Search This Blog

14.12.09

இந்திய மதங்கள் ஒரு பார்வை


இந்திய மதங்கள்

கிறித்துவர்கள், முசுலிம்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் என்றழைக்கப்படுகின்ற மக்கள் பிரிவினைரைத் தவிர இந்தியாவிலுள்ள மற்றவர்களையெல்லாம் இப்போது இந்துக்கள் என்றே கொள்ளப்படுகின்றனர். வேத காலம் தொடங்கியுள்ள வரலாற்றை உரிமை கொண்டாடுகின்ற ஒரு மதமே இப்போது இந்து மதம். ஆனால், முன்பு ஒருபோதும் இந்தப் பெயரில் ஒரு மதம் இருந்ததில்லை. ஒவ்வொரு காலத்திலும் இந்தியாவில் உருவான மதங்களையெல்லாம் ஓர் இழையில் கோத்து இணங்க வைத்து ஒரு மதமாக்க நடத்துகின்ற முயற்சிகள் இன்று வரை வெற்றி பெறவில்லை.

இசுலாம், கிறித்துவ மதங்கள் புகுந்ததைக் கண்டு மலைத்த இந்தியர்கள் அவர்களுடைய பழைய பகைமையெல்லாம் மறந்து ஒன்றிணைய முயலுகின்றனர் அவ்வளவுதான்.

வைதிக மதம், சைவ மதம், வைஷ்ணவ மதம்,புத்த மதம், ஜைன மதம், அத்வைத மதம், கோஸாயி மதம், விசிஷ்டாத்வைத மதம், திராவிட மதம், காபாலிக மதம், தாந்திரிக மதம் எனப் பல மதங்கள் இந்தியாவில் தோன்றின. பிற நாடுகளில் நிகழ்வதைப் போலவே இந்த மதத்தினரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளவும், தாக்குதல் எதிர்தாக்குதல் நடத்தவும் செய்தனர். அதன் பலனாக இவற்றில் பல மதங்களும் அழிந்துவிட்டன.


-----------------------நூல்: ‘மதமும், பகுத்தறிவும்’,

0 comments: