
இளைஞர்களே, உங்களுக்குத் தெரியுமா?
* 1899ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் பஞ்சமர்கட்கு இடம் இல்லை என்று அச்சிட்டார்கள். சென்னையில் இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
* 1925-க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்தபோதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில் தான் உட்கார்ந்திருப்பார் - உள்ளே போகாமல். 1926-க்குப் பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார் (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) மகாத்மா காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
* 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் `` பஞ்சமர்கட்கு இடம் இல்லை'' என்று அச்சிட்டார்கள்.
சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு!இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
* நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும என்று இருந்த நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
* 1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது- அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று- மலம் எடுப்பதிலே கூட தீண்டத்தகாதவர்கள் அக்கிரகாரத்திற்குள்
வரக்கூடாது என்ற பாடுபட்டது உங்களுக்குத் தெரியுமா?
3 comments:
//1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது- அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று- மலம் எடுப்பதிலே கூட தீண்டத்தகாதவர்கள் அக்கிரகாரத்திற்குள்
வரக்கூடாது என்ற பாடுபட்டது உங்களுக்குத் தெரியுமா?//
பார்ப்பனர்களின் கொழுப்புக்கு ஒரு அளவே இல்லையா?
தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு மோசமாக நடத்தியுள்ளனர். இதைப் படிக்கும் போதே வேதனையாக இருக்கிறதே!. அப்போது வாழ்ந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்/ நினக்கவே மனம் கனக்கிறது.
இன்றும்கூட ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் பார்ப்பனர்களின் பாதந்தாங்கியாக இருப்பதைப் பார்க்கும் போது வெட்கமும் வேதனையும்தான் அடைய முடிகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்
http://tvpravi.blogspot.com/2009/01/blog-post_1078.html
இந்த பதிவை படிங்க, உங்க கருத்தும் தமிழ்மண தமிழ்ஷ் ஓட்டும் வேனும்
Post a Comment