Search This Blog

12.12.11

முல்லைப் பெரியாறும் அய்யப்ப பக்தர்களும்!

1. தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுப்பதற்கு மறைமுகமான முயற்சியே, கேரள அரசின் . முல்லைப் பெரியாறு அணை உடையும் ஆபத்தில் உள்ளது என்ற ஆதாரமில்லாத பீதியைப் பரப்பும் கொடுமை.

2. உச்சநீதிமன்றத்தால் முன்பு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே அணை பலமாக உள்ளது, தமிழ்நாடு அரசு அணையின் உயரத்தை உயர்த்தலாம் என்பதைக் கூறிவிட்ட பிறகு அதனைத் தடுத்து, தமிழக விவசாய நீர்ப் பாசனத்திற்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகளைத் தடுக்கவே மற்றொரு குறுக்கு வழி, புதிய அணை கட்டுவோம் என்பது கேரள அரசின் குறுக்குச் சால் ஓட்டும் முயற்சி.

3. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்*.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்குழு அதன் விசாரணையை நடத்தி முடிவை அறிவிக்கும் முன்பே இதனைத் திசை திருப்பும் நாடகங்கள் கேரள அரசாலும், மற்ற கட்சிகளாலும் அரங்கேற்றப்படுகின்றன. எல்லோரும் அங்கே ஒன்றுதான் - தமிழ்நாடு போல் அல்ல!

4. இடுக்கி மற்றும் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டதை விடக் கொடுமை வேறு என்ன?

5. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு அடி, உதை செம்மையாக கிடைத்து வருகிறது. (புலியை அடக்கியதாகக் கூறப்படும் அய்யப்பன் கேரள அரசினைக் கண்டு கிலியில் மவுனமாகிவிட்டான் போலும்!)

அய்யப்ப பக்தர்களே இன்னுமா உங்களுக்குப் புத்தி வரவில்லை?

ஏன் தமிழ்நாட்டு சாமிகளுக்கு என்ன பவர்கட்டா? சக்தி இல்லையா?

முதலில் கேரளாவிற்கு சரக்கு அனுப்புவதைத் தடுக்கும் முன், அய்யப்பன் கோவிலுக்கும், பத்மநாபசாமி கோவிலுக்கும், குருவாயூர் கிருஷ்ணன் கோவி லுக்கும் போகும் தமிழ்நாட்டு பக்தர்களைத் தடுத்து நிறுத்தி - எல்லையிலே நின்று - திருப்பி அனுப்பி நம்மூர் சாமி உண்டியலில் போட்டு, அந்த இருமுடி, தேங்காய் மூடி, அரிசி எல்லாம் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு (அவன் சு(ர)ண்டல் பேர்வழியானாலும்) பயன்படட்டுமே!

அய்யப்பா, அய்யப்பா
தமிழனுக்கு தண்ணீர் தரவிடாத
அய்யப்பா, உன் மகர ஜோதி பித்தலாட்டம் காண
எங்கள் ஆள்கள் பலியானது போதாதா?
அடியும் உதையும் இப்போதும் தேவையா?

--------------------”விடுதலை” 12-12-2011

5 comments:

தமிழ்மலர் said...

முல்லைபெரியாறு புதிய அணை வேண்டாம் கேரள அறிவிப்பு

http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_2967.html?

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த கடவுள் தான் நல்லது செய்ய வேண்டும்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் மலர்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் மலர்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்