Search This Blog

6.11.11

கலைஞருக்கும் - வீரமணிக்குமிடையே சிண்டு முடியும் தினமலர்


சிண்டு முடிந்திடுவோய் போற்றி!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: சிக்கன நட வடிக்கைகளையும், கறுப்புப் பணங்களையும் வெளியே கொண்டு வருவதன் மூலம், பெட்ரோல் விலை உயர்வுகளைத் தவிர்க்க இயலும். மத்திய அரசுக்கு ஆலோசகர்கள் ஏராளம் இருக்கின்றனர். ஆனால், உருப்படியான பலன் தான் ஏதுமில்லை.

டவுட் தனபாலு: தோ பாருங்க... தி.மு.க., தலைவர் மேல ஏதாவது கோபம் இருந்தா, நேரா திட்டிடுங்க; இப்படி ஜாடை மாடையா பேசுற வேலை எல்லாம் வேணாம்... கருணாநிதியின் ஆலோசனையின்படி தான் மத்திய அரசு செயல்படுகிறதுன்னு மன்மோகன் சிங் சொன்னதைத் தானே குத்திக் காட்டுறீங்க...!

- (தினமலர், 5.11.2011)

காமாலைக் கண்ணனுக்குக் கண்ட தெல்லாம் மஞ்சள் என்பார்கள். தினமலருக்கு, இன்னும் புரியும்படிச் சொன்னால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. தலைவர் கலைஞர் -இவர்களைப் பற்றித்தான் எப்பொழுதும் நினைப்பு, அது ஒரு வகையான மனோ நிலை! (Phobia).

கலைஞருக்கும் - திராவிடர்கழகத் தலைவருக்குமிடையே சிண்டு முடியும் வேலையில் ஈடுபடப் பார்க்கிறது! சிண்டுகளின் புத்தி அப்படித் தானே இருக்கும்.

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா, அட போக்கத்தப் பசங்களா! என்று ஒரு பாடல் எழுதினார் உடுமலை நாராயண கவி. அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

பெட்ரோல் விலை ஏற்றத்தை திமுகவும் கண்டிக்கும் நிலையில் கலைஞர் ஆலோசனை பெற்றுத்தான் பெட்ரோல் விலை ஏறியிருக்கிறது என்று சொல்லுவது தினமலருக்கே உரித்தான விஷமப்புத்தி! அல்லது புரிந்து கொள்ளும் சக்தி இவ்வளவே!

சிண்டு முடிவோய் போற்றி என்று ஆரிய மாயையில் அண்ணா, எழுதியதை அறிந்தவர்கள்தான், திராவிடர் கழகத் தலைவரும், திமுக தலைவரும் - ஆப் பதனை அசைத்து விட்டு அல்லல்பட வேண்டாம் இனமலரே!

தினமலர் பாணியில் நாமும் ஒன்றைச் சொல்லலாமே! அமைச்சர்கள் ஆறு பேர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆறு புதிய அமைச்சர்களை நியமித்தது - முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடர்பான இரு வழக்குகளிலும், அவருக்கு எதிரான தீர்ப்பு வந்ததை மறைக்கவும், மீடியாக்களில் நீதிமன்ற ஆணைகள் பிரதானமாக இடம் பெறுவதைத் தவிர்க்கவும்தான் என்று இன்று தினமலர் (பக்கம் 10) எழுதுகிறதே - இதுகூட இருந்தே குழிபறிக்கும் புத்தியா அல்லது மிரட்டிக் காரியம் சாதிக்கும் யுக்தியா?

--------------------- "விடுதலை” 5-11-2011

0 comments: