Search This Blog

1.8.09

பகவான் ரமணரிஷி சொத்தோ உறவினருக்கு- தந்தை பெரியாரின் சொத்தோ பொதுமக்களுக்கு






பகவான் ரமணரிஷி தமது சொத்துகளைத் தம்பிக்கு எழுதி வைத்தார். தந்தை பெரியார் அவர்களோ தம்மிடம் சேர்ந்த அத்துணை சொத்துகளையும் மீண்டும் பொது மக்களுக்கே சொந்தம் என்று பல அறக்கட்டளை நிறுவனங்களை உருவாக்கினார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். உரத்தநாடு வட்டம் கண்ணுகுடி மேற்கில் 18.7.2009அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நிலவில் மனிதன்

ஒரு காலத்திலே காற்றை வாயுபகவான் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இப்பொழுது வாயுபகவானை கன்ட்ரோலில் கொண்டு வந்து வைத்தோம். ஃபேன் ஸ்லோவிலே சுற்றச் சொன்னால் ஸ்லோவிலேயே சுற்ற வேண்டும். வேகமாக்க சுவிட்சைத் திருப்பினால் வேகமாகச் சுழல வேண்டும்.

மனிதனுடைய அறிவு ஆற்றல் வளர்ந்திருக்கிற இடத்திலே, சூரியன் சந்திரன், பூமி மூன்றும் சேர்ந்து ஒரே நேர்கோட்டில் வந்தால் கிரகணம் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு சாதாரண நிகழ்வு. வானவியல் துறையிலே இது ஏன் நிகழுகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். மனிதன் அடுத்தபடியாக செவ்வாய் மண்டலத்திற்கே இறங்கப் போகிறான்.

நிலா, நிலா ஓடிவா என்று நாம் கூப்பிட்டுக்கொண்டு வந்ததற்குப் பதிலாக நம்மாளே போயிருக்கிறான்.

ஸ்கைலாப் பூமியைநோக்கி வந்த பொழுது

அமெரிக்காகாரன் போன காலத்தைப் பார்த்து நாம் வியந்தோம். இன்றைக்கு சந்திரயான் மயில்சாமி அண்ணாதுரையைப் பாராட்டுகின்றோம். இவ்வளவையும் நம்மாள் படித்துவிட்டு பெரிய சுனாமி வரப்போகிறது, புயல் வரப்போகிறது. எல்லோருக்கும் ஆபத்து, உலகத்திற்கு மிகப் பெரிய கெடுதி வரப்போகிறது என்று தெரிந்தவுடனே எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எம்.ஏ படித்தவன், எம்.எஸ்.சி படித்தவன், பி.எஸ்.சி. படித்தவன் டாக்டரேட் படித்தவன் எல்லாம் படித்து என்ன செய்வது?

முன்பு அப்படித்தான் அஷ்ட கிரகங்கள் சேர்ந்தவுடனே உலகுக்கு ஆபத்து என்று சொன்னான். ஸ்கைலாப் உடைந்து போய் மேலே இருந்து கீழே வருகிறது. எல்லா மக்களும் செத்துப் போய் விடுவார்கள் என்று நினைத்தவுடனே இருக்கிற கோழி, ஆடுகளை எல்லாம் அடித்து சாப்பிட்டு விடுவோம். ஏனென்றால் அடுத்த நாளைக்கு இருக்கப் போகிறோமோ என்று தெரியவில்லையே. இப்படி பயந்தவர்கள் எல்லாம் உண்டு. ஒரு பெரிய பயத்தை உண்டாக்கிவிட்டார்கள். இந்த அறியாமைக்கு மூலகாரணமே பயம்தான்.

அறிவியலை சொல்லிக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்

கடவுள் எந்த இடத்தில் பிறந்தார் என்றால் எங்கே அச்சம் இருக்கிறதோ, எங்கே பயம் இருக்கிறதோ, எங்கே ஆசை இருக்கிறதோ, எங்கே பேராசை இருக்கிறதோ அங்குதான் கடவுளுக்கு வேலை.

நாங்கள் அதைப் பற்றியே கவலைப்படாதவர்கள் என்ன கெட்டு போய்விட்டோம். கடவுளை மட்டுமே நம்பிக்கொண்டு டாக்டரை நம்பாத காலத்தில் எட்டு வயதில், பத்து வயதில் இறந்து போனார்கள். இன்றைக்கு நம்ம ஊரிலேயே சராசரி வயது இந்தியாவிலேயே 69 வயது, அமெரிக்காவிலே, ரஷ்யாவிலே 85, 90 வயதைத் தாண்டி வாழ்கிறார்களே! 95 வயதைத் தாண்டி வாழ்கிறார்களே!

பட்டுக்கோட்டையில் எங்களுடைய கழகத் தோழர் மாமுண்டியார் என்று அழைக்கப்படக்கூடிய இராமாமிர்தம் அவர்கள் யாருக்காவது சந்தேகமிருந்தால் பாருங்கள். இப்பொழுதுதான் 97 வயதைக் கொண்டாடியிருக்கின்றார்கள். முந்தாநாள் தான் அவரைப் பார்த்தோம். கடவுள் இல்லை என்று சொன்னதால் என்ன ஆனது?

இதை ஏற்காகச் சொல்லுகிறோம் என்றால் மூடநம்பிக்கையைக் கொண்டு வந்து நம்முடைய மூளையில் ரொம்ப பத்திரமாக ஏற்றிவிட்டான் கிரகணநேரத்திற்குள் சாப்பிடக்கூடாது, ஆபத்து. வெளியே வரக்கூடாது என்று சொல்கிறார்கள்.

விஞ்ஞானம் சொல்லிக் கொடுக்கக்கூடிய பேராசிரியர் அறிவியலை சொல்லிக்கொடுத்து விட்டு, பாம்பு போய் நிலாவைக் கவ்விப்பிடிக்கிறது என்று சொல்கின்றார்கள். அதனால் ஆபத்து. ஆகவே குளிக்க வேண்டும் முதலில். அதற்குப் பரிகாரம் என்று கீழே போடுகிறான்.

நம்புங்கள் நாராயணனை!

இதைவிட நம்புங்கள் நாராயணன் என்று அதற்குப் பெயர் வேறு வைக்கின்றான். நீங்கள் உடனே பிரார்த்தனை பண்ண வேண்டும். பிரார்த்தனை பண்ணினால் கஷ்டம் தீரும் என்று மூடநம்பிக்கையைப் பயன்படுத்தக் கூடிய நிலையிலே இருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்திலே இன்னொரு செய்தியைப் போடுகிறார்கள். கோவிலே மூடப்பட்டது

திருப்பதி கோவில் கிரகணத்தின் பொழுது மூடப்படும். பழனியில் கோயில் மூடப்படும். கிரகணத்தைப் பார்த்து கடவுளே பயந்து கொண்டிருக்கின்றார். கடவுளே கதவை மூடிக்கொண்டால் நீ எப்படி அப்ளிகேசன் போட்டு நீ எப்படி தப்பிக்க முடியும்? அறிவு பூர்வமாக, வாத பூர்வமாக எண்ணிப் பார்க்க வேண்டாமா?

நாங்கள் எதையும் பேசிவிட்டுப் போகிறவர்கள் அல்லர். நாளைய விடுதலையில் பார்த்தால் ஒரு செய்தி இருக்கும். சூரிய கிரகணத்தின் பொழுது சாப்பிட்டால் கேடு விளையும் என்று ஒரு மூட நம்பிக்கையைப் பரப்பினார்கள். நான் அப்பொழுது திருச்சியிலே இருந்தேன்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அய்ந்தாயிரம் பிள்ளைகள் படிக்கிறார்கள். பெரியார் கல்வி வளாகத்தில் வெறும் குழந்தைகள் படிப்புக்கு உள்ளே நுழைந்தால், அதே நேரத்தில் பி.எச்டி. வரை படித்துவிட்டு வரலாம்.

எல்லா படிப்பும் பெரியார் கல்வி வளாகத்தில் இருக்கிறது. அதில் அய்ந்தாயிரம், ஆறாயிரம் பெண்கள் படிக்கிறார்கள். கொஞ்சம் ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

நான் சூரிய கிரகணம் அன்றைக்கு எதிர்பாராமல் திருச்சியிலே இருந்தேன்.

அடுத்த நாள் மாலை கிரகணம் பற்றி செய்திகள் வெளிவந்தன. முன்னதாக சாப்பிட வேண்டும், பின்னதாக சாப்பிட வேண்டும் என்று இப்படி மூடநம்பிக்கையைப் பரப்பியிருந்தார்கள். விஞ்ஞானத்தைப் படித்தால் போதாது.

கிரகண நேரத்தில் சாப்பிட்டோம்


நாம் எல்லோரும் சேர்ந்து எது கிரகண நேரமோ அந்த நேரத்தில் திறந்த வெளி அரங்கத்தில் எல்லோரும் அமர்ந்து சிற்றுண்டியை சேர்ந்து சாப்பிடுவோம்.

அடுத்த நாள் காலையிலே யாருக்கு என்ன வயிற்றுக்கோளாறு ஏற்படுகிறது என்று சொல்லுங்கள். ஏதாவது அஜீரணம் ஆகிறதா? சொல்லுங்கள் என்று சொன்னோம்.

அன்று மாலை நேரத்தில் ஏற்பட்ட கிரகணத்தின் பொழுது நாங்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் எல்லோரும் உட்கார்ந்து பெரியவிருந்து வைத்த மாதிரி நடத்திக்காட்டினோம்.

அந்த நிகழ்ச்சிக்கு எல்லா செய்தியாளர்களையும் கூப்பிட்டு கிரகணம் என்பது மூடத்தனம் அதிலே வந்து இதைச் செய்யக் கூடாது. அதைச் செய்யக் கூடாது. குளிக்க வேண்டும் என்று சொல்லுவது தேவையில்லாத ஒன்று என்பதை எடுத்து தெளிவாகச் சொன்னோம்.

அதே மாதிரி வருகிற 22ஆம் தேதி அன்றும் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் கிரகண மூடநம்பிக்கையை முறியடித்து அந்த நேரத்தில் எல்லோரும் உண்ணக் கூடிய சிற்றுண் டியைக் கொடுங்கள் என்று சொன்னோம்.

கிரகணத்தின் பொழுது சாப்பிட்டால் ஒன்றுமில்லை என்பதை நடைமுறையில் காட்டுங்கள். அந்த பயம் தெளியட்டும் என்று சொன்னோம். பெரியார் திடலில் என் தலைமையில் அந்த மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடக்கும் என்று சொல்லியிருக்கின்றோம்.

மூளைக்கு விலங்கு போட்டு

எதற்காகச் சொல்கிறோம் என்று சொன்னால் சின்னச் சின்னச் செய்திகளில் கூட நமது மூளைக்கு விலங்கு போட்டு விட்டான். அய்யோ பிசாசா! என்று சொல்லுகின்றான், பேய் என்று சொல்லுகின்றான்.

இப்பொழுது பேய், பிசாசு என்பதெல்லாம் இல்லையே. சுடுகாடு இருக்கின்ற இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து இப்பொழுது எங்கு பார்த்தாலும் வீடுகட்டுகின்றான்.

அப்பொழுது பேயை, பிசாசைப் பற்றி இவன் நம்புவதில்லை.

அனைவரும் உறவினர்

ஆகவே, மனிதனுக்குள்ள ஒரு அறியாமையைப் போக்கக் கூடிய பகுத்தறிவுப் பணியை செய்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அதோ சிலையாக நிற்கிறாரே, அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த காரணத்தால்தான் இந்தத் துணிச்சல் நமக்கு வருகிறது.

அந்தத் துணிச்சல் இருக்கின்ற காரணத்தால்தான் மனிதன் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கும், சூழ்நிலைக்கும் வந்திருக்கின்றான். எனவே சமூக நீதி, இட ஒதுக்கீடு என்று சொன்னாலும், அனைவருக்கும் கல்வி என்று சொன்னாலும், ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று ஆண் பெண் பேதமிருக்கக் கூடாது என்று சமுதாயத்தை வலியுறுத்தியவர் அறிவு ஆசான் தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே, அப்படிப்பட்ட தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இந்தப் பணியை, சிறப்பை நாம் ஏற்று தந்தை பெரியார் தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகுதொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் பார் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்களே அப்படிப்பட்ட அந்தத் தொண்டறத்தின் காரணமாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் இவ்வளவு பெரிய வாய்ப்பை உருவாக்கினார்கள்.
இங்கே சொன்னார்கள்.

இந்த வட்டாரத்திலேயிருந்து பெரியாருடைய கல்வி நிறுவனங்களிலே படிக்கக் கூடிய பிள்ளைகள், படித்த பிள்ளைகள் ஏராளம் இருக்கிறார்கள் என்று எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. ஒரு பார்ப்பனர், வெங்கட்ட ரமணர் என்பது அவருடைய பெயர்; அவர் பகவான் ரமணரிஷியானார்.

பார்ப்பனர் ரமணரிஷி

திருவண்ணாமலையில் மயக்கம் போட்டு விழுந்தார். உடனே சாமியார் என்று சொல்லி விட்டான். அதன் பிறகு மரத்துக்கடியில் கோவணம் கட்டினார். சொத்து சேர்ந்தது. நம்முடைய நாட்டிலே சொத்து சேர்ப்பதற்கு சுலபமான வழி சாமியார் ஆவது.

திருவண்ணாமலையில் ரமணரிஷி ஆசிரமம் நடத்தினார். சொத்துகள் ஏராளம் குவிந்தன. அதன் பிறகு அவனுடைய சொந்தக்காரர் ஒவ்வொருவராக வந்தார்கள். இந்த ரமண ரிஷி பார்ப்பனரிடம் பெருமாள் சாமி என்ற பர்ப்பனரல்லாத சீடரை வெளியே போ என்று சொன்னார். அவர் வழக்குப் போட்டு இன்னமும் வழக்கு நடக்கிறது. ரமணரிஷி வழக்க 35, 40 வருடமாக நடக்கிறது. இந்த சொத்துகள் பூராவுமே என்னுடைய சொந்த சொத்து. அதனால் என்னுடைய குடும்பத்திற்கு என் தம்பிக்கு என்று சொன்னார். நான் உயில் எழுதி வைத்துவிட்டேன்.

--------------------தொடரும் .... "விடுதலை" 1-8-2009

6 comments:

யாத்ரீகன் said...

>>திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அய்ந்தாயிரம் பிள்ளைகள் படிக்கிறார்கள்.<<

கல்வியை செவைஎன்றில்லாமல் தொழிலாகத்தானே செய்றாங்க ?

தமிழ் ஓவியா said...

மிகப் பெரிய கண்டுபிடிப்பைச் செய்த யாத்திரீகனுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

மூடநம்பிக்கை ஒழிப்பு தொடர்பான விவாதத்தை அதன் திசை நோக்கி விவாதிக்காமல் வேறு திசையில் விவாதிப்பது சரியல்ல.

இது தொடர்பாக தனிப் பதிவுகளில் விவாதிப்பதுதான் ஆரோக்கியமான அணுகுமுறை

யாத்ரீகன் said...

மிக்க நன்றி.. கிடைத்தால் சொல்கிறேன்..

எங்குமே திசை திருப்பவில்லை, எங்குமே மூடநம்பிக்கையை ஆதரிக்கவும்இல்லை, கட்டுரையில் இருந்த தகவலை படித்தபோது தோன்றிய கேள்வியை கேட்டேன்.தனியான கட்டுரையில் ஆரோக்கியமான விவாதத்தை தொடங்குங்களேன்..

தமிழ் ஓவியா said...

//மிக்க நன்றி.. கிடைத்தால் சொல்கிறேன்..//

கிடைத்தால் சொல்லுங்கள். பாராட்டுகிறேன்

Thamizhan said...

நாகம்மை குழந்தைகள் இல்லம் பெரியார் காலத்திலிருந்து பெண் குழந்தைகளின் காப்பமாகப் பணியாற்றி
வருகிறது.150 குழந்தைகள் உள்ளனர்.
அதில் படித்துப் பொறியியல் வல்லுனராகவும்,மற்றவர்களும்,மண முடித்தவர்களும் உள்ளனர்.
(அநாதை என்று சொல்வதில்லை).

ஜீவன்சிவம் said...

பகவான் ரமணர் வழக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து தெரியபடுத்தவும்.