நதிகளைப் புனிதம் என்று கருதி அதில்
நீராடினால் மோட்சம் என்ற கூற்றை இந்துமதம் என்ற பார்ப்பன - வேத மதவாதிகள்
கற்பித்து, அதனையும் தங்கள் வருவாய் ஊற்றுக்களாக மாற்றி ஏமாந்த மக்களைச்
சுரண்டி, சுகபோகம் அனுபவிக்கின்றனர்.
அப்படிப்பட்ட இந்திய நதிகளில் முதன்மையானது கங்கைதான்! இந்தப் புனித கங்கையைப் பற்றி இன்று ஒரு செய்தி.
புற்றுநோய் பற்றிய ஆய்வுப் பதிவு
நிகழ்வுகளில் ஒன்றாக, கங்கைக் கரையோரம் உள்ளவர்களுக்கு மற்றப் பகுதி வாழ்
மக்களைவிட புற்று நோய் வர அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறிந்துள்ளனர்!
புனித கங்கைக் கரையோரத்திற்கு இப்படி ஒரு சிறப்பா?
காரணம் கங்கையில் உள்ள அசுத்தங்கள்,
பிணங்களைக்கூட அப்படியே தள்ளிவிடும் பழக்கம் அங்கே உண்டு என்பது
கங்கைக்குப் போய் வந்தவர்கள் கண்ட காட்சிகள் ஆகும்!
புனித கங்கை கங்கா ஜலம், தீபாவளியன்று
கங்காஸ்நானம் ஆச்சோ? என்ற ஆச்சார அனுஷ் டானக் கேள்வி ஒரு பக்கம்; இங்குள்ள
கோயில் கோபுரங்களில் ஜீரணத்தோரண பூரணகும்பா பிஷேகத்தின்போது, கும்பங்கள்
மேல் கங்கா ஜலம் ஊற்றும் பழக்கம் உண்டு!
புனித கங்கையைச் சுத்தப்படுத்த அந்தத்
திட்டத்தின் கீழ் இப்போது 2000 கோடி ரூபாய் ஒதுக்கி செலவழிக்கிறார்கள்!
(Ganga Action Plan I & II) கங்கை ஆற்றுப்படுகை ஆணையத்திற்கு வரும் 10
ஆண்டுகளுக்குச் செலவழிக்க ரூ.15,000, (பதினைந்து ஆயிரம்) கோடி பணத்தை
ஆறாகக் கொட்டி சுத்திகரிக்கப் போகிறார்களாம்!
இப்படி ஒரு மோசமான நோய்த் தீர்த்தமான
கங்கையை, புனித கங்கை (Holy Ganges) என்று அழைக்கலாமா? அதன் நீரை தீர்த்தம்
என்று வாங்கிக் குடித்து நோய்க் கிருமிகளை உடலுக்குள் செலுத்திக்
கொள்ளலாமா? மூடத்தனம் அல்லவா?
பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற
தந்தை பெரியாரின் அறிவுரைதான் எப்படிப்பட்ட உண்மை என்பது இப்போதாவது புரிகிறதா?
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற
தந்தை பெரியாரின் அறிவுரைதான் எப்படிப்பட்ட உண்மை என்பது இப்போதாவது புரிகிறதா?
முன்பு ஒரு முறை இந்திய - பிரெஞ்சு
கலாச்சாரத்தை வலுப்படுத்த இந்திய நதிகளின் நீரை - பிரான்ஸ் நாட்டு நதிகளில்
விட முடிவு செய்தார் திரு. இராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது! பியூபுல்
ஜெயகர் என்ற அம்மையார் இந்திய கலாச்சார அமைப்பின் தலைவராக இருந்தபோது இந்த
அரிய (?) ஆலோசனையை வழங்கினார். கங்கை நீர் வருகிறது என்று கேள்விப்பட்ட
பிரெஞ்சு அரசு - பாரீசில் ஓடும் சேன் (Seine) நதியில் கங்கை நீரை ஊற்றிச்
சுற்றுச் சூழலுக்குக் கேடு செய்து விடக் கூடாது என்று தடை போட்டு, தங்களை
சுகாதாரக் கேடு என்ற அவலத்திலிருந்து காப்பாற்றிக் கொண் டார்கள்!
தொற்றுநோய்கள் இந்த நீரின் வழியே வரும் என்ற அறிவியல் உண்மைகளை
அறிந்தும்கூட படித்த முட்டாள்கள் வரை கங்கையை புனித நீர் என்று கூறு
கிறார்களே! வெட்கம்! மகா வெட்கம்!!
சென்னை காசிச் செட்டித் தெரு - சந்தில்
உள்ள (சவுக்கார்பேட்டைப் பகுதி) கடந்த 2006 செப்டம்பர் 6ஆம் தேதி (ஆறு
ஆண்டுகளுக்குமுன்) அங்குள்ள ஒரு கோயிலின் அர்ச்சகரான கே. தேவேந்திரகுமார்
என்ற தேவசங்கர் என்பவருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 25,000 ரூபாய்
அபராதமும், அடிஷனல் செஷன்ஸ் கோர்ட் I நீதிபதி M. மோனி என்பவர் கடந்த
திங்கள் 15.10.2012 அன்று விதித்து தண்டித்தார்.
இந்த அர்ச்சகர் தேவ சங்கர் என்ற
பார்ப்பனரிடம் (NIB Narcotics Intelligence Bureau) அதிகாரிகள் திடீர்
என்று சோதனை செய்தபோது ஒரு பாலித்தீன் பையில் 7 கிலோ கஞ்சாவை (பிரசாதம்
என்று கூறியிருப்பார் போலும்) ஒளித்து வைத்து விற்பனை செய்துள்ளார் என்பது
சந்தேகத்திற்கு அப்பால் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது என்று நீதிபதி
தனது தீர்ப்பில் கூறியுள்ளார்!
என்னே பக்தி! என்னே பக்தி வியாபார
நேர்த்தி! சிறைக்கஞ்சா பக்தி வியாபாரியான அர்ச்சகப் பார்ப்பனர் அங்கும்
தொழிலைத் துவக்குவாரோ என்னவோ?
சென்னை மத்திய சிறையில் 1976இல் மிசா
கைதியாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இருந்த போது, நடிகவேள் எம்.ஆர்.
ராதாவும் இருந்தவர். அங்கே அர்ச்சகர் வேடத்தில் வெளியே இருந்து வாரா வாரம்
கைதிகளுக்கு பக்தி போதிப்பது போன்ற வேடத்தில், விபூதிப் பொட்டலம்,
குங்குமப் பொட்டலம் போன்ற பொட்டலங்களைக் கொண்டு சிறைக் கைதிகளிடமே விற்றுத்
திரும்புவார்கள். இதை தான் கண்டுபிடித்ததாக கூறினார் என்று ஒருமுறை
கூறியது இப்போது நினைவுக்கு வந்தது!
பக்திப் போதையும், கஞ்சா போதையும் எவ்வளவு இணையர்களாகி விட்டார்கள் பார்த்தீர்களா?
--------------------- - ஊசி மிளகாய் 18-10-2012"விடுதலை”யில் எழுதிய கட்டுரை
8 comments:
புதிய வக்கீல்கள் புறப்படுகிறார்கள்
ராம் ஜெத்மலானி வக்கீல் தொழிலோடு நிற்க வேண்டும். அந்தத் தகுதியை - திறமையை தேவையில்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாத இடத்தில் திணிக்க முயன்றால் கடைசியில் உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும் என்கிற பரிதாப நிலைக்குத்தான் ஆளாக நேரிடும்!
ஏற்கெனவே ஊர் சிரித்த பிரேமானந்தாவுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து வாதாடி, கடைசியில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கித் தந்ததுதான் மிச்சம்! தொழிலிலேயே இந்த நிலை என்றால், மக்கள் நலன் சார்ந்த ஒரு பிரச்சினை யில் மூக்கை நுழைத்தால், எதிர்விளைவுதான் ஏற்படும்.
பி.ஜே.பி. ஆட்சியில் அளிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியைக்கூட வாய்தா காலத்துக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை இவரால்.
இந்த நிலையில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்ய முன் வந்திருக் கிறார்.
இவராகச் சொல்லுகிறாரா அல்லது இவருக்குப் பின்னால் இருந்து யாராவது இயக்குகிறார்களா என்று தெரியவில்லை.
ஒரு கேள்விக்கு முதலில் ராம்ஜெத்மலானி பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வைக்கப்படுகின்ற கேள்வி இது. ஏனென்றால் ஜெத்மலானி பிரபல வழக்குரைஞர் அல்லவா!
அகமதாபாத்தை யடுத்த நரோடா பாட்டியா எனும் இடத்தில் 35 குழந்தைகள், 39 பெண்கள் உட்பட மொத்தம் 97 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் (28.2.2002) பிஜேபியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாயாகோத் னானிக்கு 28 ஆண்டுகள் கடுஞ்சிறை விதிக்கப் பட்டுள்ளதே - இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறாரா குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி?
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜோத் சனா யாக்னிக் குஜராத் முதல் அமைச்சர் மோடி அரசுமீது வைத்துள்ள குற்றச்சாற்று மிக மிக முக் கியமானது. இந்த மாயா கோத்னானியை வழக்கி லிருந்து காப்பாற்ற முதல் அமைச்சர் மோடி அரசு தீவிரமாக முயன்றுள்ளது என்று கூறியுள்ளாரே!
மாயா கோத்னானிக்கு அப்போதைய விசா ரணை அமைப்புகள் அனைத்தும் (உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கு முன்னே) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்புக்குக் காரண மானவர்களைக் காப்பாற்றும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத் னானியின் பெயர்கூட இந்தக் குற்றத்தில் இடம் பெறாதபடி பார்த்துக் கொள்வதில் மிகக் கடுமை யாக முயன்றுள்ளனர் என்று நீதிபதி கூறி இருக்கிறார் என்றால், முதல் அமைச்சர் மோடியின் தலைமை எத்தகையது என்பது விளங்க வில்லையா? இவ்வளவுக்கும் மோடிதான் உள்துறைக்கும் பொறுப்பு! ஒரு நீதிபதியின் இந்தத் தீர்ப்பை அறிந்தபிறகும் ஒரு பிரபல வழக்குரைஞர் (ராம்ஜெத்மலானி) அந்தக் குற்றவாளியைப் பிரதமர் பதவிக்காகப் பரிந்துரைக்கிறார் என்றால், இவரையும் மோடியின் பட்டியலில் சேர்க்கத்தான் வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாதா?
2002இல் கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொன்று குவிக்கப்பட்டுள் ளனர்.
ஒரு மாநிலத்துக்குள் நடைபெற்ற இந்தக் கொடூரம், இந்தியா முழுமையும் நடைபெற வேண்டும் என்று கருதுகிறவர்கள், விரும்பு பவர்கள் தாம் மோடி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புபவர்களாக இருக்க முடியும்.
இன்னொன்றுக்கும் ஜெத்மலானி பதில் கூற வேண்டும். குஜராத்தில் சிறுபான்மையினர்மீது நடத்தப்பட்ட நர வேட்டையைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் வாஜ்பேயி என்ன சொன்னார்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று கேட்டாரே, நினைவிருக்கிறதா?
ராம்ஜெத்மலானி போன்றவர்கள் சமூகப் பொறுப்போடு கருத்துக்கூற முன் வருவார்களாக! 18-10-2012
தன்னை வென்றவன் தரணியை வெல்பவன்!
உளவியல் அறிஞர்கள், நம்மில் பலருக்குள்ள குணாதிசயங்கள் - நடத்தைகள்பற்றி ஆய்வு செய்து கருத் தறிவித்துள்ளது நம்மில் பலருக்கும் நம்மைப்பற்றி ஒரு தன்னாய்வு - சுயபரிசோதனை செய்து கொள்ள மிகவும் பயன்படும்.
நம் சொந்த விஷயங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது, ஆஹா, ஊஹு என்று துள்ளிக் குதிப்பதும், அல்லது உலகமே மூழ்கி விட்டது போல ஆர்ப்பரிப்பதும் உண்டு. அதே பிரச்சினை மற்றவர்களுக்கு ஏற்படும்போது, அதுதானே என்ற அலட்சியப் பார்வையோடும் பரவா யில்லை என்று எண்ணுவதும், அவர் களுக்கு அதைத் தாங்கியாக வேண் டிய நெறிப்பற்றி ஹிதோபதேசம் செய்வதும் உலக இயற்கை.
இதை உளவியல் அறிஞர்கள்; அடிப்படைப் பண்புப் பிழைகள் (Fundamental Attribution Error) என்று அழைக்கிறார்கள்!
தனக்கு ஏற்படும்போது, தனக்காக உலகமே ஓடோடி வர வேண்டும் என்பதுபோல ஓங்காரக் கூச்சல்; அதுவே மற்றவருக்கு வரும்போது அதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்தான் சார்; இதைப்போய் பெரிதுபடுத்தலாமா? என்று தத்துவப் பேருரை - அருளுரை - வழங்குவார்கள்!
மற்றவர்களுக்கு வரும் நோய் - துன்பம் எதுவானாலும் அதை தனக்கே வந்ததுபோல, எண்ணி, அதனைப் போக்கிடத் தேவையான முயற்சிகளை எடுப்பதுதான் மனிதன் பெற்ற அறிவின் பயன் என்றார் வள்ளுவப் பெருந்தகை!
அறிவினால் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாக்கடை (குறள்)
மேற்காட்டிய அடிப்படைப் பண்புப் பிழைக்கு என்ன மூல காரணங்கள்?
1. மனோ தத்துவ அறிஞர்கள் இப்படிக் கூறுகிறார்கள். பார்வைகள் ஆயிரம்; தனி நபர்களை நாம் கூர்ந்து பார்க்கும்போது நம் கவனம் அந்த நபர்மீது விழுகிறது.
ஆனால் நாம் நம்மைக் கண்காணிக்கும் சூழலில் நம்மை மட்டும் பார்க்காமல் விட்டுவிட்டு, சுற்றியுள்ள சூழல்களில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம்.
2. அவனுக்கு அப்படித்தான் வேணும்; நம் சிந்தனைகள் பெரும்பாலும் ஆழ் மனதிலேயே இடம் பெறுகின்றன.
குறிப்பிட்ட நபர்மீது நம் மனதுக்கு அறிந்தோ அறியாமலோ வெறுப்பு ஏற்பட் டிருந்தால் அந்நபர் தடுக்கி விழும்போதே அவனுக்கு இது தேவைதான் என்று நினைப்பதோடு, அவர் தடுக்கி விழுவ தற்கான காரணங்கள்மீது நாம் கவனம் செலுத்தாமல் போயிருக்கலாம்.
சரி, இப்பிழையை சமாளிப்பது, சரி செய்வது - எப்படி?
புதிதாகப் பணியில் அமர்த்தப்பட்ட, நபர் ஏதேனும் தவறு செய்யும்போது, நாமும் பணியில் சேர்ந்தபோது இப்படிப் பல தவறுகள் செய்துள்ளதை சற்று நினைவூட்டிக் கொண்டால் குறையோ, குற்றமோ பெரிதாகத் தெரியாது. கற்றுக் கொடுத்து அவர்கள் மேலும் ஊக்கப் படுத்தி வேலை வாங்க அது உதவும்!
அவர்களை கண்டிப்பதைவிட, தண் டிப்பதைவிட, இப்படி இதமான விளக்கத் தைக்கூறி, மீண்டும் அவர்கள் அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருக்க, திருந்தியவர்களாக்கிட முடியும்!
அடக்குமுறைகள் பயன்படாத இடத்தில் அன்பும், பரிவும் பெரிதும் பயன்படும்.
புதுமண வாழ்விணையர்கள் விஷ யத்திலும்கூட இது பொருந்துமே!
பெருந்தன்மை காட்ட வேண்டிய சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததாக மேலே இருக்கும் நிருவாகிகள் எண்ண வேண்டும். அதன்மூலம் அவர்களும் உயர முடியும்!
ஹாலோ எபெஃக்ட் (Halo Effect) என்பது கவனத்தை ஈர்க்கும் வியப் படை விளைவு ஆகும்!
உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை - தன்நம்பிக்கை அவசியம் தேவை. அது இருந்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது. உங்களை எதிர்வரும் பல சிக்கல்களையும் அறிவி யல், உளவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்குத் தன்னம் பிக்கை தானே வரும்; வளரும்.
தன்னை வெல்வான் தரணியை வெல்வான் என்ற அறிவுரை (அண்ணா வின் மேற்கோள் அறிவுரை இது) கை கொடுக்கும்; நம்மை கரை சேர்க்கும்.
- கி.வீரமணி
18-10-2012
என்ன குழப்பம்?
கூடங்குளத்தில் அணுமின் நிலைய எதிர்ப் பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முண்டா தட்டினார் கேரள மாநில முன்னாள் முதல் அமைச்சர் அச்சுதானந்தன் - அது தவறுதான் என்று இப்பொழுது அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்க்கிறார். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனோ பச்சைக் கொடி காட்டுகிறார். பீம்சிங், இது என்ன குழப்பம்! 18-10-2012
புதிய கடவுள்
மேற்கு வங்கத்தில் வாழும் பழங்குடி மக்கள் நவராத்திரி விழாவில் கடவுள் பொம்மைகளுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யின் படத்தையும் வைத்துப் பூஜை செய்கிறார் களாம். கடவுள்கள் இப்படித்தான் தோன்றி இருக்குமோ! குடியரசுத் தலைவர் என்றால் பொம்மைதான் என்று நினைத்தார்களா? 18-10-2012
துப்பாக்கி
என்னதான் இந்திய அரசு, தம் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாலும் சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்தப் போவதில்லை என்பது கசப்பான உண்மையும், அனுபவமுமாகும்.
இராமேஸ்வரத்திலிருந்து சென்று அக்டோபர் 15ஆம் தேதி 600 விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மூன்று போர்க் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியுள்ளனர்.
இந்தத் தொடர் கதைக்கு முற்றுப்புள்ளி கச்சத்தீவு மீட்பு - அதற்கு முதற்கட்டமாக தமிழக மீனவர்களுக்குப் துப்பாக்கி வழங்கலாமே! 18-10-2012
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சிறப்புரையாற்றினார்.
அதில் இயக்கத்தில் தலைமையை முன்னி லைப்படுத்தி பணி செய்ய வேண்டும். பெரியாரைப் போன்ற தலைவர்கள் இனி வரலாற்றில் பிறந் திட வாய்ப்பே இல்லை என்கிற அளவிற்கு சிந்த னைக் களஞ்சியமாக வாழ்ந்திருக்கிறார். ஈடு இணையற்ற சுயசிந்தனை யாளர்.மாற்றுக் கொள்கை உள்ளவர் களையும் மதித்தவர் பெரியார்.
பெரியாரை சந்திக்க வருபவர்கள் வரும்போது ஒருவித சிந் தனையோடு வருவார்கள், திரும்பி போகும் போது வேறு சிந்தனையோடு போவர். ஆரியம் பெரி யாரிடம் மட்டும்தான் சரியாக அடிவாங்கியி ருக்கிறது. உத்தரப் பிர தேசத்தில் பெரியார் மேளாவின் போது கன்சி ராம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அளித்த பதிலில் இதனை மேற் கோள்காட்டியிருக் கிறார்.வேருக்கே சென்று போரிட்டவர் பெரியார் என்று.
பெரியாரிடம் பல்வேறு தலைவர்கள் கொண்டிருந்த பற்றும், பாசமும் எத்தகையது என்பதையும், பெரியார் உழைத்த உழைப்பை யும், சிறப்பாக எடுத்துக் காட்டினார். மேலும் உலகெங்கும் மதச்சண் டைகள் நடந்து வரு வதையும், மதமற்ற உலகுஅமைந்திட பெரியார் கருத்துகள் காரணமாக அமையும். நம்முடைய நேரத்தை சிறப்புமிகுந்த இயக்கப் பணிகளில் ஒதுக்கி நம் முடைய பங்களிப்பை உழைப்பினை செலுத்துவோம் என்று கூறி முடித்தார்.18-10-2012
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை-முழக்கங்கள் (22-10-2012)
(1) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
(2) வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
(3) வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வாழ்கவே!
(4) ஒழிக ஒழிக ஒழிகவே
வருணாசிரமம் ஒழிகவே!
(5) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதி ஒழிக ஒழிகவே!
(6) ஒழிக ஒழிக ஒழிகவே
தீண்டாமை ஒழிக ஒழிகவே!
(7) ஒழிக ஒழிக தீண்டாமை ஒழிக!
கோயில் கருவறையில்
கோயில் கருவறையில்
ஒழிக ஒழிக தீண்டாமை ஒழிக!
(8) அர்ச்சகராக்கு, அர்ச்சகராக்கு
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு, அர்ச்சகர் ஆக்கு!
(9) பேதம் வேண்டாம், பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால்
பக்தியின் பெயரால்
பேதம் வேண்டாம், பேதம் வேண்டாம்!
(10) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா, அர்ச்சகனா?
தமிழன் மட்டும், தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?
(11) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழனெல்லாம்
தமிழனெல்லாம்
வீதியிலா, வீதியிலா?
குருக்கள் பார்ப்பான் மட்டும்
குருக்கள் பார்ப்பான் மட்டும்
கருவறையிலா? கருவறையிலா?
(12) தாழ்த்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்
அய்.ஏ.எஸ். ஆகலாம், அய்.ஏ.எஸ். ஆகலாம்
அர்ச்சகர் ஆகக்கூடாதா?
அர்ச்சகர் ஆக முடியாதா?
(13) பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர்
நீதிபதியாகலாம், நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆகக்கூடாதா?
அர்ச்சகர் ஆக முடியாதா?
(14) ஆண்டவன் அனைவருக்கும் பொதுவா?
ஆண்டவன் அனைவருக்கும் பொதுவா?
அப்படியானால், அப்படியானால்
பிராமணன் என்றும், சூத்திரனென்றும்
பிராமணன் என்றும் சூத்திரனென்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?
(15) தமிழக அரசே, தமிழக அரசே
விரைவுபடுத்து, விரைவுபடுத்து
உச்சநீதிமன்றத்தில்
உச்சநீதிமன்றத்தில்
நிலுவையில் இருக்கும்
நிலுவையில் இருக்கும்
அர்ச்சகர் வழக்கை
அர்ச்சகர் வழக்கை
விரைவுபடுத்து, விரைவுபடுத்து!
(16) மத்திய அரசே, மத்திய அரசே
திருத்து திருத்து
சட்டத்தைத் திருத்து
சட்டத்தைத் திருத்து
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது
என்பதற்குப் பதில்
என்பதற்குப் பதில்
ஜாதியை ஒழிக்க
ஜாதியை ஒழிக்க
திருத்து திருத்து
சட்டத்தைத் திருத்து
சட்டத்தைத் திருத்து!
(17) தமிழக அரசே, தமிழக அரசே
அர்ச்சகர் பயிற்சி பெற்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற
தோழர்களை, தோழர்களை
பணியில் அமர்த்து, பணியில் அமர்த்து!
(18) ஒழிக ஒழிக ஜாதி ஒழிக!
வளர்க வளர்க சமத்துவம் வளர்க!
(19) வெல்லட்டும் வெல்லட்டும்
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் வெல்லட்டும்!
(20) வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
(21) போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!
-திராவிடர் கழகம்.
18-10-2012
மனிதத் தன்மை
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். பெரியார் -(விடுதலை, 13.8.1961)
Post a Comment