
இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு இந்தியா உதவி
பருத்தித்துறை கடலுக்கு அண்மையில்
இந்தியாவின் இரு போர்க்கப்பல்கள் நிற்கின்றன
இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ராணுவ ரீதியாக உதவியளித்து வருவதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை கடந்த திங்கட் கிழமை தெரிவித்துள்ளது.
பாக். நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மாத்திரமன்றி விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள் ளது.
விடுதலைப்புலிகளின் இறுதித் தளமாக இருந்த முல்லைத் தீவின் நகர பகுதிக்குள் இலங்கை இராணுவம் நுழைந்ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.
இந்திய கடற்படை சிறப்பான விதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்திய கடற் பரப்பில் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் ஊடுருவதைத் தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான இந்தியாவின் உதவி மட்டுப் படுத்தப்படாத அளவுக்கு உள்ளது. இந்திய இலங்கை முகவரமைப்புகள் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்கின்றன என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன் இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி வழங்குவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு நகரை இலங்கை ராணுவத்தினர் கைப் பற்றிய செய்தி தொடர்பாக மட்டக்களப்பு பகுதியிலுள்ள கிராமவாசிகள் நம்பிக்கொள்ளாமல் இல்லை. ஆனால் புலிகளின் கடைசி தளத்தில் இராணுவம் ஊடுருவியிருப்பது அமைதியைக் கொண்டு வருமா என்பது தொடர்பாக வும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இராணுவ வெற்றியைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை இடம்பெறும் வரை பிரச்சினை தொடர்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாக மட்டக் களப்பு நகரைச்சேரந்த ஓட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ஏசியன் ஏஜின் செய்தியாள ருக்குக் கூறியுள்ளார். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் பிரபாகரன் இருந்தாலோ இல்லாவிடிலோ எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை வழமைக்கு மாறாக பருத்தித்துறை கடற்பரப்பில் இரு யுத்த கப்பல்கள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நிற்பதாகவும் அவை இந்திய கடற்படைக்கப்பலாக இருக் கலாமெனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
---------------------நன்றி: "விடுதலை" 29-1-2009
2 comments:
இதற்கு எதற்கு பார்பனீயம் என்று லேபிள்.இந்திய அரசில் அங்கம் வகிப்பது தி.மு.க,பா.ம.க கட்சிகள்.
மத்திய அரசில் அமைச்சரவையில்
அக்கட்சிகள் சார்பாக எத்தனை பேர்
இருக்கிறார்கள். இருந்தும் இந்தியா
உதவுகிறதென்றால் அது இவர்களுக்கு
தெரியாமல் நடக்கின்ற ஒன்றா?.
ஊரையும்,உலகையும் எதற்கெடுத்தாலும் பார்பனியம்
என்று கூவுவதால் ஏமாற்ற
முடியாது.
ஒரு புறம் ஆய்தம் கொடுக்கவில்லை என்பது, மற்ரொரு புறம் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பெயர்தான் பார்ப்பனியம். அதைத்தான் இந்திய அரசு செய்கிறது. அதைக்குறிப்பிடவே பார்ப்பனியம் என்ற லேபிள்.
Post a Comment