
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துவிவாதிக்க தலைவர்கள் சந்திப்பு
இன்று காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கூடி, ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் உடனிருந்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில் ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்டம் குறித்து விவாதித்தோம் என்று தலைவர்கள் மூவரும் கூறினர். கூடிப் பேசினால் கோடி நன்மையே என்றும் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறினார்.
--------------------நன்றி: "விடுதலை" 10-1-2009
7 comments:
i think these jokers should ask to annext Tamil Eelam to Tamil Nadu
aren't we same people at all...don't our blood boil when we hear other one was abused??????
let's work towards joining TN and TE
வெத்துவேட்டுங்கிற பேரை முதலில் மாத்துங்க நண்பரே.
தமிழினம் ஒன்று சேர்ந்து இந்தியாவை மாற்ற வைக்க வேண்டும்.
மனிதநேயம் முற்றாக மறைந்து விட்டது மாய்வது தமிழர்கள் என்பதால்.
தமிழ்நாட்டில் காங்கிரசு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதைத் தலைமைக்குப் புரிய வைக்க வேண்டும்.
இந்தியா போரை நடத்தவில்லை.
காங்கிரஸ்ஜிக்கள் தான் போரை நடத்துகின்றார்கள்.
எனவே காங்கிரஸ்ஜிக்களை தோற்கடியுங்கள்.
தலைமை மாறும்போது கொள்கைகளிலும் மாற்றம் வரலாம்.
அனைத்துத் தரப்புத் தகவல்களும் டில்லிக்குத் தெரியும்.
டில்லி தூங்குவதுபோன்று நடிக்கின்றது.
காங்கிரஸ்ஜிக்கள் கலைஞரை விலக்கிவிட்டு அம்மாவுடன் இணைய விரும்புகின்றார்கள்.
கலைஞரும் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை எடைபோட்டு முடிவெடுப்பார்.
எனவே கலைஞர் சொல் டில்லியின் காதில் விழாது.
பாவம் ஈழத் தமிழர்கள். பந்துபோன்று மாறி மாறி உதைப்படுகின்றார்கள்.
புள்ளிராஜா
வெத்துவேட்டு நீ ஒரு சுத்த வேஸ்ட்டு.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புள்ளிராஜா
தமிழர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டால் நடுவண் அரசு தன்நிலையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும்.
தமிழகத்தில் உள்ள இனஉணர்வாளர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு (இவர்களைப்போல்) அனைவரும் “தமிழீழம்” என்ற இலக்கிற்காக ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்.
தமிழினத்திற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்களை தலைவராகக் கருதாமல் ஒரு வீரமிக்க தொண்டராக செயலாற்ற வேண்டும்.
தமிழர்களும் தமிழின உணர்வாளர்களும் இனி தமிழகத்தில் எந்த போராட்டத்திலும் ஈடுபடத்தேவையில்லை. நாம் அனைவரும் புதுதில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அது தொடர் போராட்டமாகவும் இருக்கவேண்டும்.
இன உணர்வோடும் எழுச்சியோடும் தமிழின உணர்வாளர்கள் புதுதில்லியை பத்துநாள் முற்றுகையிட்டால் தமிழீழம் தானக பிறக்கு. தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்.
Post a Comment