
பொது உடைமையா? பொது உரிமையா?
பொதுவுடைமை வேறு; பொதுஉரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சமஅனுபவம் என்பதாகும். இந்நாட்டில் பார்ப்பனியத்தால் -சாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சம உடைமை இருந்தாலும் சம உரிமை இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த விஷயமாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
உதாரணமாக, பார்ப்பனரல்லாதார்களில் எத்தனையோ கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு , சாதாரண ஒரு பிச்சைக்காரப் பார்ப்பானுக்குள்ள "பொது உரிமை'' இல்லை. ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தரப் பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு உடைமை அடியோடு இல்லா விட்டாலும், அவனுடைய போக போக்கியம் குறைவுபடுவதே இல்லை. அன்றியும், பாடுபடாமலும் கை முதல் இல்லாமலும் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே , தன் மகனை அய்.ஏ.எஸ். படிக்கவைத்து, ஜில்லா கலெக்டர், ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்க்கோர்ட் ஜட்ஜாகவும் , சங்கராச்சாரி, ஜீயராகவும் ஆக்க முடிகிறது.
----------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தொகுத்து வழங்கிய "பெரியார் ஒரு வாழ்க்கைநெறி"என்ற நூலிலிருந்து
0 comments:
Post a Comment