Search This Blog
31.10.12
தீபாவளிக்குப் பதிலாக இந்து மதம் ஒழிப்பு நாள் பண்டிகை! -பெரியார்
1916-இல் தோன்றி பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சியென்றும் வழங்கப்பட்டு வந்த தென்னிந்திய நல உரிமை சங்கம், எப்படி 1926- இருந்து நம்மால் நடத்தப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கதோடு 1936- இல் பிணைய நேரிட்டது என்பதையும், பிறகு எப்படி 1944- இல் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் ஒன்றாக்கப்பட்ட திராவிடர் கழகம் தோன்றுவிக்கப்பட்டதென்பதையும், பிறகு எப்படி அது எதிரிகளும் கண்டு அஞ்சும்படி வளர்ச்சியடைந்தது என்பதையும் எடுத்துக் கூறிவிட்டு, வெளி எதிரிகளெல்லாம் ஒழிந்துவிட்ட நேரத்தில் உள்ளெதிரிகள் தோன்றி தொல்லை கொடுப்பது எந்த இயக்கத்திலும் சகஜந்தான் என்றும், பொதுமக்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் பொறுமையோடு கவனித்துப் பார்த்து, புத்தியோடு ஆலோசித்துப் பார்த்து உண்மை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்றும், சீக்கிரத்தில் பொது மக்கள் உண்மை உணர்ந்து இந்த கிளர்ச்சிக்காரர்களை வெறுத்து ஒழிக்கப் போவது என்பது நிச்சயமான பதில். தனக்கு நம்பிக்கையுண்டென்றும், இதன் பயனாய் இக்கிளர்ச்சிக்காரர்கள் ஒன்று அனமதேயமாக வேண்டும் அல்லது வேறு கட்சியை சரணடைய வேண்டும் என்கிற நிலை சீக்கிரமே ஏற்பட்டுவிடும்.
மேலும் பேசுகையில் திராவிடர் கழகம் அரசியல் போட்டா போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்து வருவதற்கான காரணங்களை கூறிவிட்டு, இன்றைய காங்கிரஸ் விரைவாக செல்வாக்கு இழந்து வரக்காரணமே காங்கிரஸ்காரர்களிடையே இருந்து வரும் பதவிப் போட்டி என்று குறிப்பிட்டார்.
காரணம் வர்ணாஸ்ரமம் ஒழிய அதற்கு ஆதாரமாய் இருந்து வரும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் யாவும் ஒழிந்தாக வேண்டும் என்று வலியுறுத்திப் பேசுகையில், தீபாவளி, ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகள் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் பண்டிகைகள் தானென்றும், வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்ப்பவர்கள் நரகாசூரன் அடைந்த கதியை, இரணியன் அடைந்த கதியை அடைவார்கள் என்பதை வலியுறுத்தவே பாகவதம் முதலிய கற்பனைக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றும், திராவிட மக்கள் இவற்றை நம்பி மோசம் போகக் கூடாதென்றும் கூறினார்.
இந்து மதத்திற்கு ஒரு கடுகளவு ஆதாரம் இருக்காவிட்டாலும் கூட வருணாஸ்ரம தர்மம் ஒழியாது என்று குறிப்பிட்டுப் பேசுகையில், காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும், காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு, முஸ்லீம்களையும், தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும், இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும், திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது வெற்றிக் கொண்டாட்ட தினமாக்கி கோட்சேக்கும் கோயில் கட்டி பூஜை நடத்துவார்கள் என்றும்,
தான் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை இந்து மத ஒழிப்பு தினமாக திராவிடர்கள் ஒரு பண்டிகைத் தினமாக - கோட்சே ஒழிப்புத் தினமாக வருடந்தோறும் தீபாவளிக்குப் பதில் பண்டிகையாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் திராவிட நாடு பிரிவினை அடைந்ததாக வேண்டியதற்கான காரணங்களையெல்லாம் எடுத்துக் கூறிவிட்டு, முஸ்லீம்களைப் போல் எதிர்த்து மோதுதலும் ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாட்டோடு திராவிட நாடு பிரிவினையையே லட்சியமாகக் கொண்டு போனோமானால் விரைவில் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாகத் திராவிடர் கழகத்தின் முயற்சி வீண்போகவில்லை என்பதற்கு அடுத்தக் கட்டமாக, நம்மவர்கள் மந்திரிகளாகவும், நம்மவர்கள் நீதிபதிகளாகவும், நம்மவர்கள் கலெக்டர்களாகவும் பெரிய பெரிய பதவிகள், மேலும் மேலும் அதிகமாகப் பெற்று வரக் காரணமே திராவிடர் கழகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கைதான் என்றும், திராவிடர் கழகம் ஒழிக்கப்பட்டுப் போனால் பார்ப்பனர்களே சகல உயர் உத்தியோகங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்றும் கூறி, ஒவ்வொரு மானமுள்ள திராவிடனுக்கும் திராவிடர் கழகத்தை வளர்ப்பதே ஒப்பற்ற கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.
--------------------------------------------- திருவத்திப்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 19.11.1949- அன்று ஆற்றிய சொற்பொழிவு.-”விடுதலை” 21.11.1949
Labels:
பெரியார்
30.10.12
இராவணன் - ஒரு மகாத்மா - ஜலந்தரில் வழிபாடு
எல்லோரும்
எளிதாக சொல்லி விடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால்
ராவணன் என்றும்! பொதுப்புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை.
எங்களைப் பொறுத்தவரை ராவணன், மகாத்மா
-இப்படிச் சொல்கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர்.
தசரா விழாவில் ராமலீலா கொண்டாடி, ராவணன்-
அவன் தம்பி கும்பகர்ணண்-மகன் இந்திரஜித் போன்றவர்களின் நெட்டுருவங்கள் மீது
தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர்
மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாளைய பிரதமர் கனவு காணும்
ராகுல்காந்தி எல்லோருமே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள்.
ஆனால், ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ, இனி இதுபோல செய்து எங்கள்
மனதை நோகடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஏன்? நாளேட்டில்
இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரது
பெயரிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில்
ஆதிதர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி
சமுதாயம்தான். (திருக்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு
தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது). வால்மீகி
சமுதாயத்தினர் ராவணனை கடவுளாக வணங்குகிறார்கள்.
நீங்கள் சித்திரிப்பது போல ராவணன்
அரக்கனல்ல. அவர் மகாத்மா. வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவணனை
வலிமையான-நேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார். அதனால்தான்
நாங்கள் அவரை வழிபடுகிறோம் என்று ஆதி தர்ம சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன்
ரத்தன் ராவணா கூறுகிறார். நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளையில் இவர்கள், ராவண பூஜை நடத் துகிறார்கள். தசராவில் தீ அம்புகள் பாயும்
பொழுதில், வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர்களின் பூஜையில் 4 நிமிட
நேரத்திற்கு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு, ராவணனைப் புகழும் பாடல்கள்
பாடப்படு கின்றன. ஆண்கள் பெண்களென சுமார் 300 பேர் இந்த பூஜையில்
பங்கேற்கின் றனர்.
ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித்
ஹன்ஸ், மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவிபாலி ஆகியோரும்
ஜலந் தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர். நாங்கள் வழிபடும்
ராவணனை விஜயதசமி நாளில் கொடும் பாவியாக கொளுத்துவதை ஏற்க முடியாது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்
சவுர் என்ற இடத்திலும் ராவணனை அந்த ஊர் மக்கள் கொண் டாடுகிறார்கள். காரணம்,
ராவண னின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின்
நம்பிக்கை. அதனால், தங்கள் ஊர் மருமகனான ராவணனை, ராமன் கொன்றதை அவர்கள்
ஏற்பதில்லை. ராவணனின் நினைவில் பூஜைகள் நடத்துகிறார்கள். இதுபோலவே
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜயதசமி நாளில் ராவண வழிபாடு
நடக்கிறது.
முதன்முதலில், ராவணன் எங்கள் பாட்டன் என்ற
குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். ராவணனை திராவிட
மன்னன் என்று பெரியார்-அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன்னார்கள். இதுகுறித்து, கம்பராமாயணத்தைப் போற்றும் தமிழறிஞர்களுடன்
நேருக்கு நேர் வாதம் செய்தனர். ராமாயண எரிப்பு என்றளவில் போராட்டம்
நீண்டது. ராம லீலாவுக்கு எதிராக ராவணலீலாவை நடத்தி, ராமர் படத்துக்கு தீ
வைத்தவர் மணியம்மையார்.
ராவணன் திராவிட மன்னன் என்ற குரல்
தென்னகத்திலிருந்து ஒலித்தது. அவன் எங்களுக்கு கடவுள்- மகாத்மா என்று
கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள்.தீ பரவட்டும்.
--------------- "விடுதலை” 299-10-2012
29.10.12
வீண் வம்புதானே பிராமணாள் ஓட்டல் என்பது?
தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கூட்டம் சிறீரங் கத்தில் நடைபெற்றுள்ளது. எதற்காகவாம்?
சிறீரங்கத்தில் சமுதாயத்தின் பெயரோடு
செயல்பட்டு வரும் டிபன் கடைக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும்
பிரிவினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு
செல்ல திருச்சி யில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட் டம் நடத்துவது
எனத் தீர் மானிக்கப்பட்டது. (தினமலர் 27.10.2012 - திருச்சி)
இந்தத் தீர்மானத்தி லேயே ஒன்றை ஒப்புக்
கொண்டுள்ளனர். தங்கள் சமுதாயத்தின் பெயரோடு செயல்பட்டு வரும் டிபன் கடையாம்
(இவர்கள் சமு தாயத்தினர் மட்டும் போய் சாப்பிட்டால் போதுமோ!)
ஒன்றை மறைத்து விட்டார்களே - மறையவர்கள்;
இந்தக் கடைக்கு இவர்களின் சமுதாயப் பெயரான பிராமணாள் என்பது தொடக்க முதலே
இருந்து வந்திருக்கிறதா? இல்லையே! திடீரென ஒரு மாதத்துக்கு முன் துள்ளிக்
குதித்து முண்டா தட்டுவது ஏன்?
உங்கள் சமுதாயப் பெயர் என்பது உங்கள்
அளவில் மட்டுமே முடித்துக் கொண்டால் பிரச்சினையல்லவே! அந்தப் பெயர்
அடுத்தவர்களை அவமதிக் கக் கூடாதே! நீ பிராமணன் என்றால் நாங்கள் யார்?
சூத்திரர்கள் தானே? சூத்திரர்கள் என்றால் யார்? உங்கள் மனுதர்ம சாத்திரம்
(அத்தியாயம் 8 சுலோகம் 415) என்ன கூறுகிறது? சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர்
அதில் ஒன்று வேசி மகன் என்று கூறப்பட்டுள்ளதே! இந்த இழிவை இந்த 2012லும்
எங்கள் மீது மறைமுக மாகத் திணிக்கும் திமிரிடி தானே, வீண் வம்புதானே
பிராமணாள் ஓட்டல் என்பது?
ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக
இருந்த திரு. எம்.பி. புருசோத்தமன் - எல்லா ஓட்டல் முதலாளிகளுக்கும்
சுற்றறிக்கை வெளியிட வில்லையா? பிராமணாள் பெயர் நீக்கப்பட்டு விடும் என்று
திராவிடர் கழகப் பொதுச் செயலாளருக்கு அதிகார பூர்வமாகக் கடிதம்
எழுதிடவில்லையா? 1978ஆம் ஆண்டிலேயே முடிந்து போன கந்தாயத்துக்கு உயிரூட்ட
முயற்சிப்பது ஏன்? அதன் பின்னணி என்ன? அதிகார அரசியல் தங்கள் கையில்
வந்துவிட்டது என்ற நினைப்பா?
ஒரு கட்டத்தில் சென்னை போன்ற நகரங்களில்கூட சூத்திரர்கள் பஞ்சமர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாத
நிலை! எடுப்பு சாப்பாடு எடுத்த காலம் ஒன்று இருந்தது. போராடித்தானே
ஒழித்தோம்!
இப்பொழுது இன்னொரு வகையில் பிராமணாள்
பாம்பு தலை எடுத்தால் அதனை அனுமதிப்பது எப்படி? நூற்றுக்கு 97 விழுக்காடு
மக்களை 3 சதவிகித மக்கள் இழிவு படுத்திட அனுமதிக்க முடியுமா? பிராமணாள்
பன்றி இறைச்சிக் கடை - பிராமணாள் பசு மாமிசக் கடை, பிராமணாள் கருவாட்டுக்
கடை என்று யாராவது வைக்க முன் வந்தால் என்ன செய்ய முடியும்?
புலியின் வாலை மிதிக்க ஆசைப்பட வேண்டாம் -
உண்ணவிரதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற் கொண்டால் அது எங்கள்
போராட்டத்துக்கு, பிரச் சாரத்துக்கு நீங்கள் இலவசமாக எங்களுக்குச் செய்யும்
பிரச்சாரப் பேரு தவிதான்! பார்ப்பானுக்கு ஏது முன் புத்தி?
------------------------ மயிலாடன் அவர்கள் 29-10-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
28.10.12
விஜயதசமி எனப்படும் தசராவின் கதை
தசராவின் கதை
இன்றைய
தினம் விஜயதசமி எனப்படும் தசராவை அப்பாவி மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்
கின்றார்கள். தசராவைப் பற்றி இந்து புராணக் கதைகள் விலா வாரியாக
விவரிக்கின்றன. பத்துத் தலை இராவணனைப் பற்றி புராணங்கள் புளுகித்
தள்ளுகின்றன. தீமையை நன்மை வெற்றி கொண்டதால் இந்த விழாவாம். இந்தக் கதைகளை
எல்லாம் பகுத்தறிவாளர்களால் நம்ப முடியுமா? இந்தக் கதைகளின் உண்மை
முகத்தைக் கண்டால் அருவருப்பே மிஞ்சும்.
அயோத்தி மன்னனான இராமனுககும், இலங்கையை ஆண்ட இராவணன் என்னும் அரசனுக்கும் இடையே நிகழ்ந்த போர் என்பதே உண்மை.
சீதை மட்டுமா பழி வாங்கப்பட் டாள்?
சூர்ப்பனகைப் பழி வாங்கப் பட்டதைப்பற்றி என்னவென்று சொல்வது?
இலக்குவனிடத்திலே, தன் அன்பான காதலை எடுத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக
அவளின் அழகிய மூக்கு வெட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? சூர்ப்பனகையின்
காதலை ஏற்றிட இலக்குவன் மறுத்திருக்கலாம். அதற்கான உரிமை அவனுக்குண்டு.
ஆனால் அவளின் மூக்கை வெட்டுவதென்பது என்ன நியாயம்? வெள்ளைத் தோல் கொண்டவன்
என்கின்ற ஆணவத் திமிர்தானே இதற்குக் காரணம். வெள்ளை நிறத்தினரான ஆரியர்கள்,
கறுப்பு நிறத்தினரான தென்னிந்தியர் களை வெறுத்ததுதானே இதற்குக் காரணம்?
இங்கு இலக்குவனின் மனிதப் பண்பு கீழ்த்தரமானதாக உள்ளது.
காட்டுமிராண்டிகள்கூட, தன் அன்பை எதிர்பார்த்து வந்த பெண்ணை இந்த வகையில்
மானபங்கப் படுத்த மாட்டார்கள்.
இராவணனின் நாகரிகத்தை அதே சமயம் நாம்
போற்ற வேண்டியுள்ளது. அசோகவனத்தில் சீதை பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கிறாள். தன் அதிகாரத்தின்கீழ் இருக்கும் சீதையை இராவணன்
நினைத்திருந்தால், என்னவெல்லாமோ செய்திருக்க முடியும்.
ஆனால்
இராவணனோ நாகரிகம் மிக்கவன். மனிதநேயக் காவலன். சீதையினிடத்தில் பண்புடன்
நடந்து கொண்டான். தன்னுடைய தங்கை சூர்ப்பனகையை மூக்கரிந்து மானபங்கம் செய்த
இலக்குவனின் அண்ணி என்கிற வகையில் சீதையை பழி வாங்கி இருக்கலாம். ஆனால்
நாகரிகம் மிக்க இராவணன் அவ் இழி நிலைக்குச் சென்றானில்லை. இராவணன்
மரியாதைக்குரியவனாக இங்கே தோற்றமளிக்கிறான். நற்பண்புகள் கொண்ட மனிதனாக
இராவணன் மிளிர்கின்றான்.
ஆனால் காலத்தின் போக்கு எதிர் திசையில் அல்லவா அமைந்து விட்டது. இராவணன் மாபாதகன் என்றல்லவா வருணித்து விட்டார்கள் மாபாதகர்கள்.
வெண்தோல் கொண்ட ஆரிய அரசன் இராமனுக்கும், கருமை நிறத் திராவிட அரசன் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போர்தானே இது.
இன்றைய
தலித்துகள் இருக்கும் நிலைமைக்கும், அன்றைய இராவணன் இருந்த நிலைமைக்கும்
வேறுபாடு ஒன்றும் இல்லையே. ஆனாலும் ஆரிய சூழ்ச்சிக்கு இராவணன் இரையானானே?
குரங்குப் படையின் கதைதான் என்ன?
குரங்குப் படை என்பது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தானே? கருந்தோல்
திராவிடர்களை இழிவுப்படுத்தத்தானே இந்த குரங்குப் படையைப் பற்றிய கதை.
இலஜோரி இராம்பாலி என்பவர் அம்பேத்காரியவாதி. அனைவராலும்
மதிக்கப்படுபவர். அவர் இராவணனை சர்வ சாதாரணமாக இராவணன் என்று கூறுவதில்லை,
மகாத்மா இராவணன் என்றே கூறுவார்.
உழைப்பாளி வர்க்கத்தை அடிமைப்படுத்தி
அதனால் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நயவஞ்சக ஆரியர்களின் கதைதான்
இந்த விஜயதசமியைப் பற்றிய கதை.
இராவணன் என்றும் மாமனிதனாகத் திகழ்ந்தான் என்பதுதானே உண்மை.
இராம் பாலி கூறுகிறார்: தீபாவளி அன்று
தீபங்களின் அணிவகுப்பு என் கிற வகையில் அதை இரசிக்கிறேன். ஆனால் இராமனின்
கதையை என் னால் நம்ப முடியவில்லையே?
அம்பேத்கார் தத்துவத்தை பின்பற்றும் இராம்பாலியின் கள்ளங்கபடமற்ற கூற்று அனைவரும் ஏற்கத்தக்கது.
----------------------------------------"'விடுதலை” 27-10-2012
27.10.12
ராம்லீலா விழாவில் எரிக்கப்பட வேண்டியவன் ராமன் அல்லவா!
ஆண்டுதோறும்
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ராம்லீலா மைதானத்தில் நவராத்திரி
-எனும் இந்துப் பண்டிகையின் கடைசி நாளாகிய விஜயதசமியன்று - இராவணன் -
இந்திரஜித் - கும்பகர்ணன் உருவங்களைச் செய்து தீ மூட்டிக் குதூகலிக்கும்
நிகழ்ச்சி - விழா என்ற பெயரில் கொண் டாடப்பட்டு வருகிறது.
இதில் இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர் உட்பட குடும்பத்தினருடன் உட்கார்ந்து குதூகலிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ராம்லீலாவில் கூட
இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும்
காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல்காந்தி ஆகியோர்
கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
இது சட்டப்படியும் தவறு; நியாயப்படியும்
குற்றமாகும். இந்தியா மதச் சார்பற்ற நாடு - அப்படி இருக்கும் பொழுது
ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் ராமன் எனப்படும் இந்து மதக்
கடவுளின் அவதாரத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில் கலந்து
கொள்வது - குறிப்பிட்ட மதத்தின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இல்லையா?
இந்த உருவங்களை எரிப்பதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது? தீயவை அகன்று நல்லவை மலரப் போகிறதாம்.
எது தீயது? எது நல்லது? என்பதுதான் இதில் உள்ள பிரச்சினையே! ராமன் அவதாரம் எடுத்ததற்குச் சொல்லப்படும் காரணம் என்ன?
திருமால் பிருகு முனிவருடைய மனைவியைக்
கொன்று விட்டார். அதனால் அம்முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப் பிறந்து
மனைவியை இழந்து வருந்தும்படி சபித்து விட்டார் என்பது உட்பட பல காரணங்கள்
ராமன் அவதாரத்துக்குக் கூறப்பட்டுள்ள நிலையில், ராமனை எப்படி யோக்கிய
தாம்சம் உள்ள ஒருவனாகப் பாவிக்க முடியும்?
ஏதோ ஒரு காட்டில் தவம் இருந்த சம்புகனை - சூத்திரன் என்று கூறி, பட்டப் பகலில் படுகொலை செய்த கொலைகாரன் ராமன் அல்லவா?
வாலியை மரத்தில் மறைந்திருந்து கொலை செய்த ராமன் எப்படி வீரன் ஆவான்? நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு போய் விடச் செய்தவன் எப்படி காருண்யமூர்த்தி ஆவான்?
நியாயமாக ராம்லீலா விழாவில் எரிக்கப்பட வேண்டியவன் ராமன் அல்லவா!
மேலும் இராமாயணம் என்பது ஆரியர் -
திராவிடப் போராட்டத்தை சித்திரிக்கும் கதை என்று நேரு அவர்களே
எழுதிடவில்லையா? உண்மை இவ்வாறு இருக்க, நேரு குடும் பத்தைச் சேர்ந்த
சோனியாவும், அவரின் மகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி
சரியாகும்?
அப்படியானால் திராவிடர் மீதான ஆரியர்
மேற்கொண்ட யுத்தத்தை நியாயப்படுத்து கிறார்களா? இந்தப் பிரச்சினையை இந்தக்
கோணத்தில் திராவிடர்கள் உணர்ந்து கிளர்ந்து எழுந்தால் நிலைமை என்ன ஆகும்?
மீண்டும் ஆரியர் - திராவிடர் யுத்தத்தைத் தொடங்குவதற்கும் மிகப் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தூபம் போடலாமா?
இராவணன் பொம்மை கொளுத்தப்பட் டுள்ளதே
இராவணனை தங்கள் குல தெய்வ மாக வழிபடுபவர்கள் வட மாநிலங்களில்
இருக்கிறார்களே, அவர்களின் உணர்வை மட்டும் புண்படுத்தலாமா?
இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துக் கூறி,
அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு திராவிடர் கழகத் தலைவர் அன்னை
மணியம்மையார் கடிதம் எழுதியதுண்டே! நியாயமான முறையில் அவர் பதில் எழுதாத
காரணத்தால், தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி
(25.12.1974) இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலக்குவன் உருவங்களைக்
கொளுத்த வில்லையா?
அப்படிக் கொளுத்தியது தவறல்ல என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதே - மீண்டும் இராவண லீலாவை நடத்த வேண் டுமா?
பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டாமா?
------------------------"விடுதலை” தலையங்கம் 26-10-12
26.10.12
பிராமணாள் உணவு விடுதி பெயர் நீக்க போராட்ட வரலாறு
1957ஆம்
ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் முரளீஸ் கஃபே என்னும் பெயரில் உணவு
விடுதியை நடத்தி வந்த பார்ப்பான் மட்டும் பிராமணாள் பெயரை நீக்க மறுத்தார்.
தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த
பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தின்போது பல ஊர்களிலும் பார்ப்பனர்களே
முன்வந்து அந்த வருணாசிரமப் பெயரை நீக்கி விட்டனர். நீக்காத ஊர்களில்
திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் பெயரை அழித்ததுண்டு.
திருவல்லிக்கேணி பார்ப்பனர் முரண்டு
பிடித்த காரணத்தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பிரச்சார
நோக்கில், தொடர் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். ஆறு மாதங்களுக்கு
மேல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் 1010 கருஞ்சட்டைத் தோழர்கள் கைது
செய்யப்பட்டனர். கடைசியாக ஓட்டல் முதலாளி சரண் அடைந்த காரணத்தால் போராட்டம்
கை விடப்பட்டது. பின்னர் அந்த உணவு விடுதிக்கு அய்டியல் கஃபே என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
சிறீரங்கத்திலும் மீண்டும் ஒரு முரளீஸ் கஃபே போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று தெரிகிறது.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த அந்த உணவு
விடுதியின் பெயரில் திடீரென்று இப்பொழுது பிராமணாள் திணிக்கப்பட வேண்டிய
அவசியம் என்ன? எந்தப் பின்னணியில் இது நடந்திருக்கிறது?
முதல் அமைச்சர் ஜெயலலிதா சிறீரங்கம்
தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் - முதல் அமைச்சரே நமது இனத்தைச்
சேர்ந்தவர் - பிராமணாள் என்று பெயர் சூட்டினால் யார், என்ன செய்ய
முடியும்? அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது என்ற தைரியத்தில் இது
நடக்குமானால் யாருக்குக் கெட்ட பெயர் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள்
நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆளும் கட்சியானபின் கூடுமானவரை பிரச்சினை
உருவாகாமல் தொலைநோக்கோடு செயல்படுவது தான் புத்திசாலித்தனமாகும். மாறாக
ஆளும் நிலையில் இருந்து கொண்டு பிரச்சினைக்குத் தூபம் போடுவது
புத்திசாலித்தனம் ஆகாதே.
இதுகுறித்து வெளிப்படையாக திராவிடர் கழகத்
தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விட்டும்
முதல் அமைச்சர் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காதது கெட்ட வாய்ப்பே!
மாறாக ஆளுங்கட்சியின் அதிகார பூர்வமான
நாளேட்டில் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருப்பது பல்வேறு
சந்தேகங்களை ஏற்படுத்து கிறது.
திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்
நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் அதற்குப் பரிகாரம்
தேடப்படும் என்றாலும், ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் இந்தப் போக்கு - அதன்
பிற்போக்குத் தன்மையையும், பெரியார் - அண்ணா என்கிற தலைவர்களின் பெயர்களை
உதட்டளவில் மட்டும் உச்சரிக்கக் கூடியவர் முதல் அமைச்சர் என்ற நிலையையும்
தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். முன்பு ஒருமுறை சட்டப் பேரவையிலேயே
ஆம் நான் பாப்பாத்திதான்! என்று சொல்லப் போய் அதன் காரணமாகக் கடும்
விமர்சனத்துக்கு ஆளானவர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா என்பதையும் இந்த
நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது பெரியார் பிறந்த மண்! - மேலும் இந்தப்
பிரச்சினைக்கு எதிராக தந்தை பெரியார் அவர்களே போராட்டம் நடத்தியுள்ளார் -
நடத்தி வெற்றியும் பெற்றுள்ளார் என்று தெரிந்து கொண்ட பிறகும் கண்டும்
காணாமல் இருப்பதோ, இந்தப் பிரச்சினையில் ஒரு பொதுக் கூட்டம்
நடத்துவதற்குக்கூட அனுமதி மறுப்பதோ நடைபெறும் தமிழ்நாடு அரசின் சிந்தனைப்
போக்கு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.
(அண்ணா) திராவிட முன்னேற்றக் கழகம்
என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று சாதாரண பொது மக்கள்
மத்தியில் பரவலாகப் பேசும் ஒரு நிலையைத்தான் இது ஏற்படுத்தும். அந்நிலை
ஆட்சிக்கு நல்லது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல்
கட்சியல்ல; பிரச்சாரம், போராட்டம் என்ற இரண்டையும் அணுகு முறையாகக் கொண்ட
சமூகப் புரட்சி இயக்கமாகும்.
இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் ஒரு
பக்கம் பிரச்சாரம் மற்றொரு பக்கம் போராட்டம் என்று தொடங்க ஆரம்பித்தால்
அந்த நிலைக்குத் தமிழ்நாட்டு மக்களின் பெருத்த ஆதரவு கிட்டும் என்பதில்
எட்டுணையும் அய்யமில்லை. வீணாக அரசுக்குக் கெட்ட பெயர் ஈட்ட வேண்டாம்!
-------------------------"விடுதலை” தலையங்கம் 25-10-2012
25.10.12
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்
நவம்பர் முதல் தேதி அய்.நா.வின் மனித
உரிமைக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக பல முனைகளிலும் நெருக்கடி
கொடுக்கப்படும் ஒரு சூழ் நிலையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க
வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள
அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழர் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு:
நவம்பர் ஒன்றில்
அய்.நா. மனித உரிமைகள் பேரவையில், வரும்
நவம்பர் முதல் நாளன்று இடம் பெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திற்காக
இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில
கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து,
அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே
இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப்
படுவது, உயர் பாதுகாப்பு வளையங்கள், ஊடகவியலா ளர்களுக்கான
அச்சுறுத்தல்கள், 2005-இல் திரிகோண மலையில் அய்ந்து மாணவர்கள் படுகொலை
செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில்
முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை,
கேலிச் சித்திர ஓவியர் (cartoonist) பிரகீத் எகினொலி கொட காணாமல் போனது
உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் தங்களது ஆர்வத்தை
வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவும், இங்கிலாந்தும்
சாட்சிகள், மற்றும் பாதிக்கப்பட்டோரைப்
பாதுகாப்ப தற்கான சட்ட மூலம், சேனல் 4 காணொலி தொடர்பான விசாரணை, தமிழ்த்
தேசிய கூட்டமைப்புடன் ஆன இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் இரு தரப்பிலும்
எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய செய்திகள் குறித்து அமெரிக்கா கேள்வி
எழுப்பியுள்ளது.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்
துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில், உள்ளடக்கப்படாத
பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
உள்நாட்டுப் போரின்போது, இடம் பெற்ற மனித
உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான ஒரு
முறைப்படியான சுதந்தர விசாரணை நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசாங்கம் எப்போது
பொறுப்புக் கூறப் போகிறது என்று கனடா அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தக் கட்டத்தில் இலங்கை பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த அய்.நா. மனித உரிமைகள் பேரவையில்
வரும் நவம்பர் முதல் நாள் நடக்கவுள்ள இலங்கைத் தொடர்பான விவாதத்தையடுத்து
நவம்பர் 5ஆம் நாள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது
குறிப்பிடத் தக்கது.
மற்ற வெளிநாடுகளில் இப்படி ஒரு மனிதநேயம்,
மனித உரிமை காப்பு உணர்வு ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட
முயற்சிகளும் கேள்விகள் வாயிலாக வெடித்துக் கிளம்பும் செய்திகள் வரும்போது,
ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டினை
உள்ளடக்கி ஆளும் இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதை தி.மு.க. போன்ற ஆளுங் கூட்டணிக்
கட்சிகள் வற்புறுத்திட வேண்டும். பிரதமரைப் பார்த்தும், அய்க்கிய
முற்போக்கு முன்னணி தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரை நேரில் கண்டும்
பேசி, இந்தியப் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகள் மேலும் எப்படி இன்னும்
முள்வேலிகள் அகற்றப்படாமல், சிங்களக்குடியேற்றமாக தமிழர் வசித்த பகுதிகள்
மாற்றப்பட்டு அங்குள்ள தமிழர்கள் வாழவும் வசதியற்று Homeless வீடற்றவர்
களாகவும் (ஏற்கெனவே நாடற்றவர்களாக்கப்பட்டு விட்டு) உள்ளநிலை, வடகிழக்கு
மாகாணங்களில் இராணுவம் தான் சகல சர்வ அதிகாரிகள் என்ற நிலை போர் முடிந்த 4
ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படி ஒரு கொடுமையா - வாழ்வுரிமைப் பறிப்பா என்று
கேட்க வேண்டும் - இந்தியா பிரச்சினை எழுப்பிட வேண்டும் அந்த நவம்பர்
கூட்டத்தில்.
அய்.நா. சென்ற வெளி உறவுத் துறை அமைச்சர்
கிருஷ்ணா அவசர அவசரமாக காவிரித் தண்ணீரை தமிழ் நாட்டுக்குத் தராதீர் என்று
பிரதமருக்கு எழுதுவதில்தான் முனைப்பு காட்டப்படுகிறது. இது மகா வெட்கக்
கேடு அல்லவா!
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண 1) மத்திய (இந்திய) அரசு முயற்சிகள்
2) உலக மாமன்றமான அய்.நா.வும், அதன் பல்வேறு அங்கங்கள் மூலம்தானே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பரிகாரம் காண முடியும்?
நாம் அழுத்தங்கள் தரலாமே தவிர, ஆக்க
ரீதியான பாதுகாப்பும் மீட்டுரிமையும், பெற்றுத் தர மேற்கண்ட இரண்டு
அமைப்புகளின் பங்கும் பணியும் கடமையும் தானே முக்கியம்?
எனவே வாக்கெடுப்பிலும் இந்தியாதானே இலங் கையை வழிக்குக் கொண்டுவர தக்கதோர் நிலை எடுக்க வேண்டும்?
மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாக வேண்டும்!
3. விடுதலைப்புலிகளை- தமிழர்களை அழித்த
இடத்தில் போர் வெற்றிச் சின்னம் ஒன்றினை இராஜ பக்சே அரசு நிறுவி,
சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாய் வடக்குப் பகுதிக்குச் சென்று கண்டுகளித்து
வருவதற்கு ஏற்பாடு செய்கிறது என்பது எவ்வளவு ஆணவ அகங்காரச் செயல்!
போர் வெற்றிச் சின்னமா? ஈழத் தமிழர்
வாழ்வுரி மையை அழித்த வெறிச் சின்னமா? நடுநிலை நாடுகள் கண்டிக்க வேண்டும்.
இப்படி ஒரு பழி வாங்கும் மிருக உணர்ச்சி தமிழர்கள்மீது சிங்கள அரசால்
நிரந்தரமாகக் காட்டப்பட்டால், அங்கு பழைய - சட்டத்தின்முன் அனைவரும் சமம்
என்பதோ சம வாய்ப்பு என்பதோ, பரஸ்பர அன்பு என்பதோ ஏற்படுமா?
இறுதியில் தீர்வு தனி ஈழம்தான் என்று தமிழர்கள் எண்ணிட அவர்களைத் துரத்துவது அல்லாமல் வேறு என்ன?
புலியும், ஆட்டுக் குட்டியும் சர்க்கஸ்
கூடாரத்தின் காட்சி வரையில் நட்பாக இருப்பதாகக் காட்ட முடியும் - அது
நிரந்தரமாக மாறிவிட்டது என்று எவராவது கூறினால் அதைவிட கேலிக் கூத்து
ஏமாளித்தனம் வேறு உண்டா?
உலக நாடுகள் பார்வை ஈழத் தமிழர்பால் அனுதாபத் தோடு விழுகிறது. இந்திய அரசே, உங்கள் கடமை என்ன?
சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில்
பயிற்சி அளித்து நீங்காப் பழியால் தேர்தல்களில் மீளாத் தோல்விகளையும்
சுமக்கத் தயாராகப் போகிறதா காங்கிரஸ்?
யோசிக்க வேண்டிய தருணம் இது!
யோசிக்க வேண்டிய தருணம் இது!
------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 24.10.2012
Labels:
வீரமணி
24.10.12
காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது சட்டப்படி சரியானதுதானா?
சென்னை
பெருநகர காவல்துறை ஆணையர் காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படக்
கூடாது என்று சொன்னதாக நேற்று பல ஏடுகளிலும் செய்தி வெளி வந்தது.
விடுதலையிலும் முதல் பக்கத்தில் அவரின் படத்தோடு வெளியிட்டோம்.
வழிகாட்டுகிறார் ஆணையர் - என்றுகூட தலைப்புக் கொடுத்திருந்தோம்.
அது தவறு - நான் அவ்வாறு சொல்லவில்லை; நானே ஆயுத பூஜை நடக்கும் சில காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று கலந்து கொள்வேன் என்று இப்பொழுது குறிப்பிட்டுள்ளார். ஏனிந்த நிலை என்று தெரியவில்லை. நான் அவ்வாறு சுற்றறிக்கை வெளியிடவில்லை என்று ஒரு வரியில் மறுத்திருக்கலாம் - காவல்துறை ஆணையர்; அதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்.
காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடலாம்; நானும் கலந்து கொள்வேன் என்று ஒரு அய்.பி.எஸ். அதிகாரி கூறலாமா? சட்டப்படி இது சரியானதுதானா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச்சார்பற்ற தன்மையை மீறலாம் என்று ஒரு அதிகாரி கூறுவதாக ஆகி விடாதா? அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாம் குளறுபடிகள்தானா?
சட்டப்படி, ஆணைப்படி நடக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இல்லை என்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால், அது எங்கே கொண்டு போய்விடும்?
ஆயுத பூஜை கொண்டாடலாம் என்றால், நாட்டில் பல மதங்களுக்கு உரிய எண்ணற்ற பண்டிகைகள் உள்ளனவே - அவற்றை எல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடலாமா? ஆயுத பூஜை மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்று தனி ஆணை ஏதாவது இருக்கிறதா? இப்படி ஒவ்வொரு மதக்காரரும் பூஜை நடத்தலாம் என்று ஆரம்பித்தால் அலுவலகங்களில் வேலையா நடக்கும்? - பூஜை மடங்களாகத்தான் மாறும் - இந்த நிலை நல்லது தானா?
அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையோடு செயல்பட வேண்டும். எந்த மத சம்பந்தமான கடவுள் கடவுளச்சிகள் படங்களும் அரசு அலுவலகங்களில் இடம் பெறக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தாரே!
அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது கூட முதல் அமைச்சர் அண்ணா அவர்கள், எந்த அரசு அலுவலரும் இது கூடாது என்று சொல்லவில்லையே - பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என்ன அப்படி ஓர் அக்கறை என்று எதிர் கேள்விப் போட்டு மடக்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
ஆனாலும் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டுள்ள ஒரு முதல் அமைச்சர் நவராத்திரிக்கு ஆயுத பூஜைக்கு, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்குச் சென்றுள்ளார் என்பது பரிதாபமே!
அரசியலில் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து அந்த அஸ்திவாரத்தின்மீது நின்று கொண்டு ஆலாபணம் செய்யலாம் என்பது அவலச் சுவையே!
இதுபற்றி அண்ணாவின் கருத்து என்ன? இதோ படியுங்கள்:
மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!
அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறோயே!
அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!
எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா, யோசித்துப் பார்.
சரசுவதி பூஜை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.
அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்
சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை
செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?
பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூஜை; ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே. அந்தப் பூஜைகள் செய்தறியாதவர், நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங் களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.
யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!
------------------------ திராவிட நாடு 26.10.1947
- என்கிறார் அறிஞர் அண்ணா.
இதனைச் சுட்டிக் காட்டினால் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஏடான Dr. நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்கு மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது. அண்ணாவை வெறும் முத்திரையாகப் பொறித்துக் கொண்டவர்களுக்குக் கோபம்தானே வரும்.
அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? முடிந்தால் அய்யாவையும், அண்ணாவையும் மறுத்து வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
எல்லாவற்றையும் விட அறிவு நாணயம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

----------------------------”விடுதலை” தலையங்கம் 23-10-2012
23.10.12
திராவிடர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்?
திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கை திராவிடர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்?
தோழர்களே,
திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கைப் பணி தொடங்கப்பட்டு விட்டது. கழகத்தின் அமைப்புச் செயலாளர் மானமிகு இரா.குணசேகரன் அதற்கான களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்குக் கழகத் தோழர்கள் போதிய ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
கழகத்தில் ஏன் சேரவேண்டும்? கறுப்புச் சட்டை ஏன் அணிய வேண் டும்?
இது ஒன்றுதான்
1. பிறவியில் பேதம் எந்த வகையிலும் இருக்கக் கூடாது என்று கூறுகிறது!
2. பிறவிப் பேதத்தைக் கட்டிக் காப்பது கடவுளா? மதமா? வேதமா? உபநிஷத்துக்களா? இதிகாசங்களா? புராணங்களா? ஏன் அரசமைப்புச் சட்டமா? நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்து வந்தது என்பதற்காகவா?
எதுவாக இருந்தாலும் பேதமற்ற மானுட சமூக உருவாக்கத்திற்காக அவற்றைத் தகர்த்தெறியக் கூடிய ஒரே இயக்கம் இது. மண்ணுக்கு ஒருமைப் பாடு என்பதைவிட மனிதனுக்குள் ஒருமைப்பாடு என்ற உயரிய தத்து வத்தை உள்ளடக்கமாக கொண்ட ஒப்பரிய கழகம்.
இதற்காக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக்கூடிய இயக்கம் இது!
இதற்காகப் போராட்டங்களை நடத் தக்கூடிய அமைப்பு இது. இதற்காகச் சிறைச் சாலைகளை சந்தித்த - சந்திக்கக்கூடிய இயக்கம் இது.
கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறபடி, சொல்லுகிறபடி செயல்பாட்டில் வாழ்ந்து காட்டக்கூடிய கழகம் இது.
3. பாலியல் நீதிக்காகப் பாடுபடக் கூடிய
பாசறை இது. ஆணுக்கு நிகர் பெண் என்பதை எடுத்துக்கூறும் இயக்கம் இது.
இதற்காக 80 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த தலைவர் தந்தை பெரியார்.
மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றிய நீதிக்குக் குரல் கொடுக்கும் பேரியக்கம் இது.
4. சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற கொடுமையான மனுதர்மத்தைத் தீயில் போட்டு எரித்த எழுச்சிகரமான இயக்கம் இது.
குலக்கல்வித் திட்டத்தைத் திணித்து அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட் டத்தைக் குழி தோண்டிப் புதைத்த இயக்கம் இது.
5. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி யிலும், வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அயராது ஒலி முழக்கமிட்டு உழைத்து வரும் ஒப்பரிய கழகம் இது; அதனை வெற்றி மலர்களாக்கி - ஒடுக்கப்பட்ட மக்கள் பல வகைகளிலும் இன்று ஓங்கி நிற்பதற்கு உரிமை கொண் டாட நூற்றுக்கு நூறு தகுதி உடைய தன்மான இயக்கம் இது!
6. சமூகநீதிக்காக முதல் சட்டத் திருத்தம் வந்ததும், 69 சதவிகிதம் நிலைப்பதற்காக 76ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் பயன் பெற மண்டல் குழுப் பரிந்துரை களை செயல்படுத்துவதற்காக 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றது. திராவிடர் கழகம் அல்லவா! தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அல்லவா!
7. வெறும் தீண்டாமை ஒழிக - என்று வெற்றுக் கூச்சல் போடும் கட்சியல்ல; தீண்டாமையின் மூலம் ஜாதி - அதனை ஒழிக்க வேண்டும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மூல பலத்தை நோக்கி போர் புரியக்கூடிய ஒரே ஒரு புரட்சிப் பாசறை இந்தியாவிலேயே திராவிடர் கழகம்தான்.
8. பதவி பக்கம் தலைவைத்துப் படுக்காமல், பதவிக்குச் சென்றால் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள நேரிடும் என்பதைத் தெள்ளிதிற் உணர்ந்து, பதவிகளின் பக்கம் பார் வையைச் செலுத்தாமல், இலட்சியத்தை மட்டுமே குறி வைத்து இலக்கு நோக்கிப் பயணிக்கும் இலட்சியப் பாசறை இது.
9. எல்லார்க்கும் எல்லாம் என்கிற சமநிலை சமதர்மத் தத்துவத்தை உள்ள டக்கிய திட்டத்தை உலகுக்கு அறிவித்த வரும் உலகத் தலைவர் தந்தை பெரியார் தான் (1933 - ஈரோடு சமதர்மத் திட்டம்).
முதலாளி - தொழிலாளி என்ற பேதமே இருக்கக் கூடாது. தொழிலாளி பங்காளியாக்கப்பட வேண்டும் என்ற - யாரும் சொல்லாத புதிய சிந்தனை வெளிச்சத்தை தொழிலாளர்கள் உணர் வின் மீது பாய்ச்சிய பாசறை இது.
பொதுவுரிமை இல்லாத இடத்தில் பொதுவுடைமை பூக்காது என்ற மார்க்ஸ் சொல்லாத புதுக்கருத்தைக் கூறியவர் அறிவுலக ஆசான் பெரியார்! 10. தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் களத்தில் பண்பாட்டுப் புரட்சிக் கொடியைப் பறக்கவிடும் தாய் கழகம் இதுவே! தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடக்க வேண்டும்; அதற்குத் தமிழன் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை ஊட்டியது மட்டு மல்லாமல், அவற்றை நடைமுறைக்கும் கொண்டு வந்த பெருமைக்குரிய வரலாறு இதற்கு மட்டுமேதான் உண்டு.
11. ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியது இன்று நேற்றல்ல - அது 1939இல் தொடங்கப்பட் டது - இந்த இயக்கத்தின் முன்னோடி களால்! மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தி (1983) உலகத் தமிழர்கள் மத்தியில் மகத்தான உணர்வை ஊட்டியதும் திராவிடர் கழகமே!
12. நமஸ்காரம் வணக்கமானதும், உபந்நியாசம் சொற்பொழிவானதும், வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும், ஸ்ரீ திருவானதும் இந்த இயக்கத் தாலேயே!
13. மூடநம்பிக்கைகளைத் தூக்கி எறியச் செய்து தமிழர் விழா தை முதல் நாள் தமிழ்ப் பொங்கல். அதுதான் நமது உழவர் திருநாள் - அறுவடைத் திருநாள் பண்பாட்டுத் திருநாள் என்று பறை சாற்றியதோடு, ஊருக்கு ஊர் விழா எடுக்கக் கால்கோள் போட்ட கழகமும் இதுவே! இதுவே!!
14. பார்ப்பன சமஸ்கிருதக் குடும்பத் தின் குழந்தை யாகிய இந்தியை இந்த நாட்டில் ஆரியம் - முறுக்கேறி திணித்த போது திரண்டு வாருங்கள் திராவிடத் தமிழர்களே - என்று அழைப்புக் கொடுத்து இந்தி என்னும் பார்ப்பனீய இருளை விரட்டிய வீரங்கொள் படைக்குத் தலைமை வகித்து வழி நடத்தி வென்றவர் வெண்தாடி வேந்தர் பெரியார் அல்லவா!
15. தமிழ்நாடு வஞ்சிக்கும் பொழு தெல்லாம் புலிப்படை யென சீறி எழுந்து, உரிமை மீட்பது கருஞ்சட்டைப்படை என்பது இந்த உலகிற்கே தெரியும்.
தமிழர்கள் கல்வியில் விளக்கமுறுவ தும், பதவிகளை அலங்கரிப்பதும், பல்துறை தமிழர் பிற்காலத்தில் ஒளி வீசித் திகழ்ந்தனர் என்றால், அதற்கான நாற்றாங்காலாக இருந்ததும், இருந்து வருவதும் அதற்கான அடையாள முத்திரை கொடுத்ததும் தந்தை பெரியாரும் அவர் கண்ட தன்மானக் கழகமும் தானே!
எதை விலக்கித் திராவிடர் கழகத்தைப் பார்க்க முடியும்? - விளக்க முடியுமா எவராலும்?
அரசியல் பக்கம் போகாத, பதவிப் படிக்கட்டுகளை மிதிக்க விரும்பாத தலை வருக்கே இந்த அரசு காணிக்கை என்று பிரகடனப்படுத்தப்பட்டது எந்த நாட்டில்?
இந்த அரசு சூத்திரர்களுக்காகச் சூத்திரர்களால் ஆளப்படுவது என்று சொல்ல வைத்தது சாதாரணமா? சொன்னவர் தான் சாதாரணமானவரா?
எடை போட்டுப் பாருங்கள், தோழர்களே, கணக்குப் போட்டுப் பாருங்கள் தமிழர்களே; பட்டியல் போட்டுப் பாருங்கள் பகுத்தறிவோடு - அப்பொழுது புரியும் - திராவிடர் கழகமே உரிமைகளுக்கும், வளர்ச்சிக்கும் தாய்வீடு - மூலவேர் - அடிப்படை அஸ்திவாரம்!
16. பகுத்தறிவைச் சொல்லும் இயக்கம் மட்டுமல்ல; பண்பாட்டை - ஒழுக்கத்தை வலியுறுத்தும் இயக்கம் - அழிக ஒழிக என்று ஆர்ப்பரிக்கும் அமைப்பு மட்டுமல்ல - வாழும் ஒப்பற்ற நெறியை வகுத்துக் கொடுத்துள்ள நேரிசை இயக்கம். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு (நான்கு சொற்கள்).
கடவுளை மற மனிதனை நினை (நான்கு சொற்கள்).
சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு (நான்கு சொற்கள்)
(திருவள்ளுவரின் குறளில் கூட ஏழு சொற்கள் உண்டு)
- என்று வாழ்வை வசந்தமாக்கிக் காட்டும் வழி நெறியைக் கொண்ட மனிதநேய மார்க்கம் - பெரியார் காட்டும் - வாழ்க்கை நெறி!
17. பிறர்க்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைதல் வேண்டும்; மனிதன் தானாகப் பிறக்கவில்லை, எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்ற புது வெளிச்சத்தை, தொண் டறத்தை உலகுக்குக் கொடுத்த பகுத்தறிவுப் பகலவன் கண்ட உலக இயக்கம்; புது நெறி காட்ட வந்த புத்தொளி!
18. மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போதும், போதும்!
மதமற்ற உலகமே உலகை வாழ்விக்கும் என்ற புதுப் பொருளைத் தரும் தத்துவக் கழகம் திராவிடர் கழகமே!
இவற்றிற்கு மேல் என்ன வேண் டும்? என்னதான் தேவை? ஒப்பரிய இயக்கம் - இதில் சேர என்ன தயக்கம்?
கழகத்தில் சேருங்கள்; கறுப்புச் சட்டை அணியுங்கள். ஆனால் சேரு முன் கழகக் கொள்கைகளை அசை போடுங்கள் - அதற்குப் பின் துணி யுங்கள்! இப்படி சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடியதும் கூட இந்த இயக்கம்தான் என்பதை மறவாதீர்!
பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடமாகும்!

---------------------- தந்தை பெரியார் (குடிஅரசு, 11.11.1944)
சுயமரியாதை இயக்கம் கூறுவதென்ன?
1. மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு - தாழ்வும் இருக்கக்கூடாது.
2. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் ஏழை, பணக்காரன் என்கின்ற வித்தியாசமில்லாமல், எல்லாப் பொருளும் பூமியில் எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும்.
3. மனித சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.
4. மனித சமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்கள் அறவே ஒழித்து உலக மனித, சமூக நேய ஒருமையே நிலவவேண்டும்.
5. உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரி வினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களுக் கும் சரி சமமமாகப் பாடுபட்டு, அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும்.
6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்திலும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி, காட்சி ஆகியவை களுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.
---------- தந்தை பெரியார் (குடிஅரசு, 6.12.1947)
--------------------- கருஞ்சட்டை - 23-10-2012 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா!!சரசுவதியின் கதையை அறிந்து கொள்!!
சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா
சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா?
சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது
எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்!. இதோ சரசுவதியின் கதை:
சரஸ்வதியா? சரசவதியா?
கல்வித்துறையின் கடவுளாகக் கற்பிக்கப்பட்டுள்ள கலைவாணி (சரஸ்வதி) யின் பிறப்புக் கதையும் குளறுபடியாகவே இருக்கிறது. மற்றத் தெய்வங்களின் விரசமான கதைக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை இது!
இவளின் பிறப்புப்பற்றி ‘அபிதான சிந்தாமணி’யின்
588- ஆம் பக்கம் தரும் செய்திகள் வருமாறு.
1. பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள்.
2. ஒருகாலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.
3. பிரம்மன் யாகம் செய்யும்போது, யாக கலசத்தில் தோன்றியவள்.
பிறப்புப் பற்றிய மூன்று செய்திகள் இவை.
இவளின் நன்னடத்தை(!)களைப் பற்றிப் புராணங்கள் தாங்கும் புத்திசாலித்தனமான கதைகளையும் கொஞ்சம் நினைவூட்டிக்
கொள்வோம்.
பிரம்மனின் சிருஷ்டியில் உருவான சரஸ்வதி அழகியென்றால் அழகி! கொள்ளை அழகி!! அந்த அழகில் இளகிய படைப்புக் கடவுளின் தாபவெள்ளம் உடைப்பெடுத்தது. பிறக்கும் போதே வெறும்மேனியுடன் பிறக்கவில்லை இவள்! வெண்ணிற ஆடை யுடனான மேனி, ஜெபமாலை தாங்கிய கை, இன்னொரு கையில் புத்தகம், இருந்த மீதி கரங்கள் இரண்டிலும் வீணை.
இந்த கோலத்தில் வந்துவிட்ட தனது சிருஷ்டியில் தானே திருஷ்டி போட பிரம்மனுக்கு மனம் உசுப்பியது. ‘காமம் கண்ணறியாது’ என்ற மொழிக்கு ஒரு ஸ்தானமாகப் பிரம்மனின் செயல் விளங்கியது.
“பெற்ற மகளோ! செத்த நாயோ!” போன்ற கொச்சை மொழியின் துவக்கத்தை இங்கிருந்துதான் துவக்கியிருக்கவேண்டும். அந்தத் தேவ மங்கை அவ்வளவு இலகுவில் இணங்க விடுவாளா? பிகு இல்லாமல் சுவை கிடையாது என்ற ‘தொழில் சூத்திரத்தை’உணர்ந்த சகல கலாவாணி ஆயிற்றே அவள்! ஓடிவரட்டுமே என ஓட்டம் பிடித்தாள் எப்படி? தானாக அல்ல! தண்ணீராக!
உருமாறி, திசையெட்டும் திக் விஜயம் செய்தவளை திரும்பித் திரும்பிப் பார்த்தான் பிரம்மன். ஒரு தலையால் ஆகிய காரியமல்ல இது என்று முளைக்க வைத்தான் மேலும் மூன்று தலைகளை.
ஒரு முகப் பிரம்மா, சதுர் (நான்கு) முகப்பிரம்மாவானான். நதியை வளைத்துப் பிடித்து, பழைய நிலைக்குத் தளதள மேனியாக்கி, தழுவிக் கழித்தான் பிரம்மன் நழுவி ஓடிவிடாமல் கழுத்தில் தாலிச் சரட்டையும் தவழவிட்டு தாரமாக்கிக் கொண்டான். தாலி கட்டித் தாரமாக்கி, திறமை காட்டி ஈரமாக்கினால் மட்டும் ஒரு மனைவி நம்மிடம் நீடிப்பாளா, நிலைப்பாளா என்று பிரம்மன் மனத்தைப் போட்டு அலட்டிக் கொண்டான்.
“சிறைக்காக்கும் காப்பு எவன் செய்யும்?” என்றாலும் அதைவிடக் கதி இல்லை என்று கருதினானோ என்னவோ, கல்விக்கு அதிபதியான அவளை வாய்க்குள் போட்டுக் கொண்டான். காவலுக்கு ஆள் வேண்டுமே! பற்களை உயிர்பித்துப் போர் வீரர்களாக்கிவிட்டான்.
கிளர்ச்சியை மனம் கிளப்பும்போது, பள்ளியறையிலும் நாடி தளர்ந்து ஆடிக் குலைந்ததும் பிரம்மனின் வாயாகிய சிறைச்சாலையிலும் படுக்கையறைப் பாவையாகக் காலந்தள்ளினாள் சரஸ்வதி. இப்படி இருந்தது ஒரு நாளோ , ஒன்பது நாளோ அல்ல ; நூறு தேவ வருடம் இதே வேலை. ஆசைக்கும் மோகத்திற்கும் அத்தனை நாள், இத்தனை நாள் என்ற கணக்கையெல்லாம் பிரம்மன் பொய்யடித்து விட்டான்.
இத்தனை நாளைக்குபின் பிரம்மனுக்கு லேசான ஒரு சலிப்பு! மகனை அழைத்து , மனைவிக்கு மணாளனாக்கி வைத்தான். மகனே என்று அழைக்கவேண்டியவனிடம், மன்மத சுகங்காண கலைவாணியும் ‘காலெடுத்து’ நடந்தாள். ‘சித்தி’ முறையாயிற்றே என்ற வெட்கம் சிறிதுமின்றி சிருங்காரத்தைப் பிழிந்தான் பிரம்மபுத்திரனும்-பிரம்மனின் மகன் பெயர் சுவாயம்பு.
பல புராணங்களில் இருந்து சலித்தெடுத்த பல ருசிகரக் கதைகளை இப்படியாகச் சொல்லிப் போகின்றது அபிதான சிந்தாமணி.
பரிதாபத்திற்குரிய பக்தர்களை ஒரு பார்வை பார்ப்போம். அருமை பக்தர்களே, வினாவுக்கு விடை கொடுங்கள்!
1. சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில்
உற்பத்தியானவளா?
2. பிறக்கும்போதே ஜெபமாலை, புத்தகம், வீணை , வெண்ணிற
ஆடை, இத்யாதி இத்யாதி சர்வலங்கார மேக்கப்புடன்
எப்படிப் பிறக்க முடியும்?
3. மகன் முறை கொண்டாட வேண்டியவனிடம், மையல் கொள்
பவள் தான் தெய்வப் பிறவியா?
4 தழுவ வந்ததும் தண்ணீராய் ஓடிய விந்தை, நான்கு புறமும்
ஓட நான்காய்த் தலைகள் ஆன கதை நம்பமுடிகிறதா
நண்பர்களே!
5. தாலிகட்டி மனைவியான பின்பும், சிறைவைக்கும் நிலைக்குத்
தரங்கெட்டவனாக வர்ணிக்கப்படுபவனைத் தெய்வமாக
ஏற்க முடியுமா?
6. அதைக் கிழிப்பான்- இதைக் கிழிப்பான் என்று பிரம்மன்
புகழ்பாடும் பக்தர்களே! தன்னால் உருவானவளே தனக்குத்
தண்ணீர் காட்டினாள் என்று சொல்லும் நிலைக்கு பலவீனப்
பேர்வழியாகிவிட்ட கடவுளின் சக்தியில் நம்பிக்கைக் கொள்ள
எப்படித் துணிகிறீர்கள்?
7. இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் பண்ணியதால் தான்
பிரம்மனை நாங்கள் கோவில் கட்டி கும்பிடுவதில்லை என்று
நொண்டிச் சமாதானம் கூறுபவர்களே!
8. மொத்தமாக ஒரு கேள்வி.
இக்கதையில் எந்த ஒரு வரியை நம்ப முடியும்? இந்த மாதிரி
கடவுளையும்-அதன் லீலைகளுக்கு இலக்கான அம்மணியையும்
வணங்கும் போக்கு எதைக் காட்டும்?
——————-நன்றி : நூல்: “கடவுளர் கதைகள்” பக்கம் 32 -35

22.10.12
பிராமணாள் பெயரை எதிர்ப்பது ஏன்?
பார்ப்பனர்கள்
எடுத்து வைக்கும் (வி) வாதம் எப்பொழுதும் அறிவுப் பூர்வமாக இருக்காது; அது
திருவாளர் சோ இராமசாமியாக இருந்தாலும் சரி, திரு. குருமூர்த்தியாக
இருந்தாலும் சரி ஏடு எழுதும் தினமலர் வகையறாவாக இருந்தாலும் சரி
பிரச்சினையை திசை திருப்புவதாக இருக்குமே தவிர, எழுப்புகிற வினாவுக்கு
நேரிடையான பதிலாக இருக்காது; பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிக்க
மாட்டார்களா? அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வெறும் ஏட்டுப் படிப்பு -
பத்திரிகை தின்னும் இந்து மே(ல்)தாவிகள்.
சிறீரங்கத்தில் நீண்ட காலமாக உணவு விடுதி
நடத்திக் கொண்டு வந்த பார்ப்பனர் ஒருவர் திடீரென்று பிராமணாள் என்ற பெயரைத்
திணித்துள்ளார்.
இதுகுறித்து இப்பொழுது பிரச்சினை
எழுந்துள்ளது. திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்
கொண்டுள்ளது. முறைப்படி உணவு விடுதி உரிமையாளரிடம் எடுத்துக் கூறியுள்ளது.
தவறான பேர் வழிகளின் தவறான வழிகாட்டுதலால் பிராமணாளை நீக்க முடியாது என்று
கூறி விட்டார்.
சிறீரங்கம் என்பது முதல் அமைச்சர் தொகுதி
என்பதாலும், முதல் அமைச்சர் தமது இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரின்
பெயரையும் இந்தப் பிரச்சினையில் பயன்படுத்திக் கொண்டு, ஆணவத்துடன்
பார்ப்பனர்கள் செயல்படத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அறிக்கையின் வாயிலாக
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் முதல்
அமைச்சருக்கு வேண்டுகோளும் வைத்துள்ளார் (19.10.2012).
இதுபோன்ற பிராமணாள் எதிர்ப்பு என்பது
இன்று நேற்று ஏற்பட்டதல்ல 1940-களில் இரயில்வே நிலையங்களில் பிராமணாள் -
சூத்திராள் என்று பெயர்ப் பலகை பொறிக்கப்பட்டு இருந்த காலந் தொட்டு, இந்த
இயக்கம் இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வெற்றி பெற்றும் வந்திருக்கிறது.
இப்பொழுது, திடீரென்று சிறீரங்கத்தில் மீண்டும் பிராமணாள் முளைத்து - பிரச்சினைப் புயலைக் கிளப்பி விட்டு இருக்கிறது.
இதுகுறித்து நேற்றைய தினமலரில் (21.10.2012) கிண்டல் - கேலி!
கோனார் பெரிய மெஸ் இருக்கு... தமிழகம்
முழுக்க தேவர் பெயர்ல, பல வறுகடை நிலையங்களும், செட்டியார் பெயரில் பல
துணிக்கடைகளும் இருக்கு.
இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத நீங்க
பிராமணாள் பெயரை மட்டும் எதிர்க்கிறது ஏன்? அரசியல் பண்ண... உங்களுக்கு
இப்போதைக்கு வேற காரணம் எதுவும் இல்லையோன்னுதான் எனக்கு டவுட்! என்கிறது
தினமலர்.
இப்பொழுது சத்திரிய, வைசிய என்பது சட்டப்
படியே இல்லை என்று கூறியாகி விட்டது. இவர்கள் சாஸ்திரப்படி நடந்து
கொள்ளாததாலும் பிராமணர்களை வழிபடாததாலும் சூத்திரர்களின் பட்டியலில்
சேர்க்கப்பட்டு விட்டனர் (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 43).
பிராமணன், சூத்திரன் என்ற நிலைப்பாடு மட்டும் சாஸ்திரப்படியும், சட்டப்படியும் இருக்கிறது.
பிராமணன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன்
மட்டுமல்ல; இந்த உலகத்தையே பிர்மா படைத்தது பிராமணர்களுக்காகதான்!
சூத்திரர்கள் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் மட்டுமல்லர்; பிராமணர்களுக்கு
ஊழியம் செய்யப் பிறந்தவர்கள் என்பதுதான் மனு சாத்திரம் (அத்தியாயம் 1
சுலோகம் 9).
சூத்திரன் யார் என்றால் ஏழு. ஏழு
வகைப்படுபவை என்று கூறும் மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோ கம் 415) அதில்
ஒன்று விபசாரி மகன் என்பதாகும்.
இந்த இடம்தான் முக்கியம் - நீ பிராமணன்
என்றால் நான் யார்? என்ற கேள்வி எழுகிறதா - இல்லையா? என்னை சூத்திரன் என்று
இழிவுபடுத் துகிறதா - இல்லையா? அதற்காகத்தான் பிராமணன் பெயர் எதிர்ப்பு -
அழிப்புப் போராட்டம்.
செட்டியார் மெஸ் என்று வைத்திருந்தால் மற்ற ஜாதியினரை விபச்சாரி மகன் என்று சொல்லுவது ஆகாதே - இது அப்படி அல்லவே!
ஒருத்தி உன் தெருவில் தன் வீட்டில் இது
பதிவிரதை வீடு என்ற போர்டு மாட்டிக் கொண்டால் மற்றவர் வீடு என்ன என்று
அர்த்தம்? எளிதிற் புரியும்படி தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு சொன்னது
இதற்காகத்தான்.
இதற்குமேலும் தினமலர்கள் பிராமணாளுக்கு
வக்காலத்து வாங்கி எழுத ஆரம்பித்தால் வெளிப்படையாக வருண யுத்தத்துக்குத்
தயாராகி விட்டார்கள் என்றே பொருள்படும்.
தயார்தானா?
குறிப்பு:
இன்றைய Dr.நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலும் (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ
ஏடு) தினமலர் கக்கியதை நகல் எடுத்து எழுதியிருக்கிறது. இதே பதில்தான்
அதற்கும்!
21.10.12
கடவுளுக்கு நோட்டீஸ் கொடுங்கள்!-பெரியார்
இழிவுக்குக் கடவுள்தான் காரணம் என்று
உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். இந்த
நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான
பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்து விடு வோம் என்று எச்சரிக்கை
செய்யுங்கள்!
எவனாவது உங்களைப் பார்த்து, ஒதுங்கிப் போ
என்று சொன்னால், ஏனப்பா, நான் ஒதுங்க வேண்டும்; என் காற்றுப்பட்டால் உனக்கு
என்ன காலராவா வந்துவிடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப் போய்
விடுவான். எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால், அவனையும் சும்மா
விடாதீர்கள்.
என்னப்பா என்னைப் பார்த்து தவளை மாதிரி
எட்டிக் குதிக்கிறாய்? நான் என்ன மலமா, தொட்டால் நாற்றமடிக்க? அல்லது நான்
என்ன நெருப்பா, தொட்டால் சுடும் என்று கூற; ஏனப்பா இப்படிப் பித்தலாட்டம்
செய்கிறாய்? மலத்தைக் தொட்டால்கூட கையைக் கழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது
என்கிறாய்; என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க
வேண்டுமென்று சொல்கிறாயே; இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள்.
நீங்களே சிந்தித்துப் பாருங்கள் இவை யெல்லாம் கலப்பற்ற அயோக்கியத்தனமா,
அல்லவா என்று! நீங்கள், உங்களது இந்த சமுக இழிவுபற்றிக் கவலைப்படாத -
உங்கள் மூடநம்பிக்கை நடத்தை பற்றிக் கவலைப்படாத கிஸான் சபையை நம்பாதீர்கள்.
கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது. எஜமான் கூலி என்கிற அந்த
வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது. உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை
இருக்க வேண்டும்? உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழவேண்டும்?
என்று நீங்கள் கேளுங்கள்.
நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள்;
பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில்
அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை.
உடைமை வரும்; போகும் தற்செயலாய். இழிவு அப்படி அல்ல.. ஆகவே, ஒரு காலணா கூலி
உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட, அவன் ஏன் மேல்ஜாதி, அவன் ஏன் முதலாளி,
நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள். கிஸான் தலைவர்களும் அர
சாங்கத்தின் ஏவலாளர்கள்; மிராசு தாரரின் கையாள்கள்; பெரிதும் சுயநலமி கள்;
நீங்கள் உங்கள் அறிவு காட்டும் வழியைப் பின்பற்றி நடவுங்கள். அரசியலில்
வோட்டுரிமை பெறவும், சமுக இயலில் இழிவு நீங்கவும், பொருளாதாரத்தில் முதலாளி
ஒழியவும் நீங்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்யுங்கள்.
நமது மக்கள் மாத்திரம் பெரிதும்
பலகாலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்க
வேண்டும். இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு
வளர்ச்சியடையாமல் இருந்துவரக் காரணம் கடவுள் இல்லாத குறையாலா? அல்லது
அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா? அல்லது அவற்றை மதிக்கத் தவறி
விட்டதாலா? யாரேனும் பூஜை நடத்தி வைக்கவில்லை என்றோ, கடவுளை நாம்
மதிக்கவில்லை என்றோ, அல்லது கடவுள்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் என்றோ
நம்மீது குற்றம் கூற முடியுமா? அப்படியிருக்க, மற்ற சமு தாய மக்களுக்குள்ள
வசதியும் வாய்ப்பும் நமக்கேன் இல்லாமற் போய்விட்டன? இவற்றை நீங்கள்
சிந்திக்க வேண்டு மென்பதுதான் எனது முக்கிய கருத்து. எனது வாழ்நாளில்
கிடைக்கும் வசதியை இந்தக் காரியத்திற்கே பெரிதும் பயன் படுத்த நான்
ஆசைப்படுவதால், இதைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கூறுகிறேன்.
இழிவின் மூலகாரணத்தை நீக்குக
நமது இழிவின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து
அதை நீக்குவதில்தான் நாம் பூரா கவனத்தையும் செலுத்த வேண்டும். நம் ஊரில்
காலராவோ, மலேரியாவோ வந்தால் நாம் எப்படி அவற்றுக்குக் காரணமாயிருந்து வரும்
அசுத்தங்களை யும், கசுமாலங்களையும் நீக்கி, அந்நோய் பரவவொட்டாமல்
செய்கிறோமோ, அதே போல் நமது இழிவுக்குக் காரணமாயிருந்து வரும் சில
கசுமாலங்களையும் நீக்க வேண்டும். நம் குறைபாடுகளுக்கு நாம் தழுவி நிற்கும்
மதந்தான் காரணமே தவிர, கடவுள் ஒருபோதும் காரணகர்த்தராக மாட்டார். கடவுள்
மீது பழி போடுவது என்பது அற்பத்தனம் அயோக்கியத்தனம். ஏனப்பா திருடினாய்?
என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு திருடனைப் பார்த்துக் கேட்டால், நான் என்ன
செய்யட்டுமுங்க; கடவுள் செயல் என்னை அப்படிச் செய்துட் டதுங்க என்று
சொன்னால், மாஜிஸ்ட்ரேட் ஒப்புக் கொள்வாரா? எவனாவது ஒரு போக்கிரி உங்கள்
பாக்கெட்டில் கைபோட் டால், எல்லாம் கடவுள் செயல் என்று நீங்கள் யாராவது
சும்மா இருந்து விடுவீர்களா?
கடவுள் இருக்கிறார் எல்லாம் பார்த்துக்
கொள்வார் என்று எந்த பக்தனாவது தனது பெட்டியைப் பூட்டாமல் விட்டு விடு
கிறானா? கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு, பணம் தேடா மல்
தெருவில் சோம்பித் திரிகிறானா? அப்படியிருக்க, நமது இழிவு நீக்கத்திற்கு
மட்டும் ஏன், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க
வேண்டும்? நமது இழிவுக்கும் கடவுளுக் கும் சம்பந்தமில்லை. யாரோ, சில சுயநல
நயவஞ்சகக் கூட்டத்தார் தம் சுகபோக வாழ்வுக்காகத் தம்மை மேன்மைப்படுத்தியும், மற்றவரைத் தாழ்மைப்படுத்தியும் சாஸ்திர புராணங்களை எழுதி வைத்துக்
கொண்டு, அவற்றைக் கடவுள் வாக் கென்று கூறி, நம்மை ஒப்புக் கொள்ளும்படி
சொன்னால் நாமும் பேசாமல் ஒப்புக் கொண்டு விடுவதா? சிந்தித்துப் பார்க்க
வேண்டாமா? என்ன குற்றம் செய்தோம்?
நாம் என்ன குற்றம் செய்ததற்காக நம்மைக்
கடவுள் சூத்திரனாகப் படைத்தார்? நாம்தானே கோயில் கட்டுவதும் கும்பாபிஷேகம்
செய்வதும்? நம் முன்னோர்தானே சாமிக்குப் படியளந்து வந்தார்கள்?
அப்படியிருக்க, நம்மவர் கொடுத்ததை வாங்கி வயிறு வீங்க உண்டு, சோம்பேறி
வாழ்வு நடத்திய பார்ப்பான், எப்படி உயர்ஜாதியாக்கப்பட்டான்? பாடு பட்டு
உழைத்த நம்மவர், எப்படி கீழ்ஜாதி யாக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப்
பாருங்கள்.
இந்த இழிவிற்குக் கடவுள்தான் கார ணம்
என்று உங்களுக்குத் தோன்றினால், அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ்
கொடுங்கள். கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது
அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம்; அதை உணராமல் நீ நன்றி
மறந்து எங்களை இழிஜாதியாய்ப் படைத்து விட்டாய். பாடுபடாத உன்னை யும்,
பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர்ஜாதி ஆக்கிவிட்டாய்; ஆகவே
ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீயல்ல
அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை
அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில்
தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்து விடுவோம் என்று எச்சரிக்கை
செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்
திருக்குமானால், அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித்
தள்ளுங்கள். கடவுள் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்று நீங்கள்
அஞ்சாதீர்கள்; அப்படி ஒன்று இருக்குமானால், அது அர்ச்சகருக்கே சரியாய்ப்
போய்விடும். நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச் சாண்டி; மதத்தைக்
காப்பாற்றிக் கொள்ள அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப்
பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.
---------------------------------------- தந்தை பெரியார் -- “விடுதலை”, 29.2.1948
Labels:
பெரியார்
சரஸ்வதி பூஜை என்பது என்ன?
சரஸ்வதி பூஜை என்பது என்ன?
- தந்தை பெரியார்
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை!
கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர்
கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை
நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே
நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால்
கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக்
கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு
இருக்கிறார்கள்.
முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த
யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே
மிக்க ஆபாசமானதாகும்.
அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து
உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே
மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி
அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண்
மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம்
உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால்
மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக
சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.
அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே
மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி
என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது
ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க,
அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான்
என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப்
பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும்
மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை
எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான
விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின்
பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக்
குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும்
வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும்,
வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால்,
படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில்
ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும்,
மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள்
ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக்
கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு
ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால்
அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு
முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை
செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு
நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை
வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது
நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி
முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து
வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின்
பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு
வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை
நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது.
அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய்
அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு
விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள்
என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது
சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும்,
பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை
செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக்
கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5
பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை
செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக
இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது
தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி
போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள்.
சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே
படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம்
அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும்
ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்
கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த
முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில்
சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்
கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும்
எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும்,
நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால்
சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும்,
நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி
என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும்
தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும்,
கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில்
ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ
அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும்,
தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை
கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள்,
அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு
சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள்
கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு
செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம்,
குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம்
வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக
ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள்.
இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான்
கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும்
பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால்
மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின்
மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார
இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
----------------ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 "குடிஅரசு" இதழில் வெளியானது.
Labels:
பெரியார்
20.10.12
முன்னுதாரணமற்ற நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா. பெரியார்
பொன்னீலன்
தலைவர்,
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
தலைவர்,
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
(25.8.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை)
கவிஞர் கலி.பூங்குன்றன் சொல்கிறார்
கவிஞர் கலி.பூங்குன்றன் சொல்கின்றார்,
ஈரோட்டாரின் கைத்தடியை எழுது கோலாய்ப் பெற்ற ஆசிரியர் இவர் என்று. எவ்வளவு
ஆழமான சித்தரிப்பு. அவர் மேலும் சொல்கிறார், காலத்தின் திசையைச் சாட்டை
அடி கொடுத்து மாற்றி, சமூகத்தை முன் நோக்கி நடத்துகிறார் வீரமணி. இந்த
மதிப்பீடு முற்றிலும் உண்மை, உண்மை, உண்மை.
எங்களூரில் ஒரு அபூர்வம்
எங்கள் ஊர் மிகமிகப் பின்தங்கி யது. குமரி
மாவட்டத்தில் பெரியாரின் வலுவான சுவடுகள் எங்கும் பதிந்துள்ளன. இடை யிலே
அன்னியச் சிந்தனையின் ஊடுருவலால், சற்றுத் தொய்வு ஏற்பட்டது போல் தோன்றி
னாலும், இன்று மாவட்டம் மீண்டும் பெரியார் சிந்தனைகளால் புத்தெழுச்சி
பெற்று வருகிறது. ஆனாலும் எங்கள் ஊரிலோ, பெரியாரைப் பற்றிய பேச்சே இது வரை
பொது மேடையில் எழும்பியதில்லை. அண்மையில், அபூர்வமாக ஒரு நிகழ்வு நடந்தது.
ஒரு பரதநாட்டிய அரங்கேற்றம். வாழ்த்துவதற்காக நான் போனேன். மண்டப வாசலில்
மிகப் பெரிய ஒரு வரவேற்புத் தட்டி, அரங் கேற்றம் காண வரும் அனைவரையும்
வரவேற்கிறோம். திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்என்று
எழுதியிருந்தது. என் தலை அளவு பெரிய பெரிய எழுத்துக்கள். மனம் கொள்ளாத
மகிழ்ச்சி எனக்கு. மேடையில் ஏறிப் பேசினேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு
மிக்க நாள். இரண்டு புதுமைகள் முதன் முறையாக நம் ஊருக்குள் நுழைந்துள்ளன.
ஒன்று பரதநாட்டியம். அதைவிட முக்கியமானது இன்னொன்று. அது தான் திராவிடர்
கழகம். கூட்டம் உற்சாகமாகக் கைத்தட்டி ஆரவாரித்தது. திராவிடர் கழக
மாவட்டச் செயலாளர் தோழர் வெற்றி வேந்தன் தலைமையில், தோழியர்களும்,
தோழர்களும் உட னேயே மேடையில் நிறைந்து விட்டார்கள். எந்த ஆற்றல் இவர்களை
ஊக்கு வித்தது? வீரமணியுள்ளே இயங்கும் பெரியாரின் பேராற்றல்தானே?
மூன்று முகங்கள்
தோழர்காள், மனித குல விடுதலை மூன்று முகம்
கொண்டது. அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, பண்பாட்டு விடுதலையும்
பெறுவதற் காக கடுமையாகப் போராடிக்கொண் டிருக்கிறோம்.
பண்பாட்டு விடுதலையும் நூறு முகம்
கொண்டது. வருணாசிரம விடுதலை, சாதீய விடுதலை, பெண் விடுதலை,
மூடத்தனத்தில்இருந்து விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை என அதை விரித்துக்
கொண்டே போகலாம். இந்த விடுதலை களுக்கான பேராயுதமாகத் தொடங்கப் பட்டதுதான்
விடுதலை நாளிதழ். அதை மேலும் மேலும் கூர் தீட்டி, லாவகப் படுத்தி,
மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறார் தோழர் கி.வீரமணி அவர்கள்.
வெண்தாடி இல்லாத பெரியாராகப் பெரியாரின் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்
கிறார் 50 ஆண்டுகளாக. புதிய சாதனை இது. வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத
அரிய சாதனை இது.
முழுக்க முழுக்க சமூக விடுதலைக்காக
நடத்தப் படும் இந்த இதழுக்கு விளம்பரம் கிடைக்குமா? கிளுகிளுப்பான செய்தி
ஏதாவது உண்டா? எல்லாச் செய்திகளும் சமூக விடுதலையை நோக் கியவையே.
ஆதிக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவையே.
விடுதலை நாளிதழ் எனக்குத் தபாலில் வரும்;
தினமும் காலையில் சில நாளிதழ்கள் சுடச்சுடப் படிப்பவன் நான். ஆனால் எந்த
நாளிதழிலும் இல்லாத மனிதரை மனிதராக்க முயலும் விடுதலை யின் செய்திகள்
வரிவிடாமல் என்னை வாசிக்க வைக்கும். மனதை விசாலப்படுத்தும். மன அழுக்குகளை
மேலும் நீக்கும். பிற நாளிதழ்களில் வராத செய்திகள் அவை. விடுதலைக்கு
லட்சத் துக்கு மேற்பட்ட சந்தாக்கள் குவிவதன் உட்பொருள் இதுதான். அதைக்
காலத்துக்கு ஏற்ற முறையில் சிறப்பாகத் தொடர்வதோடு, மேலும் மேலும் விரிவு
படுத்திக் கொண்டு வருகிறார் தோழர் வீரமணி. வண்ண வண்ணப் படங் களுடன்
உள்ளத்தைத் தொடும் செய்திகள். உள்ளூர் செய்திகள், உலகச் செய்திகள்,
அரசியல் செய்திகள், சமூகச் செய்திகள், பெண்கள் பற்றி, இளைஞர் பற்றி,
விளையாட்டு வீராங்கனைகள், வீரர்கள் பற்றிய செய்திகள், எல்லாமே ஆதிக்க
விடுதலைஎன்னும் கோணத்தில் வாசர்களைச் சிந்திக்க வைக்கும் விதத் தில்வரும்.
விடுதலை நாளிதழ் எல்லை களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் பெருகிக்
கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் கருஞ்சட்டை விடு தலைப் படை தினம் தினம்
புதுப்பிக்கப் பட்டு, புதுப் பொலிவோடும், வீரத்தோடும், விவேகத்தோடும்,
விடுதலை லட்சியத் தோடும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
பரவசப்பட்டேன்
தந்தை பெரியார் தொடங்கிய பல்வேறு கல்வி
நிறுவனங்கள் அறிவியல் அறிவோடு சமூக அறவியல் அறிவையும், பகுத்தறிவையும்,
விடுதலை அறிவையும் மக்களுக்குப் பரப்பிக் கொண்டு வருகின்றன. என் மறுபக்கம்
நாவலுக்கு வழங்கப் பெற்ற பெரியார் விருதைப் பெறுவதற்காகத் தந்தை பெரியார் ,
அன்னை மணியம்மை பல்கலைக் கழகத்தினுள் நான் நுழைந்த போது, அங்கு நடப்பவற்றை
நேரடியாகக் கண்டு பரவசப்பட்டேன்.
தோழர் வீரமணி அவர்கள் இன்னும் நூறாண்டு
வாழ்ந்து, இந்தத் தொண்டு களை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டும். விடுதலை
எல்லா இந்திய மொழிகளிலும் வெளிவரவேண்டும். பெரியாரியம் தமிழகம் தாண்டி
இந்தியா முழுவதும் பரவவேண்டும். பெரியார் என்றால் அது பெரியாரியம். சமூக
விடுதலைச் சிந்தனைக் கருத்தாயுதம். இந்தியாவுக்குத் தேவையான சமூக விடுதலை
ஆயுதம்.
ஒரு வரலாற்றுச் சம்பவம்
தோழர்களே, ஒரு வரலாற்றுச் சம்பவம்.
ஜீவாவின் மறைவுக்குப் பின் ஜீவா மகளுக்கு மாப்பிள்ளை தேடித் திருமணம்
நடத்தியவர் தந்தை பெரியார். அந்தத் திருமணத்தில் மணமக்களுக்குப் பெரியார்
அளித்த பரிசு ஜீவா மொழி பெயர்த்த, பகத் சிங்கின் நான் ஏன் நாத்திகன்
ஆனேன்? நூலின் முதல்பிரதி. அண்ணா அளித்த பரிசென்ன? சுயமரியாதைத் திருமணச்
சட்டம் என்னும் பெரும் விடுதலை ஆயுதம். வீரமணி அதை ஆய்ந்து அலசி
சுயமரியாதைத் திருமணத் தத்துவமும் நடைமுறையும் என்னும் நூலாக உருவாக்கி,
தமிழ் மக்கள் கைகளில் தந்திருக்கிறார். இவை போல அவர் தந்து கொண்டிருக்கும்
சமூக விடுதலைக்கான நூலாயுதங்கள் ஒன்றா இரண்டா?
சாதீயப் புரட்சி! வர்க்கப் புரட்சி!!
இந்தியப் புரட்சி இருமுகம் கொண் டது.
சாதீயப் புரட்சி ஒரு முகம் என்றால், வர்க்கப் புரட்சி மறுமுகம். இந்த இரு
புரட்சிகளையும் முரண் இன்றி செய்யும் விடுதலை இந்திய விடுதலையை மேலும்
மேலும் விசாலப்படுத்தி வருகிறது.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு
சம்பவத்தை நினைவுபடுத்திட விரும்புகிறேன். தோழர் கே.டி.கே.தங்க மணி
அவர்கள் என்னிடம் சொன்னது, இது. அன்று பெர்லின் நகரில் உலகத் தத்துவ
அறிஞர்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதி லும் இருந்து
அறிஞர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.
வால்ட்டர் ரூபன் சொன்னது
அந்த மாநாட்டை முன் நின்று நடத்தி யவர்
அன்றைய உலகப் பேரறிஞர் வால்ட்டர் ரூபன் அவர்கள். அவர் ஒரு ஆழமான
இந்தியவியலாளரும் கூட. இந்தியா பற்றி நிறைய ஆய்வுகள் செய்தவர்.
அந்த மாநாட்டிற்கு அன்றைய இந்தியப்
பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்தியாயா வேறு சிலரோடு சென்றிருந்தார்.
இந்தியத் தத்துவங்களின் அடிப்படை ஆன்மீகமே என்பவர்களை மறுத்து, லோகாயுதம்
என்னும் நாத்திகத் தத்துவமும் பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் வளர்ந்து
வந்திருக்கிறது என்று ஆராய்ந்து உலகுக்கு அறிவித்த மேதை அவர்.
மாநாட்டு இடைவேளையின்போது, இந்திய
அறிஞர்கள் ஒரு குழுவாக புல்தரையில் உட்கார்ந்து உரையாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்களிடம் வால்ட்டர் ரூபன் ஒரு கேள்வி கேட்டார். நவீன
இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத மகத்தான மாமனிதர் யார்? என்பது கேள்வி.
அது காந்தி என்றார் ஒரு இந்திய அறிஞர். நம் பொதுப் புத்தியில் இதுதானே
பதிந்திருக்கிறது. காந்தியின் முன்னுதாரனமாக புத்தர் இருந்திருக்கிறார்,
வேறு சொல்லுங்கள் என்றார் ரூபன். நேரு என்றால் இன் னொருவர். அவருக்கு
முன்னுதாரணம் அசோகர் என்றார் ரூபன். இந்திய அறிஞர்களுக்குப் பதில் சொல்லத்
தெரியவில்லை. அப்படி என்றால் அவர் யார்? நீங்களே சொல்லுங்கள் என்றார்கள்
ரூபனிடம். இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா.
பெரியார்தான் என்றார் ரூபன். திகைத்துப் போனார்கள் இந்திய அறிஞர்கள்.
எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்
என்றார் கள். இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை ஆழமாகப் பரவி, சமூக
வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக் கும் கொடிய நோய் வருணாசிரமம் அல்லது
மனுதர்மம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடிக்
கொண்டிருப்பவர் பெரியார் ஈ.வெ.ரா. எனவே அவரே முன்னு தாரணமற்ற மாமனிதர்
என்றார் ரூபன். என்ற மார்க்சியப் பேரறிஞர்.
தோழர்களே, இதன் உட்பொருள் என்ன,
புரிகிறதா? ஈரோட்டுப் பாதை மீண்டும் விரிவுபடுத்தப் படவேண்டும்.
மார்க்சியமும் பெரியாரியமும் களத்தில் கைகோர்த்து இறங்கவேண்டும். இந்தப்
பணியை மிகக் கவனமாகச் செய்து கொண்டிருக்கிறார் தோழர் வீரமணி அவர்கள் என
விடுதலை வழி புரிந்து கொள்கிறேன். இவற்றோடு அம்பேத் காரியமும் வீரமணியின்
விடுதலையில் இணைவதைக் காண்கிறேன். இந்தப் பாதையைத் துவக்கிய மாமனிதர் தந்தை
பெரியாரின் தொடர்ச்சியாக இன்று களத்தில் பேராடிக் கொண் டிருக்கும்
விடுதலையையும் அதன் ஆசிரியர் தோழர் வீரமணி அவர் களையும் அவருக்குத் தோள்
கொடுக் கும் தோழமைகளையும் மனமாரப் பாராட்டுகின்றேன். எல்லா வகையிலும்
உதவும் துணைவியாரையும் பாராட்டு கிறேன்.
(நிறைவு)
--------------------"விடுதலை” 19-10-2012
Labels:
பெரியார்-மற்றவர்கள்
Subscribe to:
Posts (Atom)