Search This Blog

20.12.10

அய்யப்பர்களின் ஒழுக்கம்!



பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தா சம்பந்தம் கிடையவே கிடையாது. பக்திக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று.

கடவுள்பக்தி இருந்தால்தான் பாவம் செய்யப் பயப்படுவார்கள்.அது இல்லாவிட்டால் அவிழ்த்து விட்ட மாதிரி மக்கள் குற்றங்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்று சமாதானம் கூறுவதுண்டு.

ஆனால் நடைமுறை உலகம் எப்படி இருக்கிறது? அன்றாடம் ஏடுகளில் வெளிவரும் செய்திகள் என்ன?

நடுநிலையோடு சிந்திப்பவர்கள் எந்த முடிவுக்கு வரவேண்டும்?

குளித்தலையில் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் சுருண்டு விழுந்து கிடந்த அய்யப்ப பக்தரை, திராவிடர் கழகத் தோழர்கள், தண்ணீரை ஊற்றி, போதையைத் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பினர் என்ற செய்தி விடுதலையில் வெளிவந்தது நினைவில் இருக்கலாம்.

நேற்று ஒரு செய்தி பரவலாக ஏடுகளில் வெளி வந்தது. தூத்துக்குடியில் அய்யப்ப பக்தர்கள் 12பேர் அன்னதானம் வழங்கப்போவதாகக் கடைக்குக் கடை சென்று நன்கொடை திரட்டியுள்ளளனர். சாமி விஷயம் என்றால்தான் மூட மக்கள் அள்ளி அள்ளிக் கொடுப்பார்களே!

இவர்கள் நடத்தையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் காவல்துறையில் பிடித்துக் கொடுத்துள்ளனர். இவர் கள் புதுக்கோட்டை மாவட்டம் குலைவாழைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதே ஊரைச் சேர்ந்த 19 பேர் அய்யப்பன் விரத உடையில் இருவர் இருவராகப் பிரிந்து ஊரில் வசூல் செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு தங்கும் விடுதி யில் அறை எடுத்துக் கொண்டு சூதாட்டம் நடத்தி யுள்ளனர். காவல் துறையினரின் சோதனையின்போது வசமாகச் சிக்கிக் கொண்டனர். இதற்கு முன்பும் இதே பக்தி போர்வையில் இவர்கள் இறங்கி மக்களிடம் வசூலித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பக்தி விளைவிக்கும் யோக்கியதை ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதைவிட ஓர் எடுத்துக் காட்டும் தேவையாக இருக்காது. பக்தி வந்தால் ஒழுக்கம் வளரும் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று சொல்லுவதெல்லாம் அப்பட்டமான மாய்மாலம் என்பதையும் பொதுமக்கள் உணரவேண்டும்.

எல்லா மதங்களிலுமே பாவ மன்னிப்பு, பிராயச் சித்தம், தொழுகை என்று வைத்துக் கொண்டு தானிருக்கின்றன. செய்த பாவங்களுக்கு எளிதாகப் பரிகாரம் வைத்திருந்தால், கொள்ளை லாபம், குறைந்த முதலீடு என்ற கண்ணோட்டத்தில்தானே மக்களின் சிந்தனையும் செயல்பாடும் அமையும்.

12 வருடங்கள் செய்த பாவம் மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டால், அத்தருணமே போகும், புண்ணியம் கிடைக் கும் என்றால் தவறு செய்ய யார்தான் தயங்குவார்கள்?

12 வருடங்களில் எத்தனை எத்தனைக் குற்றங்களை ஒரு மனிதன் செய்திருப்பான்? அவனுக்குத் தண்டனை ஏதுமின்றி, ஒரு முழுக்கு மூலம் தப்பிவிடுவான் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! அதனால்தான் உலகத் தலைவர் தந்தை பெரியார் கூறினார் - பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்றார். கடவுளை மற- மனிதனை நினை என்றார்.

ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் இல்லை. (கல்கி, 8.4.1958)

சங்கராச்சாரியார் சொல்லுகின்ற அந்தக் கடவுள் கள் கூட யோக்கியமாகப் படைக்கப்பட்டுள்ளனவா? அவர் எந்த மதத்துக்குத் தலைவர் என்று கருதப்படு கிறாரோ, அந்த இந்து மதத்தில் உள்ள எந்தக் கடவுளிடத்திலாவது ஒழுக்கம் உண்டா? சண்டை போடாத கடவுள் உண்டா? கொலை செய்யாத கடவுள் உண்டா? கற்பழிக்காத கடவுள் உண்டா?

படைத்தல் கடவுள் பிரம்மா என்று சொல்லுகிறார்களே, அவன் யோக்கியதை என்ன? பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாட்டியாகக் கொண்டவன்தானே! இதற்கு மேலாகவா எடுத்துச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்?

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் யோக்கியதை என்ன? அவர் எந்தக் குற்றத்தில் சிக்கி இப்பொழுது ஜாமீனில் நடமாடுகிறார்? அவர் ஏன் சிறைக்குச் செல்ல நேர்ந்தது?

பக்தர்கள் ஒரே ஒரு நொடி இவற்றையெல்லாம் கண்முன் நிறுத்திக் கருத்தோடு சிந்தித்தால், மதமும் அது காட்டும் வழியும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ளலாம் அல்லவா!

--------------------- "விடுதலை” தலையங்கம் 18-12-2010

5 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

காரசாரமான பதிவு.இது பெரிய வெற்றி அடைந்திருக்க வ்பேண்டிய பதிவு,ஆனா ஹிட்ஸ் குறைவா இருக்கு ஏன்னு தெர்யல

தமிழ் ஓவியா said...

அய்யப்பப் பக்தர்களுக்கு மதுக்கடையில் தனி டம்ளர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை விழாக்களை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி (கார்த்திகை ஒன்றாம் தேதி) முதல் புதிய மேல்சாந்தி அதிகாலை 4 மணிக்கு மணி அடித்து கோவில் நடை திறக்க, 41 நாள் மண்டல காலம் துவங்கியது.

மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி அரிகரசுதன் சிறீஅய்யப்பன் குடிகொண்டு உள்ள சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர்.

திரும்பிய திசையெல்லாம் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து பக்தி மயமாகக் காட்சி யளிக்கின்றனர். இவர்கள் மலைக்குச் சென்று திரும்பும் வரை விரத நாள்களில் காலில் செருப்பு அணியாமலும், புகை பிடிக்காமலும், மது அருந்தாமலும், பெண் சமாச்சாரங்களில் ஈடுபடாமலும், கடுமையான விரதம் இருந்து வருகின்றனர்.

சில அய்யப்ப பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப செருப்பு அணிவது: புகை பிடித்தல் போன்ற பழக்கங்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் திண்டுக்கல் நகரில் நடக்கும் கொடுமை மோசமானதாக உள்ளது. சில அய்யப்ப பக்தர்கள் மதுவும் அருந்துகின்றனராம்.

தினந்தோறும் மது அருந்தி பழக்கப்பட்ட நம் குடி மகன்களால் அதை உடனடியாக நிறுத்த முடியவில்லையாம்.

சாதாரணமாக டீக்கடைகளில் பக்தர்களுக்காக தனியாக சில்வர் டம்ளர் இருப்பது வழக்கம். அதே போல திண்டுக்கல் நகரில் உள்ள சில மதுக்கடைகளின் பார்களில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தனியாக சில்வர் டம்ளர் வசதி செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் நாம் குடி மகன்தான் என்று கூறும் வகையில் பக்தர்கள் டம்ளரில் மதுவை ஊற்றி அருந்திச் செல்கின்றனர். -இதுதான் பக்தியின் இலட்சணம்!

(25.11.1998 மதுரை தினகரன்)

Kanagu said...

ஆமா ஆமா உலகத்திலேயே நீங்க(நாத்திகர்கள்) மட்டும் தான் ஒழுக்கம்.
ஒரு நாத்திகர்கள் கூட குடிகரதில்ல.. ஏன் வாய்ல விரல வச்ச கூட கடிக்க தெரியாத பச்சை குழந்தைகே...

அதுவும் திக னா உத்தம புத்திரர்கள்தான்.. சும்மா ஏங்க ஊரே ஏமாத்திட்டு??

நம்பி said...

//Kanagu said...

ஆமா ஆமா உலகத்திலேயே நீங்க(நாத்திகர்கள்) மட்டும் தான் ஒழுக்கம்.
ஒரு நாத்திகர்கள் கூட குடிகரதில்ல.. ஏன் வாய்ல விரல வச்ச கூட கடிக்க தெரியாத பச்சை குழந்தைகே...

அதுவும் திக னா உத்தம புத்திரர்கள்தான்.. சும்மா ஏங்க ஊரே ஏமாத்திட்டு??
December 26, 2010 8:11 AM //


நாங்க இந்த விளம்பரத்தையெல்லாம் தேடறதில்லை...பிறருடைய சான்றிதழையும் விரும்புவதில்லை...வாயில விரலை வைச்சா விரலோடு கையையும் சேர்த்து கடிச்சு துப்பிடுவோம். அந்த அதிகாரத்தை எவருக்கும் வழங்குவதுமில்லை.

தனிமனித ஒழுக்கம் வேறு, தனிமனித பழக்கம் வேறு...

பழக்கத்தையெல்லாம் வைத்து குறைசெல்லிக்கொண்டிருப்பவர்கள் அந்தப்பக்கம் தான் அதிகம்.

இந்த பழக்கமெல்லாம் இருந்தால் கடவுள் கண்ணைக் குத்துவார் என்று மிரட்டல் விடுத்து தடை போடுவபவர்களும் அந்த பக்கம் தான். அந்த மிரட்டலை மீறுபவர்களும் அந்தப்பக்கம் தான்.

மாலைபோட்டு கொண்டு லஞ்சம் வாங்கினால் கடவுளுக்கு ஆகாது என்று மாலையை கழட்டிவிட்டு லஞ்சம் வாங்குபவர்கள் எல்லாம் அந்தப் பக்கம் தான்.

மாலைப்போட்டால் துக்கநிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என்று நெருங்கிய உறவுகளையே ஒதுக்கி வைப்பவர்கள் எல்லாம் அந்தப்பக்கம் தான். இல்லையென்றால் மாலையை கழட்டி விடவேண்டுமாம். இல்லையென்றால் தீட்டு. இதையெல்லாம் யார்? சொன்னது கடவுளா? எல்லாம் அந்தப்பக்கம் தான். அப்ப மார்ச்சுவரியில் வேலை பார்ப்பவர் சபரிமலைக்கு மாலை போட்டால் அது தொழிலாம் அது பரவாயில்லையாம், சுடுகாட்டில் வேலை பார்ப்பவர்...எக்சம்சன்...நோ தீட்டு.. இதையெல்லாம் சொன்னதும் அந்த பக்கம் தான்.

மாலை போட்டவர்களை சாமி சாமி என்றுதான் அழைக்க வேண்டுமாம்...குடிகார சாமி, லஞ்ச சாமி, போக்கிலி சாமி, கறிக்கடை பாய் சாமி, போலிஸ் சாமி, திருடன் சாமி, கள்ளச்சாராய சாமி, கன்னிச்சாமி, குருசாமி...எத்தனை எத்தனை சாமிகளடா? அதில் எத்தனை எத்தனை பித்தலாட்டங்களடா...?

சாமி சாமி கள்ளச்சாராயம் நல்லா வித்தா பதினெட்டுப்படி ஏறி வர சாமி...இல்லையென்றால்...எல்லாம் அந்தப் பக்கம் தான். சாமி மாமூல் இன்னைக்கு நல்லா கிடைச்சா...60 நாள் விரதம் இருக்கிற சாமி....இருந்து ஜோதி பார்க்க வர்ற சாமி....ஜோதி பார்க்க வந்து அப்படியே ஜோதியில கலந்துடுற சாமி....

-----------------------------
இந்தப் பக்கம்....குடியை நினையாதே... முடியாவிட்டால் இப்படி இரு...இது பழக்கம்.

குடி குடி உன்னை குடித்துவிடாமல் குடி...
-------------------------------

கடவுளிடம் மண்டியிட்டால் மன்னித்துவிடுவார் என்று முன்பே தீர்மானித்து குற்றத்தை செய்யத்தூண்டுவது அந்த பக்கம் தான்.

கடவுளின் முன்னாடி வேட்டியை தூக்கி காட்டினாலும் (காஞ்சிபுரம் மச்சேஸ்வரம்..தேவநாதன்) ஒன்றும் செய்யமாட்டார் அதுவும் லிங்கம் என்று கடவுள் நினைத்து ஆசிர்வதிப்பார் என்று புளகாங்கிதம் அடையும் அளவுக்கு பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரும் அந்தப்பக்கம் தான்.

கடவுள் கருவறையை பள்ளியறையாக மாற்றினாலும் கடவுள் ஒன்றும் செய்யமாட்டார் என்று ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரும் அந்தப் பக்கம் தான் இந்த பக்கம் இல்லை.



இந்த கடவுளை திருப்திப்படுத்துவதற்காக என்று சொல்லி இன்னொரு சமயக் கடவுளின் கோயிலை (மசூதியை) இடிப்பதும் அந்த பக்கம் தான் இந்த பக்கமில்லை. அதை கடவுள் கண்டும் காணாமால் இருப்பார் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் உன்னத பிரச்சாரத்தை செய்பவர்கள் அனைவரும் அந்தப்பக்கம் தான்.

இந்தப் பக்கமில்லை. இந்த பக்கம் கடவுளை கற்பித்தவன் முட்டாள்...நோ கடவுள்...அதற்காக எந்த சான்றிதழும் வேண்டாம்.