டேம் 999 - என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன? அதன் விளைவு எத்தகையது? மத்திய அரசு இதில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து அழிச்சாட்டியம் செய்து வருகிறது.
ஆள்வது கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி - இந்தப் பிரச்சினையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் அவை!
ஒன்று சர்வதேசியம் பேசும் கட்சி, இன்னொன்றோ இந்தியத் தேசியம் பேசும் கட்சி. ஆனால் இரண்டுக் கட்சிகளின் நிலைப்பாடோ இவற்றையெல்லாம் ஓரம் கட்டி உண்மை, நேர்மை, நியாயம், சட்டம் இவற்றையெல்லாம் புறந்தள்ளி நடந்து கொண்டு வந்திருக்கின்றன.
அரசு நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க வேண்டாமா? எத்தனையோ தடவை பேச்சு வார்த்தை நடத்தியாயிற்றே! வேறு வழியில்லாமல்தானே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் கேரள அரசின் தலையில் ஆழமாக பல்வேறு தடவை குட்டியதன் காரணமாக நீதிமன்றத்திற்கு வெளியில் பேசலாம் என்று கேரள மாநில முதல் அமைச்சர் உம்மன்சாண்டி தந்திர மாகவே பேச ஆரம்பித்துள்ளார். இதில் தமிழ்நாடு அரசு ஏமாந்து போய் விடக் கூடாது.
முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் இருக்கிறதாம். அப்படி உடைந்தால் பல லட்சம் மக்களுக்கு ஆபத்தோ ஆபத்தாம்!
டேம் 999 என்னும் பெயரில் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாவார்கள் என்று மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வேலை இது! கேரள அரசின் இந்தத் தந்திரம் ஓர் அரசின் மதிப்பைப் பெரிதும் குறைக்கக் கூடியதே!
இதனைக் கண்டித்துத் தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ளது. அப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. தமிழ்நாட்டில் எந்தத் திரையரங்கத்திலும் திரையிடத் தமிழர்கள் அனுமதிக்கப் போவதில்லை. நல்ல வாய்ப்பாக தமிழகத் திரைப்பட உரிமையாளர்களும் இந்தப் படத்தைத் திரையிட மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். இது வரவேற்கத்தக்கதாகும்.
கேரள மக்களும், தமிழர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கம் இதன் மூலம் பாதிக்கப்படும்; சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று முன்னாள் முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள் தெரிவித்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நாடாளுமன்றத்திலும் தி.மு.க. உறுப்பினர்களும் இதுகுறித்து கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமே என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
மிட்டல் தலைமையில் ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவினை உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழு தொழில் நுட்ப ரீதியாக ஆய்வு செய்து அணை பலமாகவே இருக்கிறது என்று அறிக்கையையும் கொடுத்து விட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் 136 அடிக்குப் பதிலாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று அறுதியிட்டு தீர்ப்பு வழங்கியது.
அதனைச் செயல்படுத்தத் தவறிய கேரள அரசை, உச்சநீதிமன்றம் கண்டித்து இருந்தால் மத்திய அரசும் அதில் சரியான நிலையை எடுத்திருந்தால் இத்தனை ஆண்டு காலம் இந்தப் பிரச்சினை நிலுவையில் இருக்க வாய்ப்பே இல்லை. மத்திய அரசைப் பொருத்தவரையில் பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அரசியல் தந்திரத்தோடு நடந்து கொள்வதும் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு வராமல் இருப்பதற்குக் காரணமாகும்.
இந்தக் குழப்பத்துக்கும் தாவாவுக்கும் உச்சநீதிமன் றமும், மத்திய அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.
இதன் காரணமாக தென் மாவட்ட மக்களின் குடி தண்ணீர் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட் டுள்ளதே - இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பு?
இரு நாடுகளுக்கிடையேகூட நீர்ப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விட்டனவே! பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. பங்களாதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கங்கை நீர்ப் பிரச்சினையும் எளிதாகத் தீர்க்கப்பட முடிகிறது. ஆனால் தேசிய நீரோட்டம் பற்றி வாய்க் கிழியப் பேசும் கட்சிகளின் விபரீதப் போக்கினால் இந்தியாவுக்குள் நீர்ப் பிரச்சினை என்பது சிக்கல் நிறைந்த தாக இருந்து வருகிறது.
போலி தேசியத்தால் கண்ட பலன் இதுதானோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. முதல் அமைச்சரின் கருத்து என்ன?
தேசிய நீரோட்டம் உடைப்பெடுக்கு முன்பே நதிநீர்ப் பிரச்சினையின் ஓட்டையை அடைக்க மத்திய அரசு முன்வர வேண்டியது அவசியமாகும்.
டேம் 999 திரைப்படத்தினை தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கதே!
---------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் -”விடுதலை” 24-11-2011
3 comments:
டேம் 999 படத்திற்கு தடை: தமிழக அரசு
சென்னை, நவ 24 - தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிடையே மட்டுமல்லாது தேசிய அளவில் கடந்த சில நாட்களாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வரும் டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அணையை இடிப்பதன் மூலம் தமிழர்கள் பாதிக்கப்படுவதாக இந்த படத்தில் காட் டப்படுவதாகவும், இதன்காரணமாக, இப்படத்தை தடை செய்ய வேணடும் என்று பல அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டேம் 999 திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த நிலையில், மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்த விசயத்தில் தமிழர்களாகிய நாம் அனைவரும்
ஒரேகுரலில் நம் எதிர்ப்பையும் ,கண்டனங்களையும்
தெரிவிக்கவேண்டும் .
வாசிப்பது கேரள அரசு
முல்லைப் பெரியாறு 1895ஆம் ஆண்டில் கட் டப்பட்டது. நூற்றாண் டைக் கண்டுவிட்டது; கிழடு தட்டி விட்டது! உடையும் எல்லைக் கோட்டில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்று தலையை விரித்துப் போட்டு மயான ஒப்பாரி வைக்கிறது கேரள மாநில அரசு.
நிமிடத்துக்கு 49 லிட்டர் நீர் கசிகிறது அணையிலிருந்து; அய்யோ அப்பா என் னமோ நடக்கப் போகிறது என்று நாட கம் நடத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணையாவது 1895இல் கட்டப்பட்டது.
கேரள மாநில அரசு குட்டியாடி அணையைக் கட்டியதே - அது எப்பொ ழுது தெரியுமா? 1972ஆம் ஆண்டுதான். அதன் வயது 39 ஆண்டுகளே! இதன் நீர்க்கசிவு. என்ன தெரி யுமா? நிமிடத்துக்கு 249.77 லிட்டர் தண்ணீராகும்.
ஞாபகம் வையுங்கள்!
116 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணையின் நீர்க்கசிவு நிமிடம் ஒன் றுக்கு வெறும் 49 லிட்டர் தான்.
39 ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு கட்டிய குட்டியாடி அணையின் நீர்க்கசிவு நிமிடம் ஒன் றுக்கு 249.77 அடி.
அப்படி என்றால் முல் லைப் பெரியாறு அணை யால் ஏற்படும் ஆபத்தைவிட குட்டியாடி அணையால் தான் மகா மகா ஆபத்து!
முதலில் குட்டியாடி அணையை உடைத்து விட்டு அதற்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணை யின் பக்கம் நெருங்கட்டும்!
1966இல் கேரளாவில் கட்டப்பட்ட பம்பை அணை யின் நீர் கசிவு நிமிடம் ஒன்றுக்கு என்ன தெரி யுமா? 96 லிட்டராகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்கசிவை விட 57 லிட்டர் அதிக மாகும்.
249 லிட்டர் அதிகமா? 49 லிட்டர் அதிகமா? (குட்டியாடி அணை)
96 லிட்டர் நீர் அதி கமா? 49 லிட்டர் நீர் அதிகமா? (பம்பை அணை)
கேரள அரசுக்கு முத லில் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் போல் தோன் றுகிறது.
249 லிட்டர் தண்ணீர் கசியும் குட்டியாடி அணை, 96 லிட்டர் நீர் கசியும் பம்பா அணை - இவற்றின்மீது கவனம் செலுத்திவிட்டு, காரி யம் முடித்துவிட்டு, வெறும் 49 லிட்டர் மட்டும் கசியும் முல்லைப் பெரி யாறு அணை விடயத்தில் மூக்கை நுழைக்கட்டும் கேரள மாநில அரசு.
வைத்தியரே, வைத்தியரே! முதலில் உங்கள் வயிற்றுவலி நோயைச் சரிப்படுத்திக் கொள்ளுங் கள்! மூலிகையை முழுங் கும் வேலையை பாருங் கள்!! பிறகு அடுத்தவர் நகத்தை வெட்டுவதுபற்றி யோசிக்கலாம்.
-----------"விடுதலை” 27-11-2011
Post a Comment