Search This Blog

2.12.11

இவர்தாம்.....வீரமணி



There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.

The General Secretary of the Dravidar Kazhagam, Mr. K. Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a constitutional amendment to get a permanent protection.

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததுபற்றி அ.இ. அ.தி.மு.க.வில் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க. அரசின் இடர்நிறைந்த முயற்சிகள் முடிந்துவிடவில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு. கி.வீரமணி மட்டும் வரக் கூடிய ஆபத்தை உணர்ந்துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக் கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலையான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.

------------------நன்றி: தி இந்து, 23 ஜூலை 1994


ஆகா வெற்றி! ஆனந்த ஆகாயத்தில் பறக்கிறோம் என்று கூறி, காரியத்தைக் கோட்டை விடுபவரல்லர் திராவிடர் கழகத் தலைவர்.
அவர்தம் ஒவ்வொரு அசைவுக்குக்கூட கூரிய கண்கள் உண்டு! எதிரிகளின் நாணயமற்ற தன்மையை நன்கு ஊடுருவும் அந்தச் சுடர் விழிகள். அவர் எடுத்து வைக்கும் ஒவ் வொரு அடியிலும் எச்சரிக்கை வெளிச்சம் ஈட்டியாய் ஒளிரும்.

இதனை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று கூறப் படும் இந்து ஏடு புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நமது தமிழர்கள்?...

-----------மயிலாடன் அவர்கள் 2-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

புத்தகம் செய்த தாக்கம்


தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் சங்கராச்சாரி-யார்? என்பதாகும். அது ஆங்கிலத்திலும் ‘‘Saint or Sectarian’’ என்ற பெயரில் வெளிவந்தது. அந்த நூலை சிங்கப்பூரில் உள்ள தோழர் திரு.டி. கோவிந்தசாமி அவர்கள் படித்துவிட்டு இண்டர் நெட் மூலம் கடிதம் ஒன்றைத் தமிழர் தலைவருக்கு அனுப்பினார்(9-8-1997)

அந்தக் கடிதம் வருமாறு:

Subject: LONG LIVE TIRUVALAR K.VEERAMANI AND DRAVIDAR KAZHAGAM
Date: Sat. 9 Aug 1997 21:19:57+0800
From: ‘User’< user@mbox3.singnet.com.sg?
Reply-To
To:
Dear Sirs,
After reading your book “Saint ro Sectarian?” I realised that I’ve been in a very DARK DARK ROOM for years. Your book has opened my eyes. I now understand the meaning of PATTHIRA GHIRIAR’s INSPIRING WORDS.
“WHEN MAY I KNOW THE HIDEEN THINGS IN LIFE
AND THUS ATTIN PERFECTION? I WOULD SHOW
HOW FALSE THE VEDAS ARE WITH ERRORS RIFE?
AND BURN SASTERS, SO THE TRUTH MIGHT KNOW?
WHEN SHALL OUR RACE (DRAVIDIAN) BE ONE GREAT BROTHERHOOD?
UNBROKEN BY THE TYRANNY OF CASTE
WHICH KAPILA IN EARLY DAYS WITHSTOOD
AND TAUGHT THAT MEN WERE ONE IN TIMES NOWPAST?”
I AWAI YOUR MOST HONOURED REPLY,
YOUR EVER IN GRATITUDE.
T.GOVINDASAMY

அன்புடையீர்,

தங்களின் துறவியா-வகுப்புவாதியா என்ற நூலைப் படித்த பின்புதான் நான் எவ்வளவு காலம் இருட்டில் வாழ்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். உங்களுடைய நூல் என் கண்களைத் திறந்துவிட்டது. வாழ்வில் புதையுண்டு கிடக்கும் உண்மைகளை அகழ்ந்து அறிந்து நான் முழுமை அடைவது எப்பொழுது?

சாத்திரத்தைச் சுட்டெரித்து சதுர்மறையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக் கண்டு துயர் அழிப்பது எக்காலம்? ஜாதிக்கொடுமைகள் சாய்க்கப் பெற்று, திராவிட இனம் ஒன்றாவது எப்போது? ஜாதியைச்; சாய்த்த கபிலன் சொன்னபடி முன்னம் ஒரு நாள் மேதினியில் மாந்தர் அனைவரும் ஒன்று என்ற நிலைமை மீண்டும் வரும்போது!
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

நன்றியுடன் தங்கள்அன்புள்ள
டி.கோவிந்தசாமி
----”விடுதலை”2-11-11

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் பற்றியும், தமிழர் தலைவர் பற்றியும் நியூயார்க் டைம்ஸ்!
t

உலகப் புகழ்பெற்ற நாடுகளில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் என்ற ஏடு (3.11.82) இதழில் திராவிடர் கழகம் பற்றியும் தமிழர் தலைவர் பற்றியும் எழுதியுள்ள கட்டுரையின் மொழி பெயர்ப்பு இங்குத் தரப்படுகிறது


இந்தியாவில் பார்ப்பனர்கள் புரோகித, படித்த ஜாதியாக வளர்ந்தவர்கள். பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்கள் க்ஷத்திரியர்களைப்போல் உலகியல் வாழ்வு சார்ந்த தன்மை கொண்டவர்கள் அல்ல. பொதுவாக செல்வ நிலையிலும் அவர்கள் மிகவும் வளர்ந்தவர்கள் இல்லை. ஆனால் மதத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாட்டில் கடவுளின் தரகர்களாக அவர்கள் தங்களை ஆக்கிக் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர் களாகப் பெருமைப்படுத்தப்பட்டனர்.

பிரிட்டிஷார் வந்த காலத்தில், பார்ப்பனர்கள் அதைப் பயன்படுத்திற்கொண்டு தங்கள் கல்வி யையும் அறிவையும் உயர்த்திக் கொண்டனர்.

ஆங்கிலத்தை உற்சாகத்தோடு படித்து, அரசாங்கத்தின் உயர்ந்த இடங்களைப்பிடித்தனர்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பார்ப்பனர், நேருவின் மகள் இந்திரா காந்தியும் அவரது மிக முக்கியமான ஆலோசர்களும் பார்ப் பனர்கள். இன்றைக்கும் இந்தியாவில் பத்திரிகைத் துறையிலும், இலக்கியத் துறையிலும், கலாச்சார நடவடிக்கைகளிலும், பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில்

ஆனால்- தமிழகத்தைப் பொறுத்தவரை, வியாபாரம், பத்திரிகைத் துறை, இதரத் தொழில் துறைகளில், பார்ப்பனர்கள் இருந்த இடத்திற்குப் பார்ப்பனரல்லாதோரும் வந்திருக்கின்றனர்.

தங்களுக்கு வாய்ப்புகள் மிகவும் கட்டுப் படுத்தப் பட்டுவிட்டதாகப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் மற்றப் பகுதிகளைவிட, தமிழ் நாட்டில்தான் பார்ப்பனர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஒரு காரணம் நீண்ட காலமாகவே வட நாட்டவர்களை தென்னாட்டு மக்கள் நம்புவது கிடையாது. சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே, தென்னாட்டில் திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆரியர்கள் வடநாட்டில் குடிபுகுந்து தங்கினர். எனவே, தமிழ் பேசும் திராவிடர்கள், பார்ப்பனர் களை வடநாட்டின் ஏஜெண்ட்டுகள் என்றும், சமஸ்கிருத கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றும் கருதுகின்றனர்.

பொதுச்செயலாளர் வீரமணி

பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்; தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர் களாக கருத கூடாது என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறுகிறார். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப் பனர்கள் உரிமை கொண்டாடக் கூடாது; சமு தாயத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக்கூடாது என்றும் திரு.வீரமணி சொல்லுகிறார். திராவிடர் கழகம் ஒரு பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கமாகும்.

நாங்கள் தனிச் சலுகைகள் எதுவும் கேட்கவில்லை என்று பார்ப்பன இளைஞர் பிரிவு அமைப்பாளரான சிவராம கிருஷ்ணன் என்பவர் கூறினார்.

காலம் மாறி விட்டது; பார்ப்பன இளைஞர்கள் இன்னும் தங்களை உயர்ந்த ஜாதிக்காரர்களாக கருத விரும்பவில்லை. எல்லா ஜாதியாரோடும் அவர்கள் கலந்து இருக்கிறார்கள்.

சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டு சமஸ்கிருதப் பார்ப்பனர்களும் அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் ஓவியா said...

25 வயதுடைய ராமச்சந்திரன் என்ற இன்ஜினீயரிங் படித்திருக்கும் பார்ப்பனர் மேற்கத் திய முறையில் பேண்ட், டி சர்ட் அணிந்திருக் கின்றார். பெயரில் ஜாதிப்பெயர் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் நெற்றியில் நேர்கோடு போல விபூதி அடித்துத் தன்னை ஒரு சிவ பக்தர் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த நவீனமான டி ஷர்ட்டுக்குள்ளே பூணூல் இருக்கின்றது. அந்த பூணூல்தான் இந்திய ஏற்றத் தாழ்வு சமூக அமைப்பில் சவாலே விடமுடியாத அளவுக்கு உயர்ந்த இடத்தில் பார்ப்பனர்களை நிறுத்துகிறது. சவால் விடப்பட முடியாத நிலை அந்த காலத்தில் மட்டுமல்ல; இன்று வரையும் அதே நிலைதான்.

பார்ப்பனரல்லாத இந்துக்கள்-சட்டப்படியான சமத்துவ உரிமைகோரி இந்தியா முழுவதும், தங்கள் உரிமையை மிகக் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர் என்று அந்த ஏடு எழுதியிருக்கின்றது-

தென்னகத்தில் முழுமையான மாற்றம் ஏற் பட்டிருக்கிறது என்றும், கல்வி வேலை வாய்ப்பு களில் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டதாகப் பார்ப்பனர்கள் கருதுகிறார்கள் என்றும், தங்களுக்குச் சமத்துவம் வேண்டுமென்று, சென்னை யிலே பார்ப்பனர்கள் சங்கம் அமைத்திருக் கின்றார்கள் என்றும், நிலைமை தலைகீழாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றும் அந்த ஏடு மேலும் எழுதியிருக்கிறது.

கடைசிப் பூணூல் இருக்கும் வரை- கருஞ்சட்டைப் படை ஓயாது என்று சென்னைச் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகம் ஒன்றையும் நியூயார்க் டைம்ஸ் ஏடு குறிப்பிட்டிருக்கிறது.

பாம்பையும், பார்ப்பனரையும் கண்டால் பாம்பைவிட்டு, பார்ப்பனரை அடி என்று சென்னைச் சுவரில் எழுதப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

பார்ப்பனர்கள் இப்போது சங்கம் அமைத்து எதிர்த்துப் போராடக் கிளம்பிவிட்டதால் பார்ப் பனருக்கு எதிரான கொடுமைகள் குறைந்துவிட்டன என்று பார்ப்பன சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறியதாகவும் அந்த ஏடு எழுதியிருக்கிறது.

பார்ப்பனர்களின் எண்ணிக்கை 3.5 சதவிகிதம் தான்; எனவே மக்கள் இயக்கம் எதையும் அவர்கள் நடத்திவிட முடியாது; தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் மிகவும் வலிமை பெற்றுத் திகழ்கிறது.

எனவே பல படித்த பார்ப்பன இளைஞர்கள் வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்து விட்டார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு குறிப்பிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

சொற்பொழிவாளர்களுக்கு...


24.10.2009 முற்பகல் 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உதிர்த்த நல்முத்துகள் வருமாறு:

1. ஆடம்பரம் கூடாது. எளிமையாக இருக்க வேண்டும். அப்படி வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.

2. எதையும் ஆதாரத்துடன் ஆழமாகப் பேச வேண்டும்.

3. மேடை போடுவோர், மேடையில் பேசுவோர் என்ற இரு நிலை கூடாது. மேடையில் பேசுவோர் மேடை போட்டுக் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்.

4. கூட்டத்தில் பேசும்போது எதிர்ப்பு ஏற்படுமேயானால், பேசுவதை நிறுத்தாது தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். எதிரிகளின் நோக்கத்தை நிறைவேறச் செய்யக்கூடாது.

5.சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும்.

6. இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம், மற்றும் கீதை, புராணங் களைப் பற்றி எடுத்துரைக்கத் தவறக் கூடாது. அவற்றில் உள்ள ஆபாசங்களை வெளிப்படுத்தும்போது நாம் ஆபாசமாகப் பேசுகிறோம் என்று கேட்போர் கருதும்படி பேசக்கூடாது. பக்குவமாக எடுத்துக் கூறவேண்டும்.

7.சிறப்புப் பேச்சாளர்களை அழைத்து விட்டு, உள்ளூர்க்காரர்கள் அதிக நேரம் பேசக்கூடாது.

8. பேச்சாளர் பேசும் முன், தான் பேசப்போகும் காலத்தின் அளவை நிர்ணயித்துக்கொண்டு எந்த எந்தப் பொருள்களைப் பற்றிப் பேசுவது என்று முடிவு எடுத்து, அதற்கும் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு முறையாகப் பேசிடப் பழக வேண்டும்.

9. எந்த பெரிய கட்சியும் கூட மக்களுக்கு அவசியமான கல்விப் பணிகளை மேற்கொள்ளவில்லை. நாம் நடத்தும் கல்வி நிறுவனங்கள், அவற்றின் சாதனைகளை விளக்கி 10 மணித்துளி களில் உரையாற்றலாம்.
தந்தை பெரியார் தொடங்கிக் கொடுத்த கல்விப் பணிகள் மேலும் எப்படியெல்லாம் வளர்க்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்கூற வேண்டும்.

10. நமது இயக்க நூல்களை தொடக்கத்தில் அறிமுகப்படுத்திப் பேச்சைத் தொடங்க வேண்டும்.

11. நம்மை அழிவுப் பணிக்காரர்கள் என்று சொல்லுவார்கள். ஆம், உண்மை தான். அழிவுப் பணி என்பது ஆக்கப் பணிக்கான அடிப்படைப் பணியாகும். புதர்களை அழித்துத்தானே பூங்காக் களை உருவாக்க முடியும்?

12. நமது பேச்சால், நடத்தையால் இயக்கத் தோழர்கள் பத்து பேர்களை பதினோரு பேர்களாக உயர்த்த வேண்டுமே தவிர, எந்தக் காரணத்தை முன்னிட்டும் அது ஒன்பதாகக் குறைந்து விடக்கூடாது.

13. கடவுளை மற, மனிதனை நினை என்ற தந்தை பெரியார் ஆற்றிய மக்கள் தொண்டை எடுத்துக்கூற வேண்டும்.

14. விமர்சனங்களைக் கண்டு மிரளக் கூடாது. அஞ்சக்கூடாது. தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டு மானால், எதிரிகள் நம்மை நல்ல அளவில் விளம்பரப்படுத்துகிறார்கள் என்று பொருள்.

நமது செயல்பாடுகளின் மூலம் அவற்றை முறியடிக்க வேண்டும். கடந்த காலங்களிலும் இந்த வழியைப்பின் பற்றியே எதிரிகளையும், துரோகிகளை யும் முறியடித்திருக்கிறோம். இது நமது அனுபவம்.

தமிழ் ஓவியா said...

சீப்பை ஒளிக்கும் தினமணி


ஒவ்வொரு மாதமும் தலைவர்களின் பிறந்த தினம் நினைவு தினங்களின் பட்டியலை தினமணி வெளியிட்டு வருகிறது. டிசம்பர் மாதப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதில் டிசம்பர் 24 என்பதில் தந்தை பெரியார் நினைவு தினம் வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில் எம்.ஜி.ஆர். மறைவை மட்டும் அந்த நாளில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அவர்களைப் போடக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. எம்.ஜி.ஆரையும் சேர்த்து அனைவருக்கும் தலைவரான பெரியார் நினைவை இருட்டடிப்பது - ஏன்? இதற்குப் பெயர்தான் பார்ப்பனக் குசும்பு என்பது. அதுவும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் ஆசிரியராயிற்றே! சீப்பை ஒளித்தால் திருமணமா நிற்கும் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
---விடுதலை” 2-12-2011

Nasar said...

தோழரே ....
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்
தாங்களை பகுத்தறிவாளர்கள் என்று
சொல்லிக் கொள்கிறேர்களே எந்த விதத்தில்
சொல்கிறீர் என்பதை அறிய வேண்டுகிறேன் ...
தயவு செய்து நான் குசும்பு செய்வதாக எண்ணாமல்
பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் ..