறைவாசம்தான்; விடுதலை என்பது கிடையவே கிடையாது. அர்ச்சகர்கள் புண்ணியத்தால் - களவு மூலம் - அப்படி ஏதும் கிடைத்து, அவர்கள் சிங்கப்பூர், அமெரிக்க சுற்றுலா (சிவபுரத்து நடராசன் முதல் பெரியகுளம் கடவுள்கள் வரை) செல்ல முயன்றால், இந்தக் காவல்துறையினர் அவர்களை பிடிவாரண்ட் போட்டு இங்கே திரும்பவும் அழைத்து வந்து, அவர் களுடைய சிறையில் - அதாவது கோயில்களில் அடைத்து விடுகின்றனரே
என்னே கொடுமை! திருவிழா என்ற பரோல் மட்டும் கடவுளுக்குக் கிடைக்கவில்லையானால் அவர்கள் வெளிச் சத்தையே பார்க்க முடியாதவர்கள் ஆகி விடுவரன்றோ!
****
காவிக் கட்சி பா.ஜ.க. சிதறு தேங்காய் ஆகிறது!
ராஜஸ்தானும் கர்நாடகா பா.ஜ.க. ஆகிறது!
ராஜஸ்தான் மாநிலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் அந்த மாநில முன்னாள் முதல் அமைச்சரும், பா.ஜ.க., தலைவியுமான வசுந்தரா ராஜே. கணிசமான எம்.எல்.ஏக்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.விலிருந்து வெளியேறி தனிக்கட்சி அமைக்க ஆயத்தமாகிறார்களாம்! அங்கே ஏகப்பட்ட கோஷ்டி தகராறுகளும் கோஷ்டிப் பூசல்களும் வெடித்துக் கிளம்பியதன் விளைவுதான் இந்த சிதறு தேங்காய்!
வரும் டிசம்பர் மாதத் துவக்கத்தில் அங்கே வசுந்தரா ராஜேயின் புதியக் கட்சி உதயமாகுமாம்! பெரிய தொழிலதிபராகவும், பணத் திமிங்கலமாகப் பல சர்க்கரை ஆலை, வர்த்தக நிறுவன பெரு முதலாளி யுமான பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின்கட்காரி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலம் கட்சியில் தலைமை ஏற்றவர்!
புதிய ஊழல் ஒழிப்பு வீரர் என்று ஊடகங்களால் ஊதிப் பெரு உருவம் பெற்றுள்ள கெஜ்ரிவால் அதன் தலையை (ஹசாரேயை) விட்டு கழன்று, தனி ஆவர்த்தனம் நடத்தி வரும் அவர் பா.ஜ.க. தலைவர் கட்காரிமீது நிலப் பேர ஊழல்களை அடுக்கடுக்காக அள்ளி வீசுகிறார்.
பாபா ராம்தேவ் - அவர் இன்னொரு ஊழல் ஒழிப்பு அவதார்; இவர்மீதே மற்றவர் குற்றம் சுமத்தியுள்ளார்!
சட்ட விதிகளைத் திருத்தியாவது இரண்டாம் முறை பா.ஜ.க. தேசியத் தலைவராக நிதின் கட்காரியையே தேர்ந்தெடுப்பது என்ற ஆர்.எஸ்.எஸ். ஆசை நிராசையாகி விடுமோ என்ற அச்சம் அக்கட்சியை உலுக்குகிறது!
இதற்கிடையில் பிரதமர் கனவு கண்ட அத்வானி கள், மோடிகள் எல்லாம் பா.ஜ.க.வின் இப்படிப்பட்ட வளர்ச்சி(?) கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார் களாம்!
கண்ட இன்பக் கனவுகூட இப்படியா உடனடியாக - தூக்கம் கலைவதற்கு முன்பேகூட கலைந்து விடுவது! அந்தோ....!19-10-2012
அரசுத் துறையினரே அரசியலமைப்புச் சட்டவிதிகளை மீறலாமா?
- பகுத்தறிவாளர் கழகம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச் சார்பின்மையினை வலியுறுத்துகிறது. அரசினர் நடவடிக்கைகள், எந்த மதத்தையும் சார்ந்ததாக இருத்தல் கூடாது. எந்த மதக் கடவுள் படமும், எந்த மத வழிபாடும் அரசுக்கு சொந்தமான இடங்களிலும், அரசு அலுவலகங்களில் கூடாது என அரசா ணைகள், அலுவலக நடைமுறை அறிவுறுத்தல் கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை என மதச் சார்பின்மைக்கு புறம்பாக கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின் றன. இந்த பூஜை நடவடிக்கைக்கு கையூட்டு பெறும் வழக்கமும் பரவலாக உள்ளது. இத்தகைய மதம் சார்ந்த நடவடிக்கைகள் அலுவலர் நடத்தை விதிகளுக்கும் புறம்பான வைகளாகும். ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாக வேண்டிய செயல்களாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச் சார்பின்மையினை முழுமையாக நடைமுறைப்படுத்திடவும், அரசு அலுவல கங்களில், வளாகங்களில் நடத்தப்படும் ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை, அரசியல மைப்புச் சட்டத்திற்கு புறம்பான செயல் களாகும் என பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக அரசுத் துறையினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத் துத் துறை செயலாளர்கள், தமிழக அரசின் அனைத்துத் துறை தலைமை இயக்குன ரகங்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஆகியோருக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. தங்கள் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங் களுக்கும், மதச்சார்பின்மையினை கடைபிடித்திட தக்க அறிவுரை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அரசுத் துறையின் மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கும் அந்தந்த மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மதச்சார்பின்மைக்கு புறம்பான நடவடிக் கைகளைக் களைய வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. அரசுத் துறையினருக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக விடுக்கப்பட்டுள்ள கடிதத்தின் நகல் அனைத்து பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளன.19-10-2012
அவசியம்
மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)
தண்ணீரை விட கெட்டியானது ரத்தம் தி.மு.க. தலைவர் கலைஞர்
சென்னை, அக்.19- தினமணியின் தலை யங்கம் குறித்து கருத்துத் தெரிவித்த தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்கள் BLOOD IS THICKER THAN WATER என்ற ஆங்கில பொன்மொழியை எடுத்துக்காட்டியுள்ளார். முரசொலியில் இன்று (19.10.2012) அவர் எழுதியிருப்பதாவது:
கேள்வி :- தமிழகத் திலே அ.தி.மு.க. அர சிலே தற்போது ஏற்பட் டுள்ள மின் பற்றாக் குறைக்கும், 16 மணி நேர மின் வெட்டுக்கும் காரணம் அ.தி.மு.க. அரசின் இயங்காமை அல்ல, இல்லாமை தான் என்று தினமணி வக் காலத்து வாங்கி தலை யங்கம் எழுதியிருக்கி றதே; அதற்கு என்ன காரணம்?
கலைஞர் :- Blood is thicker than Water என்பதுதான் காரணம்! இதே தினமணி ஜெயல லிதா எதிர்க்கட்சியிலே இருந்து, தி.மு.க. ஆட் சியைத் தாக்கி அன் றாடம் அறிக்கைக் கணை களைத் தொடுத்த போது, அரசின் மீது பழி தூற்றி எத்தனை தலையங்கங் களை எழுதியது? ஏன் இப்போது தி.மு.க. எதிர்க் கட்சியாக இருக்கின்ற நிலையிலேகூட எந்த அளவிற்கு கடுமையாக கார்ட்டூன் உட்பட மதி யற்றவர்களால் தீட்டத் தெரிகிறது? கேள்வி :- சின்னக் குத்தூசியார் அறக்கட் டளை நிகழ்ச்சியினை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடத்த அ.தி. மு.க. ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை தவறு என்று உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள் தீர்ப்பளித் திருக்கிறாரே?
கலைஞர் :- சின்னக் குத்தூசியார் நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டுரையாளர்களுக் கான விருது வழங்கல் விழா 15-6-2012 அன்று அண்ணா சாலையில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தேவநேயப் பாவாணர் நூலகத் தின் கூட்ட அரங்கில் நடை பெற திட்டமிடப்பட்டு, அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு அனு மதியும் பெறப்பட்டி ருந்தது. ஆனால் திடீ ரென்று அந்த நிர் வாகம், காவல் துறை அனுமதி இல்லை என்று கூறி மறுக்கவே, அறக் கட்டளை சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடுக்கப் பட் டது. வழக்கை விசா ரித்த நீதிபதி சந்துரு அவர்கள், தமது தீர்ப் பில், 65 ஆண்டு களாக ஒரு சிறிய அறையில் உட்கார்ந்து கொண்டு, அரசியல் விழிப்புணர் வுக் கட்டுரைகள் எழுதி, பத்திரிகையாளர்களின் என்சைக் ளோபீடியா வாகத் திகழ்ந்தவர் சின்னக்குத்தூசி. காமராஜர் முதல் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பழகி சமூக அரசியல் விழிப்பு ணர்வுக் கட்டுரைகள் எழுதிய அவரது பெய ரால் நடக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதிமறுக்கக் கூடாது என்று கூறி நிகழ்ச்சியைஅனும திக்கஆணையிட்டு, மாலை 5.15 மணி அள வில்தீர்ப்பளித்தார். ஆனால் தீர்ப்பு அறிவிக் கப்பட்ட தகவல் வந்த வுடன் நூலக அதிகா ரிகள் அரங்கத்திற்கு ஏற் கெனவே வந்திருந்த பார்வையாளர்களை வெளியேற்றி விட்டு, அரங்கத்தைப் பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்கள். இது நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலா கும். ஆனால் அறக்கட் டளை நிர்வாகிகள் நூலக வளாகத்திற்கு வெளியே கார் நிறுத்துகின்ற பகுதி யில் பாதி இருட்டில் நிகழ்ச்சியை தோழர் நல்ல கண்ணுவை வைத்து விருது வழங்கி நடத்தியி ருக்கிறார்கள். அதில் நமது திருச்சி செல்வேந் திரன், பத்திரிகையாளர் கள் க. திருநாவுக்கரசு, நக்கீரன் கோபால் ஆகி யோர் கலந்து கொண்டி ருக்கிறார்கள். இந்தச் செய்தியே இந்து,தீக்கதிர் போன்ற நாளேடுகளில் தான் வந்துள்ளது. இந்த வழக்கிலேதான் 17-10-2012 அன்று தீர்ப்ப ளித்த நீதிபதி சந்துரு அவர்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ச்சி களை நடத்து வோர்அதற்காக காவல் துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறியதோடு, நீதிமன்ற உத்தரவை மதித்து, நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த அனுமதிக்காத தேவநேயப் பாவாணர் அரங்க நிருவாகிக ளுக்கு கடும் கண்டனத் தையும் தெரிவித்துள் ளார். நீதிபதிகள் எத் தனை கண்டனங் களைத் தெரிவித்தா லும், அதைப் பற்றி யெல்லாம் கவலைப் படுகின்ற ஆட்சியா தமிழகத்திலே நடக் கிறது?19-10-2012
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஆயுதபூஜையை தடுத்து நிறுத்த கழக தோழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஆயுதபூஜையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி குமரி மாவட்ட கழக தோழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி, அக்.19-கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்க ளில் வரும் 23 அன்று ஆயுத பூஜை நடத்து வதற்கான ஏற்பாடு களை அரசு அதிகாரி கள் செய்து வருகின் றனர். மூடத்தனமான அந்த ஆயுத பூஜையை குமரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசு அலு வலகங்களிலும் நடத்து வதற்கு அனுமதிக்கக் கூடாது.
இந்திய அரசின் மத சார்பின் மையை மாவட்ட ஆட் சியர் நிலை நிறுத்த வேண்டும். எந்த மத விழாக்களும், அரசு அலுவலகங்களில் நடத்தக்கூடாது என்ற அண்ணா அவர்கள் பிறப் பித்த அரசின் ஆணை யைப் பின்பற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட திராவிடர் கழக செய லாளர் கோ.வெற்றிவேந் தன், மாவட்ட அமைப் பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ப.முருகபதி, மண்டல மகளிரணி செயலாளர் ச.ச.மணிமேகலை, மாவட்ட இளைஞரணி செயலாளர் த.சுரேஷ்,
நாகர்கோவில் நகர செயலாளர் செ.ஆனந் தன், நகர அமைப்பாளர் ச.நல்லபெருமாள், நகர துணைத்தலைவர் கவிஞர் எச்.செய்க்முக மது, மயிலாடி கிளைத் தலைவர் கு.வெங்கடா சலம், தோழர்கள் ச.ச. கருணாநிதி, மா.ஜான் மதி, ஆதரவாளர் வழக் குரைஞர் ஜோ.தமிழ்ச் செல்வன், ஆகியோர் 5.10.2012 வெள்ளிக் கிழமைமாலை 4மணிக்கு நாகர்கோ விலில்இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலவலகத்திற்குச் சென்று மாவட்ட ஆட் சியர் நாகராஜனைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து கழகக் கோரிக்கையினை ஆட்சியரிடம்நிறைவேற்ற வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சி யருக்கு கொடுத்த மனு வின் நகலை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட செயலாளர் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.
நல்லகாலம் திரைப்படத்தில் கலைவாணர்
பட்டை நாமஞ் சாத்திக்கிட்டு
மத்தியான வெயிலிலே
கோவிந்தம், கோவிந்தம், கோவிந்தம்,
கோவிந்தம் என்று
பரந்தாமன் பேரை இழுக்காமல் தினம்
கஷ்டமொடு பாடுபட்டு கஞ்சியும் குடிச்சுக்கிட்டு
தன்மானம் விட்டுப்பிட்டு
தனவந்தான் காசுக்கு
சலாம் கிலாம் போடதுங்க - கை
............................................... போலிச்
சாமியார் வேடமிட்டு
சாப்பாட்டைத் தேடிக்கிட்டு
சத்திரத்துக் கோடாதுங்க - கால்
சத்திரத்துக் கோடாதுங்க........
- என்று நல்ல காலம் என்ற திரைப்படப்பாடல் மூலம் கடவுள் பேரைச் சொல்லி வயிறு வளர்ப்பவனையும், போலி வேடமிட்ட சாமியார்களையும், தன்மானமிழந்து வாழ்கின்ற மக்களையும் கண்டித்து அய்யா அவர்களின் கருத்துகளைப் புகுத்திப் பாடுகிறார்.
இந்துமதம் - சங்கரமடங்கள் பற்றி ஜெயப்பிரகாஷ் நாராயண்
ஒரு இந்துவை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர் அல்லது ஒரு ஜெர்மானியர் வேதாந்தியாக இருக்கலாம். ஆனால், அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவது இல்லை.
ஜாதியும், தீண்டாமையும் மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல. ஆனால், வழக்கங்கள், சடங்கு கள், அனுஷ்டானங்கள். கற்களை, மரங் களை, மிருகங்களை நாம் வழிபடுவது, கர்ம காண்டம் என்பது - ஆகியவை களே ஒரு இந்துவை இனம் காட்டு கின்றன.
படு பயங்கரமான சிக்கலாகக் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத்தை பிணைத்து வைத்திருப்பது. அத் துடன் இந்து சமுதாயத்தின் தார்மீக, பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது இதுவே ஆகும்.
இந்தநாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்துபட்டுக் கிடக் கும் எண்ணற்ற சங்கர மடங் களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின்றன? பச்சையான சுரண் டல்களாகவும் அல்லவா இருக் கின்றன?
இந்து மதத்தின் உச்சக்கட்ட உறைவிடங்களான சங்கர பீடங் களையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கே பதவி வகித்துக் கொண்டிருப்பவர்களில் குறைந்தபட்சம் ஒரு சங்கராச்சாரியாவது (பூரி) குருட்டுப் பழைமை வாதத் துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன்மாதிரியாக விளங்கவில்லையா?
இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டுகளுக்கு முன்னால் அவமானத்துக்குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்குப் பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள் ளத்தக்கது. நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம்.
நமது சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம். நமது சமுதாயத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒட்டடைகளிலிருந்து அதை விடுவிக்கவும், அதை சுத்தப்படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுவோம்.
(இந்தியன் எக்ஸ்பிரஸ், 20.9.1972)
பாதிரி காட்டிய படங்கள்
பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப்பட்டி ருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.
ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக்கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார்.
அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கை யில்லாதவர்கள், ஆண்ட வனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.
ஆதாரம்: அண்ணாவின் சிறுகதைகள்
தோழர்களே!
தீண்டாமை விலக்கு என்று வெறும் கூச்சலிட வேண்டாம். ஒவ்வொரு சேரியிலும் நுழையுங்கள். மூடபக்தியால் வரும் கேட்டை தெரிவியுங்கள். சேரியிலுள்ள அழுக்கு, மலம், சேறு, பள்ளம், மேடு முதலிய அசுத்தங்களைப் போக்குங்கள்.
சேரிக்குழந்தைகளைக் கழுவிச் சுத்தமாக்குங்கள். தெருக்களைப் பெருக்குங்கள். குடியரசு, தமிழன் சண்ட மாருதம் முதலிய பத்திரிகைகளைக் கிராமத்தில் வாசிக்கச் சொல்லுங்கள். மந்திர, தந்திரங்கள், பூஜை, நைவேத்தியங்கள் இவைகள் பாமர மக்களை மயக்கி ஆளச் செய்து வரும் உபாயங்கள்.
நீங்கள் அவர்கள் கண்களைத் திறக்கச் செய்யுங்கள். ஒலி பெருக்கிகளையும், இன்பக் காட்சிகளையும், சேரியில் அனுதினமும் கேட்கவும் செய்யுங்கள். இதை விட மேலான வேலைகள் உலகில் உள்ளனவா?
- மா. சிங்காரவேலு, பி.ஏ., பி.எல்.,
(1932இல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்)
மதமே...
மதமே மனிதனுடைய
சுயமரியாதைக்கு எதிரி;
மதமே மனிதனுடைய
சுதந்திரத்திற்கு எதிரி;
மதமே மனிதனுடைய
அறிவு வளர்ச்சிக்கு எதிரி;
மதமே மனித சமூகத்துக்கு விரோதி;
மதமே கொடுங்கோலாட்சிக்கு
உற்ற துணை;
மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்;
மதமே சோம்பேறி
வாழ்க்கைக்கு ஆதரவு
(புரட்சி 26.11.1933)
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவசியமான சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும்
சென்னை, அக்.19- தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவசியமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியிருப்பதாவது:- கப்பல்களின் பயண தூரத்தைக் குறைக்கும் சேது சமுத்திர திட்டம் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவசியம் தேவை.
திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய பொருளாதாரப் பயன்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத உணர்வை காரணம் காட்டி இந்தத் திட்டம் வேண்டாம் என்று கூறுவதை ஏற்க முடியாது என தா.பாண்டியன் கூறியுள்ளார்.
கே.எம்.காதர் மொகிதீன்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-
தமிழகத்தின் கனவுத்திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களின் 150ஆண்டு கோரிக்கை யாகும்.தமிழ்நாட்டின் அனைத்துஅரசியல் கட்சிகளும் இதனைவலியுறுத்தி வந்ததோடு தேர் தல்அறிக்கை களிலும் பிரதானமாக இடம் பெறச் செய்துள் ளதைஅனைவரும் அறிவர்.
2004இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கதலைமையிலான கூட்டணிபுதுச்சேரி உள்ளிட்ட 40தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தியில் ஐக்கிய முற் போக்குகூட்டணி அரசு அமைய பெரும்காரணமாக அமைந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி டாக்டர் மன்மோகன் சிங் தலை மையிலான அரசில் வலியுறுத்தியதன் பயனாகவே சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றமுடிவு செய் யப்பட்டு 2.07.2005இல் இதன் தொடக்க விழா மதுரையில் நடைபெற்றது.
அதில்பிரதமர் மற்றும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ரூ. 2427 கோடி மதிப்பிலான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் வளம் கொழிக்கும் குறிப்பாக தென் தமிழகம்அபரிமிதமான வளர்ச்சி அடையும் என தமிழகமே மகிழ்ச்சியால் திளைத்தது.
ஆனால் நாட்டுக்குத் தேவையான நல்ல பணிகள் தொடர்வதை பொறுத்துக் கொள்ளமுடியாத குறுகிய எண்ணம் கொண்டோர் இத்திட்டத்தைமுடக்கிட முயற்சி மேற் கொண்டு உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். இதுகண்டு தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இத்திட்டத்தைதொடர்ந்து நிறைவேற்றிடமத்திய அரசிடம் அய்க்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள்தொடர்ந்து வலியுறுத்தினர்.தமிழகத் தில் கடந்த தி.மு.க.ஆட்சியிலும் இதற்கானஅனைத்து நட வடிக்கைகளும்மேற்கொள்ளப் பட்டன.
ஆனால் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, உச்சநீதி மன்றத்தில் இதுதொடர்பானவழக்கை விரைவாக முடித்துசேது சமுத்திரத் திட்டம் தொடரச்செய்வதற்கு பதிலாக இத்திட்டத்தை முற்றிலும்முடக்கும் வகையில் சேதுசமுத்திரத் திட்டமே தேவையில்லை என்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத் திற்கும்செய்யப்படும் மாபெரும் அநீதியாகும்.
இது பேரறிஞர் அண்ணா,அ.இ. அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆரின்கொள்கைக்கு நேர் மாறானதாகும். தமிழக மக்களின் நீண்டகால விருப்பம். இம்மாநிலத்தின்வளர்ச்சி, மக்களின் வரிப்பணம்ரூ. 2000 கோடி என எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருமாநில முதல்வர் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது.எனவே சேது சமுத்திரத்திட்டப் பணிகள் நிறைவேறதமிழக மக்களும் அனைத்துஅரசியல் கட்சிகளும் ஒருமுகப் பட்டு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
தமிழக மக்களின்உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசும் உச்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவைதிரும்பப்பெற்று இம்மாபெரும் கனவுத் திட்டம் தொடர துணைபுரிய வேண்டும். இவ்வாறு பேரரிசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பன எதிர்ப்பு ஏன்?
பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.
மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.
நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?
என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.
எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?
நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.
இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.
தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.
நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன். -பெரியார்
Post a Comment