எல்லோரும்
எளிதாக சொல்லி விடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால்
ராவணன் என்றும்! பொதுப்புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை.
எங்களைப் பொறுத்தவரை ராவணன், மகாத்மா
-இப்படிச் சொல்கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர்.
தசரா விழாவில் ராமலீலா கொண்டாடி, ராவணன்-
அவன் தம்பி கும்பகர்ணண்-மகன் இந்திரஜித் போன்றவர்களின் நெட்டுருவங்கள் மீது
தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர்
மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாளைய பிரதமர் கனவு காணும்
ராகுல்காந்தி எல்லோருமே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள்.
ஆனால், ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ, இனி இதுபோல செய்து எங்கள்
மனதை நோகடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஏன்? நாளேட்டில்
இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரது
பெயரிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில்
ஆதிதர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி
சமுதாயம்தான். (திருக்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு
தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது). வால்மீகி
சமுதாயத்தினர் ராவணனை கடவுளாக வணங்குகிறார்கள்.
நீங்கள் சித்திரிப்பது போல ராவணன்
அரக்கனல்ல. அவர் மகாத்மா. வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவணனை
வலிமையான-நேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார். அதனால்தான்
நாங்கள் அவரை வழிபடுகிறோம் என்று ஆதி தர்ம சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன்
ரத்தன் ராவணா கூறுகிறார். நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளையில் இவர்கள், ராவண பூஜை நடத் துகிறார்கள். தசராவில் தீ அம்புகள் பாயும்
பொழுதில், வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர்களின் பூஜையில் 4 நிமிட
நேரத்திற்கு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு, ராவணனைப் புகழும் பாடல்கள்
பாடப்படு கின்றன. ஆண்கள் பெண்களென சுமார் 300 பேர் இந்த பூஜையில்
பங்கேற்கின் றனர்.
ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித்
ஹன்ஸ், மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவிபாலி ஆகியோரும்
ஜலந் தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர். நாங்கள் வழிபடும்
ராவணனை விஜயதசமி நாளில் கொடும் பாவியாக கொளுத்துவதை ஏற்க முடியாது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்
சவுர் என்ற இடத்திலும் ராவணனை அந்த ஊர் மக்கள் கொண் டாடுகிறார்கள். காரணம்,
ராவண னின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின்
நம்பிக்கை. அதனால், தங்கள் ஊர் மருமகனான ராவணனை, ராமன் கொன்றதை அவர்கள்
ஏற்பதில்லை. ராவணனின் நினைவில் பூஜைகள் நடத்துகிறார்கள். இதுபோலவே
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜயதசமி நாளில் ராவண வழிபாடு
நடக்கிறது.
முதன்முதலில், ராவணன் எங்கள் பாட்டன் என்ற
குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். ராவணனை திராவிட
மன்னன் என்று பெரியார்-அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன்னார்கள். இதுகுறித்து, கம்பராமாயணத்தைப் போற்றும் தமிழறிஞர்களுடன்
நேருக்கு நேர் வாதம் செய்தனர். ராமாயண எரிப்பு என்றளவில் போராட்டம்
நீண்டது. ராம லீலாவுக்கு எதிராக ராவணலீலாவை நடத்தி, ராமர் படத்துக்கு தீ
வைத்தவர் மணியம்மையார்.
ராவணன் திராவிட மன்னன் என்ற குரல்
தென்னகத்திலிருந்து ஒலித்தது. அவன் எங்களுக்கு கடவுள்- மகாத்மா என்று
கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள்.தீ பரவட்டும்.
--------------- "விடுதலை” 299-10-2012
6 comments:
உருப்படுமா இந்த நாடு?
இந்து மதத்தால் ஏற்படும் சீரழிவு : 30 நாட்களில் 37 பண்டிகைகளாம்!
அர்த்தமுள்ள இந்துமதம் என்கிறார்களே - அந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் எத்தனை எத்தனை மூட நம்பிக்கைகள்? எத்தனை எத்தனை நாட்கள் வீண்? பொருளாதார நாசம்? இதோ ஓர் பட்டியல் - வரும் நவம்பர் மாதத்திற்கு நாட்கள் 30 என்றால் இந்து மதப் பண்டிகைகள் மட்டும் 37 - உருப்படுமா நாடு?
நவம்பர் 2 - கார்வ சவுத்
நவம்பர் 2 - சங்கஷ்டி சதுர்த்தி விரதம்
நவம்பர் 6 - அஹொய் அஷ்டமி
நவம்பர் 10 - ஏகாதசி விரதம்
நவம்பர் 11 - பிரதோஷ விரதம்
நவம்பர் 11 - தந்தேராஸ், தன்வந்திரி ஜெயந்தி
நவம்பர் 12 - ஹனுமன் ஜெயந்தி, காலி சௌடாஷ்
நவம்பர் 13 - தீபாவளி, லஷ்மி பூஜை
நவம்பர் 13 - நாரக் சதுர்தசி
நவம்பர் 13 - அமாவாசை
நவம்பர் 14 - குஜராத்தி புத்தாண்டு (விக்ரம் சம்வத் 2069 தொடக்கம்)
நவம்பர் 14 - குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திரா
மற்றும் கர்நாடகாவில் கார்த்திகை மாதம் தொடக்கம்
நவம்பர் 14 - ஸ்கந்த சஷ்டி விரதம் தொடக்கம் (முருகனுக்குரியது)
நவம்பர் 14 - கோவர்த்தன் பூஜை
நவம்பர் 15 - பாய் தோஜ், யாம திவிதியை
நவம்பர் 15 - சித்திரகுப்த பூஜை
நவம்பர் 16 - மலையாளத்தில் விருச்சிக மாதம் தொடக்கம்
நவம்பர் 16 - தமிழில் கார்த்திகை மாதம் தொடக்கம்
நவம்பர் 16 - சபரிமலை கோவில் நடை திறப்பு
நவம்பர் 17 - வங்காளத்தில் அக்ரஹன் மாதத் தொடக்கம்
நவம்பர் 17 - சாத் பூஜை தொடக்கம்
நவம்பர் 19 - சூரசம்ஹாரம் ஸ்கந்த சஷ்டி
நவம்பர் 19 - சாத் பூஜை மாலை
நவம்பர் 20 - சாத் பூஜை காலை
நவம்பர் 21 - கோபஸ்தமி
நவம்பர் 22 - அக்ஷயம் நவமி- குஷ்மண்ட நவமி
நவம்பர் 24 - ப்ரபோதினி ஏகாதசி விரதம்
நவம்பர் 24 - சதுர் மாச விரதம் முடிவு
நவம்பர் 24 - துளசி விவாஹம் தொடக்கம்
நவம்பர் 24 - பந்தர்பூர் கார்த்திகை மேளா
நவம்பர் 25 - பிரதோஷ விரதம்
நவம்பர் 27 - வைகுந்த சதுர்தசி
நவம்பர் 29 - பவுர்ணமி
நவம்பர் 29 - தேவ தீபாவளி
நவம்பர் 29 - திரிபுரரி பவுர்ணமி
நவம்பர் 30 - வட இந்தியாவில் மகஷிரிஷ் மாதம்/ ஆகன் மாதம் தொடக்கம்
இவையெல்லாம் அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் உள்ள இந்துக்களின் முக்கியமான பண்டிகை நாள்களாம். (இதில் மாதத் தொடக் கம் என்பவற்றைக் கூடத் தள்ளிவிட முடியாது! ஏனெனில் அந்த நாள்களையும் பார்ப்பனர்கள் தங்கள் வசூலுக்கான நாள்களாகவே பயன் படுத்துகிறார்கள்.) அதாவது ஒரே ஒரு மாதத்திற்கு இத்தனைப் பண்டிகையாம்... விரதமாம்...இதையெல்லாம் கடைப் பிடிப்பதையே கர்மசிரத்தையாய் ஒருவர் செய்து கொண்டிருந் தால் விளங்குமா அவர் வாழ்க்கை! இது தான் இந்தியப் பண்பாடு என்று சொல்கிறார்களே, அப்படியிருந்தால் விளங்குமா இந்த நாடு!
இந்தப் பட்டியலைப் போட்டுவிட்டு, இது இந்திய நேரத்தின் அடிப்படையில் அமைந்த ஹிந்து பஞ்சாங் கத்தின் படி பட்டியலிடப் பட்டுள்ளது என்று தனிக்குறிப்பு வேறு! இவர்கள் சொல்லும் நல்லநேரம் இந்திய நேரப்படி என்றால் அமெரிக்காவில் எது நல்ல நேரம்?
ஆப்கானிஸ் தானில் எது நல்ல நேரம்? கிரீன்வீச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்புக்கொள்ளப்பட் டுள்ள உலகளாவிய நேரங்களில் எப்படி நல்ல நேரத்தைக் கணக் கிடுவது என்று உங்கள் பஞ்சாங்கத்தில் இல்லையே, ஏன்? நல்ல நேரம், கெட்ட நேரத்தையெல்லாம் உங்கள் பஞ்சாங்கம் இந்தியாவைக் கொண்டு கணக்கிடு கிறதே, அந்த நேரங்களின் தாக்கம் எல்லாம் உஸ்பெகிஸ் தானில் செல்லுபடியாகாதா? அதற்கு அங்கே பவர் இல்லையா?
இந்த லட்சணத்தில் ஹிந்து மதம் அறிவியல் பூர்வமானது என்று ஆகாச அளப்புகள் வேறு! மதப் பண்டிகைகளுக்கான விடுமுறை நாள்கள் அனைத்தையும் விருப்ப விடுப்பு நாள்களாக மாற்ற வேண்டும் என்றும், மதப்பண்டிகை விடுமுறையைக் குறைத்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பயனாக இருக்கு என்றும் பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் வலியுறுத்தி வருகிறதே!
மக்கள் பிரச்சினைக்காகப் போராட்டம், கடையடைப்பு, பந்த் என்று அறிவித்தால் நாட்டின் பொருளா தாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆடம் ஸ்மித்களாக மாறி கருத்து சொல்லும் அறிவு ஜீவிகள் எல்லாம் மதம் என்று வந்துவிட்டால் ஆட்டம் போடாமல் அடங்கி விடு வதேன்?
மதம் மனித குல வளர்ச்சிக்குத் தடை என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பதற்கு இவையெல்லாமே ஆதாரங்களா யிற்றே!
- ஈரோட்டுக் கண்ணாடி
கலாசாரம்
மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை, சமுதாய உறவு முறைகளை சீர்குலைக் கும் பொருளாதார முறையே செயல்பட்டு வருகிறது. மேலை நாடுகளில் தாய், தந்தை போன்ற குடும்ப உறவு முறைகள்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதனால் தான் பெரும்பா லான திருமணங்கள் அங்கு விவாகரத்தில் முடிகின்றன. (தினமணி 29.10.2012 பக்கம் 5)
- என்று திருவாய் மலர்ந் திருப்பவர் ஆர்.எஸ்.எஸ். ஆலோசகர் ஆடிட்டர் திரு. எஸ். குருமூர்த்தி அய்யர் என்பவர். இந்தியாவில் குடும்ப நல நீதிமன்றத்தில் நாளும் விவா கரத்து வழக்குகள் பெருகிக் கொண்டு இருக்கின்றனவே - இவை எல்லாம் எந்த அடிப் படையில்? இந்தியாவில் நிலவி வரும் சமுதாய உறவுமுறை - கலாச்சாரம் இவற்றைத் தடுத்து நிறுத்தவில்லையே! முதியோர் இல்லங்கள் இந்தியாவில் பெருகிவருவதும் இந்துக் கலாச்சாரத்தின் பரிணாமமோ! மேலை நாடுகளைவிட இந்து சமூக அமைப்பில்தானே மாமி யார் கொடுமைகள், மாமனார் கொடுமைகள், நாத்தனார் கொடுமைகள் என்ற சொல வடைகள் யதார்த்த முறையில் புழக்கத்தில் உள்ளன. கூட்டுக் குடும்பங்கள் அருகி வருவதற் குக் காரணம், இந்து சமூக அமைப்பில் பெண்கள் அடிமை என்ற பாத்திரத்தில் வைக்கப் படுவதிலிருந்து விடுபடுவது தானே!
இப்பொழுது கல்வி வளர்ந்ததால் காதல் மூலம் தனக்கொத்த இணையரைத் தேர்வு செய்வது - உரிமைகள் மீது காதல் கொள்வது என்கிற புதிய நோக்கும், போக்கும் விரிவடைந்து வருகின்றன.
பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லும் கீதையை இந்து மதத்தின் தத்துவார்த்தக் கருவூலமாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடும் இந்துத்துவ முகவரி கொண்ட குருமூர்த்திகளால் எந்தத் தைரியத்தில் இந்துவின் பாரம்பரிய சமூக உறவு முறைபற்றி சற்றும் கூச்சம் இல்லாமல் உயர்த்திப் பேச முடிகிறது? பெண்ணடிமை என்ற தத்துவத்தின்மீது, ஜாதி என்ற கட்டமைப்பின்மீதும் கட்டப்பட்டதுதானே இந்து சமுதாய உறவு முறைகள்? இந்த அநீதிகளுக்குப் பெயர் பாரம்பரிய சமூக உறவா? கலாச்சாரமா?
இந்துத்துவாவில் சகுனிகள் உண்டே - சக்களத்தி சண்டைகள் உண்டே அதன் காரணமாக ராமன் காட்டுக்குச் செல்லவில்லையா? மகுடம் தரிக்க முடியாத நிலை ஏற்படவில்லையா? கர்ப்பிணிப் பெண் சீதை காட்டுக்கு விரட்டப் படவில்லையா? (அதுவும் ஒரு வகையான விவாகரத்தை ஒத்த முறைதானே? அப்பொழுதும் இப்போதுள்ளது போன்ற குடும்ப நல நீதிமன்றம் இருந்திருந்தால் சீதைக்கு இராமனிடமிருந்து விவாக விடுதலை எளிதாகக் கிடைத் திருக்கத்தானே செய்யும்?) சீதைக்கு மட்டும் தானே அக்னிப் பரீட்சை? ராமனுக்கு இல்லாமல் போனது - ஏன்? இதற்குப் பெயர்தானே இந்துக் கலாச் சாரம்!
எல்லா வகையிலும் மேலை நாட்டுப் படிப்பு, சிந்தனை, வாழ்க்கை முறைகளைப் பின் பற்றுகிற இந்(து)த பார்ப்பனர் கள் ஒப்புக்குச் சப்பாணியாக ஏதோ ஒரு வகையில் சனாதன இந்து மதச் சக்கைகளை சரிகை கட்டி ஜொலிக்க வைக்க முயற்சிக்கும் வேலையில் இறங் குவது ஏன்? எந்தக் கார ணத்தை முன்னிட்டும் அவா ளின் பார்ப்பனீய சமூக அமைப் புக்கு கலாச்சாரத்துக்கு சரிவு வந்து விடக் கூடாதே என்ற கவலையால்தான்!
புரிந்து கொள்வீர்!
- மயிலாடன்
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விழிக்குமா?
மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் அமைச்சரவையில் இடை இடையே மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான் (இதில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியோ இயல்புக்கு மாறானது) மத்தியில் இப்பொழுது புதிதாக 22 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த அமைச்சர்கள் பலர் பதவி விலகியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு இடையில் ஓராண்டு இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வியூகங் களை வகுத்துச் செயல்படக் கிளம்பியுள்ளன.
ஏடுகள், இதழ்கள் அவரவர்களின் முதலாளி களின் ஆசையை பத்திரிகைகளில் கருத்தாக வெளியிடுவார்கள். மத்தியில் காங்கிரஸ் தலைமை யில் ஓர் அணியும், பி.ஜே.பி. தலைமையில் ஓர் அணியும் போட்டியிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். மூன்றாவது அணிக்கு மூக்கைச் சொறிந்து விடும் வேலையும் இன்னொரு பக்கத்தில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. உ.பி.யின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மூன்றாவது அணியை உருவாக் குகிறார் என்று இன்னொரு பக்கத்தில் செய்தி உலாவ விடப்படுகிறது.
தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற செய் திகள் தினுசு தினுசாக வந்துகொண்டே தானிருக்கும்.
எது எப்படியாக இருந்தாலும் நாட்டு மக்கள் மிக முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது - எந்தக் காரணத்தை முன்னிட்டும் மதவாத சக்திகள் மீண்டும் மகுடம் சூடக் கூடாது என்பதில் தான்!
உதிரிகளாக உதிர்ந்து போய் கடைசியில் காவிக் கொடி ஆட்சிக்குக் கால்கோள் விழா நடத்திட அனுமதித்து விடக் கூடாது.
ஒரு பட்டப் பகலில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கியவர்கள், குஜராத் என்ற மாநிலத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களின் கைகளில் இந்தி யாவின் ஆட்சியை ஒப்படைத்தால் அதைவிட தற்கொலைக்கு ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொரு ளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரால் பெரும் குளறுபடிகளைச் செய்து கொண்டுள்ளது. வெகு மக்களுக்குப் புரியாத - பொருத்தமில்லாத புள்ளி விவரங்களை வாரி இறைத்து என்ன பயன்? வெகு மக்களுக்கு வேண்டுவது எல்லாம் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதுதான். வருமானத் துக்குட்பட்டு வாழ்க்கையை நடத்துகின்ற அளவுக்கு விலைவாசி கட்டுப்படுத்தப்படுவதுதான். வருமானத் துக்கான வழிகள்தான்!
அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு உருவாக்கம் என்பவைதான் பெரும்பாலும் ஆட்சியிடம் எதிர்பார்க்கப்படக் கூடியவையாகும்.
இந்தக் கண்ணோட்டத்தில் இன்றைய அய்க்கிய முற்போக்கு அரசின் நடப்பு அமைந்துள்ளதா என்பது முக்கிய கேள்வியாகும்.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமையை அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருப்பது சரியானது தானா? எருதின் புண் காக்கைக்குத் தெரியுமா?
இந்த இரு பொருள்களையும் அடிக்கடி உயர்த்திக் கொண்டே போவது - விலைவாசிகளைத் தாறு மாறாக ஏற்ற வழி செய்து கொடுப்பது ஆகாதா?
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனம் என்கிற ஒட்டகத்தை நுழைய விடலாமா? சிறு சிறு வியாபாரங்களைச் செய்து அன்றாடம் பிழைக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்களின் தலைகளில் மண்ணை வாரிக் கொட்டுவது அல்லாமல் வேறு எதற்கு இது வழிவகுத்துக் கொடுக்கப் போகிறது?
கொக்கோகோலா, பெப்சி என்பவைகளுக்கு அனுமதியளித்ததன் விளைவு நம் உள்நாட்டு காளிமார்க்கும், வின்சென்ட்டும் முகவரியற்றுப் போக வழி செய்து விடவில்லையா? யதார்த்தமாகக் கண்ணெதிரில் காணும் இந்த உண்மைகளைப் பொது மக்கள் அறிய மாட்டார்களா?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் இப்படி நடந்து கொண்டது; பி.ஜே.பி. ஆட்சி அமைந்தால் இப்படி நடந்து கொள்ளாது என்று பொருளல்ல; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இதே பொரு ளாதாரக் கொள்கையைத்தான் பி.ஜே.பி.யும் பின்பற்றி வந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
பாமர மக்கள் நேற்று என்ன நடந்தது என்பதைக் கவனிக்கப் போவதில்லை. இன்று என்ன நடக்கிறது என்று நினைப்பதுதான் பாமர மக்களின் நினைப்பும், முடிவும் ஆகும். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இனியாவது வெகு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க விழித்துக் கொள்ளுமா? முயலுமா? எங்கே பார்ப்போம்!
நெருக்கடியில் இலங்கை: அய்.நா.வில் உலக நாடுகள் சரமாரிக் கேள்வி! இந்தியா மவுனம் ஏன்?
ஜெனிவா, அக்.29- நவம்பர் 1 அன்று ஜெனீவாவில் நடைபெற உள்ள இலங்கை மீதான அய்நா மனித உரிமை கள் அவையின் கால முறை விசாரணைக்காக, பல்வேறு நாடுகள் சர மாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத் துள்ளன. இலங்கைக்கு ஆதரவான நாடுகள் என்று கணிக்கப்படும் சீனாவும் பாகிஸ்தானும் கூட கேள்வி எழுப்பி யுள்ளன. ஆனால், உலகி லேயே அதிக எண்ணிக் கையில் தமிழ் பேசு வோரைக் குடிமக்களா கக் கொண்ட இந்தியா ஒரே ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல் மவு னம் சாதிக்கிறது. அய்நா மனித உரி மைகள் அவையின் காலமுறை விசாரணை என்பது ஒவ்வொரு நாட்டின் மனித உரிமை நிலை குறித்தும் நான் கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுவதாகும். இந்த நிகழ் வின் போது அரசாங்கத் தின் சார்பில் ஒரு அறிக் கையும், அய்.நாவின் சார்பில் ஒரு தொகுப் பறிக்கையும், அரசு சாராத அமைப்புகளின் சார்பில் ஒரு தொகுப் பறிக்கையும் ஆய்வுக் காக முன்வைக்கப்படும்.
அதன் பிறகு, விசா ரணை தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு அய்.நா. மனித உரிமை அவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே எழுத்து பூர்வமாக வைப்பார்கள். விசாரிக்கப்படும் நாடு அந்தக் கேள்விகளுக்கு விசாரணையின் போது பதிலளிக்க வேண்டும். அந்த வகையில் பல் வேறு நாடுகள் இலங்கை யிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டுள்ளன.
ஸ்பெயின், டென் மார்க், லிச்டென்ஸ் டெய்ன், மெக்சிகோ, கனடா, செக் குடியரசு, நெதர்லாந்து, இங்கி லாந்து, அமெரிக்கா, கியூபா, சுலோவேனியா, சுவீடன், ஆஸ்திரேலியா, சீனா, அயர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மொத்தமாக பதினோரு பக்கத்திற்கு கேள்வி கேட்டுள்ளன. அதிலும், இலங்கையை ஆதரிக்கும் நாடுகளான சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் கூட கேள்வி எழுப்பியுள்ளன.
ஆனால் மனித உரிமைகள் குழுவில் ஒரு முக்கிய நாடான இந் தியா இலங்கையிடம் ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை. (பன் னாட்டு அரங்கில் மவு னம் சாதிக்கும் இந்தியா - தன்னை தெற்காசி யாவின் வல்லரசு என்று நினைப்பதும், பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் தகுதி வேண்டும் என்று கேட்பதும் வெட்கக் கேடு!)
சரமாரிக் கேள்விகள்
உலக நாடுகள் கேட்டுள்ள கேள்விகளில் சில:
1. இறுதிக்கட்ட போரின் போது போர்க் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றம் உள் ளிட்ட பன்னாட்டு மனித உரிமைச் சட் டங்கள் மீறப்பட்டது குறித்து எப்போது நியாயமான விசாரணை நடத்தப்படும்?
2. இதுகுறித்த அய்.நா மனித உரிமை அவைத் தீர்மானத்தை நிறை வேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
3. ஆள்கடத்தல், சட்ட விரோத படுகொலை களைத் தடுப்போம் என்று 2008 ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயின?
4. இலங்கையின் மற்ற பகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்ட போதி லும், வடக்கில் தேர்தல் நடத்தப்படாதது ஏன்? வடக்குப் பகுதியில் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் நடத்துவதற்கான நாளைக் குறிப்பிட முடியுமா?
5. வடக்குப்பகுதியில், குறிப்பாக வன்னியில், ராணுவத்தைக் குறைப் பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஏதேனும் உண்டா?
6. கற்பழிப்பு உள் ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை களைத் தடுக்க என்ன செய்தீர்கள்?
7. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப் போது கொண்டு வரு வீர்கள்?
8. எல்.எல்.ஆர்.சி பரிந் துரைகள் எந்த அள வுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளன? இதற்கான தேசிய செயல் திட்டத்தின் நிலைமை என்ன? இதனை செயல் படுத்த போதுமான பணம் ஒதுக்கப்பட் டதா? செயல்படுத்தப் பட்டதை உறுதி செய் வது எப்படி? யார் கண் காணிப்பது?
9. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளில் 91 மட்டுமே தேசிய செயல் திட்டதில் உள்ளன. மீதமுள்ள 194 பரிந் துரைகளின் நிலை என்ன?
10. பத்திரிகையாளர் கள் மீதான அடக்கு முறைகளைத் தடுக்கவும் பேச்சுரிமையைக் காக்க வும் என்ன செய்தீர்கள்?
11. மானிக் ஃபார்மில் இருந்த உள்நாட்டு அக திகள் வெளியேற்றப்பட் டனர். ஆனால் அவர்கள் தமது சொந்த இடங் களுக்கு சென்று குடி யேற முடியாத நிலை இருப்பது ஏன்? மறு வாழ்வு அளிப்பதில் பன் னாட்டு விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? 300,000 பேர் உள்நாட்டு அகதிகளாக இருந்த நிலையில், அவர்களுக் கான வீட்டு வசதி ஏற் பாடுகள் எப்படி உள் ளது? சரணடைந்த போராளிகளின் நிலை என்ன?
12. போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆன பின்னரும் ஏன் அரசியல் தீர்வு எட்டப்படவில்லை? 13 ஆவது சட்டத் திருத் தத்தின் நிலை என்ன? அதிகாரப்பகிர்வை மறுப்பது ஏன்?
13. தன்னிச்சையான மனித உரிமைகள் ஆணையத்தை எப் போது அமைப்பீர்கள்?
14. மனித உரிமைக் காக குரல் கொடுப் போருக்கு என்ன பாது காப்பு? அரசை விமர் சிப்போரை மிரட்டுவது ஏன்? பாக்கியசோதி சரவணமுத்து மிரட்டப் பட்டது ஏன்? இது போன்ற நிலைமைகள் எதற்காக இன்னமும் நீடிக்கின்றன?
15. காணாமல் போன வர்களின் நிலை என்ன? அதனை விசாரிப்பதற் கான நடைமுறைகள், தீர்வுகள் என்ன?
16. மக்களின் நிலத்தை ராணுவமும் அரசும் பிடுங்கிகொள்வது குறித்து விளக்க முடி யுமா? வடக்கிலும் கிழக் கிலும் சிவிலியன் அர சாங்க முறை மூலமாக நில உரிமை சச்சரவு சரி செய்யப்படுவதற்கான திட்டம் என்ன?
17. சேனல் 4 வீடியோ, திரிகோணமலையில் மாணவர்கள் கொலை, 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கொல் லப்பட்டது, பொட்டு வில் பத்து பேர் படு கொலை, லசந்தா விக் கரம சிங்க படுகொலை, பிரகீத் எக்னலிகோடா காணாமல் போனது ஆகிய நிகழ்வுகளின் விசா ரணை என்ன ஆனது?
18. போர் முடிந்து மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் எதற்காக?
19. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இரண்டாண்டுகளாக பேசியும் முன்னேற்றம் இல்லாதது ஏன்? ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதற்கான திட்டம் அரசிடம் உண்டா?
20. அய்.நா அவையின் சார்பில் ஆறு சிறப்புக் குழுக்கள் இலங்கையின் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்று ஏற்கெனவே அனுமதி கேட்டுள்ளனர். அந்தக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப் படுமா? எப்போது?
21. மொழி உரிமை கள், மத உரிமைகள் காப்பாற்றப்பட என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?
- இப்படியாக நீண்ட கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் இலங்கை அரசு பதில் அளித்தாக வேண்டும்.
Post a Comment