Search This Blog

3.8.09

அய்.அய்.டி. க்களில் இடஒதுக்கீடு - உயர் ஜாதியினர் எதிர்ப்புக்கு பதிலடி




அய்.அய்.டி. க்களில் 1,300 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பொதுப்பிரிவில் தேர்வு

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் (அய்.அய்.டி.) சேர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மொத்தம் 1,930 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது 1,300 மாணவர்கள் இடஒதுக்கீடு இல்லாமலேயே பொதுப் பிரிவில் தேர்ச்சி பெறும் அளவிற்கு அதிக மதிப் பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். பல பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்களைவிட பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

2009_10 ஆவது கல்வியாண்டில் இந்தியா முழுவதும் உள்ள 13 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மொத்தம்10,035 மாணவ, மாணவியர், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டப்படி நடப்பாண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. பொதுப் பிரிவில் சேர குறைந்தது 178 மதிப்பெண்களும், பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 161 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி பார்த்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 1,930 மாணவர்கள் 161 மதிப்பெண்களை விடக் கூடுதலாக எடுத்துள்ளனர். இவர்களில் 1,300 பேர் பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணான 178 மதிப்பெண்களை விட அதிகம் பெற்றுள்ளனர். ஒருவேளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படா விட்டாலும் இந்த 1,300 மாணவர்களுக்கும் கண்டிப்பாய் இடம் கிடைத்திருக்கும்.

பொதுப்பிரிவில் சேரும் அளவுக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ள 8,245 மாணவர்களில் சுமார் 15 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இடஒதுக்கீட்டின் பயனாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 விழுக்காடு மாணவர்ளுக்கு மட்டும் கூடுதலாக இடம் கிடைத்திருக்கிறது.

இக்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டபோது, மாணவர்களைத் தகுதி அடிப்படையில்தான் சேர்க்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்த்தால் தகுதி இல்லாத மாணவர்களும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விடுவார்கள். இதனால் தொழில் நுட்பக் கல்வி நிலையின் தரம் பெரிதும் குறைந்துவிடும் என்று உயர் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் பொதுப் பிரிவில் சேர தகுதியுள்ள மாணவர்களில் 15 விழுக்காடு அளவிற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அது மட்டுமன்றி பல பாடங்களில் உயர்ஜாதி மாணவர்களைவிட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
எடுத்துக்காட்டாக வேதியியல் பாடத்தில் பொதுப்பிரிவில் அதிக மதிப்பெண் 122 ஆகும். ஆனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அவரை விட 4 மதிப்பெண்கள் கூடுதலாக 126 பெற்றுள்ளார். அதே போல் தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ள பொதுப் பிரிவு மாணவர்களைவிட பிற்படுத்தப் பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் அய்.அய்.டி. பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

---------------------நன்றி:-"விடுதலை" 4-8-2009

2 comments:

மதிபாலா said...

அன்பு நண்பருக்கு

உங்களுக்கு ஒரு விருது

http://www.mathibala.com/2009/08/200.html

நன்றி

தமிழ் ஓவியா said...

மிக்க நன்றி

மதிபாலா