Search This Blog

28.10.12

விஜயதசமி எனப்படும் தசராவின் கதை

தசராவின் கதை


இன்றைய தினம் விஜயதசமி எனப்படும் தசராவை அப்பாவி மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக் கின்றார்கள். தசராவைப் பற்றி இந்து புராணக் கதைகள் விலா வாரியாக விவரிக்கின்றன. பத்துத் தலை இராவணனைப் பற்றி புராணங்கள் புளுகித் தள்ளுகின்றன. தீமையை நன்மை வெற்றி கொண்டதால் இந்த விழாவாம். இந்தக் கதைகளை எல்லாம் பகுத்தறிவாளர்களால் நம்ப முடியுமா? இந்தக் கதைகளின் உண்மை முகத்தைக் கண்டால் அருவருப்பே மிஞ்சும்.

அயோத்தி மன்னனான இராமனுககும், இலங்கையை ஆண்ட இராவணன் என்னும் அரசனுக்கும் இடையே நிகழ்ந்த போர் என்பதே உண்மை.
சீதை மட்டுமா பழி வாங்கப்பட் டாள்? சூர்ப்பனகைப் பழி வாங்கப் பட்டதைப்பற்றி என்னவென்று சொல்வது? இலக்குவனிடத்திலே, தன் அன்பான காதலை எடுத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக அவளின் அழகிய மூக்கு வெட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? சூர்ப்பனகையின் காதலை ஏற்றிட இலக்குவன் மறுத்திருக்கலாம். அதற்கான உரிமை அவனுக்குண்டு. ஆனால் அவளின் மூக்கை வெட்டுவதென்பது என்ன நியாயம்? வெள்ளைத் தோல் கொண்டவன் என்கின்ற ஆணவத் திமிர்தானே இதற்குக் காரணம். வெள்ளை நிறத்தினரான ஆரியர்கள், கறுப்பு நிறத்தினரான தென்னிந்தியர் களை வெறுத்ததுதானே இதற்குக் காரணம்? இங்கு இலக்குவனின் மனிதப் பண்பு கீழ்த்தரமானதாக உள்ளது. காட்டுமிராண்டிகள்கூட, தன் அன்பை எதிர்பார்த்து வந்த பெண்ணை இந்த வகையில் மானபங்கப் படுத்த மாட்டார்கள்.

இராவணனின் நாகரிகத்தை அதே சமயம் நாம் போற்ற வேண்டியுள்ளது. அசோகவனத்தில் சீதை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறாள். தன் அதிகாரத்தின்கீழ் இருக்கும் சீதையை இராவணன் நினைத்திருந்தால், என்னவெல்லாமோ செய்திருக்க முடியும்.
ஆனால் இராவணனோ நாகரிகம் மிக்கவன். மனிதநேயக் காவலன். சீதையினிடத்தில் பண்புடன் நடந்து கொண்டான். தன்னுடைய தங்கை சூர்ப்பனகையை மூக்கரிந்து மானபங்கம் செய்த இலக்குவனின் அண்ணி என்கிற வகையில் சீதையை பழி வாங்கி இருக்கலாம். ஆனால் நாகரிகம் மிக்க இராவணன் அவ் இழி நிலைக்குச் சென்றானில்லை. இராவணன் மரியாதைக்குரியவனாக இங்கே தோற்றமளிக்கிறான். நற்பண்புகள் கொண்ட மனிதனாக இராவணன் மிளிர்கின்றான்.

ஆனால் காலத்தின் போக்கு எதிர் திசையில் அல்லவா அமைந்து விட்டது. இராவணன் மாபாதகன் என்றல்லவா வருணித்து விட்டார்கள் மாபாதகர்கள்.
வெண்தோல் கொண்ட ஆரிய அரசன் இராமனுக்கும், கருமை நிறத் திராவிட அரசன் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போர்தானே இது.
இன்றைய தலித்துகள் இருக்கும் நிலைமைக்கும், அன்றைய இராவணன் இருந்த நிலைமைக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே. ஆனாலும் ஆரிய சூழ்ச்சிக்கு இராவணன் இரையானானே?

குரங்குப் படையின் கதைதான் என்ன? குரங்குப் படை என்பது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தானே? கருந்தோல் திராவிடர்களை இழிவுப்படுத்தத்தானே இந்த குரங்குப் படையைப் பற்றிய கதை.

இலஜோரி இராம்பாலி என்பவர் அம்பேத்காரியவாதி. அனைவராலும் மதிக்கப்படுபவர். அவர் இராவணனை சர்வ சாதாரணமாக இராவணன் என்று கூறுவதில்லை, மகாத்மா இராவணன் என்றே கூறுவார்.

உழைப்பாளி வர்க்கத்தை அடிமைப்படுத்தி அதனால் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நயவஞ்சக ஆரியர்களின் கதைதான் இந்த விஜயதசமியைப் பற்றிய கதை.

இராவணன் என்றும் மாமனிதனாகத் திகழ்ந்தான் என்பதுதானே உண்மை.
இராம் பாலி கூறுகிறார்: தீபாவளி அன்று தீபங்களின் அணிவகுப்பு என் கிற வகையில் அதை இரசிக்கிறேன். ஆனால் இராமனின் கதையை என் னால் நம்ப முடியவில்லையே?

அம்பேத்கார் தத்துவத்தை பின்பற்றும் இராம்பாலியின் கள்ளங்கபடமற்ற கூற்று அனைவரும் ஏற்கத்தக்கது.

                             ----------------------------------------"'விடுதலை” 27-10-2012

30 comments:

தமிழ் ஓவியா said...

மதுரை முழக்கம்!


எது தேவை? ராமனா? சேது சமுத்திரத் திட்டமா? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் ஒன்று மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது (26.10.2012).

சர்ச்சைப் புயலைக் கிளப்பியிருக்கும். இந்தத் திட்டம் குறித்து மிக முக்கியமான கால கட்டத்தில் திராவிடர் கழகம் இந்தக் கடமையினை ஆற்றியிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான பிரச்சினையில் நேற்றைய சிறப்புக் கூட்டம் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் என்பதில் அய்யமில்லை.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கு ஏற்கும்படி இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல. மாறாக ஒட்டு மொத்தமான தமிழர்களின் அடிநாதம் போன்ற - நாட்டின் வளர்ச்சி நோக்கிப் பாயக் கூடிய அதி முக்கியமான பிரச்சினை என்பதால் பல்வேறு அமைப்புகளை, கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கு ஏற்குமாறு செய்யப்பட்டது.

அதுபோலவே கருத்துரையாற்றிய ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு, அருமையான கருத்துக்களை - சுருக்கமாக - செறிவாக கருத்து வளத்துடன் எடுத்துரைத்த பாங்கு பாராட்டத்தக்கதாகும்.

பேசப்பட்ட கருத்தின் சாரம்

1) சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு கனவுத் திட்டமாகும்.

2) இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பொருளாதார நிலை செழித்தோங்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும்; இந்திய அளவிலும் அந்நிய செலாவணி குவியும். தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள் தூத்துக்குடி முதல் எண்ணூர் வரையிலான பெரிய சிறிய துறைமுகங்கள் வளர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொருளாதாரம், வேலை வாய்ப்புக் கண்ணோட்டத்தில் பெரும் மாற்றங்களை மலர்விக்கும்.

3) 2427 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும், இந்தத் திட்டத்தில் 75 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தத் திட்டத்தை முடக்குவது மக்களின் வரிப் பணம் விரயமாக்கப்படுவதாகும். திட்டத்தின் செயல்பாட்டில் கால நீட்டிப்பு, திட்டத்தில் செலவினத்தை அதிகப்படுத்தும்; இது அரசுக்கு (அதாவது மக்கள் பணத்துக்கு) இழைக்கப்படும் அநீதியாகும்.

4) இந்தத் திட்டம் ஏதோ மேம்போக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல - நீரி என்ற (சூநநச) தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டதாகும். இதில் குறுக்குச்சால் ஓட்டுவது பொறுப்பற்ற செயலாகும்.

தமிழ் ஓவியா said...

5) உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட சுற்றுச் சூழல் விற்பன்னர் டாக்டர் ஆர்.கே. பச்சோரி குழு - ராமன்பாலம் என்று புராணீக மனப்பான்மையோடு முட்டுக்கட்டை போடும் அந்த ஆறாவது நீர் வழித் தடம்தான் - இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகந்தது என்று சொன்னபிறகு உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ மேலும் காலம் கடத்துவது உகந்ததல்ல - தேவையும் அல்ல!

6) மக்களுடைய வளர்ச்சித் திட்டத்தில் மத சம்பந்தப்பட்ட புராண கற்பனைப் பாத்திரமான ராமன் என்ற பாத்திரத்தை முன்னிறுத்தி, முடக்குவது அசல் பிற்போக்குத்தனமும், கடைந்தெடுத்த மூடத்தனமுமாகும். இந்தக் கண்ணோட்டபடிப் பார்த்தால் எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் அரசு செயல்படுத்த முடியாது.

7) உச்சநீதிமன்றம், சட்டத்தையும், விதிமுறைகளையும், நிபுணர்களின் அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர, வேறு மத ரீதியான உணர்வுகளுக்கு (Sentiments) முக்கியத்துவம் அளிக்கக் கூடாது - அறவே பொருட்படுத்தவும் கூடாது.

8) நீதிமன்றமும் சரி, மத்திய அரசும் சரி - இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்(51A(h))விஞ்ஞான ரீதியான மனப்பான்மை என்பதற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

9) பல நாடுகளின், கடல்களிலும் மணல் திட்டுகள் உண்டு - அதேபோலதான் ராமர் பாலம் என்று கதைக்கிறார்களே - அந்த மணல் திட்டுமாகும். மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இத்தகு மணல் திட்டுகளில் கடவுள் நம்பிக்கையைத் திணிக்கவில்லை. அர்த்தமுள்ள இந்து மதம் என்று சொல்பவர்களிடத்தில் தான் இந்தப் பிற்போக்குத்தனம் கோலோச்சுகிறது.

10) இராமாயணம், ராமன் என்பதெல்லாம் வருணாசிரம தர்மத்தைக் கட்டிக் காப்பதற்கான குறியீடாகும். 21ஆம் நூற்றாண்டிலும் அதனை, ராமன் என்ற பெயரை முன்னி றுத்திப் புதுப்பிக்கப் பார்க்கிறார்கள் - இதில் எச்சரிக்கையாக பார்ப்பனர் அல்லாத மக்கள் இருக்க வேண்டும்.

11) ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் மதவாத இந்துத்துவா அமைப்புகள் அவை ராமனைத் திணிப்பதைப் புரிந்து கொள்ள முடியும். (உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சேது சமுத்திரத் திட்டத்தை தடம் ஆறாவது வழியாக செயல்படுத்த முடிவு செய்ததே மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தபோது தான்; இப்பொழுது ராமனை முன்னிறுத்துவது பிந்தைய கால அரசியலுக்கான சந்தர்ப்பவாத தந்திர உபாயமே!)

12) அண்ணா பெயரையும், திராவிட என்ற இனச் சுட்டுப் பண்பாட்டுப் பெயரையும் கட்சியில் தாங்கிக் கொண்டுள்ள அண்ணா திமுக ஆட்சி, ராமனை முன்னிறுத்துவது அண்ணாவுக்கும், திராவிட இயக்கத்துக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். (திராவிட இயக்கத்தில் ஆரிய ஊடுருவல் என்றே தான் வரலாறு நெடுகப் பேசப்படும்)

13) இந்த நிலையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் முதுகெலும்பு போன்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வைக்க தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் - குரல் கொடுக்க வேண்டும் போராட வேண்டும் - திராவிடர் கழகத் தலைவர் தலைமை ஏற்க வேண்டும். வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும் என்பவைதான் திராவிடர் கழகம் ஒழுங்கு செய்த மதுரை சிறப்புக் கூட்டத்தில் பேசப்பட்டவைகளின் சாராம்சமாகும்.

தமிழர்கள் சிந்திப்பார்களாக! அரசுகளும், உச்சநீதிமன்றமும் உணர்வதாகுக! 27-10-2012

தமிழ் ஓவியா said...


தினமணியின் கருத்துக்கு வாசகரின் கண்டனம்!


முன்னணி தமிழ் செய்தித் தாளான தினமணி யின் அய்ம்பதாண்டு கால வாசகன் நான். ஜனநாயகம் தழைக்கவும், சிறந்த அரசாட்சி நடைபெறவும் தேவை யான நியாயமான கருத்துகளை வலியுறுத் தும் நாளிதழ் அது. அக்கருத்துகள் எப்போதும் ஆக்கபூர்வமான விமர்சனங் களாகவும், நாட்டினை மகாத்மா காட்டிய வளர்ச்சிப் பாதையில் செலுத்துபவை களாகவும் இருக்கும்.

ஆனால் அண்மைக் காலமாக தினமணி ஒரு மாறுபட்ட நிலையை மேற்கொண்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரித்தும், மற்றொரு கட்சியைக் கடுமையாகவும் விமர்சித்து வருகிறது. கூறப்போனால், ஒரு கட்சியின் ஒலிபெருக்கியாகவும், அக்கட்சியின் பத்திரிகையாகவுமே அது மாறிப் போய் உள்ளது.

எடுத்துக்காட்டாக, இன்றைய தினமணியைப் பார்த்தால் ஆளுங் கட்சிக்குக் கண்டனம் தெரிவிக்க தி.மு.க. கறுப்புச் சட்டையை அணிவது என்று முடிவு செய்திருக்கும் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. அத்துடன் வேறொரு இடத்தில் கறுப்புச் சட்டை பாசிசத்தின் அடையாளம் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இத்தகைய கட்டுரை தினமணியில் வெளி வந்திருப்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. தனது கருத்துகளை அது தெரிவிக்கலாம். ஆனால் எவ்வாறு ஒரு கேவலமான, தேவையற்ற கருத்தை ஒரு அரசியல் கட்சி மீது அது சுமத்தலாம்?

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, கறுப்புச் சட்டை என்றால் அது, தமிழ் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியவரும், சுயமரி யாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் காந்தி யுடன் கலந்து கொண்டு போராடியவரு மான மாபெரும் பெரியாருடன் தொடர்பு படுத்திக் காண்பதே ஆகும்.

என்னைப் போன்ற பெரியார் பற்றாளர் களின் உணர்வுகளை தினமணியின் கருத்து பெரிதும் புண்படுத்தியுள்ளது. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனும் அல்ல; ஆனால் நான் தீவிர பெரியார் பற்றாளன். உங்கள் கருத்து பெரியாரின் தொண்டர்களைக் கேலி செய்வதாக இருக்கிறது.

வரலாற்றுப் பின்னணி என்ற பெயரில் இத்தகைய கேவலமான கருத்துகளை வெளியிடுவது மிகவும் இழிவானதும், கண்டிக்கத் தக்கதுமான செயலாகும்.

கறுப்புச் சட்டையைக் கண்டனம் செய்து பொறுப்பற்ற முறையில் கட்டுரை எழுதியிருப்பதற்கு நீங்கள் வெளியீட்டாளர் என்ற முறையில் மன்னிப்பு கேட்பீர்கள் என்று நான் எதிர்பாக்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
மறைமலை

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வைக்க தமிழர் தலைவர் வீரமணி தலைமையேற்க வேண்டும்!

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வைக்க
தமிழர் தலைவர் வீரமணி தலைமையேற்க வேண்டும்!
நாங்கள் அணிவகுத்து நிற்கத் தயார்!
மதுரையில் ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் சங்கநாதம்!

- நமது சிறப்புச் செய்தியாளர்

மதுரை, அக்.27- தமிழர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கனவுத் திட்டமான வளர்ச்சி திட்டமான சேது சமுத் திரக் கால்வாய்த் திட் டத்தைச் செயல்படுத்த வைக்கும் முயற்சிக்கு திராவிடர் கழகத் தலை வர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்க வேண் டும் என்று பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கூறினர்.

எது தேவை? ராமனா? சேது சமுத்திரத் திட் டமா? எனும் தலைப் பில் மதுரை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்புக் கூட் டம் மதுரை விக்டோ ரியா எட்வர்ட் மன்றத் தில் நேற்று (26.10.2012) இரவு 7 மணிக்கு சிறப் பாகத் தொடங்கப் பட்டது.

கூட்டம் தொடங்குவ தற்கு முன்னதாகவே மாலை 6 மணி முதல் பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் வந்த வண்ணமாகவே இருந் தனர். இருக்கைகள் போதாமல் சுற்றிலும் பொது மக்கள் நிரம்பி வழிந்த நிலை.

சிறப்புக் கூட்டத் திற்கு தென் மாவட்டப் பிரச்சாரக் குழு அமைப் பாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பின ருமான மதுரை தே. எடிசன்ராஜா தலைமை வகித்தார்.

தமிழ் ஓவியா said...

நெல்லை மண்டல திராவிடர் கழகத் தலை வர் பொறியாளர் சி. மனோகரன், மதுரை மண்டல செயலாளர் மீ. அழகர்சாமி, மதுரை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க. அழகர், செயலாளர் இரா. திருப்பதி நீதியரசர் பொ. நடராசன் (ஓய்வு) புறநகர் மாவட்ட தலை வர் மா. பவுன்ராசா, செய லாளர் அ. வேங்கை மாறன், மாவட்ட பகுத் தறிவாளர் கழக செய லாளர் சுப. முருகானந் தம், தலைவர் எஸ். முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா. நேரு, அனைவரையும் வரவேற்று உரையாற் றினார். மதுரை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வே. செல்வம் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்தார்; தோழர்கள் நா. முரு கேசன், ஆர். முருகானந் தம், அ. ஆறுமுகம், இரா. இளங்கோவன், ச. நாக ராசன், க. மாரி ஆகி யோர் நிகழ்ச்சி ஏற்பாடு களைக் கவனித்தனர்.

நிகழ்ச்சிகளில் பங் கேற்று உரையாற்றிய பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களுக்குக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை கள் அணிவித்துச் சிறப்பு செய்தார்.

தமிழ் ஓவியா said...

வா. நேரு

வரவேற்புரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா. நேரு அவர்கள் தமதுரை யில் வெறி நாய்க் கடிக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் அவர்களை அன்றைய மதவாதிகள் எதிர்த்தனர். நோய் என் பது மனிதன் செய்த பாவத்திற்குக் கடவுள் கொடுத்த தண்டனை! அதனைத் தடுப்பது கடவுள் கட்டளைக்கு விரோத மானது என்று மதவெறியர்கள் அன்று எதிர்த்ததைப் போல. இன்றைய தினம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமன் என்ற இந்துமத அவதாரம் என்ற கற்பனையைப் பயன்படுத்தித் தடுக்கிறார்கள் என்றார்.

மதுரை மண்டல திராவிடர் கழக செயலாளர் மீ. அழகர்சாமி அவர்கள் தமதுரையில், 1860 முதல் சேது சமுத்திரத் திட்டம் - ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி, எப்படியெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு, கடைசியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்போது செயல்பட முனையப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவித்தார்.

பேராசிரியர் அருணன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன் அவர்கள் தமதுரையில் முக்கியமாகக் குறிப்பிட்ட தாவது:
பெரியாரின் உண்மையான சீடர்கள் இந்த மிக முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துக் கொண் டது பொருத்தமானது. இன்றைக்கு ராமன் பாலம் என்று கதைக்கிறார் களே. அந்த ராமனுக்கும், பாலத்துக்கும் எந்தவித மான சம்பந்தமும் கிடையாது.

அமிர்தலிங்க அய்யரின் மூத்த சகோதரர் டி. பரமசிவ அய்யர் எழுதியது.

ராமாயணமும், இலங்கையும் என்பது இதில் ராவணனின் லங்கா மத்திய பிரதேசத்தில் இருந்தது என்கிறார்! இப்போதும் அந்த மாநிலத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் சுவேலா என்ற சிறுகுன்றம் அதன ருகே லங்கா என்ற மற்றொரு சிறு குன்றம். இவை ஒரு காலத்தில் தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது என்பதற்கு அடையாளமாக ஆங்கே சிறு ஓடை களும், சிறுசிறு ஊற்றுகளும் உள்ளன.

அயோத்தியிலிருந்து சித்ரகூடம், அங்கிருந்து பஞ்சவடி, அங்கிருந்து கிஷ் கிந்தை, அங்கிருந்து மகேந்திரமலை, அங்கிருந்து நீர் சூழ்ந்த லங்கா என்று சகலமும் ஜபல்பூர் மாவட்டத்தில் இருப்பதை ஒரு வரைபடமாகத் தந்துள்ளார் பரமசிவ அய்யர் - இதைத் தொல் பொருள் ஆய்வாளர் எச்.டி. சங் காரியா தனது ராமாயணம் கற்பனையா? உண் மையா? எனும் நூலில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது இப்பொழுதுள்ள சிறீலங்காவுக்கும், ராமனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும்பொழுது இந்துத்துவாவாதிகள் கூறும் இந்த ராமர் பாலம் எனும் பிரச்சினை சற்றும் பொருந்தக் கூடியதல்ல என்று குறிப்பிட்டார் அருணன் அவர்கள் இறுதியாக முத்திரையடியாக ராமனுக்காக வக்காலத்து வாங்கும் தமிழக முதல்வர் தலைமை தாங்குவது அண்ணா திமுகவா? ஆர்.எஸ்.எஸ். திமுகவா? என்ற வினாவை எழுப்பி தன் தமதுரையை நிறைவு செய்தார்.

காளிதாஸ் - சி.பி.அய்.,

மதுரை புறநகர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் காளிதாஸ் தமதுரையில் வெள்ளையன் கொண்டு வந்த திட்டமிட்ட, மக்கள் வளர்ச்சிக்கான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கூடாது என்று தமிழன் சொல்லலாமா என்ற அர்த்தம் நிறைந்த வினாவை எழுப்பிய அவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பிரச்சினையை முன்னெடுத்திருப்பது சிறப்புக்குரியது. இது மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

வழக்குரைஞர் ஆசைத்தம்பி (ம.தி.மு.க.)

இன்றைய முதல்வரை ஆர்.எஸ்.எஸ். என்ற பேய் ஆட்டிப் படைக்கிறது. சேது சமுத்திரத் திட் டத்தைத் தொடங்கியதே பி.ஜே.பி.தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யில் மட்டுமல்ல, காங்கிரசிலும் ஊடுருவி இருக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கி ணைத்துத் தலைமை தாங்கி தமிழர்க்கான இந்த வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆற்றலரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப் பாளர் ஆற்றலரசு அவர்கள் தமதுரையில் பார்ப்பன சக்திகள் மீண்டும் தலை எடுக்கப் பார்க்கின்றன. தமிழக முதல் அமைச்சர் அதற்குத் துணை போகிறார். இந்தப் பிரச்சினையில் தமிழர் தலைவர் எந்த முடிவெடுத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவர் பின்னால் நிற்கும் என்று கூறினார்.

ஜான்மோசஸ்

மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச் செய லாளர் ஜான்மோசஸ் தமதுரையில் குறிப்பிட்ட தாவது:

தமிழ்நாடு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது. நம்மிடையேதந்தை பெரியார்,காமராசர், அண்ணாஆகியோர் இல்லை என்றாலும் நமது அருமைத் தலைவர் தமிழர் தலைவர் வீரமணி அவர் கள் நம்மிடம் இருக் கிறார். அவர் தலைமை யில் தமிழ்நாடு முழுவ தும் எழுச்சிப்பிரச்சாரம் நடைபெற வேண்டும். அது நடைப் பயணமாக இருந்தாலும் சரி, அது தலைவர் வீரமணி அவர் களின் தலைமையில் நடக்க வேண்டும். தலை வர் வீரமணி அவர்கள் தலைசிறந்த வழக்குரை ஞர், சேது சமுத்திரத் திட்டத்துக்காக அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடினால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று குறிப்பிட்டார்.
பொன் முத்து ராமலிங்கம்

முன்னாள் அமைச்சரும் - தி.மு.க. தீர்மானக் குழுத் தலைவருமான பொன். முத்து ராமலிங்கம் அவர்கள் தமதுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
ரூபாய் 2427 கோடி செலவு என்று கணக்கிட்டு, இதே மதுரையில் தான் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முதலியோர் கலந்துகொள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்கான தொடக்க விழா நடைபெற்றது.

நீண்ட காலமாக தமிழர்கள் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனை ஆர்.எஸ்.எஸ். பிஜேபிகாரர்கள் எதிர்ப் பதைக் கூடப் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கக் கூடியவர் எதிர்க்கிறார் என்றால், இதன் பொருள் - இங்கு நடப்பது பி.ஜே.பி. ஆட்சியே என்பதாகும். கிட்டத்தட்ட 75 விழுக் காடுப் பணிகள் முடிந்துவிட்டன. மக்கள் பணம் - அரசு பணம் பெரும் அளவு செலவு செய்யப் பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டும். வரி செலுத்து கிறவன் என்கிற முறையில் கேட்கிறேன். திட் டத்தைக் முடக்குவதால் ஏற்படும் இந்த நட்டத் துக்கு யார் பொறுப்பு? இதை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமையாகும் மத்திய அரசோ இதில் மந்த நிலையில் தான் உள்ளது. ஏதோ உச்ச நீதிமன்றத்தில் ஒரு கடனுக்காக; பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது - அவ்வளவு தான்!

ஒரு முதல் அமைச்சராக இருக்கக் கூடியவர் மூடநம்பிக்கையின் அடிப்படையில் பிரமாணப் பத்திரம் கொடுக்கலாமா? அறிவியல் மனப் பான்மை தேவையில்லையா? என்று வினா எழுப் பினார்.
சு. அறிவுக்கரசு

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமதுரையில் இந்தியாவில் 46 இராமாயணங்கள் இருக்கின்றன. எந்த ராமனைப்பற்றிப் பேசுவது? ஆறு பார்ப்பனர்கள் திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளனர். அதில் ஒருவர் தமிழக முதலமைச்சர். தொல் பொருள் துறையைச் சேர்ந்த இருவர் இராமா யணம் என்பதே நடந்ததில்லை. அப்படி இருக்கும் பொழுது ராமன் பாலம் எங்கிருந்து வந்தது என்று உச்சநீதிமன்றத்திலேயே அறிக்கை கொடுக்க வில்லையா? இதற்கு மேல் இந்தப் பிரச்சினையில் என்ன இருக்கிறது என்ற வினாவை எழுப்பினார்.

கலி. பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்கள் தமதுரையில் குறிப்பிட்ட தாவது:

மக்கள் நல வளர்ச்சித் திட்டத்தை- மதவாதம் தடுத்து நிறுத்தியுள்ளது. மதம் மக்களின் வளர்ச் சிக்கு முட்டுக்கட்டை என்று தந்தை பெரியார் சொன்னதும், திராவிடர் கழகம் சொல்லி வருவதும் எவ்வளவு பெரிய உண்மை என்பது இப்பொழுது தெரிந்துவிட்டது.

60,70 ஆண்டுகளுக்கு முன்பாகவே தந்தை பெரியார் அவர்கள் இராமாயணத்தையும், ராமனையும், அதன் கதா பாத்திரங்களையும் கையில் எடுத்துக் கொண்டு அவற்றின் முகத் திரையைத் தோலுரித்துக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

அதன் அருமையை காலந் தாழ்ந்தாவது இப்பொழுது பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மதம் சார்ந்த இலக்கியத்தின் கற்பனைப் பாத்திரம் - உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மிகவும் படித்த - விவரம் தெரிந்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தப் பிரச்சினையில் நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்க வேண்டுமே தவிர, புராணம் என்ன சொல்லுகிறது என்று பார்க்கக் கூடாது; அப்படி எல்லாம் பார்க்க ஆரம்பித்தால் எந்தத் திட்டத்தையும் அரசு மேற்கொள்ள முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை ஏற்றுக் கொண்டு இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையையும், நாவலர் சோமசுந்தர பாரதியாரையும் எதிர்த்து விவாதம் புரிந்து வெற்றியும் பெற்றவர் - அது ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்திரிக்கக் கூடியது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதையெல்லாம் எடுத்துக் காட்டியவர். அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தை கொடியிலும் வைத்துக் கொண்டுள்ள கட்சி, ராமன் பாலம் என்று கூறி வக்காலத்து வாங்கலாமா? திராவிடர் இயக்கத்தில் ஊடுருவிய ஆரியத்தின் விளைவா?
ராமன் பெயரை உச்சரிப்பது ஏதோ இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது என்கிற அளவில் மட்டும் பார்க்கக் கூடாது.

ராமன் என்பதும் ராமாயணம் என்பதும் ஒரு தத்துவத்தின் குறியீடு! ஆரியப் பார்ப்பனர்களின் வருணாசிரமத்திற்கான குறியீடு.



ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை; வால்மீகி யின் வாக்குமூலம் நூல் வெளியீடு

ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை; வால்மீகி யின் வாக்குமூலம் எனும் தலைப்பில் பேராசிரியர் அருணன் அவர்களால் எழுதப்பட்ட 32 பக்கங்களைக் கொண்ட நூலினை தமிழர் தலைவர் வெளியிட்டார். தி.மு.க. தீர்மானக் குழுத் தலைவர் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் ரூபாய் நூறு கொடுத்துப் பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு இலவசமாக அளிக்குமாறு நூலாசிரியர் பேராசிரியர் அருணன் கூற, அவ்வாறு இலவசமாகக் கொடுக்கக் கூடாது - அது மதிப்பை இழந்துவிடும், விரும்பிய நன்கொடையைக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த போது - பலத்த கரவொலி எழுந்தது. அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்த தொகை ரூ.1070 - கூட்ட செலவுக்காக வரவு வைக்கப்பட்டது.

அந்த ராமனை முன்னிறுத்துவதன் மூலம் ஆரிய, பார்ப்பனர் பண்பாட்டை ஆதிக்கத்தை நிலை நாட்ட மீண்டும் முயலுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக வே.செல்வம் நன்றி கூறிட இரவு ஒன்பதரை மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.

பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், இலக்கியவாதிகள், வணிகப் பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெருமக்கள் என்று பல தரப்பட்டவர்களும் அந்த அவையில் அமர்ந்திருந்தது கம்பீரமாக இருந்தது என்பதே திராவிடர் கழகம் எடுத்துக் கொண்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற பிரச்சினை எவ்வளவு முக்கியமானது. சிறப்பானது தேவையானது என்பதைப் பறைசாற்றுவதாகவும் இருந்தது.

(இராமாயணம் உண்மையில் நடந்ததா? அப்படி நடந்தது என்றால் ராமன் எப்படி பிறந்தான்? இராமாயண கால பித்தலாட்டம் - (தந்தை பெரியார் அவர்களின் இராமாயண பாத்திரங்கள் என்ற நூலிலிருந்து) இராமன் பின்பற்றத்தக்க எடுத்துக் காட்டான மனிதனா?

அ.இ.அ.தி.மு.க. - 2 தேர்தல் அறிக்கைகளில் என்ன கூறியது? என்பது உள்ளிட்டவற்றை ஆதாரங் களுடன் எடுத்துக் கூறினார் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை நாளை).

தமிழ் ஓவியா said...


விடுதலைக்குக் கைமேல் பலன் ஆக்கிரமிப்பு கோயில் அகற்றம்



புதூர், அக்.27- மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்த வலம்புரி விநாய கர் கோயிலை, காவல் துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் நேற்று அகற்றினர். இங்குள்ள 170 குடியிருப்புகளில் வசிப்பவர்கள், சிறிய கோயில் கட்டி, 30 ஆண்டுகளாக வழி பட்டனர். கடந்தாண்டு இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் கோயிலை விரிவுபடுத் தினர். அக்., 29ல் நடக் கவுள்ள கோயில் குட முழுக்கிற்காக, நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கவிருந்தன. இந் நிலையில், வீட்டுவசதி வாரியத்தினர் ஆக்கிர மித்து கட்டியதாக கூறி, உயர்நீதிமன்ற கிளையில் கோயிலை அகற்ற உத்தரவு பெற்றனர். அதைதொடர்ந்து, அக்., 25 ல் காலை கோயிலை அகற்ற, காவலர்கள் பாதுகாப்புடன், மணல் அள்ளும் இயந்திரங்களு டன் தாசில்தார் முரு கானந்தம், வீட்டு வசதி வாரிய செயற்பொறி யாளர் சண்முகம் தலை மையில் அதிகாரிகள் சென்றனர். இதற்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திர சேகர், சசிகுமார் தீக் குளிக்க முயன்றனர். அப்பகுதியினர் ஒரு நாள் அவகாசம் கேட்டதால், அகற்றும் முயற்சி தள்ளி வைக்கப்பட்டது.

நேற்று காலை ஏராள மான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். செயற்பொறியாளர் சண் முகம், உதவி செயற் பொறியாளர்கள் இளங் கோவன், சாலமன், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ஊழியர் கள் கோயிலை அகற் றினர். பிரச்னைக்குரிய இடத்திற்குள் யாரும் வராமல் இருக்க காவல் துறையினர் கயிறு கட்டி மறித்தனர். இதுபற்றி நேற்றைய விடுதலையில் செய்திச் சிதறல்கள் பகுதியில் கருத்துத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது என் பது குறிப்பிடத்தக்க தாகும்.

தமிழ் ஓவியா said...


என்ன சொல்றீங்க?


அன்னா ஹசாரே மீண்டும் புதிய குழு அமைத்து போராட்டத்தை துவங்குவது என்ற முடிவு
நகைப்புக்குரியது
63%
வீண்செயல்
18%
நன்மையே
14%
கருத்து இல்லை
5%

தமிழ் ஓவியா said...


மைல் ஈசுவரர்!


வண்டியில் ஏற்றிச் செல்லப்படும் செங்கல் ஒன்று கீழே விழுந்தால், அதனைநட்டு வைத்து குங்குமம், மஞ்சள் தடவி, ஒரு முழம் பூவையும் அணி வித்து செங்கலீசுவரர் ஆக்கி விடுவர் என்று திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் சொல்லுவ துண்டு.

மைல் கல்லுக்குக்கூட மாலை போட்டு மைலீஸ் வரர், பர்லாங் ஈஸ்வரர் என்று விழுந்து விழுந்து கும்பிடுவோர்கள் என்று கேலி செய்வதுண்டு திரா விடர் கழகத் தோழர்கள்.

அது ஏதோ வேடிக்கை யல்ல; பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் சொன்னதும் வெற்றுச் சொற்களல்ல - என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.
கும்மிடிப்பூண்டி வட்டம், சூரப்பூண்டியில் ஆயுதப் பூஜை என்ற பெயரால் நடைபெற்றுள்ள ஆபாச அறிவை நினைத்தால் ஒரு பக்கத்தில் பரிதாப உணர் வும், இன்னொரு பக்கத்தில் வாயால் சிரிக்க முடியாத அவலமும் மேலிடுகின்றன.

மைல் கல்லுக்கு மாலை போட்டு ஆத்தா பூஜை நடத்தியிருக்கிறார்கள்.

மனிதனின் பகுத்தறிவு - அறிவியல் அறிவாகி, செவ்வாய் மண்டலத்தைப் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. நிலாவில் குடியேறுவது குறித்து மும்முரமான ஏற் பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. முதற்கட் டமாக சுற்றுலா செல்ல முன் பதிவுகள் ஒரு பக்கத் தில் நடந்து கொண்டும் இருக்கின்றன. இத்தகைய கால கட்டத்தில் மைல் கல்லுக்கு மஞ்சள் தடவி மைல் ஈஸ்வரர் என்று தண்டனிட்டுக் கும்பிடு கிறார்கள் என்றால் மனிதன் புத்தியை - எவ் வளவு நாசப்படுத்தி - ஒன் றுக்கும் உதவாத மண் ணாங்கட்டியாக ஆக்கி வைத்திருக்கிறது. இந்தப் பாழாய்ப் போன பார்ப் பனீயம்! இதனைப் பரிகசிக்கும் நிலையில், இன்னொன்றை யும் நினைக்காமலும் இருக்க முடியவில்லை. மணல் திட்டை இராமன் பாலம் என்று சொல்லி, அதனை நினைவுச் சின்ன மாக ஆக்க வேண்டும் என்று ஒரு முதல் அமைச் சரே உச்சநீதிமன்றத்தில் மனு போடவில்லையா? அந்தப் பட்டியலில்தானே இதனையும் சேர்க்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி நாக்கைப் பிடுங்குமாறு கேட்டார். வழிபாட்டுச் சின்னம் இத்தனைக் கிலோ மீட்டர் இருக்க முடியுமா - எப்படி வழிபடுவீர்கள் என்று கேட்கவில்லையா? இன் னொரு கேள்வியையும் அவர் கேட்டு இருக்கலாம்; ராமன் பாலத்தை நீரில் மூழ்கிச் சென்று கும்பிடு வீர்களா என்று கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வார்களாம்? - மயிலாடன் 27-10-12

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!
(விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...


வடகலை - தென்கலைச் சண்டை (நமது நிருபர்)


திருச்சி, மார்ச், 18 - ஸ்ரீரங்கத்தில் புதிதான ஒருவர் வடகலை தென்கலை வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

நேற்று காலையில் இந்துமத பரிபாலன போர்டாரிடமிருந்து தந்தியில் ஸ்ரீரங்கம் கோவில் டிரஸ்ட்டிகளுக்கு ஒரு உத்தரவு வந்தது. அதில் வடகலை(யு-மார்க்) அர்ச்சகருக்கு எடுபடி விருது மரியாதைகளைக் கொடுக்க வேண்டுமென குறிப்புக் காணப்பட்டது.

உடனே தென்கலையைச் சேர்ந்தவர்கள் வழக்கமில்லாத வழக்கமாக டாக்டர் ராஜன் (வடகலையைச் சேர்ந்தவர் கனம் மந்திரி) உத்தரவு போடுவதைக் கண்டு கோபங்கொண்டு உடனே கோர்ட்டுக்கு ஓடினார்கள்.

திருச்சி ஜில்லா டிஸ்டிரிக்ட் முனிசீப் இன்று 18ஆம் தேதி மாலை 4 மணிவரை போர்டிலிருந்து வந்த அந்த தந்தி உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாகவும், தான் இன்று காலை தீர்ப்புக் கூறுவதாகவும் கூறினார்.

அதன்பேரில் இன்று மாலை 4 மணிக்கு கனம் நீதிபதி, தென்கலையார் பெட்டிஷனை தற்காலிக இன்ஜக்ஷனை தள்ளி விட்டதாகவும், ஒரிஜினல் வழக்குத்தீர்ப்பு வரை போர்டு உத்தரவு அமல் நடக்கவும் தீர்ப்புக்கூறினார்.

இதன் காரணமாக நேற்று முதல் ஸ்ரீரங்கநாதர் கோயிலிலில்லாது வெளியில் மண்டபத்தில் இருக்கிறார்.

குடிஅரசு - பெட்டிச் - செய்தி - 20-03-1938

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ்காரருக்குள் போட்டி! சென்னைத் தேர்தல் தமாஷ்


சென்னை, ஏப். 3, சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் விஷயத்தில் ஒரு ருசிகரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சில டிவிஷன்களில் காங்கிரஸ் அட்ஹாக் கமிட்டியார் நியமித்திருக்கும் காங்கிரஸ் அபேட்சகர்களை எதிர்த்துப் பழைய காங்கிரஸ் கவுன்சிலர்கள் போட்டி போடுகிறார்கள்.

அட்ஹாக் கமிட்டியார் நியமித்த காங்கிரஸ் அபேட்சகர்களும் அவர்களை எதிர்க்கும் காங்கிரஸ்காரரும் பொதுக்கூட்டங்கள் கூட்டிப் பிரசாரம் செய்கிறார்கள். இரு கூட்டங்களிலும் காங்கிரஸ் கொடிகளும் பறக்க விடப்படுகின்றன. வந்தே மாதரமும் பாடப்படுகின்றது.

அட்ஹாக் கமிட்டி அபேட்சகர்களை எதிர்க்கும் காங்கிரஸ்காரர், பிரசார விஷயத்தில் ஒரு விநோத முறையைக் கையாண்டு வருகிறார்கள். பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட பையன்களைத் திரட்டி அவர்களைக் கொண்டு பிரச்சாரம் செய்விக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் தலைவர்களை வன்மையாகக் கண்டித்துப் பேசுகிறார்கள்.

( மதராஸ் மெயில் )
குடிஅரசு - பெட்டிச் செய்தி - 10-04-1938

தமிழ் ஓவியா said...


அநுமந்தபுரம் நாடகம் ( ஒரு நிருபர் )


நீடாமங்கலம், ஜன. 22- மன்னார்குடியிலிருந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கான பிரதிநிதி சென்னை சட்டசபை மெம்பர் தோழர் குழந்தைவேலு பிள்ளை நயினார் அவர்களும், தோழர் எல். கோதண்டராமய்யர் அவர்களும் (வக்கீல்) மாலை 5 மணி சுமாருக்கு அநுமந்தபுரம் பண்ணைக்கு முன் ஏற்பாட்டுடன் சென்றார்கள்.

அவ்விடம் அநுமந்தபுரம் பண்ணை ஆட்கள் எல்லாரும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். நடந்த விபரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது முக்கட்டை வேளாங்கண்ணி மகன் தவஸ்ராயன் என்கின்ற தேவசகாயத் தினுடைய தாயார் மாரடித்து அலறிக் கொண்டு காலில் விழுந்து, அய்யா இந்த ஆட்களெல்லாம் ஒரு புட்டி தண்ணிக்குக் காசு வாங்கிக் கொண்டு பொய் சொல் லுகிறவர்கள்.

என் மகனை நீடாமங்கலத்தில் காங்கிரசில் சாப்பாடு போடும்போது சாப்பிட்டதற்கு அடித்தும், பிறகு இவ்விடம் ஏஜண்டு அய்யர் சொல்லி மொட்டை அடித்துச் சாணிப்பால் போட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே அந்தக் கூட்டத்திலிருந்த தன்னுடைய புருஷனைப் பார்த்து, அட பாவி, நீயுமா சேர்ந்து கொண்டு பொய் சொல்லுகிறாய்? என்று சொன்னாள்.

மேற்படியார்கள் காதில் வாங்கவில்லை. தோழர் எல். கோதண்டராமய்யர் அவர்களை அய்யர் பண் ணை ஏஜண்டு தன்னுடைய பங்களாவுக்கு அழைத்துக் கொண்டு போனார். தோழர் மெம்பர் நயினார் அவர்களை அந்த வக்கீலுடன் அழைத்துக் கொண்டு போகவில்லை.

ஆதிதிராவிட சமுகத்திற்குக் குருவான ஜாதியில் பிறந்ததற்காக ஏஜண்டய்யரவர்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகவில்லை போலும்.

குடிஅரசு - செய்தி - 30-01-1938

தமிழ் ஓவியா said...


நீடாமங்கலம் காங்கிரஸ் மகாநாட்டில் நடந்த கொடுமை!


அய்யா,

விடுதலை பத்திராதிபர் அவர்கட்கு, ஈரோடு

நாங்கள் நீடாமங்கலம் அரசியல் மகா நாட்டுக்கு வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். எங்களுடன் எங்கள் ஜாதிக்காரர்களும் வேடிக்கை பார்க்க வந்திருந்தார்கள். அன்று காலை மகாநாடு முடிந்ததும் மத்தியான சாப்பாட்டிற்கு எல்லோரும் போ னார்கள். எங்களையும் கூப்பிட்டார்கள். நாங்கள் பயந்துகொண்டு வெளியில் நின்றோம்.

எல் லோரும் வரலாம் என்று 2, 3 தடவை எங்களைச் சாப்பிட வரும்படி அழைத்துப் போனார்கள். அங்கு நாங்களும் போய்ச் சாப்பிட்டுக் கொண்டி ருந்தோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது உடையார் பண்ணை ஏஜண்டு உடையார் வந்து தேவசகாயத்தின் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு வெளியில் போய் விட்டார். நாங்கள் வெளியில் வந்தபொழுது எங்களை விறகை எடுத்துக் கொண்டு வந்து அடித்து ஓடஓட விரட்டினார்கள்.

நாங்கள் ஆற்றில் விழுந்து உயிர் தப்பி ஓடி வந்து விட்டோம். மறுநாள் நாங்கள் அறுவடை செய்து கொண்டிருந்த பொழுது அநுமந்தபுரம் பண்ணை கிருஷ்ணமூர்த்தி அய்யர் வயலுக்கு வந்து நேற்று மகாநாட்டில் போய்ச் சாப்பிட்ட பயல்களையெல்லாம் இங்கே உதைத்துக் கொண்டுவா என்று சொன்னார்.

எங்களை அடித்து ஓர் மரத்தில் கட்டச் செய்து தலைமயிரை மொட்டையடிக்கும்படி சொன்னார். உடனே, சுமார் 20 பேர்கட்கு தலைமயிர் மொட்டையடித்தார்கள். இதில் கல்யாணமாகாத சிலருக்கு அரை மொட்டையடித்தார்கள். சாணிப்பால் ஊத்தினார்கள்.

இதன்பின் சில நாட்களுக்குப் பிறகு உடையார் பண்ணை ஏஜண்டு வந்து தேவசகாயம், ஆறுமுகம் ஆகிய எங்களிலிருவரையும் அவர் வாழைத் தோட்டத்திற்கு அழைத்துப் போய் படம் பிடித்தார்கள். எங்களிடம் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப் போடச் சொல்லி எங்கட்கு 0-14-0 கொடுத்தார்கள்.

பண்ணை உடையார் எங்களிடம் 1-0-0 கொடுத்து நேரே வீட்டிற்குப் போ, வேறு யாராவது கூப்பிட்டால் போகாதே. இங்கு நடந்ததை வெளியில் சொல்லாதே. உங்களை யாரும் மொட்டையடித்து கஷ்டப்படுத் தியதாக எவர்களிடமும் சொல்லாதே என்று சொல்லி அனுப்பினார்.

நாங்கள் பயந்து கொண்டு அவர்கள் சொன்னபடி யெல்லாம் நடந்துகொண்டு எங்கள் சேரிக்கு வந்துவிட்டோம். இது விபரங்கள் தங்கள் பத்திரிகை நிருபர் எங்களிடம் வந்து நடந்த உண்மைகளைச் சொல்லும்படியும், எங்கட்கு கஷ்டம் வராமல் வேண்டிய பாதுகாப்புகள் செய்வதாகவும் சொன்னார்.

நாங்கள் தைரியமாக, நடந்த உண்மைகளை மறைக்காமல் வெளிப்படுத்துகின்றோம். நாங்கள் நடந்த உண்மைகளைச் சொல்லி விட்டதற்காக எங்களை நீடாமங்கலம் உடையார் பண்ணை எஜமானும், அநுமந்தபுரம் அய்யர் பண்ணை எஜமானும் எங்கட்கு பலவித கொடுமைகள் இனியும் செய்வார்கள். எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

இப்படிக்கு,

தேவசகாயம், ரத்தினம், ஆறுமுகம்.
(நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் மொட்டையடிக்கப்பட்ட தோழர்கள் விடுதலை பத்திரிகைக்கு எழுதிய கடிதம்)

தமிழ் ஓவியா said...

அந்தக் கலாச்சாரம் எது?
t

நமது பொருளாதாரத்தின் அடிப்படைக் கலாச்சாரம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். ஆலோசகரும் கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அறியப்பட்ட வருமான திருவாளர் எஸ். குருமூர்த்தி பேசி இருக்கிறார். அவர் பேசிய இடமோ டில்லியில் உள்ள பி.ஜே.பி. யின் தலைமை அலுவலகம் (20.10.2012). பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானி, பி.ஜே.பி.யின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி முதலியோரும் பங்கு கொண்டுள்ளனர். 1) இந்தியாவுக்கு வருகை தராத இந்தியாவைப்பற்றி குறைவாக அறிந்த அறிஞர்களான காரல்மார்க்ஸ், மாக்ஸ் வெப்பர், ஜான் கால்பிரைத் போன்ற அறிஞர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குருமூர்த்தி அய்யரின் குற்றப் பத்திரிகையின் முதல் அம்சமாகும்.

ஒரு நாட்டைப் பற்றி அறிய வேண்டுமானால் அந்த நாட்டுக்கு நேரில் வருகை தந்திருக்க வேண்டும் என்றால் பல நாடுகளின் பொருளா தாரம், சமூகச் சூழல் ஆகியவைபற்றி எழுதுபவர்கள், விமர்சனம் செய்ப வர்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட நாடு களுக்குச் சென்று வந்தவர்கள்தானா?

இந்தியாவின் இந்துமதம்பற்றி காரல் மார்க்ஸ் விமர்சித்ததுண்டு. இப்படி இந்து மதத்தின் அடி மடியில் கை வைத்து விட்டால் போதும்; இந்தப் பூதேவர்களுக்கு வெட வெடப்பும், ஆத்திரமும் பொங்கி எழுந்து விடும்.

மார்க்சும், எங்கல்சும் இந்தியாவைப் பற்றி 28 கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

மார்க்சின் காலனியாதிக்கம் எனும் நூலில் மார்க்சு குறிப்பிடுவது முக்கிய மானது.

சமூக நோக்கில் பார்த்தால் இந்துஸ்தானம் கிழக்கிந்திய அயர் லாந்தை ஒத்திருக்கிறது. இத்தாலி சிற்றின்ப வேட்கை நிறைந்ததாக இருக்கிறது. இத்தாலியும் அயர் லாந்தும் கலந்த ஒரு வினோதமான கலப்பாகவே இந்துஸ்தானம் தோன்றுகிறது. சிற்றின்ப வேட்கை யும், துன்பமும் நிறைந்துள்ள ஒரு உலகமாக அது இருக்கிறது. இங்குள்ள மதமும் சிற்றின்பத்தின் சிறப்பை சிலாகிக்கும் போதே திடீரென்று தன்னையே சித்திர வதை செய்துகொள்ளும் சன்னி யாசத்தையும் ஆதரிப்பதாக இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குடியானவர்களின் வாழ்க் கையைச் சித்திரிக்கும் இந்தச் சிறு கிராம அமைப்புகள் சிறியவை களாக இருந்தாலும் அவர்கள் கீழை நாட்டுச் சர்வாதிகாரத்தின் அடித்தளங்களாக இருந்தன. அவை மனித அறிவை மூடநம் பிக்கை என்ற சிறு போர்வைக் குள்ளேயே முடக்கி வைத்தன. இதனால் அவர்களது சரித்திர கால வீர உணர்வும், சிறப்புகளும் அழிந்து போயின. இந்த அமைப் புகள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், தங்களைத் தாங்களே பெருமையோடு பார்த்துக் கொண்டன. சாம்ராஜ்ஜியங்கள் அழிந்தாலும் நகரங்களில் பயங்கரப் படுகொலை நடந்தாலும், எவ்வளவு கொடுமையான நிகழ்ச்சிகள் நடந்தாலும், அவற்றைப் பற்றி இந்தக் கிராமங்கள் கவலைப்படவே யில்லை. எனவே ஆதிக்கவாதி களின் பிடியில் இக்கிராமங்கள் எளிதில் விழுந்தன. கண்ணிய மில்லாத தேக்கமடைந்து சோம்ப லாகிக் கிடந்த இந்தக் கிராமங் கள்தான் கொலைகளை மதச் சடங் குகள் என்ற பேரில் ஆதரித்தன என்பதை நாம் மறக்கக் கூடாது.

இந்தக் கிராம சமூகங்களில் சாதி வேற்றுமையும், அடிமைத்தனமும் வளர்ந்து கெட்டு விட்டன. அவை மனிதனை சூழ்நிலைகளின் அதிபதியாக மாற்றுவதற்குப் பதிலாக சூழ்நிலைகளின் அடிமைகளாக மாற்றிவிட்டன. கண் மூடித்தனமாக இயற்கையைத் துதித்தன. இயற்கை யான தன் சக்தியால் வென்று அதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதன் இங்கே தாழ்ந்து போய் இயற்கைக்கு முன்னால் குரங்குக் கும், பசுவுக்கும் மண்டியிட்டு வணங்கினான் என்பதை நாம் பார்க்க வேண்டும். (நூல் பக்கம் 40-_41)

_ இப்படி மார்க்ஸ் இந்தியாவை - அதன் இந்துத்துவப் பிற்போக்குத் தன்மைகளைக் கூர்மையாக அம் பலப்படுத்தினால் குருமூர்த்திகளால் எப்படி சீரணித்துக் கொள்ள முடியும்?

மார்க்சு சொன்னது சரியா? தவறா? என்று சர்ச்சை செய்வதற்குப் பதிலாக ஒரேயடியாக - அவர் வெளிநாட்டுக் காரர் என்பதும், இந்தியாவை நேரில் பார்த்திராதவர் என்றும் புறந் தள்ளப் பார்ப்பது ஒரு வகையான தப்பிக்கும் தந்திரமாகும் _ இயலாமையும் ஆகும்.

இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் வருண தர்மத்தையும் பிற்போக்குத் தனங்களையும் பார்ப்பன ஆதிக் கத்தையும் நேரில் எழுதியவர்களின் கருத்துக்களையாவது இவர்கள் ஏற்றுக் கொண்டவர்களா என்றால் அதுவும் இல்லை. அப்படி எழுதியவர்கள் கிறித்தவர்கள் என்று மத முத்திரை குத்தி அப்பொழுதும் தப்பிக்கும் வழியைத்தான் பார்க்கிறார்கள்; இது பார்ப்பனர்களுக்கே உரித்தான தந்திர உபாயம் என்பதை உணர்க!

தமிழ் ஓவியா said...

2. மேலை நாடுகளில் சொல்லப் படும் சிவில் சொசைட்டி என்பது கேளிக்கை நிலையம் (கிளப்) போன்றது. ஆனால், நமது சமூகம் என்பது வேறானது இந்த சமூக முறைதான் ஒரு காலத்தில் கழிவு நிறைந்த இடமான சூரத் நகரத்தை வைரம் வெட்டும் தொழில் நகரமாக உருவாக்கியது. உலகம் முழுவதும் உள்ள 10 வகையான வைரங்களில் 9 வகையான வைரங்கள் சவுராஷ் டிராவில் வெட்டப்படுகின்றன.

சிவில் சொசைட்டியில் உறவுகள் என்பது ஒப்பந்தம் ஆகும். அந்த சொசைட்டி ஒப்பந்தத்தின் அடிப் படையில் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நமது அரசியல் சட்டமும் உருவாக்கப்பட்டது. எங்கெல்லாம் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும் பரம்பரியமாகக் காக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் அரசுகள் செய்ய வேண்டியதை சமூகங்களே செய்கின்றன. நம் நாட்டிலுள்ள சேமிக்கும் பழக்கம் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் கணவன் மனைவி, குழந்தைகள் பராமரிப்பு என அனைத்தும் ஒப்பந்தங்களின் அடிப்படையிலானவை. அது போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளை நம் நாட்டில் இறக்குமதி செய்வது எப்படி பொருத்தமாக இருக்கும்? என்ற வினாவையும் தொடுத்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.

இது அப்பட்டமான பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். சிந்தனையின் பிரசவ மாகும்.

சூரத் நகரம் வைரத் தொழிற் சாலையாக ஒளிர்வதற்குக் காரணம் இந்து சமூக அமைப்பின் பாரம்பரியக் கலாச்சாரமாம்.

அப்படியானால் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் எந்த வகைக் கலாச்சாரத்துக்குச் சொந்தமானவை?

கோலார் தங்கச் சுரங்கத்துக்கு எந்தக் கலாச்சாரம் உத்தரவாதம் கொடுத்ததாம்?

அரசுகள் செய்ய வேண்டியதை இங்கு சமூகங்கள் செய்கிறதாமே! இங்குள்ள சமுதாயம் என்பது என்ன? ஜாதீய கட்டுமானம்தானே!

ஜாதீயக் கட்டுமானத்தில் சமுதாய உறவுகள் உண்டா? சமுதாய உறவு களைத் தகர்ப்பதுதானே இந்துத் துவாவின் ஜாதீய அமைப்பு? தீண்டாமை நிலவும் ஒரு சமூக அமைப்புகள் சமூக உறவு எங்கிருந்து குதிக்கும்? நகர சுத்தித் தொழில் எந்தச் சமூக உறவுகளின் அடிப்படையில் நடைபெறுகிறது? இந்த அடிப்படைப் பணியைச் செய்வதற்கு குறிப்பிட்ட ஜாதியினருடன் சமூக உறவுகளின் அடிப்படையில் இணைந்து பணி செய்வோர் உண்டா?

இங்குள்ள சமூக உறவுகள் எப்படி இருக்கின்றன? வறுமைக் கோட்டுக் கும் கீழ் உழலுவோர் எந்த ஜாதியினர்?

தாழ்த்தப்பட்ட மக்களில் 86.25 விழுக்காட்டினர் நிலமற்றவர்களாக இருப்பது எந்த அடிப்படையில்? விவசாயக் கூலிகளாகப் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பது ஏன்? இதில் 48 விழுக்காட்டினர் கடனாளிகளாக இருப்பதும்தான். சமுக உறவுகள் பாரம்பரியமாகப் பாதுகாக்கப் பட்டதன் இலட்சணமா?

பாரம்பரிய உறவுக் கலாச்சாரம் என்று திருவாளர் குருமூர்த்தி சொல்லுவது மறைமுகமான ஜாதீய கட்டுமானத்தைத் தானே?

உண்மையைச் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கிடப்பதற்கே காரணமே ஜாதியின் அடிப்படையில் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டதுதானே ஒதுக்கப்பட்டதுதானே!

முதல் பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையத்தின் தலைவராக இருந்த காகாகலேல்கர் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்து - குருமூர்த்தியின் கருத்தினைக் கருச் சிதைவு செய்யக் கூடியதாகும்.

ஜாதி அமைப்பானது உலகில் எங்கும் கிடையாது. இங்குதான் இருக் கிறது. பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் சமுதாய அமைப்பு மாற்றம் அடையும் -_ ஜாதி ஒழிந்து விடும் என்கின்றனர் சிலர்.

அந்த வாதம் தவறானதாகும். ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி இல்லை உணவு இல்லை; உடை இல்லை, இது பொருளாதார, அமைப்பினால் வந்தது என்பது தவறு. ஜாதி அமைப்பினால் தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருவது உண்மையாகும்.

பொருளாதாரத்தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர ஜாதி தோன்றுவ தற்குரிய காரணம் அல்ல என்றாரே காகாகலேல்கர்

குருமூர்த்தி பெருமைப்படும் ஜாதியின் அடிப்படையிலான பாரம்பரிய சமூக உறவு எவ்வளவுப் பெரிய ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இன்னொரு பார்ப் பனரான காகாகலேல்கரே மறுக் கிறாரே!

இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லப்படுகிறது. அந்த விவசாயத்தைப் பாவ தொழில் என்று சொல்லுவது திரு. குருமூர்த்தி தூக்கிப் பிடிக்கும் இந்து சமூக சாஸ்திர மான மனுதர்மம் (அத்தியாயம் - 10; சுலோகம் 84)

பார்ப்பனீய இந்துக் கலாச்சாரம் என்பது இந்தக் கதியில் இருக்கும் பொழுது அதனைத் தலைகீழாகப் புரட்டிச் சொல்ல குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்களால்தான் முடியும்.


- மின்சாரம்-

தமிழ் ஓவியா said...


பிள்ளை பிழைக்கவில்லையே!


விளக்கெண்ணெய்க்குத்தான் கேடு - பிள்ளை பிழைக்கவில்லை என்ற ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ - நூற்றுக்கு நூறு கருநாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் பக்தி புகழ் - ஊழல் புகழ் எடியூரப்பாவுக்குத்தான் பொருந்தும். முதல் அமைச்சர் பதவி பறி போனதற்குக் காரணம் தான் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து சரியில்லை என்று கூறி சில பகுதிகளை இடித்துத் தள்ளினார், புதிதாக வடிவமைத்தார். அப்பொழுதும் ஒன்றும் கதைக்கு ஆகவில்லை. பெங்களூரில் தமது அலுவலகம் வாஸ்துபடி அமையவில்லை என்று கூறி பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த அந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளார். பூசை புனஷ்காரங்களோடு தடபுடலாக விருந்துகள் எல்லாம்கூட நடைபெற்றுள்ளன. படித்த மூடர்கள் பல கட்சிகளில் இருந்தாலும் பா.ஜ.க. என்பது முற்றிலும் மூடத்தனத்தில் முடைநாற்றமெடுத்த முழுக் கூடாரமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை!

தமிழ் ஓவியா said...


ஈரோட்டு ஏந்தலைப்பற்றி


தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் - பாவேந்தர் பாரதிதாசன்

எங்கே செல்கின்றன ஈரோட்டுச் சுவடுகள்
ஒடுக்கப்பட்ட மானுடம் அனைத்தும்
உயர்த்திய கையுடன் நீளும் வழியில் - இன்குலாப்

பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம் - சர் ஏ.டி. பன்னீர்செல்வம் (1939)

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு பழுத்த தத்துவ ஞானி - தோழர் ஏ.எஸ்.கே.
பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார் - கலைஞர் கருணாநிதி

பெரியார் புதிய உலகத்தின் தீர்க்க தரிசி சமுதாய இயக்கத்தின் தந்தை தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் அய்.நா.யுனஸ்கோ நிறுவனம் வழங்கிய பட்டயம் பெரியார் ஒரு பிறவிப் போர்வீரர் உலகத்திலேயே ஒரே ஒரு சாக்டீரஸ். ஒரே ஒரு புத்தர். ஒரே ஒரு பெர்னாட் ஷா, ஒரே ஒரு இராமசாமிப் பெரியார் தான் தோன்றுவார்கள். தோன்ற முடியும். - சாமி. சிதம்பரனார்

நரைத்த தலையும், அழகிய தாடியும், அழுத்தமான மூக்கும், மொத்தமான உதடுகளும், ஒளி வீசும் கண்களும் படைத்த அந்தப் புரட்சிக்காரர் தோழர் ஈ.வே.ரா. வில்லியம் மாரீஸ் போன்றவரே. தோழர் ஈ.வே.ராவின் வாழ்க்கை வரலாற்றுக்கு புரட்சி என்ற பெயரையே சூட்டிவிடலாம் - பெரிசல் மாத்யூஸ் ஆகஸ்போர்டு பல்கலைக் கழகம்

தீப்பொறி பறக்கப் பேசும் ஒரு வெண்தாடி வேந்தரைக் காணும்பேறு கல்கத்தாவிற்குக் கிடைக்கிறது
Vanguard (1944) (1944) கல்கத்தாவில் பிரபல ஆங்கில நாளிதழ்

மதுவிலக்கிலே ஈரோடு மட்டும் அஞ்சாது. தொண்டாற்றி யிருக்கிறது. அதனால் ராமசாமி அவர்களுக்கு ஒரு மாத சிறை தண்டனை பரிசாகக் கிடைத்திருக்கிறது - காந்தியார் யங் இந்தியா இதழில் 1921 டிச.28

பெரியார் ஒரு சகாப்தம்; ஒரு கால கட்டம் ஒரு திருப்பம் - அறிஞர் அண்ணா

சீன தேசத்துச் சன்-யாட்சென்னின் குருவான கன்பூசியஸ் என்னும் பேரறிஞ ருடன் பெரியார் ராமசாமி அவர்களை ஒப்பிடலாம். - சீனப் பேராசிரியர் சீ.எஸ்.ஸீ. (1939)

தந்தை பெரியார் மட்டும் தோன்றி யிரா விட்டால் நான் 100 விழுக்காடு மடமையில்தான் இருந்திருக்க முடியும் -

- இயக்குநர் பாரதிராஜா

தந்தை பெரியார் என்பது சூரியனுக்கு நாங்கள் சூட்டிய பெயர் - ஈரோடு தமிழன்பன்

கொடுமைகள் கண்டு கொதிக்கத் தெரிந்தவர் குறிக்கோள் களத்தில் குதிக் கத் தெரிந்தவர் அவர்தான் பெரியார்
- கவிஞர் அறிவுமதி

இவர் இயற்கையின் புதல்வர் மண்ணை மணந்த மணாளர் - எழுத்தாளர் வ.ராமசாமி அய்யங்கார்

இன்னும் இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தியா வில் பேசப்படும் மனிதராகப் பெரியார் இருப்பார் _ ஹிரேன் முகர்ஜி (மேற்கு வங்க கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்).

இராமசாமி அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி
- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. (1928)

மானம் கெடுப்பாரை
அறிவை தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை - காசி ஆனந்தன்

உன் முகத்தில் படர்ந்து கிடப்பது
நரைமுடிகள் அல்ல; போதிமர வேர்கள் - பழநிபாரதி

தொகுப்பு: சாமி. திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


மரத்திலா காய்க்கிறது?


பொருளாதார சீர்திருத்த அறிக்கையை வெளியிடும்போது, கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் சூழலில், இந்தியா வில் தேவை பெருகுகிறது. இறக் குமதி விலை அளவுக்கு பெட் ரோலியப் பொருட்களின் விற் பனை விலையை உயர்த்தாத தால், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. அதைச் சரிக்கட்ட அரசு அளிக்கும் எண்ணெய் மானியம் ஆண்டு தோறும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு 1.40 லட்சம் கோடியை எண்ணெய் மானியத்துக்காக ஒதுக்கினோம். இந்த ஆண்டு 1.60 லட்சம் கோடியாக அது அதிகரிக் கும்.

இப்போதும் டீசல் விலையை உயர்த்தாவிடில், அது இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயரும். டீசல் விற்பனையால் ஏற்படும். இழப்பைத் தவிர்க்க, லிட்டருக்கு 17 ரூபாய் விலை ஏற்றி இருக்க வேண்டும். 5 ரூபாய்தான் ஏற்றி இருக்கிறோம். இறக்குமதி விலையைவிட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.13.86 குறைவாகக் கொடுக்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.347 குறைவாகக் கொடுக் கிறோம். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? பணம் மரத்திலா காய்க்கிறது? என்று கேட்டார் மன்மோகன்சிங்.



கொள்முதல்

2011-2012ஆம் ஆண்டில் இந்தி யாவில் நெல் கொள் முதல் 3.50 கோடி டன்.

தமிழ் ஓவியா said...


புகழ் பெற்ற கடவுள் மறுப்பாளர் பால் குர்ட்ஸ் காலமானார்


பால்குர்ட்ஸ் அவர்களின் மகனார் ஜொனாத்தன் அனுப்பி யுள்ள செய்தி: இந்த நாள் வரும் என்று நாங்கள் அறிவோம். ஆனாலும் அந்தச் செய்தியை அறிவித்திட எங்களின் மன வலிமை இடம் கொடுக்கவில்லை. மன உறுதி இல்லை. அவர் 86 அகவை அடைந்தவர் நேற்றிரவு அது நடந்துவிட்டது.

புதிய நாத்திகர்கள் தொடங்கி முழு வேதம் அடைவதற்கு முன்பே, குர்ட்ஸ் அவர்கள் மனித நேயத்தையும் கடவுள் மறுப் பையும் வளர்ந்தெடுத்ததில் தற்கால வரலாற்றில் முன்னணி இடம் பிடித்துள்ளார்.

2000ஆவது ஆண்டுக்கு முன்பு கிறித்துவ மன்னிப்பாளர்கள் எழுதிய நூல்களை நீங்கள் படித்திருக்கலாம். அவர்களின் தலைமை எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் சாம் ஹாரிஸ் (Sam Harris) அவர்களோ, ரிச்சர்டு டாக்கின்ஸ் (Richard Dawkins) அவர்களோ, கிறிஸ்டாப்பர் ஹிட்சன்ஸ் அவர்களோ இருக்க வில்லை. ஆனால் பால்குட்ஸ் அவர்கள்தான் தலைமை எதிர்ப்பாளராகத் திகழ்ந்தார். பால்குர்ட்ஸ் அவர்களின் பேரைக் கேட்டாலே கிறித்துவ மன்னிப் பாளர்கள் நடுங்கினார்கள்.

அவரின் பணிகள் நீண்டவை அவரின் புகழ்மிக்க சாதனைகள் இன்றைய அளவிலும் நம்முடைய சனநாயகத்தில் போற்றி புகழப் படுகின்றது. அவர் தொடங்கி வைத்ததை நாம் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் அவ் வளவுதான்.

புரோமிநியூஸ் புக்ஸ் (Promothers Books) எனும் நிறு வனத்தை அவர் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்.

கடவுள் மறுப்பு உலகத்தைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடுகிற முதல் பதிப்பகமாக அது விளங்குகிறது. அந்தப் பதிப்பகம் பல கடவுள் மறுப்பு நூல்களை வெளியிட்டுள்ளது.

ஜியார்ஜ் எச். ஸ்மித் அவர்கள் எழுதிய நாத்திகம் (Atheism) (George H Smith) கடவுளை எதிர்த்து வழக்கு The case Against God) போன்ற நூல்கள் குறிப்பிடத் தக்கவை.

விக்டர் ஸ்டென்ஜர் (Victor Stenger) எழுதிய கடவுள் ஒரு தோற்றுப் போன எடுகோள் (God: The Failed Hypothesis) எனும் புத்தகம் மிகவும் புகழ் வாய்ந்தது. (இது புறநகர், புரோமிக நியூஸ் புத்தக நிலையம் வெளியிட்டதில் அதிக விற்பனைக்கு உள்ளானவை என நியூயார்க் டைம்ஸ் பெருமையுடன் குறிப்பிடு கிறது).

குர்டஸ் அவர்கள் பல அமைப் புகளை நிறுவியுள்ளார். அவைகளில் மிக முக்கியமானவையாக குறிப்பிட வேண்டியவை கடவுள் மறுப்புக்கான ஆய்வுக் குழு (Committee for Skeptical Inquiry) மனித நேய மதச் சார்பற்ற ஆலோசனைக் குழு (The Council for Secular Huminism) உண்மை அறியும் மையம் (The Centre for Inquiry) மற்றும் கடவுள் மறுப்பை விளக்குதல், பகுத்தறிவு, மற்றும் மனிதநேயம் குழுக்களை அமைத்து அவற்றை வளர்ந்தெடுத்தார்.

கட்டற்ற விசாரணை (Free Inquiry) என்னும் இதழ் மனிதநேயத்தை வளர்ந்தெடுக்க தொடங்கப்பட்ட இதழாகும். இதன் முதன்மை ஆசிரிய ராக பால்குர்ட்ஸ் விளங்கினார்.

கடவுள் மறுப்பு விசாரணையாளர் (Skeptical Inquirer) என்னும் இதழை தோற்றுவிப்பதில் முக்கிய பங்கினை வகித்தார்.

1973ஆம் ஆண்டில், எட்வின் எச் வில்சன் (Edwin H. Wilson) அவர்களுடன் இணைந்து மனித நேயத்தின் இரண்டாம் அறிக்கை (Humunist Manifesto II) என்னும் அறிக்கையை குர்ட்ஸ் அவர்கள் எழுதினார்.

2009 ஆம் ஆண்டில் CFI/CSH/CSI) போன்ற நிறுவனங்களில் கவுரவ தலைவர் பதவிகளைத் துறந்தார்.

கட்டுப்பாடற்ற விசாரணை என்னும் இதழில் தான் வகித்த பதவியை அதே ஆண்டில் துறந்தார். இது வியர் மன்னனின் வீழ்ச்சிபோல இருந்தது என நியூயார்க் டைம்ஸ் இதழ் கூறியது.

கட்டற்ற விசாரணை என்னும் நிறுவனத்தின் செயல்பாட்டில் மிக்க வெறுப்புக் கொண்டார். எதிர்மாறான அந்தச் செயல் பாட்டை தடுத்திட விரும்பினார்.

தான் வகித்த முக்கியப் பதவி களை எல்லாம் துறந்த பிறகு, அறிவியல் மற்றும் மனித மேம்பாடுகள் (Institute for Science and Human Values)
என்னும் நிறுவ னத்தைத் தொடங்கினார். ஆனால் கணினி போன்ற துறைகளில் வளர்ச்சியில் அது தொடர்ந்து நடைபெறவில்லை.

கல்வித்துறை என்று எடுத்துக் கொண்டால் அவர் பஃப்பலோ (Buffalo) என்னும் இடத்தில் அமைந் துள்ள நியூயார்க் மாநில பல் கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியர் பணியாற்றினார்.

இதுவரை அவர் 800 கட்டுரை களையும் 40 நூல்களையும் படைத்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


இந்துவின் பார்ப்பனத்தனம்


உலகத் தலைவர் தந்தை பெரியார் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஒரு ஏடு ஹிந்து பார்ப்பன ஏடுதானே!

தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான சி.பி. ஆதித்தனாரின் மறைவுச் செய்தியை உள்ளே மறைவுச் செய்தியாக வெளியிட்ட ஹிந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வானான பாலக்காட்டு மணி அய்யர்வாளைப் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்ததே! அன்னை மணியம்மையார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மறைவுச் செய்திகளை மரணம் அடைந்தோர்க்கென்று ஹிந்து ஏட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்தியில் (Obituary) வெளியிட்டு இருந்தது என்றால், இவற்றைவிட பார்ப்னத் திமிர் பிடித்த கூட்டத்தின் துவேஷம் என்ற ஆலகால நஞ்சுக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


கொட்டாவி


கொட்டாவி

கொட்டாவியை கூட்டாவி என்றும், கெட்டாவி என்றும் கூறுவதுண்டு. காரணம், ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் அவர் அருகிலிருப்பவர், அவர் எதிரிலிருப்பவர், அவர் வலப்புறத்தில் இருப்பவரென சுற்றியிருக்கும் அனைத்து நபர்களும் கொட்டாவி விடுவர். வகுப்பறையில் தெரியாதத்தனமாக, அடக்க முடியாமல் ஆசிரியர் கொட்டாவி விட்டால், மாணவர் அனைவரும் கொட்டாவி விடுவர். டீக்கடையில் பேப்பர் படிப்போர், கொட்டாவி விட்டால் அதைப் பார்த்து தெருவில் படுத்திருக்கும் நாய்களும் கொட்டாவி விடும். இவையெல்லாம் ஓர் உண்மையை அறிவியல் பூர்வமாக உணர்த்துகின்றன.

கொட்டாவி விடுவதற்கு எந்த ஜீவராசியும் விதிவிலக்கல்ல. விலங்கினங்களும் கொட்டாவி விடுகின்றன. பறவையினங்களும் கொட்டாவி விடுகின்றன. கருவில் வளரும் குழந்தையும் கொட்டாவி விடுகிறது. ஒரு மனிதன் தூங்குவதற்கு முன்னும் கொட்டாவி விடுகிறான். தூங்கி எழுந்த பின்னும் கொட்டாவி விடுகிறான். சும்மா இருக்கும் பொழுதும் கொட்டாவி விடுகிறான். அப்படியென் றால் கொட்டாவி விடுவதின் காரணம் என்ன? மருத்துவ விஞ்ஞான ரீதியாக பல்வேறு ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்பட்டன. கொட்டாவியின்போது ஒருவர் அதிகமான வெளிக்காற்றை உள்வாங்கி, பின்னர் மெதுவாக அந்தக் காற்றை வெளியே விடுகிறார். இதற்கு சில வினாடிகள் ஆகின்றது.

ஜீவராசிகளில் அதிக சுறுசுறுப்பும், அறிவும், சோம்பலின்மையும் கொண்டது எதுவென்றால் பாரகீட் எனப்படும் கிளிகள்தான். ஆனால், இந்த வகை கிளிகள்கூட கொட்டாவி விடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். இந்தக் கிளிகள் இருக்கும் கூண்டின் வெப்ப நிலை மாறும் பொழுது இவைகளின் கொட்டாவி எண்ணிக்கையும் மாறுபடுகிறது. வெப்பம் குறைந்த நிலையில் கொட்டாவியின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. வெப்பம் அதிகரிக்கும் பொழுது, கொட்டாவியின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எனவே, விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். மூளையின் உஷ்ண நிலை அதிகரிக்கும் பொழுது மூளையை குளிர்விப்பதற்கு கொட்டாவி விடப்படுகிறது. அதிகமான காற்றை உள்வாங்கும் பொழுது அது நுரையீரலின் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்தத்தைக் குளிரச் செய்கிறது. இதனால் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் வெப்பம் குறைகிறது. எனவே, கொட்டாவி என்பது உடலின் வெப்ப நிலையை குறைக்கும் உத்தி!.

- நம் வாழ்வு 08.02.2009

தமிழ் ஓவியா said...


நாடு முன்னேற....

காலைக்கடன், வீட்டுவேலை, தொழில் இவை ஒரு பக்கம். இடைப் பட்ட நேரங்களில் ராகு, குளிகை, எமகண்டம் பார்த்து வெளியில் செல்வது, அதற்குமுன் வீட்டில் படவணக்கம், பூசை, வெளியில் கோயில் வணக்கம், வார நாட்களில் அஷ்டமி, நவமி, ஏகாதசி, பிரதோஷம், சஷ்டி, மாசி, சதுர்த்தி, பவுர்ணமி அமாவாசை, சிவராத்திரி என பூசை நாள்கள். இதற்குமேல் தீபாவளி, கிருஷ்ணன் பிறப்பு, விநாயகன் சதுர்த்தி, ஆயுத பூஜை விஜயதசமி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம் மகாசிவராத்திரி, மகா மகம், சித்ரா பவுர்ணமி, குடமுழுக்கு, ஆடி அமாவாசை என பூசை நாள்கள் தப்புத்தாளங்களுக்காக கோயில் குளம் யாத்திரை, குலதெய்வம், வயதை வளர்க்க கல்யாணம், கருமாதி, திவசம், நோய் நொடிக்காக வைத்தியம், நானா, நீயா, கட்சி கோர்ட் என மனித வாழ்க்கை இவைகளில் தான் 97 சதவீத மக்களின் கடமை யாக உள்ளது.

கடவுள் என்பது என்ன? தனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டதா? நீ கேட்பதை எல்லாம் கொடுப்பதற்கும் செய்வதற்கும் அது ஏவலாளா? அப்படி ஒன்று இருந்தால் அது இருப்பதாகச் சொல்லும் இடத்தில் கால், கை உடைந்தும், குருடு - செவி டாகவும் உட்கார்ந்து காலமெல்லாம் பிச்சை எடுக்கிறானே கவனித்தாயா? சென்ற ஆண்டு வைத்த உன் கோரிக்கை நிறைவேறாதிருக்க அடுத் தாண்டு. அடுத்தாண்டும் கோரிக்கை. அது அப்படி ஒன்று இருக்கிறதா? இயற்கைச் சீற்றம், அதுவும் அவனா செய்தான்? அது எங்கே இருக்கிறது? எந்த இவனாலும் சொல்ல முடிய வில்லை. ஆனால் அதற்குப் பிறந்த நாள், கல்யாணம், பிள்ளைகள், கூத்தி, கற்பழிப்புக் கதைகள் எப்படி சிந்தித்தாயா? சிந்தி. வீண் செலவை நிறுத்து. கற்பனையை மற, மனி தனை நினை.

நாம், நம் வீடு, நாடு, இதற்காக பாடுபடு. தேவையில்லாது எரியும் மின்விசிறியை அணை. மரம் வளர். மழைநீர் சேகரி. உன் இடமாக நினைத்து சுத்ததத்தைப் பேணிவா. போராட்டம் வேண்டாம். அரசாங்கச் சொத்து. அதுநம் சொத்து. செய்யும் தொழிலுக்குச் சரியான வரி செலுத்த, கோரிக்கை வை. அதுவே நம் கடமை. உயிரை எடுக்கும் மின்சாரம் உன் கையில். அணுமின் வேண்டாம் என்பது எப்படி?

- மா.சென்றாயன், தருமபுரி

தமிழ் ஓவியா said...

பழையதைக் கழற்றி புதிய தடத்தில் வாகை சூடுவோம்


- மு.வி. சோமசுந்தரம்

இவர் ஒரு செக்குமாடப்பா செய் ததையே தான் செய்து பழக்கம். புதுசா ஒரு வேலையை கொடு, உடனே, ஆளைவிடு, நமக்கு இதெல்லாம் சரிப் பட்டு வராது என்று அடக்கமாகவே பதில் கூறிவிட்டு, அவருடைய பழக் கப்பட்ட வேலையில் மூழ்கி விடுவார் இப்படித்தான் பழனிச்சாமியைப்பற்றி, புதுமை விரும்பி பச்சையப்பன் கூறுவார்.

ஆவுடையப்பன் இருக்கிறாரே, அவர் அரைத்த மாவையே அரைக் கரவரப்பா. புதிய பொறுப்பும் வேணாம், உத்தியோக உயர்வும் வேணாம்ன்னு ஒரு சன்னியாசி மாதிரியே இருந்து, ஓய்வு பெற்று வீட்டுக்குப் போவதில் கவலையே படாத வரப்பா. ஆவுடையப்பரைப் பற்றி, ஆனந்தகுமாரின் ஆராய்ச்சி முடிவு இது.

பழக்க வழக்கங்களுக்கு அடி மையாக இருப்பதும், மாறுதலுக்கு ஏற்ப மாறுவதற்குத் தயாராக இல்லையென்றால், முன்னேற்றப் பாதையில் நடைபோடவும் முடியாது. வெற்றி படிக்கட்டில் கால்வைக்கவும் முடியாது. எதிர் வரும் சவால்களைக் கண்டு ஒதுங் கிப் போகத்தான் மனம் வரும்.

இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையாக, ருசியற்ற, உப்பு சப்பு இல்லாத வாழ்க்கையாக அமைந்து விடும். குறிப்பாக, ஒரு பணியில் சேர்ந்து, உயர்நிலை அடைவதைக் கருத்தில் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு, பணியில் இருக்கும் நேரத்தில், மாற்றத் தேவைக்கான கதவு திறக்கப்படும். சுழற்சி நெருங்கும், திருப்பங்கள் நீ தயாரா? என்று கேட்கும் அந்த நேரத்தில், பழைய பழகிப் போன மனநிலை, பழக்க முறை, புதிய அத்தியாயம் துவங்க, புதியவற்றை கற்றுக் கொள்ள, தடைக் கற்களாக எதிரில் குவியும்.

நாம் யார் என்பதை மற்றவர், நம்முடைய நல்லதுமான, அல்லதுமான பழக்க மூலம் அறிந்து கொள்வர். நம்முடைய முயற்சிகள் பலனை அளிக்க நம்முடைய செயல் வழியை மறு ஆய்வு செய்வது அவசியம். அத்துடன் அவை நமக்கு, தடையாக இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். புதுமையை ஏற்றுக் கொண்டு அதன் பலனைக் காணும் வேளையில், பழைய பழக்கத்தை கைவிடாதிருந்தால், முழு பலனைக் காண்பது அரிது. பவலனளிக் காத செயல் வழிகளிலிருந்து மீண்டு வரும் ஒருவருடைய திறமையே அவருடைய அலுவலகப் பணியிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற் றியைக் கனியச் செய்வதாக அமையும்.

மனிதர்கள் அவர்தம் வாழ் நாளில் 80 விழுக்காடு அளவுக்கு, தினமும் முறையாக செய்யும் காரியங்களில் காலத்தை செலவிடுவதாக விஞ்ஞான ஆய்வு கூறுகிறது. தினமும் பல் துலக்குவது, உணவு உண்பது, நடப்பது, அலுவலகத்துக்குச் செல்வது போன்ற காரியங்களுக்கு சிந்தனை நேரம் குறைவே. காரணம் இவை திரும்பத் திரும்ப செய்யப்படும் செயல்கள். இந்த செயல்கள் தானியங்கிச் செயல்முறையில் (கிஷீ றிவீறீஷீ விஷீபீமீ) செயல்படுகின்றன. அதன் காரணமாக, புதிய சூழ்நிலை ஏற்படும்போது, புதிய முறையை கடைப்பிடிக்க முற்படும்போது, பழைய முறையை விலக்கும்போது, நம் பழக்க முறைகளை மாற்றிக் கொள்வதில் சங்கட நிலையை சந்திக்க வேண்டிய நிலைவரும்.

ஆளுமைத் தன்மைக்குத் தடை யாகவும், அலுவலகப் பணியில் வில்லங் கமாகவும் விளங்கும் பழமைப் பழக் கங்களைத் தள்ளி வைக்க கீழ்க்கண்ட தடையங்கள் பற்றி அறிந்துகொள்வது நன்மை பயக்கும்.

நம்மை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக, நாம் எந்த பழக்கத்தை ஒதுக்க வேண்டும் என்று நினைக் கிறோமோ, அதன் தன்மையையும், அதனைக் கைக் கொண்ட முறையையும் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றம் மேற்கொள்ளும் தன்மையின் சிறப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும். மாற்றத்தின் அவசியத்தையும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்மை நாம் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

பயனற்றது என்று ஒதுக்கிவிட்ட பிறகு, நாம் ஏன் அவற்றை ஒதுக்கி விட்டோம் என்ற நினைப்பையும் கொண்டு, அதனால் பெற்ற நன்மை யையும் எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எண்ணிப் பார்ப்பதின் மூலம் பழைய நிலைக்குத் திரும்பி செல்லலாமா என்ற சபலம் ஏற்படாமல் புதிய பாதையில் உறுதி யாகப் பயணிக்க முடியும்.

தமிழ் ஓவியா said...

நம் தவறான பழக்க முறையையும், எதிர்மறை குணத்தையும், மாற்றிக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வதின்மூலம், தகுதியற்றதை, தரம் தாழ்ந்தவற்றையும், தள்ளி வைக்கும் சக்தி வளரும். நம் பணியிடங்களில், தொழில் முறையில் பழக வேண்டியுள்ள தோழர் களுடன் பழகும் போது தேவையளவுக் கான எல்லைக் கோட்டை வகுத்துக் கொள்ளும் முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கருதும்போது, நம் செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

புதிய பழக்கத்தைக் கற்றுக் கொள்ளுதல்

பயனளிக்கத்தக்க பழக்கத்தைக் கற்றுக் கொள்ளுதல் முக்கியம். கற் றுக் கொண்டதை நம் அன்றாட வாழ்க்கை முறையில் இணைத்துக் கொள்வதின் மூலம், வாழ்க்கை முறையின் தரம் உயரும். புதிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக் கும்போது, அதன் பலனை எண்ணி மகிழ வேண்டும். புதியதை ஏற்று கடைப்பிடிக்கும் போது, முயற்சியில் தோல்வி கண்டால், சோர்வு அடையக் கூடாது. தொடர்ந்து, கடைப் பிடித்து அதன் நலனைப்பற்றி வாழும் நிலையை எய்த வேண்டும். நாம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வது போன்ற வாழ்க்கை வாழ்பவ ருடைய உரையாடல்களை, அனுப வத்தை, வெளிப்பாட்டை விரும்பி கேட்க வேண்டும். தீய பழக்க முறை யினின்று வெளிவந்து வெற்றி கண்ட வருடைய உரை பயனளிக்கத்தக்கதாகும். அதன் மூலம் பெறும் குறிப்புகள், நம் நடைமுறையில் குறுக்கிடும் தொல் லைகளுக்கு தீர்வு காணவும், தொடர்ந்து நாம் செயல்படுவதற்கு ஊக்க சக்தி யாகவும் அமையும். தேவையின் காரண மாக பழைய முறையினின்று மீண்டு, புதிய முறையின் வழி வாழ்க்கையை நடத்தி, சவால்களை சந்தித்து தடை போடுபவரே வாகை மாலை அணிந்த வராவர்.

தி இந்து 12-_9_2012 ஆம் தேதி இதழில் வந்த பிஷீஷ் ஷீ ளிஸ்மீக்ஷீநீஷீனீமீ ளிறீபீ லீணீதீவீ என்ற கட்டுரையின் கருப்பொருளைக் கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்டது.

குறிப்பு: பெரும்பாலரான, பகுத்தறி வாளர்களும், பெரியார் தொண்டர் களும், பாசை படித்த, பத்தாம் பசலித் தன வாழ்க்கை முறையைத் தவிர்த்து, தந்தை பெரியார் சிந்தனையால் ஈர்க்கப் பெற்று, தெளிவு பெற்று வாழ்க்கையில் வாகை சூடியவர்களாக வாழ்வதும் கண்கூடே)

தமிழ் ஓவியா said...


என்சுயநலம்எது?


தோழர் வெங்கலவன் அவர்கள் என்னை சுயநல மில்லாதவன் என்றும், பதவியில் ஆசையில்லாதவன் என்றும், இருந்தால் சில பெரியவர்களைப் போல் பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடும் என்றும், இந்த நெருக்கடியில் பெரும் பணம் சம்பாதித்தும் இருக்கக் கூடும் என்றும் நான் பெரிய தியாகம் செய் திருப்பதாகவும் சொல்லிப் புகழ்ந்தார்.

அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் இந்ததொண்டு வேலை செய்வதைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் தகுதி அற்றவன் என்பது எனக்குத் தெரியும்.

பதவி வந்தாலும் அதைச் சுமந்து கொண்டு இருக்க என்னால் முடியாது என்பது உங்களுக்குத் தெரியும்.

அன்றியும் இன்று எனக்கு பணம் இல்லாமலோ, பதவி இல்லாமலோ நான் இருக்கவில்லை.

எனக்குச் செலவுக்கு வேண்டியதற்கு மேல் என்னிடம் பணம் உண்டு.

அதை என்ன செய்வது என்பதே எனக்குப் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது.

எனக்கு இருக்க வேண்டியதற்கு மேலான பதவியையும் நீங்கள் அளித்திருக்கிறீர்கள். நீங்கள் கருதுகிற அளவு செல்வமும், நீங்கள் கருதுகிற பெரிய பதவியும் எனக்கு இருந்தால் இன் றுள்ள மதிப்பு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் கருதுகிற பணக்காரரைவிட, நீங்கள் கருதுகிற பதவியாளர்களைவிட உங்கள்முன்நான் பெருமை உள்ளவனாக இருக்கிறேன்.

நீங்களும் பெருமையாய்க் கருதுகிறீர்கள் என்றே கருதுகிறேன்.

எனக்கு சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன் என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றது.

நான் என் சொந்த சுயநலம் என்பதை திராவிட சமுதாயம் என்று எண்ணியிருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல்வமும் பதவியும் என்பவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன்.

அந்தச் சுயநலத்திற்கே உழைக்கிறேன்.

அதைத் தவிர என் சொந்தம் என்று எண்ணு வதற்கு அவசியமான சாதனம் எனக்கு ஒன்றுமே இல்லை.

இருந்தாலும் இதற்கு மேல் என்ன வேண்டி இருக்கிறது?

ஏன் இவ்வளவு தூரம் (தற்பெருமையாய் கருதும்படி) சொல்லுகிறேன் என்றால், ஒவ்வொரு மனிதனும் தோழர் வெங்கலவன் அவர்கள் குறிப்பிட்டவர்களான ராஜா சர் போலவோ, சர். இராமசாமி போலவோ, சர். சண்முகம் போலவோ வர வேண்டும் என்று கருதுவதைவிட அதாவது பெரிய செல்வவான்களாகவும், பதவியாளர்களாகவும் வர வேண்டுமென்று கருதுவதை விட, நல்ல தொண்டனாக தாழ்த்தப்பட்ட கொடுமை செய்யப்பட்ட மக்களுக்கு விடுதலை அளிப்பவர்களாக அவர்களை செல்வவான்களாகவும் பதவியாளர் களாகவும் ஆக்குபவர்களாக இருப்பதினால் பெருமை இல்லாமல் போகாது என்பதை வாலிபர்களுக்கு எடுத்துக் காட்டவேயாகும்.

முன் சொன்னவர்களால் ஏற்படும் நன்மையைவிட பின் சொன்னவர்களால் ஏற்படும் நன்மை குறைந்து போகாது.

- தந்தை பெரியார்
(குடிஅரசு தொகுதி 31 பக்கம் 212)

தமிழ் ஓவியா said...


பிண்டம் பிடிப்பவன் எங்கே?

பிண்டம் பிடிப்பவன் எங்கே?

குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனைக் கருக்குழாய் மூலம் குழந்தைப் பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும். இந்தத் தகவலை இங்கிலாந்துவாழ் இந்திய வம்சாவளிப் பெண் விஞ்ஞானி ஆர்த்தி பிரசாத் தெரிவித்துள்ளார்.

இவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பேராசிரி யராகப் பணிபுரிகிறார். இவர் எழுதிய லைக் எ விர்ஜின் என்ற அறிவியல் ஆய்வு புத்தகம் வெளியிடப்பட்டது.

அதில், தற்போது பல துறைகளில் அதிவேகமாக அறிவியல் முன்னேறி யுள்ளது. அதுபோன்று இனப்பெருக்க உற்பத்தியிலும் அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளோம். எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மூலம் செயற்கைக் கருப்பை தயாரிக்க முடியும். அதில் இயற்கைக் கருப்பையில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் திரவத்தை உருவாக்கலாம்.

எனவே, குழந்தையை 10 மாதம் சுமக்க பெண் தேவை இல்லை. அதே போன்று, உயிரணு (விந்தணு) பெற ஆண் தேவை யில்லை. ஏனெனில் செயற்கை முறை யில் தற்போது அது தயாரிக்கப்பட்டுள் ளது. எனவே, ஆண் - பெண் துணை யில்லாமல் செயற்கை முறையில் குழந்தை பெற முடியும் என தெரிவித்துள்ளார்

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு தகவல்


சென்னை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.

சென்னை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு தமிழைக் கட்டாயப் பாடமாக்க மறுத்தது.

இதனை எதிர்த்து நீதிக் கட்சியைச் சேர்ந்த இராஜரத்தின முதலியார் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனம் தெரிவித்தார்.

நீதிக்கட்சி பிரமுகர்கள் ஆர். வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ். முத்தையா முதலியார், டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பிற மொழி கற்பிக்கப்படுவதற்கு வழி வகுத்தனர்.

(தமிழ்நாட்டிலே இப்படி ஒரு நிலை!)

- க. பழநிசாமி. தெ.புதுப்பட்டி