
மயிலாடுதுறையில் 3-1-2009 அன்று நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தலைகீழாக்கி விட்டார்கள்
மற்றவர்களுக்கு வரலாறு கிடையாது. இசைக்கு மும்மூர்த்திகள் என்று வரலாற்றையே தலைகீழாக்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும். தமிழைப் புறக்கணித்து விட்டு, தெலுங்கு போன்ற பிறமொழிகளில் பாடல்களைப் பாடுவோர் - தாங்கள் பாடும் பாடல் எவ்வளவு ஆபாசமானது என்று கூட புரிந்து கொள்ளாமல் பக்திப் பாடல் என்று நினைத்து ஆபாசத்தைப் பாடுகிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டி யிருக்கின்றார். யார்? சுப்புடு என்கிற விமர்சகர். இவரே பார்ப்பனர். அவரே எடுத்துக்காட்டியதை எடுத்து கட்டுரையில் போடப் பட்டிருக்கிறது.
பக்தி வந்தால் புத்தி போய்விடும்
ஏனென்றால் பக்தி என்று வந்தால் புத்தி வேலை செய்யாது என்று பெரியார் சொன்னார் - பாருங்கள். பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று. அது எவ்வளவு உண்மையானது? எவ்வளவு நிதர்சனமானது என்பதைப்பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதைத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
ஜெயதேவர் இயற்றியதாம்!
தமிழில் பாட மறுத்து ஜெயதேவர் இயற்றிய அஷ்டபதி பாடுகிறார்களே - அதன் அர்த்தம் என்ன தெரியுமா? என்று கேட்டு பதிலளித்திருக்கின்றார் சுப்புடு. அதில் ஒரு பாடல் வருமாறு:
கலவி இன்பத்தின் சாரமே
கள்ள நட்பின் சந்திப்பல்லவா
அதை நாடி விழையும் அந்த மகதன மனோகர
ரூபன பின்தொடை ஆடி ஆசைய நின்னடை போடும்
மெல்லிடைப் பெண்ணே நேரம் தாழ்த்தாமல் சென்று தேடி அடை உன் நெஞ்சம் கவர்ந்தவனை
மந்த மாருதம் வீசும்
யமுனைக்கரை காதினிலே பார்
கூடிவரும் கோபியரின் கொழுத்து நிற்கும் கொங்கைகள்
நர்த்தளம் புரிய துறுதுறுக்கும்
அந்த துஷ்டக் கையனைப் பார்
இலை அசைந்தால் திக்கென்றும்
சருகுதிர்ந்தால் சட்டென்றும்
துணுக்குடன் எதிர்பார்ப்புடன்
வழிமேல் பதித்த குறுகுறுவிழியனாய்
அங்கே பூப்பரப்பில் பரப்பி
காத்திருக்கிறான் உனக்காக
கள்ளக் கூடலுக்கு ஏகும் உன்னை
காட்டிக் கொடுத்துவிடும்படி
உன் இடையில் கட்டிய மணிச் சரட்டின் கலகலப்பு
கழற்றிப் போடடி அதை
அகற்றித் தொலையடி
அந்த கார் முகில் வண்ணனின்
அகன்ற மார்பின் மீதூர
நீ குப்புறக் களிப்பது
என் சொல்வேன்.
கார்மேகப் பரப்பில் தளிர் துளிர்
மின்னல் கொடிபோடுமடி
என்று பாட்டு
கண்ணதாசன் எழுதியது அல்ல இது நான் எழுதிய கவிதை அல்ல. அவர் சொல்கிறார். கண்ண தாசன் எழுதியது அல்ல. ஜெயதேவர் எழுதியது. பஜனையிலும், கச்சேரியிலும் பலர் பாடுகிறார்கள். நம்மாள் முன் வரிசையில் போய் உட்கார்ந்திருக்கின்றான். ஆணும், பெண்ணும் உட்கார்ந்து ஆகா - தெலுங்கு கீர்த்தனையின் சுவையே தனி என்று சொல்லு கின்றான். இப்படி எவ்வளவு கொச்சைத்தனமான விசயங்கள் எல்லாம் பக்தி என்கிற பெயரில் அருவருப்புக்கும், ஆபாசத்திற்கும்தான் பயன்பட்டதே தவிர, இவனுடைய உணர்வுகளை, கிளர்ச்சிகளை உண்டாக்குவதற்குப் பயன்பட்டதே தவிர, உன்னுடைய அறிவுக்கு வேலை கொடு என்று சொல்லக்கூடிய முயற்சி வந்ததா?
எனவேதான் கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கட வுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்ன திருக்கின்றதே யாருக்கும் அது எதிரானதல்ல. இருக்கிற நிலையை அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்.
அய்யப்பன் கோவிலில் ஆபாசங்கள்
யாருக்காவது சந்தேகம் இருந்தால் அய்யப்ப பக்தனைப் போய்ப் பாருங்கள். இன்னமும் காட்டுமிராண்டிகளாகத்தானே இருக்கிறார்கள். இன்னமும் தலைமுடி, இருமுடி கட்டிக் கொண்டு போகின்றான். அய்யப்பன் கோவிலில் எவ்வளவு ஆபாசமாக நடந்துகொண் டார்கள்? அங்குள்ள அர்ச்சகரிடம் எவ்வளவு பிரச்சினை, எவ்வளவு பெரிய அசிங்கங்கள் - தொடர் கதைகளாக ஏடுகளில் வந்தன. இவ்வளவு தெரிந்தும் அய்யப்பன் கோவிலுக்குப் போகிறான். சாமியே சரணம் என்று சொல்லுகின்றான். ஹரிஹர புத்திரா, ஹரிஹர புத்திரா என்று சொல்லுகின்றான். அந்தச் சொல்லே என்னவென்று புரியாமல் ஹரிஹர புத்திரன் என்று சொல்லுகின்றான்.
புத்தியை அடகு வைத்ததன் விளைவு
வடமொழி படையெடுப்பு, சிந்தனையில்லாத பக்தி, அதனுடைய அர்த்தம் என்ன என்பதற்குக் கூட இவனுடைய அறிவு சாதாரணமாக வருவதில்லை. புத்தியை அடகு வைத்ததி தனுடைய விளைவு என்ன ஆயிற்று? ஹரன் என்று சொன்னால், சிவன், ஹரிஎன்று சொன்னால் விஷ்ணு ஹரிஹர புத்திரா ஹரிஹர புத்திரா என்றால் என்ன அர்த்தம். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பொறந்தவனே என்று சொல்லுகின்றான்.
இங்கேயிருந்து 400 மைல்களுக்கு முன்னாலே சத்தம் கொடுத்துக் கொண்டே போகின்றான். ஏண்டா சிவனும் ஆம்பிளை, விஷ்ணுவும் ஆம்பிளை. வெளிநாட்டுக்காரன் ஒருவன் வந்து இதை மொழி பெயர்த்துச் சொல் - உங்களுடைய பக்தியைப் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும். நான் புத்தகம் எழுத வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள்? ஹரியும், ஹரனும் (சிவன், விஷ்ணு) ஆகிய கடவுள்கள். எப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தைபெற முடியும் என்று கேட்டால் எல்லாம் கடவுள் திருவிளையாடல். கடவுள் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று சொன்னால், வெளிநாட்டுக்காரன் பளிச்சென்று சொல்லுவானே.
இந்த இரண்டு பேரும் சேர்ந்தால் அய்யப்பன் பிறக்கமாட்டான் - எய்ட்ஸ் வரும். ஜாக்கிரதையாக இருங்கள். இது எவ்வளவு பெரிய பிரச்சினை என்றல்லவா சொல்லுவான். இவ்வளவு பெரிய அசிங்கத்தை மறைத்து அதற்குப் பொட்டு வைத்து, பக்தி என்கிற பெயராலே சொல்லுகின்றான். நம்மாள் என்ன சொல்லு கின்றான்? பொடி போடுகிறவன், சிகரெட் புகைக்கிறவன் மாதிரி ஆக்கிட்டானே.
காவல்துறையினர் பக்திவேடம் அணியலாமா?
காவல்துறையினர் அய்யப்பன் கோவிலுக்கு போகலாமா? காவல்துறையினரை என்றைக்கும் நாங்கள் மதிக்கக் கூடியவர்கள். அவர்களுடைய மரியாதை குறையக் கூடாது என்று கருது பவர்கள். காவல்துறையில் சரியாக ஷேவ் பண்ணவில்லையென்றால் மெமோ கொடுத்துவிடுவார்கள். மதம் என்று சொன்னவுடனே அதற்கு விதிவிலக்கு. ஹெட்கான்ஸ்டபிள் கன்னிசாமியாக இருப்பார். கான்ஸ்டபிள் குரு சாமியாக இருப்பார். இவரும் - அவரும் பேசிக் கொள்வார்கள் - என்ன சாமி, போங்க சாமி. நமது நாட்டில் பக்தி வந்தால் ஒழுக்கம் போய்விட்டது. புத்தி போய் விட்டது. கட்டுப்பாடு போய்விட்டது. எல்லாமே போய் விட்டதே. அதே மாதிரி மற்ற நேரத்தில் இப்படி செய்வதற்கு விட்டுவிடுவார்களா? ஆகவேதான் நண்பர்களே! மூடநம்பிக்கைகளிலேயே தலையாய மூடநம்பிக்கை இந்த கடவுள் நம்பிக்கை. இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்துதான் தமிழன் போதைக்கு வந்ததினாலே மற்றது என்ன நடக்கிறது என்பதைப்பற்றிக் கவலை இல்லை.
-------------தொடரும்
---------------------நன்றி: "விடுதலை" 23-1-2009
3 comments:
//கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்,
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்ன திருக்கின்றதே யாருக்கும் அது எதிரானதல்ல.
இருக்கிற நிலையை அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்.//
ஆம். ஆம். உண்மை உண்மை.
dai punda mavane onnoda atha yeppadi onna petha sunni
oombu da sunni
Post a Comment