Search This Blog

28.12.11

அன்னா ஹசாரே குழுவினரை நோக்கி சில வினாக்கள்!


ஊழல் ஒழிப்பு அவதாரங்களை நோக்கி சில வினாக்கள்!

காந்தியார் குல்லாய் அணிந்து நாட்டையே ஊழல் புயலில் இருந்து காப்பாற்றிட ஒரு பரிசுத்த யோவான் புறப்பட்டுள்ளார். அவர் பெயர் அன்னா ஹசாரே.

நாட்டில் ஊழல்கள் புழுத்துவிட்டன; உண்மைதான், அவை ஒழிக்கப்பட வேண்டியதுதான், தேவைதான்.

அதை ஒழித்துக்கட்டுவதற்கு முன்வந்துள்ளாரே - இவர் யார்? வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்வதுண்டு.

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டதாக அவதாரம் எடுத்துள்ளவர்களையும், அவர்களின் பக்க வாத்திய ஊடகங்களையும் நோக்கி சில வினாக்கள்:

1. அன்னா ஹசாரே மற்றும் அவர் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு இது வரை முறையான பதில்கள் கிடைக்கப் பெற் றனவா?

2. பிரதமர் உள்பட இந்த லோக்பாலுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார் களே - அப்படியென்றால் இவர்கள் பிரதமர் பதவிக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களா?

3. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் எப்படி ஒரு குழுவின் முன் கைகட்டி நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

4. அன்னா ஹசாரேவைச் சுற்றி இருப்பவர்கள் - அந்தக் குழுவினர் எந்த அடிப்படை யில் தகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்?

5. ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் குழுவில் இடம்பெறுவர் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதற்கு? பூனைக்குப் பேன் பார்க்கவா?

6. சகல அதிகாரம் படைத்ததாகக் கருதப் படும் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் எதற்கு? உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குமேல் தீர்ப்புக் கூறும் அதிகாரம் படைத்தவர்களா இவர்கள்?

7. சரி, இந்த லோக்பால் குழுவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் - இவர்களை விசாரிக்கும் அமைப்பு எது?

8. அன்னா ஹசாரேயை சுற்றி பி.ஜே.பி.யும், சங்பரிவாரைச் சேர்ந்தவர்களும் சூழ்ந்து காணப்படுகின்றனரே - இந்த நிலையில், இவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா?

9. நாங்கள் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் அன்னா ஹசாரே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் விஷ்ணு பகவத் போட்டு உடைத்தாரே - இதுவரை இதற்கு மறுப்புக் கூறப்பட்டதா?

10. லோக்பால் குழுவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அங்கம் வகிக்கவேண்டும் என்ற கருத்து உருவாக்கத் தில் சிறுபான்மையினரை இடம்பெறச் செய்யக் கூடாது என்று பி.ஜே.பி.யினர் கூறுவது இந்துத்துவா மனப்பான்மைதானே?

அப்படிப் பார்க்கப் போனால், தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடம்பெறுகிறார் களே - அவர்கள் இந்துக்கள் இல்லையா? இது மட்டும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகமாட் டார்களா? சமூகநீதியைப் புறந்தள்ளுவதுகூட மதவாதம் அல்லவா?

11. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் இருக் கிறார்களே - இவர்கள் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா?

12. சினிமாக்காரர்கள்கூட இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே - இவர்கள் கறுப்புப் பணம் வாங்குவதில்லையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாணயமான முறையில் விடையைத் தெரிவித்துவிட்டு, ஊழலைப்பற்றிப் பேசினால், அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது!

-------------------"விடுதலை” தலையங்கம் 26-12-2011

6 comments:

தமிழ் ஓவியா said...

மோசமான உடல்நிலை மற்றும் மக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன்னா ஹஸாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

அன்னா ஹஸாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தார். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த கூட்டத்தின் அளவு அவரையும் அவரது கோஷ்டியையும் பெரும் ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கிவிட்டது.

மும்பை மைதானத்தில் முதல்நாள் இரவில் வெறும் 40 பேர் மட்டுமே இருந்ததாக மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இரண்டாம் நாளன்று பகலில் வந்த கூட்டம் வெறும் ஆயிரம் பேர் கூட இல்லை என்பதே உண்மை. இதில் பெரும்பாலானவர்கள், "உண்ணாவிரத கூட்டத்தில் நல்ல உணவு கிடைக்கும் என்றார்கள். அதான் பார்த்துவிட்டு, முடிந்தால் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தோம்," என கூறியுள்ளனர்.

இதனால்தான், நேற்று முழுவதும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் 3 நாட்களும் உண்ணாவிரதம் நடக்கும் என கூறி வந்த ஹஸாரேவும் அவர் கோஷ்டியினரும் இன்று பாதியில் முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர்.

சிறை நிரப்பும் போராட்டத்துக்கு 2 லட்சம் பேர் தயார் என்று ஹஸாரே கோஷ்டி கூறி வந்தது. ஆனால் உண்மையில் 20000 பேர் கூட இதற்கு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

காரணம், சிறைக்கு வரத் தயார் என இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் தந்துள்ள தகவல்கள் பெரும்பாலும் பொய்யாக உள்ளதுதான். மேலும் ஒரு நபரே 100 படிவங்கள் நிரப்பியுள்ளார். எனவே இந்த போராட்டத்துக்கான மக்கள் ஆதரவு குறித்து ஹஸாரே கோஷ்டிக்கு சந்தேகம் எழுந்துவிட்டதால், அதை முன்கூட்டியே ரத்து செய்துவிட்டனர்.

"சிறை நிரப்பும் போராட்டம் எந்தப் பலனையும் இப்போது தராது. எனவே அதை ரத்து செய்துவிட்டோம். இப்போதைய இலக்கு, 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸைத் தோற்கடிப்பதுதான். இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்வோம்," என்று அன்னா கோஷ்டியின் சர்ச்சைக்குரிய நபரான கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
http://tamil.oneindia.in/

தமிழ் ஓவியா said...

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரா மண்டபத்தில் ஹஸாரேவுக்காக உண்ணாவிரதமா? - ஈவிகேஎஸ் கிண்டல்

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரா மண்டபத்தில், ஊழலை ஒழிக்க ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கிறார்கள், என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.
http://tamil.oneindia.in/

காங்கிரஸ் கட்சியின் 127வது ஆண்டு தொடக்க விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்பட பல நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கோஷங்களை முழங்கினார்கள்.

பின்னர் நிருபர்களைச் சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த இளங்கோவன், "ஹஸாரேவுடன் இயங்குபவர்கள் யார்... பெரும்பாலும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், ஒழுங்காக கணக்கு காட்டாதவர்கள்.

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) அவருக்கு ஆதரவாக போராட்டமே நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று பாருங்கள்... சென்னையில் 100 பேரைக் கூட திரட்ட முடியாத ஒரு போராட்டம். இன்று வேடிக்கை பார்க்க வந்தவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் 10 பேர்தான் தேறியிருப்பார்கள்.

மக்கள் தெளிவானவர்கள். அவர்களை எப்பேர்ப்பட்டவர்களாலும் ஏமாற்றவே முடியாது. மண்டபம் கொடுத்தவர்களுக்கும் இது புரிந்திருக்கும்.

ஹசாரேவை இந்த வருட தொடக்கத்தில் ஊடகங்கள் பெரிதாக உருவகப்படுத்தின. அவரது நிஜ உருவம் இப்போது தெரிந்து விட்டது.

ஹசாரே இப்போது காற்று போன பலூன் அவர் புஸ்வாணம் ஆகி விட்டார் என்பதுதான் புத்தாண்டின் இனிப்பான செய்தி. காங்கிரஸ் 50 ஆண்டுகள் விடுதலைக்காக போராடிய மாபெரும் மக்கள் இயக்கம். 60 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் கட்சி இது. ஏழை மக்களின் பாதுகாவலன் காங்கிரஸ் மட்டுமே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ்தான். இதை திரித்துக் கூறி பொய்யைப் பரப்பிய பிஜேபி, ஆர்எஸ்எஸ், அவர்களின் முகமூடி ஹஸாரேயின் சாயம் இன்று ஒரே நாளில் வெளுத்துவிட்டது," என்றார்.

vizzy said...

கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் ஒரு வார்ட் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாத அகில இந்திய கட்சியான இந்திரா காங்கிரஸின் இளங்கோவன் அன்னாவிற்கு பத்துபேர் கூட தேறமாட்டார்கள் என்று ஜோசியம் சொல்லுவது நல்ல தமாஸ்.

தமிழ் ஓவியா said...

வலிமை உள்ள லோக் பால் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வீரவசனம் பேசினார் அன்னா ஹசாரே! டில்லி யில் உண்ணாவிரதம் இருந் தார் - கொஞ்சம் சூடு பிடித்தது.

ஓகோ மக்கள் ஆதரவு பெருகி வழிந்தோடுகிறது என்கிற தன் முனைப்பில் சும்மா சண்டமாருதம் புரிந்தார்.

மும்பையிலும் மூன்று நாள் உண்ணாவிரதம் என்று வீராப்புப் பேசினார். என்ன நடந்தது? இரண்டு நாள்கூட தாக்குப் பிடிக்க வில்லை. கடை விரித்தேன் கொள் வாரில்லை மூட் டைக் கட்டினேன் என்று பட்டினிப் போராட்டத்தை நேற்றே முடித்துக் கொண் டார்.

மும்பை உண்ணா விரதத்தின்போது மக்கள் கூட்டம் காணப்படவில்லை. வெறிச் சோடிக் கிடந்தது என்று, இதுவரை அவரைத் தூக்கிப் பிடித்த ஊடகங்கள் கூட கை விரித்து விட்டன.

வேறு வழியின்றி பட்டினிப் போராட்டத்தைக் கைவிட்டார். சனவரி முதல் தேதியிலிருந்து சிறை நிரப்பும் போராட்டம் என்று தோள் தட்டினாரே - அதை யும் நடத்தப் போவதில்லை யாம்! சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற கதை தான்.

தொடக்கத்திலேயே மத்திய அரசு கண்டு கொள் ளாமல் இருந்தால் இவர் ஆட்டம் முதல் காட்சி யிலேயே மூடு விழாவைக் கண்டு கொண்டு இருக் கும்.

5 மத்திய அமைச்சர்கள் ஓடோடிச் சென்று வரவேற் றதும் கனம் மண்டையில் ஏறி விட்டது, அவ்வளவு தான், நாடே தன் கைக்குள் என்று சலாம் வரிசை ஆட ஆரம்பித்து விட்டார்.

ஊடகங்களின் விளம் பர வெளிச்சத்தால் பாமர மக்களும் விட்டில் பூச்சி களாக ஈர்க்கப்பட்டனர். எவ்வளவு நாள்களுக்குத் தான் தாக்குப் பிடிக்க முடியும்?

தூக்கி விடுகிற பூனையா எலியைப் பிடிக்கும்? எலியைக் கண்டவுடன் பாய் வதுதானே உண்மையான பூனைக்கு அடையாளம்?

கடைசிக் கடைசியாக லோக்பால் மசோதாவுக்கு அடுத்த கட்டமாக ஊழல் ஒழிப்பு விசாரணைக் குழு வுக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் தொடர்பான மசோதாவுக்கு பிஜேபி ஆதரவளிக்கவில்லை என்றவுடன், ஆசாமி ரொம்பவும் சோர்ந்துதான் போய் விட்டார்.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? ஹசாரேயை வளர விட்டால் பிரதமர் பதவி என்கிற கனவும் களவு போய் விடுமே என்ற அச்சம்கூட பா.ஜ.க. தலைவர்களுக்கு இருக்க லாமோ என்னவோ! தம்மை விஞ்சாமல் கைக்குள் அடக்கமாக இருக்கும் வரைக்கும் சரிதான்; விஞ்சி விட்டால் ஹசாரேவுக்கு ஏற்பட்டுள்ள கதிதான்!

- மயிலாடன் 29-12-2011

தமிழ் ஓவியா said...

மடியில் கனம்!


ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று உத்தமப் புத்திரர்கள்போல குரல் கொடுத்த பிஜேபி மதவாதக் கூட்டத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் பின்னணியில் அன்னா ஹசாரே என்ற காந்திக் குல்லாய் ஆசாமி முன்னிறுத்தப்பட்டார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் ஊழல் என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தைத் திட்டமிட்ட வகையில் செய்ய வைத்து, அதன் அரசியல் லாபம் என்ற பலாச்சுளையை பிஜேபி ருசிப்பதுதான் இதன் திரைமறைவுப் பொம்மலாட்டம்.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதற்கான சட்டத் திருத்த மசோதாவை பி.ஜே.பி., எதிர்ப்பது ஏன்?

ஊழலை ஒழிக்கும் ஒரு அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பது அவர்கள் பார்வையில் நல்லதுதானே? அதனை ஏன் எதிர்க்க வேண்டும்? இதன் மூலம் பி.ஜே.பி.யின் ஊழல் ஒழிப்பு நிறம் கலைந்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி கூறியிருப்பது மிகவும் சரியானதே!

பி.ஜே.பி.யின் இந்தச் செயல்பாடு குறித்து அன்னா ஹசாரே உட்பட அவர் சார்ந்த குழுவினர் ஏன் கருத்துத் தெரிவிக்கவில்லை? ஏன் மவுன சாமியார் கள் ஆகி விட்டனர்? என்ற கேள்வி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

ஹசாரேகூட ஊழலை ஒழிப்பதில் உண்மையான நாட்டம் கொண்டிருப்பது உண்மை என்றால் முதலில் பிஜேபி ஆளும் கருநாடகத்தில் அல்லவா தொடக் கத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஏன் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங் களைத் தேர்வு செய்கிறார்? கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்தது என்பதுபோல ஹசாரே இப்பொழுது வெளிப்படையாக வேடம் களைந்து வெளியில் குதித்து விட்டார். காங்கிரஸ் தான் என் ஒரே எதிரி என்று கூறியதன் மூலம் அவரின் அரசியல் பின்னணி அம்பலமாகி விட்டது.

ஊழல்கள்மீது விசாரணை நடத்தும் குழுவுக்கு அரசமைப்புச் சட்ட அதிகாரங்களைக் கொடுத்து விட்டால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பிஜேபி யினர்தாம்.

பிரமோத் மகாஜன் (அவர் மரணம் அடைந்து விட்டார்), அருண்ஷோரி என்று ஒரு நீண்ட வரிசை உண்டு.

அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் அசிங்க மான ஆசாமிகளுக்கு பிஜேபியில் பஞ்சம் இல்லை.

முதலாளிகளிடம் பெரும் பணம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அவர்களுக்காகக் கேள்விகள் கேட்பதிலும் முதல் இடம் பிஜேபிக்குத்தான்.

பரிசுத்த யோவான் என்று குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆட்சியின் யோக்கியதை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு ஊழல்கள் அம்மாநிலத்தில் தலைவிரிகோலமாய் நிர்வாண ஆட்டம் போடுவதாக குஜராத் மாநிலத்து ஊழல் தடுப்பாணையம் புள்ளி விவரங்களோடு புட்டு புட்டு வைத்து விட்டதே!

வருவாய் உள்ளாட்சி அமைப்புகள் - நர்மதா மற்றும் நீர் ஆதாரங்கள், சாலைகள் மற்றும் கட்டடங்கள், நகர்ப்புற மேம்பாடுகள் ஆகிய துறைகளில் பெரும் ஊழல்கள் நடந்திருப்பதாக அந்த ஆணையம் அறிக்கையாகத் தந்துள்ளதே!

2010ஆம் ஆண்டில் மட்டும் 1180 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. 2008ஆம் ஆண்டில் 376 அதிகாரிகள், 2009இல் 949 அதிகாரிகள், 2010இல் 1180 அதிகாரிகள்மீது ஊழல் புரிந்ததன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியிருந்தும், மோடி அரசு முக்காடு போட்டுக் கொண்டு இருப்பது ஏன்?

குஜராத் மாநிலத்தில் ஜன் லோக்பால் அமைப்புக்கு நீதிபதியைக்கூட நியமனம் செய்யாத அரசாயிற்றே!

இந்த யோக்கியர்கள்தான் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளர்களாம்! வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

அரசமைப்புச் சட்ட ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அதில் வெகுவாக பாதிக்கப்படப் போகிறவர்கள் பி.ஜே.பி.யினர் என்பதுதான் - இதற்கான சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப் பதற்கான முழு முதற் காரணம்! ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு கதையாகி விட்டது பிஜேபியைப் பொறுத்தவரை.
---"விடுதலை” 29-12-2011

smart said...

எல்லாம் சரி கடைசியில் ஏன் கில்மா தளங்களுக்கு இணைப்பை அறிவு என்று கொடுத்துள்ளீர்கள்? விடுதலை நாளிதளின் இணைப்புக் கூட தெரியலையா?