Search This Blog

9.12.11

பதில் சொல் தினமலரே!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: சிறீரங்கத்தில் அர்ச்சகப் பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்துத் தூக்கும், மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும்.

டவுட் தனபாலு: இப்படித்தான், கல் சிலையைக் கும்பிடுறவன் காட்டுமிராண்டின்னீங்க... ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க... கிருஷ்ண ஜெயந்தியை கிண்டல் பண்ணீங்க... அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொண்டாடுறீங்க... பல்லக்கு தூக்குற தைக் கண்டிக்கிறீங்க... தலைவர்களை சாரட் வண்டியில வச்சு ஓட்டுறீங்க... வாழ்க உங்க பகுத்தறிவு...!

- தினமலர், 7.12.2011

வழக்கம் போல வல்லடி வழக்கிலே ஈடுபட்டுள்ளது தினமலர்.

தலைவர்களுக்கு விழா எடுப்பதும், பார்ப்பானைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்லுவதும் ஒன்றா!

இந்தப் பால பாடம் கூடத் தெரியாத கூட்டத்துக்குப் பத்திரிகை ஒரு கேடா?

மனிதனை மனிதன் தூக்குவதை நியாயப்படுத்தும் காட்டுவிலங்காண்டிகள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சூத்திரப் பூசாரியைப் பார்ப்பனர்கள் பல்லக்கில் வைத்துத் தூக்குவார்களா?

சிறீரங்கக் கோவில் பார்ப்பனர்களின் கால்கள் எல்லாம் முடமாகிப் போய்விட்டனவா? நடந்து சென்றால் கவுரவம் குறைந்து போய்விடுமா?

பெரியார் சிலையை யாரும் கும்பிடு வதில்லை, கும்பிடக்கூடாது என்பதற் குத்தான் கடவுள் இல்லை கடவுள் இல்லை! என்ற கல்வெட்டு அதில் இடம் பெற்றுள்ளது.

சிறீரங்க நாதன் கோவிலுக்கு எதிரிலும், காஞ்சி சங்கர மடத்துக்கு எதிரிலும் தந்தை பெரியார் சிலை இருக் கிறதே - ஆத்திரம் வராதா அய்யர் கூட்டத்துக்கு?

காலையில் எழுந்தவுடன் காஞ்சி சங்கராச்சாரியார் பெரியார் சிலையைச் சுற்றிவந்து கும்பிடுப் போடுவதாகக் கேள்வி - இப்படிப்பட்ட கூட்டத்துக்கு இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டும்.

பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவதும், பிறந்து வளர்ந்து நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யும் - செய்த தலைவருக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதும் ஒன்றல்ல.

பிறப்பு - இறப்பு அற்றவன் - உருவமற்றவன் கடவுள் என்று கத்திக் கொண்டு உருவம் ஏன்? கோவில் ஏன்? ஆண்டாண்டு திருக்கல்யாணம் ஏன்? போன வருடம் செய்து கொண்ட கல்யாணத்தை எவன் அடித்துக் கொண்டு போனான்? பதில் சொல் தினமலரே!

------------------"விடுதலை” 8-12-2011

2 comments:

guna said...

இப்படித்தான், கல் சிலையைக் கும்பிடுறவன் காட்டுமிராண்டின்னீங்க... ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க... கிருஷ்ண ஜெயந்தியை கிண்டல் பண்ணீங்க... அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொண்டாடுறீங்க...



please tell direct answer.

தமிழ் ஓவியா said...

//ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க...//

பெரியார் சிலையை யாரும் கும்பிடு வதில்லை, கும்பிடக்கூடாது என்பதற் குத்தான் கடவுள் இல்லை கடவுள் இல்லை! என்ற கல்வெட்டு அதில் இடம் பெற்றுள்ளது.

முட்டாள்தனமாக பின்னூட்டம் இட்டு உன்னை நீயே குறைத்துக் கொள்ளாதே