தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தம் என்பார்கள் பக்த சிரோன்மணிகள். தங்கள் துயரத்தையும், நோய்களையும் தீர்க்க திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் படையெ டுப்பவர்கள். முடி காணிக்கை கொடுப் பார்கள்; உண்டியலில் கற்றை கற்றையாகப் பணத்தைக் கொட்டு வார்கள்.
தங்கப் பூணூலை மூன்றரை கிலோ எடை யில் மாட்டுவார் சங்கராச்சாரியார். வைரக் கிரீடம், தங்கக் கிரீடம் என்று வாரி வாரி வழங்குவார்கள் பண முத லைகள்.
ஒரு நாள், இரு நாள் காத்திருந்து, நீண்ட வரிசையில் நின்று ஏழுமலையானைத் தரிசிப்பார்கள். அவ்வளவு பக்தி. அவ்வளவு நம்பிக்கை ஏழுமலையான் சக்தியின்மீது.
திருப்பதி வெங்கடாசலபதியா? கொக்கா? புரட்டாசி சனிக்கிழமை விரதம் எல்லாம் இந்த கோவிந்தனுக்குத்தான்.
இவ்வளவு சக்தி (?) படைத்த கடவுளை, அவமதிக்கக் கிளம்பிவிட்டனர். அப்படிக் கிளம்பியவர்கள் நாத்திகர்களா? கறுப்புச் சட்டைக்காரர்களா? அல்ல. . . அல்ல. திருப்பதி தேவஸ்தானம் தான் இந்த வேலையைச் செய்யத் துணிந்து விட்டது.
ஏழுமலையானாகிய திருப்பதி வெங்கடா சல()பதியின் முகத்துவார வாயிலில் புல்லட் புரூப் (குண்டு துளைக்காத) கதவுகள் அமைக்கப்பட உள் ளன என்று திருப்பதி தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி எம்.கே.சிங். தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திருமலை கோவிலுக்குப் பாதுகாப்பினை பலப் படுத்த வேண்டும் என மத் திய, மாநில உளவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. திருமலை கோவில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக கோவிலின் முகத்துவார (புராதன) வாயிலில், புல்லட் புரூப் கதவுகள் அமைக்கப்பட உள்ளன. சிறப்பு பாது காப்புப் படை காவல்துறை யினர் சிலரின் மீது எழுந்த புகார்களால், அவர்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் படுவர். இவர்களது நடவ டிக்கைகள் குறித்து, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
லட்டு, வடை போன்ற பிரசாதப் பொருட்களில் குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்ததில், இதில் மூவர் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இவர்கள் மீது நடவடிக்கைகள் மேற் கொள்ள, தேவஸ்தான நிர் வாகத்திற்குப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. திருமலை கோவில் கோபுரம், திரு மலைராய மண்டபம், கல் யாண மண்டபம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை ஆய்வு செய்ய மண் சேகரிக் கப்படுகிறது.
- இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
(தினமலர் 15.12.2011 பக்கம் 5)
எப்படி இருக்கிறது ஏழு மலையான் கோவில் வண்டவாளம்?
கோவிலுக்குள் இருப்ப வர்களே இப்படி குல்மால் வேலையில் ஈடுபடுகிறார் கள். ஏழுமலையானின் சக்தியின் மீது பயம் இருந் தால் இந்த எத்து வேலை களை இவர்கள் செய் வார்களா?
அன்றாடம் அந்தக் கோவிலில் புழங்குபவர் களுக்குத்தான் நன்றாகத் தெரியும் - ஏழுமலையானா வது - வெங்கடாசலபதியா வது - அது வெறும் ஒரு பொம்மை என்ற கதை.
ஒரு பொம்மையை வைத்து ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போடு கிறார்கள் என்பதுதான் உண்மை.
உண்மையிலேயே ஏழு மலையான் மீது பக்தி இருந் தால், இந்தியா முழுமை யிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?
அவமதிக்காதே!
அவமதிக்காதே!
ஏழுமலையானை அவமதிக்காதே!
ஏழுமலையானுக்குச் சக்தியில்லை என்று கருதி குண்டு துளைக்காத (புல்லட் புரூப்) கதவுகளை அமைக்காதே!
கோவிலுக்குள்ளேயே இருந்து ஏழுமலையான் கடவுளைக் கேவலப்படுத் தும் தேவஸ்தான அதி காரிகளை வெளியேற்று!
வெளியேற்று!
நாத்திகர்களின் நையாண்டிகளுக்கு இடம் கொடுக்கும் இந்தக் கேடு கெட்ட காரியத்தைச் செய்யாதே! செய்யாதே!
என்று குறைந்தபட்சம் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாமா? அல்லது நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற வேண்டாமா?
கடைசிக் கடைசியாக பெரியார் வழிக்கு அல் லவா பக்தர்கள் வந்து விட்டனர்?
கடவுளை மற
மனிதனை நினை
என்ற பெரியாரின் கருத்தையல்லவா ஏற்றுக் கொண்டுவிட்டனர்.
ஏழுமலையானைக் காப்பாற்ற புல்லட் புரூப் கதவுகள் என்றால் அதன் பொருள் இதுதானே!
-----------------------------"விடுதலை” 15-12-2011
1 comments:
கைவிட்டு விட்டானே ஏழுமலையான்!
திருப்பதியில் தரிசனத்துக்காக வரிசையில் நின்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து சாவு
திருப்பதி, டிச.16- திருப்பதியில் தரிசனத்துக்காக வரிசையில் நின்ற சென்னை பக்தர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
சென்னையை சேர்ந்த பக்தர் வாசுதேவன் (வயது 26) மற்றும் 10 பேர் வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்று இருந்தனர். மற்ற பக்தர்களுடன் சாமி தரிசனத்துக்காக அவரும் வரிசையில் சென்று கொண்டு இருந்தார்.
லட்டு வாங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை திருப்பதி தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவலை சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது உடலை சென்னைக்கு அனுப்பி வைக்கவும் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே, லட்டு வாங்க வாசுதேவன் வரிசையில் நின்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்ததாக பரபரப்பாக தகவல் பரவியது. ஆனால், இந்த தகவலை தேவஸ்தானம் திட்ட வட்டமாக மறுத்தது. வாசுதேவன் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடையவில்லை என்றும், லட்டு வாங்க வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்ததாகவும் தேவஸ்தானம் அறிவித்தது. இருந்தாலும், இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தர விட்டு இருப்பதாகவும் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
----------"விடுதலை” 16-12-2011
Post a Comment