ஏமாற்று வேலை
கோவில்களில் கருவறைக்குள் மூல விக்கிரகம் என்று கூறி பொம்மைகளை (கடவுள்களாம்!) வைத்து ஏமாற்றும் வேலை இந்த 2011ஆம் ஆண்டிலும் தொடர்கிறதே என்பதை எண்ணும்போது ரத்தம் கொதிக்கிறது.
கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்பதை ஒப்புக் கொள்வதற்குத் திறந்த மனமும், பகுத்தறிவும், துணிவும் தேவையாகும்.
ஆத்திகர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட நடைமுறையில் எந்தக் கடவுளிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாகத் தூங்கச் செல்கின்றனர்? எல்லாவற்றையும் இவர்களே செய்துவிட்டு, தேவையில்லாமல் கடவுள் கருணை என்று நம்பித் தொலைக்கின்றனர். நல்லது நடந்து விட்டால் பார்த்தீர்களா? கடவுள் சக்தி என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார்கள். நல்லது நடக்காமல் வேறு விதமாக நடந்தால், அப்பொழுது என்ன சொல்லுவார்கள் தெரியுமா? கிரகம் சரியில்லை, கோவிலுக்கு 30 நாள் எண்ணெய் ஊற்றி விளக்குப் பூஜை செய்ய வேண்டும். நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிர கடவுளைக் கும்பிட்டோமே, ஒன்றும் நடக்கவில்லையே - இவ்வளவு தான் கடவுள் சக்தியோ என்று எவரும் சிந்திப்பதில்லை.
சென்றாண்டு அய்யப்பன் கோவிலுக்கு மகரஜோதியைத் தரிசிக்க புல்மேடு பகுதிக்குச் சென்ற அய்யப்ப பக்தர்கள் 104 பேர் பலியானார்கள்; 60 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மகரஜோதியே பித்தலாட்டம் செயற்கையாகக் காட்டப்படும் வெளிச்சம் என்று அறநிலையத் துறை அமைச்சர், தேவஸ்தான உறுப்பினர்கள் வரை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலையில், இந்த மகரஜோதி பித்தலாட்டத்தைத் தொடரச் செய்யலாமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. நீதிமன்றம் மவுனம் சாதித்து வருகிறது. கேட்டால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமாம் - பக்தர்கள் தாராளமாக வரலாமாம்! (அப்பொழுதுதானே சுரண்டலாம்!)
நேற்று முதல்நாள் ஏடுகளில் வெளிவந்த சேதி ஹரித்துவார் அருகே புனித நதி என்று போற்று வார்களே அந்தக் கங்கை நதிக் கரையில் ஆச்சார்யா பண்டிட் சீறிராம் சர்மா என்பவரால் சர்வதேச காயத்ரி பரிவார் என்ற அமைப்பின் சார்பில் யாகங்கள் நடத்தப்பட்டன. இமாசல பிரதேச முதல் அமைச்சர் பிரேம்குமார் துமால், மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.க., தலைவர் நிதின் கட்காரி முதலிய பிரமுகர்களும் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். வெளிநாட்டுப் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனராம். நேரம் ஆக, ஆக பக்தர்கள் அதிக அளவில் குழுமினராம். முண்டியடித்துக் கொண்டு யாக சாலைப் பகுதிக்குச் சென்ற பக்தர்கள் யாக சாலையில் கிளம்பிய கடுமையான புகை மூட்டத்தில் சிக்கி, பரிதாபகரமான முறையில் 50-க்கும் மேற்பட்டோர் மாண்டனர் என்பது என்ன கொடுமை! உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், காயம் அடைந்தோர் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கிட டாக்டர் மன்மோகன்சிங் ஆணை பிறப்பித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கோவில் விழாக்களுக்குள் சென்ற பக்த கோடிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர் மாண்டு போனார்கள் என்பது எத்தகு வேதனையான தகவல்! அதற்குப் பிறகாவது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? தம்மை நாடி வந்த பக்தர்களையே காப்பாற்ற முடியாதவருக்குப் பெயர்தான் கடவுளா? பொம்மை ஒன்றை அலங்கரித்து, இதுதான் சர்வ சக்தி கடவுள் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் புரோகிதர்கள்; பக்த கோடிகளும் இந்த ஏமாற்று வேலைக்கு அரசும் பல வகைகளிலும் ஆதரவுக் கரம் நீட்டுகின்றன. அரசியல் பிரச்சினை என்றால் ஆயிரம், ஆயிரம் வினாக்கணைகளை வக்கணையாக ஏவும் ஆன்மீகவாதிகளும், பக்தர்களும், ஊடகத்தோர்களும் கோவில் விழாக்களில் நடக்கும் பக்தர்கள் பலி ஆவதற்கு வாய்த் திறக்காதது - ஏன்? அந்தக் கல்லை முதலாக வைத்துதானே வயிற்றுப் பிழைப்பு நடக்கிறது? ஆய்வு என்ற பெயரில் உண்மையின் குட்டு உடைபட்டால் பார்ப்பனர்களின் ராஜ்ஜியம் குப்புறவீழ்ந்து விடுமே! அதனால்தான் பலிகளைப்பற்றிக் கண்டு கொள்ளாமல் பரிகாரப் பூஜை என்று சொல்லி அவாள் தொப்பை நிரப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன. நல்லது நடந்தாலும் அல்லது நடந்தாலும் புரோகிதப் பார்ப்பான் வயிறு நிரம்பினால் சரி. இந்தப் புரோகித சுரண்டல் முறையை ஒழித்துக் கட்ட வேண்டாமா?
-------------------"விடுதலை” தலையங்கம் 11-11-2011
8 comments:
இதுதான் தி(இ)னமலர் புத்தி!
13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்ததைக் கண்டித்து தி.மு.க. போராடுகிறது. இதுபற்றி தி(இ)ன மலரின் டவுட் தனபால் என்ன எழுதுகிறது?
தி.மு.க. தலைவரின் கனவு திட்டமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாத்தினாங்க... அதைக் கண்டிச்சு ஒரு ஆர்ப்பாட்டம்கூட நடத்தலை... மக்கள் நலப் பணியாளர்களை நீக்கினதும் மாநிலம் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்? இப்போ தெரியுதா அவங்களை ஏன் நீக்கினாங்கன்னு...!
(தினமலர் 10.11.2011)
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவது குறித்து திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்டனத்தை வரவேற்று இனமலர் எழுதியதா? அதற்காகப் போராட்டம் நடத்தியிருந்தால் - அதற்காக இரண்டு வரி வரவேற்று எழுதியிருக்குமோ?
போராட்டம் நடத்தினால் ஏன் இந்தப் போராட்டம் என்ற கேள்வி. போராட்டம் நடத்தவில்லை என்றால், ஏன் நடத்தவில்லை என்று கிண்டல்.
பார்ப்பனப் புத்தி என்பது ஜென்மத்தோடு பிறந்தது தானோ!
-----------”விடுதலை” 11-11-2011
வணக்கம்.
மூடக்கொள்கைகளை எதிர்ப்பதென்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் மூடக்கொள்கைகளோ/கடவுள் நம்பிக்கையோ ஆக இந்துமதத்தில் மட்டும்தான் இருப்பதுபோல தாங்கள் எழுதிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா.
மதங்கள் எத்தனையோ இருக்கின்றன.எல்லா மதங்களிலும் கடவுள் நம்பிக்கையும்,வழிபாட்டுமுறைமைகளும் இருக்கின்றன.
எல்லா மதங்களிலுமே பொம்மையுருக்களை செய்துவைத்துதான் வழிபடுகிறார்கள்.சில மதங்களில் அதுவும் இல்லாத வெற்றிடங்களின் முன்னால் கூடி வழிபடுகிறார்கள்.அதுவும் கடவுள் நம்பிக்கையின் வெளிப்பாடுதானே.
நிலைமை அவ்வாறிருக்க,... நீங்கள் என்னவென்றால் இந்துமதத்தையும் அதிலுள்ள விடயங்களையும் பற்றி மட்டுமே மிகக்கேவலமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.இதை எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ளமுடியும்?
உங்கள் நிலைப்பாடுதான் என்ன?அதை முதலில் நேரடியாகவும்,தெளிவாகவும்,விளக்கமாகவும் அனைவருக்கும் சொல்லிப் புரியவையுங்கள்.அதன் பிறகு உங்கள் பதிவுகளை தொடருங்கள்.
அதாவது,-
நீங்கள் ஒட்டுமொத்தமாக கடவுள் நம்பிக்கைக்கும்,மத அனுஷ்டானங்களுக்கும் எதிரான கொள்கையில் சமூக சீர்திருத்தத்திற்காக எழுதுகிறீர்களா? அல்லது, இந்துமதத்தை மட்டும் எதிர்த்து உங்களுக்கு இஷ்டமான வேறு ஏதேனும் மதத்தை ஆதரித்து,இந்துமத வீழ்ச்சிக்காகவும் உங்கள் விருப்பத்திற்குரிய மதத்தின் வளர்ச்சிக்காகவும் எழுதுகிறீர்களா?
இதை முதலில் எந்தவிதமான திசைதிருப்பல்களுமில்லாமல் தெளிவாகக் கூறுங்கள்.
ஏனென்றால் உங்கள் பதிவுகளில் பொதுவாக சில இடங்களில் கடவுளை கிண்டல் செய்தும்,எதிர்த்தும் எழுதப்படும் வார்த்தைகள் காணப்பட்டாலும்... அதற்கு நீங்கள் காட்டும் உதாரணங்களும் விளக்கங்களும் இந்துமதத்தை மட்டும் தனித்துக் கேலிசெய்வதாகவே அமைந்திருக்கிறது.
உங்கள் பதிலை தெளிவாக கூறுங்கள்?
மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!
பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.
தெய்வத்தன்மை பொருந்திய நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடையதாகிறது. மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மையானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங்களும் சாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்கபடுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா
பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!
பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண்டும். அய்யருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை. பையனுக்கு கல்யாணம்! அழை அய்யரை; சாந்தி முகூர்த்தம்; கூப்பிடு அய்யரை! பொண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி; கூப்பிடு அய்யரை! பிள்ளை பிறந்தது; கூப்பிடு அய்யரை! பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாவம் போகத் தானம் கொடுக்க, அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு; இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்; கூப்பிடு அய்யரை! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடி போக, பிற, பிற; அழை அய்யரை கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையா சம்பந்தியாக, கிரக தோஷத்திற்கு தர்ப்பைபுல் கொண்டு கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டு சங்கராச்சாரிய ஸ்வாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு விஜயம் செய்வதுண்டு.
- புரட்சிக் கவிஞர், (பாரதிதாசன் கதை பக்கம்: 42)
.
பொருளாதாரம் சீர்பட....!
மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமும் ஒழிந்தாலொழிய, இந்தியா பொருளாதாரத் துறை எந்தநாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்.
- தந்தை பெரியார், பகுத்தறிவு 1-12-1936
பக்தவச்சலனாரும் சொன்னார்!
நாட்டிலுள்ள பள்ளிக் கூடங்களில் போதிய இடமில்லா மலிருப்பதையும், அனேக கிராமங்களில் பள்ளிக் கூடங்களே இல்லாமல் இருப்பதையும் நினைக்கும்பொழுது, நமது கோவில்களிலுள்ள விசாலமான இடங்க களை இந்த காரியத்துக்கு ஏன் பயன்படுத்தக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.
(1950இல் எம்.பக்தவச்சலனார் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபொழுது மயிலாப்பூரில் பேசியது)
உங்களுக்காக ஒரு கவிதை....!
விடை காணமுடியாத
கேள்வி எது?
ஜோதிடர்
எனது வருங்காலம்
பற்றி வகைவகையாய்
சொல்லி வைத்தார்.
நான் கேட்டேன்
அவ்வளவு தூரம்
வேண்டாம்.
இன்று இரவு.... ஆம்!
இன்று இரவு
எனக்கு என்ன
கனவு வரும்?
ஜோதிடர் மவுனமாகிப் போனார்!
- வி.பி.சிங், முன்னாள் பிரதமர்
//எஸ்.பி.ஜெ.கேதரன் said...
வணக்கம்.
மூடக்கொள்கைகளை எதிர்ப்பதென்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.ஒத்துக்கொள்கிறேன்.//
நல்லது......
//எஸ்.பி.ஜெ.கேதரன் said...
ஆனால் மூடக்கொள்கைகளோ/கடவுள் நம்பிக்கையோ ஆக இந்துமதத்தில் மட்டும்தான் இருப்பதுபோல தாங்கள் எழுதிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா..//
ஏன்? முடியாது?.....மதவாதியாக இல்லாமல், எந்த மதத்தையும் சாராதிருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியும்!
அப்படியில்லாமல், மதத்தின் மீது சார்புநிலைக்கொண்டிருந்தால், ''என் மதத்தை இப்படி குறை கூறுகிறார்களே!?'' ''அது இழிவை போதித்தாலும் என் மதம்''....அதைத் தடுக்க முடியவில்லையே?'' என்ற சப்பைக்கட்டு எண்ணம் தான் வரும்!
அதுதான் பின்னூட்டமாக வந்திருக்கிறது.....
மதத்தின் ஏகபோக உரிமையை வைத்துக்கொண்டிருப்பவர்கள், மதக்காவலர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் புலம்புவது? (அப்படி ஒரு சட்டம் இல்லை....மதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது....அந்த கல்லு கடவுளையும் சேர்த்து தான்...உருவாக்கியவன் மனிதன் தானே! எதிர்ப்பவனும் மனிதன் தானே!.....)....இருந்தாலும் நினைப்பு....தன்னிலை மறந்த நினைப்பு....
//எஸ்.பி.ஜெ.கேதரன் said...
அதாவது,-
நீங்கள் ஒட்டுமொத்தமாக கடவுள் நம்பிக்கைக்கும்,மத அனுஷ்டானங்களுக்கும் எதிரான கொள்கையில் சமூக சீர்திருத்தத்திற்காக எழுதுகிறீர்களா? அல்லது, இந்துமதத்தை மட்டும் எதிர்த்து உங்களுக்கு இஷ்டமான வேறு ஏதேனும் மதத்தை ஆதரித்து,இந்துமத வீழ்ச்சிக்காகவும் உங்கள் விருப்பத்திற்குரிய மதத்தின் வளர்ச்சிக்காகவும் எழுதுகிறீர்களா?.//
சரி!....பின்னூட்ட வழியிலேயே......
இப்போது ஒட்டுமொத்த மத மூடநம்பிக்கைகளின் மேல் கவலைக் கொண்டு, சமூதாய அக்கறையின் பால் வெளிவந்த சந்தேகமா?
(சமுதாய அக்கறை என்று ஒரு இடத்திலும் வரவில்லை........)
அல்லது மேலே குறிப்பிட்டது போல...'' ''என் மதத்தில் உள்ளவற்றை இப்படி காரி முழிகிறார்களே! ஆயிரம் இருந்தாலும் அது என் மதம்!........'''' என்ற மதவெறியின் பால் பீறிட்டு வந்த பின்னூட்டமா? இல்லை .........????????????
மதம் என்றால் என்ன? அதை உருவாக்கியவன் எவன்?
கடவுள் என்றால் என்ன? அதை உருவாக்கியவன் எவன்?
//எஸ்.பி.ஜெ.கேதரன் said...
கடவுளை கிண்டல் செய்தும்,எதிர்த்தும் எழுதப்படும் வார்த்தைகள் காணப்பட்டாலும்... அதற்கு நீங்கள் காட்டும் உதாரணங்களும் விளக்கங்களும் இந்துமதத்தை மட்டும் தனித்துக் கேலிசெய்வதாகவே அமைந்திருக்கிறது..//
சரி! அப்படியே இருக்கட்டும்! ஏன் கேலி செய்யக்கூடாது!
(இங்கு எது அதிகமாக இருக்கிறது....? எது அதிகபட்சமான இழிவை போதித்து கொண்டிருக்கிறது...அதுவும் சட்டவிரோதமாக....?
இதனால தான் அங்கே கூட்டமே போச்சு...நிறைய விஷயம் தெரியலை...போல இருக்குது....)
அது மனிதனை கேலி செய்கிறது.....தாயை கேலி செய்கிறது...பெண்களை கேலி செய்கிறது....அதனால் அதை கேலி செய்கிறார்கள்...உருவாக்கியது முட்டாள் தனமான, காட்டுமிராண்டி மூதாதையர் தானே!
மனிதனை கேலி செய்ய!,
மனிதனை இழிவு படுத்த!,
மனிதனை அடிமைப்படுத்த!
மனிதன் இந்த தந்திரத்தை உருவாக்கினான்!,
அதை இப்போது வேண்டாம் என்று அந்த மூதாதையர்கள் வழிவந்த மனிதனே! கேலி செய்கிறான்! இதில் என்ன தவறு?
அவ்வழிவந்த மனிதனே! அந்த கல் கடவுள் (அவன் உருவாக்கிய) மீது காரி ''த்தூ த்தூ.....'' என்று முழிகிறான்....என்ன தவறு...நாம உருவாக்கிய கேவலம் தானே! நாமதான் துடைக்கணும்! தூக்கி எறியணும்!
அது தானே விஞ்ஞானம்!...அது தானே அறிவியல் கண்டுபிடிப்பு!...அதை வைத்து தானே இதையும் எழுதிக் கொண்டிருக்கிறது...!
. இன்னும் மூடநம்பிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குகிறது!....மனிதன் உருவாக்கிய கல்லை மனிதனே எட்டி உதைக்கிறான்...!
மனிதன் உருவாக்கிய கேவலத்தை மனிதனே காரி முழிகிறான் என்ன? தவறு....!
அப்படியே, அந்தக் குட்டையிலேயே இருப்பவன் அப்படியே இருக்கிறான்! மீண்டு வருகிறவன் மீண்டு வருகிறான்.....! இதிலே எவனுக்கு இடைஞ்சல்....?
Post a Comment